.

திருநகரில் சொக்கநாதனுக்கும் மீனாட்சிக்கும் பிறந்த ஒரே மகள் சாருமதி. சிறுவயதிலிருந்தே அவள் எதைத் தொட்டாலும் உடைந்து போய் விடும். துணியானால் கிழிந்து விடும். இரண்டு மாதக் குழந்தையாக இருக்கையில் சாருமதி தன் தாயாரின் விலையுயர்ந்த சரிகைப்பட்டு புடவையைத் தன் கைகளால் இறுகப் பற்றிக் கொள்ளவே அதை விடுவிக்க யாராலும் முடியவில்லை. முடிவில் கத்திகொண்டு புடவையை அறுத்துத்தான் தனியாக்க வேண்டியதாயிற்று. 

புடவை பாழாகி விட்டதே என்று மீனாட்சி வருந்தினாள். அவளை சொக்கநாதன் தேற்றி ''குழந்தை தானே! வேண்டுமென்றா செய்தாள்? விட்டுத் தள்ளு” என்று ஆறுதல் கூறி னான். அடுத்த மாதம் அவர்களது வீட்டிலிருந்த அழகிய வேலைப்பாடு கொண்ட கண்ணாடி ஜாடி 'பணால்'. அதை சாருமதிதான் தட்டி விட்டாள். அது உருத் தெரியாமல் சுக்கல் சுக்கலாகிப் போனது.

" இப்படியே சில வருடங்களுக்கு மாதத்திற்கு ஒன்றாக ஏதாவது ஒரு பொருளை சாருமதி தட்டிவிட அது கீழே விழுந்து உடைந்து எதற்கும் பயனில்லாது போய்விட்டது. இதைக் கண்டசிலர் 'சிறு குழந்தை என்றிருந் தால் இப்படித்தான் வீட்டில் ஏதாவது ஒரு பொருள் பாழகிக் கொண்டிருக் கும். இதற்காக நாம் குழந்தையைத் திட்டக்கூடாது. நாமும் வருத்தப் படக் கூடாது” என்றனர். வேறு சிலரோ "இவள் பெண் குழந்தையா? பத்திர காளி போலப் பேயாட்டம் அல்லவா ஆடுகிறாள்? அடடா! எவ்வளவு அழ கான அபூர்வப் பொருள்களையெல் லாம் உடைத்து நாசப்படுத்தி விட் டாள்!" என்று கரித்துக் கொட்டினார் கள். 

சொக்கநாதன் தன் மகளை ஏதாவது ஆவி பிடித்து ஆட்டுகிறதோ எனப் பயந்து அடுத்துள்ள பசுமலையில் இருக்கும் மந்திரவாதி மாயவனைக் கண்டு தன் மகளை ஏதாவது ஆவி பிடித்திருந்தால் அதை விரட்டு மாறு வேண்டிக் கொள்வது எனத் தீர் மானித்தான். 

இதே சமயம் திருநகருக்குப் பத்து மைல் தூரத்திலுள்ள பாலப்பட்டி என்ற ஊரில் பசுபதி என்ற ஏமாற்றுப் பேர் வழி இருந்தான். அவன் சில மாயா ஜால வித்தைகளைக் கற்று வைத்திருந்தான். அந்த வித்தைகளால் அவன் விலையுயர்ந்த வைரங்களைத் திருடி வந்தான். அதற்கு அவன் ஒரு சிறு மண் பொம்மை செய்து அந்த மனித மண் பொம்மையோடு வைர வியாபாரியின் கடைக்குப் போய் எப்படியோ யார் கண்ணிலும் படாமல் அங்கிருக்கும் விலையுயர்ந்த வைரக் கற்களை எடுத்து தன் மண் பொம்மைக்குள் வைத்து அழுத்தி மறைத்து விடுவான். வைரம் அந்த பொம்மைக்குள் போனதும் அப் பொம்மை யாராலும் உடைக்க முடியாத அளவிற்குக் கெட்டியாகி விடும். அதனால் யாராலும் அவனை திருடன் எனக் கூற முடியவில்லை. அவன் வீட்டிற்குப் போய் தான் கற்ற ரகசிய முறைப்படி அந்த பொம்மையை உடைத்து வைரங்களை எடுத்து பத்திரப்படுத்தி வரலானான். 


சொக்கநாதன் பசுமலைக்குப் போய் மந்திரவாதி மாயவனைக் கண்டு தன் மகள் சாருமதியின் செயல்கள் பற்றிக் கூறவே மாயவனும் “சந்தேகமே இல்லை. அது ஆவியின் வேலைதான். நான் என் மந்திரக் கோலை ஆட்டி மந்திரம் போட்டால் அந்த துஷ்ட ஆவி ஆறு கடல் தாண்டி ஓடிப் போய்விடும். இப்போதே உங் கள் ஊருக்கு வந்து சாருமதியைக் கண்டு அவளைப் பிடித்த ஆவியை விரட்டுகிறேன்' என்று கூறி உற்சாகத்துடன் சொக்கநாதனுடன் அவனது ஊருக்குக் கிளம்பினான்.

சொக்கநாதன் வீட்டை அடைந்த மாயவன் சாருமதியைப் பார்த்து விட்டு “சரி. இதற்கு ஒரு ஹோமம் செய்ய வேண்டும். அதற்கான சாமான்களை வாங்கி வாருங்கள்” எனக்கூறித் தன் மந்திரக் கோலைக் கீழே வைத்து விட்டு ஹோமத்திற்கு வேண்டிய சாமான்கள் யாவை என்று சொக்கநாதனிடம் கூறலானான். அப்போது சாருமதி கீழே இருந்த மந்திரவாதியின் மந்திரக் கோலை எடுத்து வளைத்தாள். அது படீரென்ற சத்தத்தோடு இரண்டாகப் பிளந்து விழுந்தது. 

அதைக் கண்ட மாயவன் ' ஐயோ! என் மந்திரக் கோல் ஒடிந்து பாழாகி விட்டதே. இனி நான் யாருக்கும் மந்திரிக்க முடியாதே' என்று ஓலமிட்ட வாறே அங்கிருந்து ஓடிவிட்டான். இதைக்கண்ட சாருமதியின் பெற்றோரும் தம் மகளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என்று எண்ணிக் கவலைப் படலானார்கள். சாருமதி எந்தக் கடினமான பொருளையும் எந்த மந்திரச் சக்தி வாய்ந்த பொருளையும் தூக்கி எறிந்து உடைக்க வல்லவள் என்ற விஷயம் திருநகரைச்சுற்றியுள்ள பல ஊர்களில் பரவிவிட்டது.

இந் நிலையில் வைரங்களைத் திருடும் பசுபதி ரத்தினபுரி என்று ஊரிலுள்ள பெரிய வைர வியாபாரியின் கடைக்கு வழக்கம் போலத் தன் மண் பொம்மையுடன் சென்றான். அக் கடையில் வைரங்களை வாங்க வந்தவனைப் போல நடித்து யாருமே தன்னை கவனிக்கவில்லையென நினைத்து ஒரு விலையுயர்ந்த வைரத்தை எடுத்துத் தன் மண் பொம்மைக்குள் அமுக்கி வைத்தான். ஆனால் அவனது செயலை ஒரு மூலையிலிருந்து பார்த்து விட்ட ஒரு பணியாள் உடனே தன் எஜமானனிடம் பசு பதி வைரத்தை எடுத்து பொம்மைக் குள் அமுக்கி வைத்ததைத்தான்பார்த்ததாகக் கூறிவிட்டான். 

கடையின் சொந்தக்காரனும் பசுபதியின் கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கிக் கொண்டு 'இதற்குள் தானே நீசற்று முன் திருடிய வைரத்தை ஒளித்து வைத்தாய்?” என்று கோபத்தோடு கத்தினான். பசுபதியோ தான் எதையும் திருடவில்லை என்று ஒரேயடியாகச் சாதித்தான். ஆனால் கடைக்காரனோ நீ வைரத்தைத் திருடி இந்த பொம்மைக்குள் பதித்து வைத்ததை இந்த வேலையாள் தான் பார்த்தான்" என்று தன்னருகே நின்ற வேலையாளைக் காட்டினான். 

" வேலையாளும் பசுபதி வைரத்தைத் திருடியதை தான் பார்த்ததாகக் கூறினான். கடைக்காரனும் “இவன் திருடிய வைரத்தின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய். இவனை விடக் கூடாது. இந்த பொம்மைக்குள்தான் வைரம் இருக்கிறது இதை உடைத்துப் பார்க்கலாம்” என்றான். இதற்குள் கடைக்கு முன் வேடிக்கை பார்க்க மக் கள் கூட்டம் கூடிவிட்டது. பசுபதி தப்பி ஓடுவதற்கு வழி இல்லாமல் போய்விட்டது. 

" அப்போதும் அவன் பயப்படாமல் “நீங்கள் தாராளமாக அந்த பொம்மையை உடைத்து அதற்குள் வைரம் இருக்கிறதா என்று பாருங்கள். உங் களால் இந்த பொம்மையை உடைக்கவே முடியாது. இது ஒரு விசேஷக் கலவையால் தயாரிக்கப்பட்டது" என்றான் கடைக்காரனோடு மற்றும் சிலரும் சேர்ந்து கொண்டு “இது மண் பொம்மைதானே. உடையாமலா போய் விடும்? இவன் ஏதேதோ சொல்லி நம்மை ஏமாற்றப் பார்க் கிறான். பொம்மையை நாம் உடைத்தே பார்க்கலாம்” என்றார்கள். 

ஆனால் எவ்வளவு முயன்றும் அவர்களால் அப் பொம்மையை உடைக்க முடியவில்லை. அப்போது ஒருவன் 'இவன் ஏதோ மந்திரம் போட்டு இதை உடைய முடியாமல் செய்திருக்கிறான். அதனால் பொம்மையை பத்திரமாக எடுத்து வைத்து விடுங்கள். இல்லாவிட்டால் இதை எடுத்துக் கொண்டு ஓடிப்போனா லும் போய் விடுவான்” என்றான். 

அப்போது அந்தக்கூட்டத்தில் திரு நகரிலிருந்து வந்த ஒருவன் இருந்தான். அவன் அந்த பொம்மையை யாராலும் உடைக்க முடியாமல் போனது கண்டு 'பொம்மையை யாராலும் உடைக்க முடிய வில்லையா?எங்களூர் சாருமதியிடம் இதைக் கொடுத்தால் ஒரு நிமிடத்தில் உடைத்துக் காட்டுவாளே” எனக்கூறி அவள் ஒரு மந்திரவாதியின் மந்திரக் கோலையே எடுத்து ஒடித்த சம்ப வத்தை எடுத்துக் கூறினான். 

அதைக் கேட்ட வைரக்கடையின் எஜமானன் "இந்த பொம்மைக்குள் என் கடையில் திருடப்பட்ட வைரம் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பொம்மையை உடைத்த பின் அதிலிருந்து என கடையில்திருடப்பட்ட வைரம் வெளிப்பட் டால் பொம்மையை உடைத்தவருக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் பரிசாகக் கொடுக்கிறேன். இது போல இவன் எவ்வளவு இடங்களில் திருடி இருக்கிறானோ?'' என்றான். 

அப்போது பசுபதி “இது என் பரம்பரைச் சொத்து. இதை யாராலும் உடைக்கவே முடியாது. சாருமதியாலும் கூட முடியாது. ஒருவேளை பொம்மை உடைந்து அதிலிருந்து வைரம் வெளிப்படாவிட்டால் எனக்கு நஷ்ட ஈடாகப் பத்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்” என்று சவால் விட்டான். கடைக்காரனும் 'ஆகா!தாராளமாகக் கொடுக்கிறேன் ஆனால் நீ எதிர்பார்க்கிறபடி பணம் கிடைக்காமல் அரசாங்க விருந்தாளியாய் கைகளில் இரும்புக்காப்புக்களுடன் போகப் போகிறாய். எனக்கும் என் வைரம் கிடைக்கத் தான் போகிறது" என்ற கூறி திருநகர் வாசியைத் தன் முன் வரச் சொன்னான். 

அவனிடம் “நாம் இப்போதே இந்த பொம்மையை எடுத்துக் கொண்டு இவனையும் அழைத்துக் கொண்டு திருநகருக்குப் போவோம். நம்மோடு வருபவர்களும் வரலாம். அங்கு போய் சாருமதியிடம் பொம் மையை கொடுத்து உடைக்கச் சொல் வோம்” எனக் கூற அங்கிருந்த பலரும் உற்சாகத்துடன் அதன் முடிவைக் காண ஆவலுடன் சென்றார்கள். 

அவர்கள் திருநகரின் எல்லையை அடைந்த போது அவர்களை அழைத்து வந்த திருநகர் வாசி "அதோ! சாருமதியே வருகிறாளே" என்றான் பிறகு அவனே சாருமதியைக் கூப்பிட்டு ''சாருமதி! இந்த பொம்மையை வாங்கிப் பார்” என்று கூறி வைரக் கடைக்காரர் கையிலிருந்த பொம்மையை வாங்கி அவள் முன் நீட்டினான். சாருமதியும் அதை வாங் கிப் பார்த்துவிட்டு தரை மீது விட்டெறிந்தாள். பொம்மை சுக்கல் சுக்கலாக உடைந்து போயிற்று அதிலிருந்த வைரம் வெளியே விழுந்தது. 

இதைக் கண்ட பசுபதி திடுக்கிட்டு பயந்து ஓடப் பார்த்தான். ஆனால் அவனை நான்கு பேர்கள் வளைத்துப் பிடித்துக் கொண்டார்கள். வைரக்கடை எஜமானனும் “இவனை அரசாங்கக் காவல் வீரர்களிடம் ஒப்படையுங்கள். இவனது வீட்டைச் சோதனை போட்டால் பல இடங் களில் இவன் திருடிய வைரங்கள் கிடைக்கும்” என்றான். அவர்களும் பசுபதியை இழுத்துச் சென்றனர். 

இதற்குள் ஊர் எல்லையில் மக்கள் கூட்டமும் அதன் நடுவே சாருமதியும் இருப்பது கேள்விப்பட்டு என்ன நடந்ததோ என்று பதறிப் போய் சாருமதியின் பெற்றோர்கள் அங்கு ஓடினார்கள். சாருமதி தன் பெற்றோர்களைக் கண்டதும் ஓடிவந்து நடந்ததை எல்லாம் கூறினாள். இதற்குள் வைரக் கடைக்காரன் அப் பெற்றோர்களுக்கு வணக்கம் செலுத்தி "இவள் உங்கள் குழந்தை என்றார்கள். ஆனால் குழந்தை இல்லை. பெரிய பெண்ணாக இருக்கிறாள். எனக்கு இன்னமும் விவாகமாகவில்லை. என் வைரத்தை கண்டு பிடித்து தருபவருக்கு லட்ச ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்திருந்தேன். இப்போது என்னையே பரிசாக அவளுக்குக் கொடுக்கிறேன்” என்றான். 

இதைக் கேட்டதும் சாருமதியும் அவளது தாயாரும் சற்று தூரம் தள்ளிப் போய் நின்றனர். சாருமதியின் தந்தை “இவளை இதுவரை குழந்தை என்று சொல்லியே வளர்த்து விட்டோம். எந்த சாமானை எடுத்து உடைத்தாலும் நாங்கள் இவள் குழந்தைதானே என்று கூறிப் பேசாமல் இருந்து விட்டோம். இவளோ பெரிய பெண்ணாகி விட்டாள். இவளுடைய திருமணம் எப்படி நடக்குமெனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். ஏனென்றால் இவளை மணக்கத் துணிச்சல் கொண்டவன்தானே வரவேண்டும்? நீங்கள் வந்து எங்கள் கவலையைப் போக்கி விட்டீர்கள்” என்றான். 

இதற்குச் சில நாட்களுக்குப் பின் வைரக் கடை எஜமானன் வைத்திய நாதனுக்கும் சாருமதிக்கும் திருமணம் சிறப்பாய் நடைபெற்றது இப்போது சாருமதி முந்தைய சாருமதி இல்லைத்தான்.



Post a Comment

Previous Post Next Post