தொழில்நுட்ப முன்னேற்றம் உலகிற்கு அளித்துள்ள மிகப்பெரும் கொடையான செல்போன்கள் நம் ஒவ்வொருவரின் கைகளிலும் ஆறாவது விரலாக உருவெடுத்து மனித சமூகத்தையே ஆட்டிப்படைத்துவரும் நிலையில், செல்போன் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாதளவிற்கு இன்று மனித சமூகம் செல்போன் அடிமைகளாக மாறிவிட்டது. இன்று உலகமே இதனுள் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய கைகளிலும் தவழ்கிறது இந்த செல்போன். இதில் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் சந்தே கம் இல்லை.முன்பெல்லாம் ஒரு காரியத்தை நாம் முடிக்க வேண்டுமென்றால்,பஸ் அல்லது ரயில் பிடித்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கஷ்டப் பட்டு செய்து முடிக்கும் ஒரு வேலையை இன்று செல்போனிலிருந்து ஒரு நொடியில் ஒரு SMS செய்து முடித்துவிடுகிறது.
ஒரு வீட்டில் உள்ள முக்கிய பொருட்களான வானொலி, தொலைக்காட்சி, கணணி,கடிகாரம்,DVD,Camera போன்ற அனைத்து வசதிகளும் ஒரு செல்போனில் அடங்கியிருக்கிறது.இப்போது யாரும் கையில் கைக்கடிகாரம் கட்டுவதே இல்லை. எல்லோரும் செல்போனில் தான் நேரம் பார்க்கிறார்கள். F.M ரேடியோவை தனியாக யாரும் வாங்குவதே இல்லை.செல்போனில்தான் பாட்டு கேட்கிறார்கள்.திரையரங்குகளுக்கு கூட பலர் செல்லாது செல் போனிலேயே படங்களும் பார்க்கின்றார்கள்.ஒரு நொடி எமது செல்போனை காணவில்லை யென்றால் நமது முழுநாளும் வேலையும் ஸ்தம்பிதமடைந்து விடுமளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது செல்போன்.இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. ஆனால் நூற்றுக்கணக்கான நன்மைகளை செய்யும் இந்த செல்போன் நமக்கு தெரியாமலேயே ஆயிரக்கணக் கான தீமைகளையும் செய்கின்றது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
இலங்கையில் 90களின் பிற்பகுதியிலேயே செல்போன் பாவனை ஆரம்பமானது. இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 22 இலட்சமாகவுள்ள நிலையில்,இலங்கையில் 3,1382,000 தொலைபேசிகளை தற்போது மக்கள் பயன்படுத்துகிறார்கள்.இலங்கையில் செல்போன் மற்றும் தொலைபேசி பாவனைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,நாட்டில் 100பேர் பயன்படுத்தும் தரைவழி தொலை பேசிகளின் எண்ணிக்கை 12.அதேவேளை 100 பேர் பயன்படுத்தும் செல்போன்களின் எண்ணிக்கை 142 என்பது செல்போன்கள் மனித வாழ்க்கைக்கு எந்தளவுக்கு முக்கியமாக மாறியுள்ளன என்பதையும் மனிதர்கள் செல்போன்களுக்கு எந்தளவுக்கு அடிமையாகி யுள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
இவ்வாறு உலகம் முழுவதும் செல்போன்கள் பயன்பாடு இன்றியமையாததாகி விட்ட நிலையில்,இவற்றின் பயன்பாடு குறித்த ஓர் ஆய்வினை வெளியிட்டிருக்கிறது எக்ஸ்ப்ளோடிங் டொபிக்ஸ் என்ற நிறுவனம்.இந்த ஆய்வில் உலகம் முழுவதும் ஒருவர் சராசரியாக ஒரு நாளில் மூன்று மணி நேரம் 15 நிமிடங்கள் செல்போனில் செலவழிக்கிறார் என்பதில் தொடங்கி 57 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் செல்போன்களில் நேரத்தை செலவ ழிக்கிறார்கள் என்பது வரை பல்வேறு ஆச்சரிய தகவல்களை அடுக்கியிருக்கிறது.
இதில் முதலாவதாக ஐந்து பேரில் ஒருவர் சராசரியாக ஒரு நாளுக்கு நான்கரை மணிநேரம் செல்போனில் செலவிடுகிறார் என்கிறது. தவிர, ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக 58 முறை தனது செல்போனை அவ்வப்போது எடுத்துப் பார்க்கிறார் என்றும் தெரிவிக்கிறது. இதில், வேலை நேரத்தில் மட்டும் 30 முறை பார்க்கிறாராம். இதில் நாடுகளாக பார்க்கையில், பிலிப்பைன்ஸ் முதலிடத்தில் உள்ள து. அதாவது பிலிப்பைன்ஸ்காரர்கள் நாளொன்றுக்கு ஐந்து மணிநேரம் 47 நிமிடங்கள் செல்போன்களில் நேரத்தைச் செலவிடுகிறார்கள்.இது சராசரியைவிட இரண்டரை மணி நேரம் அதிகம். இதற்கடுத்து தாய்லாந்துக்காரர்கள் ஐந்து மணிநேரம் 28 நிமிடங்கள் ஒரு நாளைக்கு செல்போனில் செலவிடுகிறார்கள்.மூன்றாவது நாடாக பிரேசில் உள்ளது. உழைப்பிற்குப் பெயர்போன ஜப்பான்காரர்கள் ஒருநாளைக்கு ஒன்றரை மணிநேரமே ஸ்மார்ட்போனில் செலவழிக்கிறார்கள்.அவர்கள்தான் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர்.வயதின் அடிப்படையில் செல்போனில் செலவிடும் நேரம் பற்றிய ஆய்வில்,26 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் நான்கில் மூன்றுபேர் செல்போனில் அதிகளவு நேரத்தைச் செலவிடுவதாகத் தெரிய வந்திருக்கிறது.
இதேபோன்று சீனா, மலேஷியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஒன்லைன் ஆய்வில் பெரும்பாலான மாணவர்களின் மனநலனை அவர்கள் செல்போனில் செலவழிக்கும் நேரமே தீர்மானிக்கிறது என்று தெரிய வந்துள்ளது.மேற்குறிப்பிட்ட நாடுகளில் கல்வி கற்கும் 622 பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களில் யார் அதிகளவில் செல்போன் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதிகப்படியான மனச்சோர்வை எதிர்கொள்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதீதமான செல்போன் பயன்பாடு மாணவர்களிடையே மன அழுத்தம் தொடங்கி தன்னை தானே குறைத்து மதிப்பிடுதல்,அச்சம் உள்ளிட்ட சிக்கல்களுக்கு காரணமாகிறது. செல்போன் அதி கமாக பயன்படுத்துவது நோமோபோபியா(செல்போன் இல்லாமல் இருக்க முடியாத நிலை),எடை குறித்த பயம் இப்படியான பிரச்சினைகளையும் உருவாக்குகிறது. ஒட்டு மொத்தமாக செல்போன்கள் ஆபத்தானவை எனச் சொல்ல முடியாது. ஆனால் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு உதவி தேவைப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் சராசரி நேரம் 4.8 மணி நேரமாக உள்ளதாகவும் இவர்களில் 40 சதவீதம் பேர் சமூக ஊடக நாட்டம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.பொதுவாக இளைஞர்கள்தான் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துபவர்கள். நிறைய பேருடன் தொடர்பில் இருக்கவும் தனிமையை தவிர்க்கவும் செல்போன்களை பயன்ப டுத்துகிறார்கள்.இது ஒரு வகையில் அவர்களுக்கு உதவினாலும் நேரடி வாழ்வில் தொடர்புடையவர்களிடமிருந்து விலகி செல்கிற நிலையையும் உரு வாக்குகிறது.அவர்களால் பயன்படத்தக்க வகையில் நேரம் செலவழிக்க இயலுவதில்லை என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன்களினால் ஏற்படும் பிரச்சினைகள்
இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தாமதமான தூக்கத்தினால் அல்லது தூக்கமின்மையினால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இரவு நேரத்தில் அளவுக்கதிகமாக செல்போன் பயன்படுத்துவதால் *ரிவென்ஜ் பெட் டைம் புரோகிராஸ்டினேஷன்' (revenge bed time procrastination) எனும் பிரச்சினை ஏற்படுகிறது. இரவில் செல்போன் பாவனை யால் முதலில் எதிர்கொள்ளும் பெரிய பாதிப்பு தூக்கத்தை தொலைப்பதே. செல்போனில் இருந்து வெளிவரும் வெளிச்சம் உடலின் சர்கார்டியன் ரிதம் எனப்படும் உடலியல் இயக்க செயன்முறையினை பாதிப்படைய செய்யும். அவ்வாறே இரவில் படுக்கைக்கு அருகில் செல்போன்களை வைத்து உறங்கும் போது அதன் அதிர்வுகளால் உறக்கநிலை குழப்பமடையும் நிலைமை ஏற்படும்.இதுவே பல்வேறு உடல் அசௌகரியங்களுக்கு வித்திடும். ஆய்வின்படி சுமார் 20 ற்கும் 30ற்கும் இடைப்பட்ட வயதினர் கடந்தகாலங்களில் மனோ வியாதிகள்,பார்வைக் குறைபாடுகள் மற்றும் உடலியற்கூறுகள் சார்ந்த உபாதைகளுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறியப்பட்டது. இதற் கான காரணத்தினை ஆராயும்போது அவ் வகை பாதிப்பிற்குள்ளானவர்கள் பொதுவாக செல்போன் பாவனையினை அதிகளவில் மேற்கொள்பவர்கள் என அறியப்பட்டது.உறக்கமினமை நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக நீரிழிவு, தொப்பை போடுதல்,உடற் சுரப்புகள் சமமின்மை,உயர் இரத்த அழுத்தம் போன்ற உபாதைகள் ஏற்படும்.
செல்போன் பாவனையால் மாணவர்கள் அதிக பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதால் கல்வியில் ஈடுபாடு குறைவு,வீட்டு வேலைகளை செய்யாமை,சிறந்த ஆளுமையை விருத்தி செய்யக் கூடியபொழுது போக்குகள் இன்மை, உடல், உள சோர்வு, மன ரீதியில் பாதிக்கப்படல்,புத்தக தேடுதல் குறைவு,செல்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாதல், துர்நடத்தை,பண,நேர வீண்விரயம், கல்வியில் இடை விலகல்,சரியான நேரத்துக்கு தூக்கமின்மை,சரியான நேரத்துக்கு உணவினை உட்கொள்ளாததால் உடல் நலம் குன்றுதல், கண் பார்வைப்பிரச்சினை, முதுகு வலி என்பன ஏற்படல், குடும்ப உறவினர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்தல்,காதல் வயப்படல், ஆபாச படங்களைப் பார்த்தல்,அறிமுகமற்றோருடனான தொடர்பு அதிகரிப்பதோடு அறிமு கமான வர்களுக்கிடையிலான தொடர்பு அருகுதல்,அந்நியக் கலாசாரத் தாக்கம் ஊடுருவல்,கல்வியைப் பூரணப்படுத்தாமல் இடைவிலகுவதால் தொழில் வாய்ப்புக்களை இழத்தல்,பெற்றோரைக் கவனிக்க முடியாது மற்றோரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படல் இதனால் மது,போதை, களவு, கொலை, கொள்ளை போன்ற வன்முறைகளில் ஈடுபடல் போன்றன அடையாளம், காணப்பட்டுள்ளன.
குழந்தைகளை அமைதிப்படுத்த விரும்பும் பெற்றோர்,ஏதேனும் குழந்தைகளுக்கான பாடல்களையோ கார்ட்டூன்களையோ தங்களுடைய செல்போனில் போட்டுக் காட்டி அவர்களை அமைதிப்படுத்துகிறார்கள். அப்படி செய்யும் பெற்றோர் கவனிக்க வேண்டிய சில தகவல்களை டொக்டர் மனோஜ் கூறுகையில்,2வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 2 - 5 வயது குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான அளவில் மட்டுமே செல்போனை வழங்க வேண்டும்.ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர்கள் செல்போனை பயன்படுத்தினால்,சில உடல் ரீதியான மற்றும் மனரீதியான பிரச்சினைகள் வரலாம்.2-5 வயதில்தான் குழந்தைகளுக்கு பேசும் திறன் உருவாகும். அதிகப்படியாக செல்போனை பார்ப்பதால் பேசும் திறன் வளர்ச்சி தாமதமாகலாம். சில குழந்தைகள் அதீதமாக நடந்து கொள்ளலாம்.2-5 வயது குழந்தைகளுக்கு சொல்லப்பட்டுள்ள இந்த ஒரு மணி நேரம் என்பதும் பெற்றோர் உடனிருக்க வேண்டும்.அவர்கள் குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள்,சரியான இடைவேளையில் ஓய்வு எடுக்கிறார்களா,சரியாக அமர்ந்திருக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.ஒன்லைன் வகுப்புகளில் பங்கேற்றாலும் அதிக நேரத்திற்கு தொடர்ந்து செல்போனை பார்ப்பது நல்லதில்லை.குழந்தைகளிடமிருந்து நாம் செல்போனை திரும்ப வாங்கிவிட்டால்,அந்த கணத்தில் அவர்கள் அதீதமாக நடந்து கொள்வார்கள். எனவே செல்போனை கொடுக்காமல் இருப்பதே நல்லது என்கிறார் உலக சுகாதார நிறுவனம்.பதின்மூன்று நாடுகளில் செல்போன் பாவனை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தினமும் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தும் ஒருவர் மூளைப் புற்று நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அதே நேரம் தொடர்ச்சியாக 4வருடங்களுக்கு மேல் செல்போன் பாவிப்பவர்கள் டினிடஸ் (Tinnitus)என்ற உளத் தாக்கத்துக்கு உள்ளாவதாக அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் சூழல், சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. டினிடஸ் என்பது செவியினுள் தொடர்ந்து(Ringing) ரிங்கிங் ஒலி கேட்டுக் கொண்டிருப்பதாகும்.இவ் வாய்வினை மேற்கொண்ட கலாநிதி ஹான்ஸ்பீட்டர் பிரிட்டனில் டினிடஸ் தாக்கத்திற்குட்பட்ட ஐந்து மில்லியன் பேர் உள்ளதாக தெரிவிக்கின்றார்.
செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படக்கூடிய சுகாதார கேடுகளை பற்றிய அறிவுறுத்தலை கலிபோர்னியாவின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதில் மக்கள் தத்தமது செல்போன் பாவனையை குறைத்துக் கொள்ளுவதுடன் முடிந்தளவு செல்போன்களை அருகில் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே உடல்நலத்திற்கு சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோய்,மனநிலை பாதிப்பு மற்றும் ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மையுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
London School of Hygiene Tropical Medicine ஒரு ஆய்வினை மேற்கொண்டது.அந்த ஆய்வில் மருத்துவமனை,பொது கழிப்பிடம்,சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் நாம் செல்போன்களை பாவிக்கும் பொது அவற்றின் மூலம் பல தொற்று வியாதிகளை காவும் கருவியாக எமது செல்பேசிகள் அமைந்து விடுகின்றன.இவ்வாறு பொது இடங்களில் பயன்படுத்தப்பட்ட 400 செல்போன்களை ஆய்வு செய்ததில் அவற்றில் 92 வீதமானவை பக்டீரியாவை கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவ்வாறே,வைத்தியசாலைகளில் சுற்றுசூழலில் காணப்படும் நீர்நிலைகளில் பரவக்கூடிய நோசகோமியா நோய்கிருமிகள் அதிகளவில் அங்கு வரும் பார்வையாளர்களின் செல்போன்கள் மூலம் பரவல் அடைவதை Journal of Hospital Infection ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.எனவே பொது இடங்களில் செல்போன் பாவனையினை முடிந்தளவு தவிர்ப்பது உடல் சுகாதாரத்திற்கு நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
செல்போன்களில் இருந்து வெளிவரும் மின் காந்த அலைகளானவை இதயத்தை பலம் இழக்க செய்வதுடன் மின்காந்த ஆற்றலின் விஷத்தன்மை யானது செல்களை சேதப்படுத்தவும் செய்வதாக European Journal of Oncology எச்சரிக்கின்றது.பொதுவாக இடப்பக்கம் சட்டைப்பைகளுக்குள் எமது செல்போனை வைக்கும்போது அதிலிருந்து வெளிவரும் மின் காந்த கதிர்களின் செயற்பாடானது நேரடியாக இதயத்தை பாதிக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது.அவ்வாறே உயர் இரத்த அழுத்தம் ஏற்பட நேரடி காரணியாகவும் உள்ளது எனவே சட்டைப்பைகளில் செல்போன்களை வைத் துக் கொள்வதை தவிர்த்திடவும் இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் செல்போன்களை பயன்படுத்தாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
செல்போனின் காந்த மின்னலை வீச்சானது விந்தணுக்களை சேதப்படுத்துவதாக Reproductive bio medicine online நாளிதழ் ஆய்வறிக்கையினை சமர்ப்பித்துள்ளது.மேற்சட்டைப்பையில் மட்டுமல்ல காற்சட்டைகளில் கூட ஆண்கள் செல்போன்களை வைத்துக் கொண்டு செல்வதால் அதன் கதிரியக்க தன்மையானது ஆண்களின் விந்து உற்பத்தியினை குறைவடையச் செய்வதாகவும் பெண்களுக்கு கருத்தடை ஏற்படுத்தவும் வழி வகுப்பதாகவும் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.
Computers in Human Behavior தமது ஆய்வில்,ஒரு சிலரை நாம் கவனித்தோமானால் நொடிக்கொருமுறை தமது செல்போன்களை தட்டிப்பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள்.செல்போன் இயங்கினாலும் இயங்கா விட்டாலும் அதனைத் தட்டிப் பார்ப்பது மற்றும் சரி பார்ப்பது உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வார்கள்.இவ் வைகையானோர் அதிகளவில் மன அழுத்தம் உள்ளவர்களாக அறியப்படுகின்றனர்.அவ்வாறே தொடர்ச்சியாக ஒளி மற்றும் ஒலி எழுப்புதல் மன ரீதியான பாதிப்புகளை அதிகப்படுத்தும் காரணியாக கருதப்படுகின்றது.தொழில்நுட்பத்தின் அதிகபட்ச பயன்பாடானது மனோவியல் ரீதியான அனைத்து பாதிப்புகளுக்கும் வழி அமைக்கும் முக்கிய காரணி எனக் குறிப்பிட்டுள்ளது. இன்று நடக்கும் பல விபத் துக்கள் செல்போனில் பேசிக்கொண்டோ அல்லது செல்போனில் பாடல் கேட்டுக்கொண்டோ வாகனம் செலுத்தவதாலேயே ஏற்படுகின்றது என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.விபத்துக்களில் 10 சதவிகிதம் செல்போன் பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது என அந்த ஆய்வு கூறுகின்றது.அதனாலேயே இலங்கை உள்பட பல நாடுகளில் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்ப டுகிறது.மேலும் செல்போனின் உதவியால்தான் பலவித புதுப்புது குற்றங்கள்,மோசடிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
Post a Comment