.

வெகுகாலத்திற்கு முன் காஷ்மீர் நகரம் ஒன்றின் பக்கத்தில் இருந்த ஒரு குன்றின் மீது ஒரு ராட் சஸன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டு இருந்தான். இந்தக் காஷ்மீர் ராட்சஸன் மக்களை மிரட்டி அடித்துக் கொன்று நிறையப் பணத்தையும் நகைகளையும் பண்டங்களையும் ஏராளமாகச் சேர்த்து விட்டான். இதனாலெல்லாம் கூடமக்கள் அந்த ராட்சசனிடம் அவ்வளவாக பயந்து விடவில்லை ஆனால் சில சமயங்களில் நகருக்குள் போய் யாராவது ஒருவனிடம் போய் அவனது மகளைத் தனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று ந துன்புறுத்தி மணம் செய்து கொண்டு போன போதுதான் பெண்ணின் பெற்றோர் கதறி அழுவார்கள். ஏனெனில் சில நாட்களுக்குப் பின் அந்தப் பெண்ணை ராட்சஸன் கொன்று தின்று விடுவான்.

இவ்வாறு ராட்சஸன் இரு பத்து நான்கு பெண்களை மணந்து கொண்டு அவர்களையெல்லாம் கொன்று தின்று விட்டான். அவன் இருபத்தைந்தாவது தடவையாக ஒரு பெண்ணை மணக்கும் நோக்கத்தோடு தன் மாளிகையி லிருந்து இறங்கி நகரை நோக்கிச் சென்றான். நகர எல்லையில் ஒரு குடியானவனை அவன்கண்டு "நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து வை” என்று கூறினான். அது கேட் டுக் குடியானவன் திகைத்துப் போனான். ராட்சஸனும் “நான் நாளை மறு நாள் உன் வீட்டிற்குச் சாப்பிட வருகிறேன் அப்போது திருமணம் பற்றிப் பேசி முடிவு செய்யலாம்” என்று கூறி விட்டுத் திரும்பித் தன் வீட்டிற்குச் சென்று விட்டான். குடியானவன் வீட்டிற்குப் போய் தன் மகளான மாலதியிடம் ராட்சஸன் கூறியதைச் சொன்னான். அதைக் கேட்டு அவள் பயப்படவில்லை. மாறாக “அப்பா! நான் சொல்கிறபடி சொல்லி செய்யச் சொன்னதை நீங்கள் செய்தால் இந்த ராட்சஸனின் தொல்லையிலிருந்தும் விடுபடலாம். நமக்கும் நல்ல ஆதாயம் கிடைக்கும் " என்றாள். அவனும் மகளின் சொற்படியே நடக்கவும், ராட்சஸனிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லவும் சம்மதம் தெரிவித்தான்.


மாலதியின் யோசனைப்படி அவளது தந்தை தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து நிறைய முயல்களையும் ஒரு பீப்பாய் திராட்சையிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுவையும் வாங்கி வந்தான். மாலதி அக்கம் பக்கத்து வீடுகளில் இரவலாகக் கேட்டு பலவிதத் துணிகளை வாங்கி வந்தாள். அவற்றை சுவர் ஓரமாக தொங்க விட்டாள். ராட்சஸன் சாப்பிட வருவதாகக் குறிப்பிட்ட நாளில் ஒரு அண்டா நிறைய முயல் மாமிசத்தைப் பக்குவமாகச் சமைத்து வைத்தாள். 

ராட்சஸன் சாப்பிட உட்காரப் போகும் இடத்தில் ஒரு பக்கம் மாமிச அண்டாவையும் இன்னொரு பக்கம் மது நிரம்பிய பீப்பாயையும் மாலதி வைத்தாள். ராட்சஸன் வந்தான். சாப்பிட உட்கார்ந்தான். முயல் மாமிசத்தை எடுத்து வாயில் போட்டவாறே "ஆகா! வெகுருசியாக இருக்கிறதே" என்று மகிழ்ச்சி ததும்பக் கூறினான். பிறகு அவன் எனக்காக நிறைய செலவு செய்து இதைத் தயாரித்திருப்பது தெரிகிறது" எனக் கூறி முயல் மாமிசத்தை எடுத்து எடுத்து விழுங்கலானான். .. அப்போது மாலதி "எங்களுக்கு அதிகச் செலவே இல்லை. நம் நாட் டில் எலிகளுக்கா பஞ்சம்? அவற்றைப் பிடித்தோம் பக்குவப்படுத்தி சமைத்தோம்” என்றாள். ராட்சஸனும் ''எலி களின் மாமிசம் இவ்வளவு ருசியா? நான் மணந்த பெண்களில் ஒருத்தி கூட ஒரு நாளும் எலி மாமிசத்தைப் பக்குவ மாய் சமைத்ததே இல்லை. அவர் களுக்கு இந்தப் பக்குவம் தெரியாது போலிருக்கிறது" என்றான். தனக்கு மனைவியாகப் போகும் மாலதி சிக்கனமாய்க் குடித்தனம் நடத்துப வள் எனக் கண்டு அவன் மகிழ்ந்து சுவரோரம் தொங்கவிடப்பட்ட துணிகளைப் பார்த்து "இவற்றை யெல்லாம் நீதான் நெய்தாயா?” என்று கேட்டான். "

மாலதியும் "இவற்றையெல்லாம் பத்து நாட்களுக்கு முன்தான் நெய்து முடித்தேன்” எனக் கூறித் தன் இரு கை களையும் உயர்த்திப் பத்து விரல் களையும் காட்டினாள். அவளது கைகள் வேலை செய்து சொர சொரப் பாக இருந்ததை அவன்கவனித்தான். இதனால் ராட்சஸன் மாலதியை மேலும் உயர்வாக மதிப்பிட்டுக் கொண்டான். அதன் பின் தன் பக்கம் வைக்கப்பட்டிருந்த பீப்பாயிலிருந்து மதுவை எடுத்து அருந்தி “ஆகா! எவ் வளவு உயர்ந்த ரக மது! இதைத் தயாரிக்க மிகவும் செலவாகி இருக்குமே" என்றான். 

அதற்குக் குடியானவன் “எங்களுக்கு என்ன செலவு? பிறரைப் போல அழுகிப் போன திராட்சைப் பழங்களை உலர வைத்துப் பன்றிக் குப் போடாமல் அவற்றை சேகரித்து மாலதி தனக்குத் தெரிந்த ஒரு ரகசிய முறையில் இந்த மதுவைத் தயாரித்தாள்”என்றான். ராட்சஸனும் ‘“அழுகிப் போன திராட்சையிலிருந்து இப் படி நல்ல மதுவைத் தயாரிக்கக் கூட ஒரு வழி இருக்கிறதா? எனக்குத் தெரியாதே சரி, மாலதியைக் கல்யாணம் செய்து கொண்ட பின் அவளிடமிருந்து நான் தெரிந்து கொள்கிறேன் எனக்கு வரதட்சணை என்று கூட எதுவும் கொடுக்க வேண்டாம்” என்றான். 


குடியானவனும் “வரதட்சிணை கொடுப்பதா? நான் மாலதியை உனக் குக்கல்யாணம் செய்து கொடுத்தாலே பல லட்ச ரூபாய்கள் கொடுத்து போலாகும். இவ்வூர் சேட் இவளை மணந்துகொள்ள எனக்கு இரண்டு லட்சம் கொடுப்பதாகக் கூறினார். அது பற்றி யோசித்து முடிவு செய்வதாகக் கூறியுள்ளேன்” என்றான். 


அதைக் கேட்ட ராட்சஸன் கோபத்தோடு “என்ன விளையாடுகிறாயா? நான் மாலதியைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போனால் உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான். அதைக் கேட்ட குடியானவன் “கட கட”வென்று சிரித்து “உனக்கு மாலதியைப் பற்றித் தெரியாது. அவள் முரண்டு பிடித்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. உன்னைத் துண்டு துண்டாக நறுக்கி ஊறுகாய் போட்டு விடுவாள். சாதுவுக்கு அவள் சாது. முரடனுக்கோ அவள் மகா முரடு. தெரிந்ததா?” என்றான். 

அது கேட்டு ராட்சஸன் தணிந்து 'சரி. உனக்கு லட்சம் ரூபாய் கொடுத்து விடுகிறேன். சம்மதமா?" என்று கேட்கவே குடியானவன் “ஒரு லட்சம் போதாது. இரண்டும் லட்சம் வேண்டும்” என்றான். ராட்சஸனும் மாலியை மணந்தால் தனக்கு நல்ல ஆதாயமே என எண்ணி குடியானவனுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தான். குடியானவனும் அதை வாங்கி பத்திரப் படுத்தி வைத்தான். 

இதன் பிறகே திருமணம் பற்றி பேச்சுவார்த்தை தொடங்கியது. அப்போது மாலதி ராட்சஸனிடம் “என்னை மணக்கு முன் என் இரு விருப்பங்களை நிறைவேற்ற வேண் டும். சிக்கனமாக வாழ்க்கை நடத்த எனக்கு நான் கூறுவது போல் ஒரு புதிய வீட்டைக் கட்டிக் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக கிழவி வாத்துக்களின் இறகுகளைப் பிடுங்கும் போது புதிய இறகுகளால் எனக்கு ஒரு மெத்தை தயாரித்துக் கொடுக்க வேண்டும். அது நான் படுத்து நன்கும் விதத்தில் மெத்தென்று இருக்க வேண்டும்" என்றாள். 

ராட்சஸன் அந்த இரு வேலைகளையும் தானே செய்து விடுவது என்று தீர்மானித்து அவள் விரும்பியபடி புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்தான். அப்போது குளிர்காலம் ஆரம்பமாகி இருந்தது. அப்போது மாலதி துணியால் நீண்ட மெத்தை உறை ஒன்றைத் தயாரித்து வைத்தாள். அடுத்து பனி விழும் காலம். அப்போது பனி விழுவதை அப்பகுதி மக்கள் 'கிழவி வாத்தின் இறகுகளைப் பிடுங்கிப் போடுகிறாள்” என்று கூறுவார்கள். 

மாலதி ராட்சஸனுக்கு கிழவி இறகுகளை பிடுங்கிப் போட்டுக் கொண்டிருக்கிறாளெனச் செய்தி அனுப்பினாள். ராட்சஸன் வந்ததும் அவள் “கீழே விழும் இறகுகளை எல்லாம் சேர்த்து இந்தப் பைக்குள் போடு” இது நிரம்பியதும் இதன் வாயைக் கட்டிவிடு" என்றாள். ராட்சஸன் மண்வெட்டி எடுத்து வந்து மாலதி இறகுகள் எனக்காட்டிய பனிக் கட்டிகளை எடுத்து அவள் கொடுத்த நீண்ட பைக்குள் போடலானான். பையும் ஒருவாறாக நிரம்பியது அப்போது மாலதி "இதன் வாயை தைத்து இதன் மேல் ஒரு விரிப்பைப் போடுகிறேன். இன்றிரவு இதன் மீது படுத்துக் கொண்டு பார். மெத்தென்று இருக்கும். நீ என் இரு விருப்பங்களையும் நிறைவேற்றி விட்டதால் நாளையே நமக்குக் கல்யாணம்' என்று கூறினாள்.

ராட்சஸனும் மாலதி கூறியபடி அந்தப் பனிக்கட்டி மெத்தை மீது படுத்தான். அவன் படுத்த சற்று நேரத்தில் பைக்குள்ளிருந்த பனிக்கட்டி உருகி விட்டது. படுக்கை ஈரமாகவே இருந்தது. மாலதி கூறியபடி இரவு முழுவதும் அதன் மீது படுத்திருக்க வேண்டுமாதலால் அப்படியே படுத்துக் கிடந் தான். அவனது உடம்பு முழுவதும் வலிக்கலாயிற்று. மறுநாள் காலை அவனால் எழுந்து நிற்கவே முடியவில்லை. மெத்தையோ பாதிக்கும் மேல் கரைந்தும் போயிற்று. 

அப்போது ராட்சஸன் “மாலதியின் சிக்கனம் எனக்குப் பிடித்திருந்தாலும் தினமும் மாலதியுடன் இப்படியொரு மெத்தையில் படுக்க வேண்டுமே என நினைத்தாலே பயமாய் இருக்கிறது” என்று எண்ணித் தன் கோட்டைக்குப் போய் விட்டான். ராட்சஸன் கோட்டையைப் போய்ச் சேர்ந்து விட்டான் என்று உறுதி செய்து கொண்ட பிறகு மாலதி தன் தந்தையை அவனோடு பேச அவனது கோட்டைக்கு அனுப்பினாள். குடியானவனும் ராட்சஸனின் கோட்டைக்குப் போய் வாசலில் நின்ற காவலாளியிடம் “நீ போய் உன் எஜமானனிடம் மாலதியின் தந்தை திருமணவிஷயமாகப் பேச வந்திருப்பதா கக் கூறு” என்றான்.

உள்ளே போய் விட்டு வந்த அக் காவலாளி “தங்களை ஏமாற்றமடையச் செய்ததற்காக என்ன நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென அவர் கேட்டு வரச் சொன்னார்" என்றான். குடியானவன் "அவரது இஷ்டப்படி கொடுக்கட்டும்” எனவே காவலாளியும் உள்ளே போய் விட்டுவந்து “அவர் தம் வாத்துக்களையெல்லாம் உங்களுக்குக் கொடுத்து விட்டார். நீங்கள் அவற்றை ஓட்டிக் கொண்டு போகலாம். இதற்குப் பிறகு நீங்கள் வரக் கூடாது. எங்கள் எஜமானரின் கல்யாணப் பேச்சையே எடுக்கக் கூடாது. இது அவர் கட்டளை” என்றான். குடியானவன் ராட்சஸனின் வாத்துக்களை ஒட்டிக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான். அதற்கு பிறகு ராட்சஸன் யாரிடமும் கல்யாணப் பேச்சே எடுக்கவில்லை. காரணம் மாலதி தயாரிக்கச் சொன்ன வாத்துக்களின் இறகுகளான மெத்தைதான்.

Post a Comment

Previous Post Next Post