.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 50 லட்சம் பேர் பாம்புக்கடியை எதிர்கொள்வதுடன், அதில் கிட்டத்தட்ட 27 லட்சம் பேர் நச்சுப்பாம்புகளின் கடியால் பாதிக்கப்படுவதுடன், இவர்களில் 81,000 முதல் 1,38,000 பேர் வரை பாம்புக்கடியால் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறும் நிலையில் இத்தினம் எந்தளவு முக்கியத்துவமானது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

பாம்புக்கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் முதலி டத்தில் இருக்கும் உலக நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?இலங்கையில் 105 வகையான பாம்கள் இதுவரையில் கண்டறியப் படுள்ளன.இவை நிலம்,நன்னீர்,கடல்நீர் என்பவற்றில் வாழ்வதுடன் இவற்றில் அநேகமானவை மனிதர்களுக்கு மரணத்தை விளைவிக்காத பாம்புகளா கவுள்ள போதும், இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பேர் பாம்புக் கடிக்குள்ளாவதுடன்,இவர்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்பது சாதாரண விடயமல்ல.பெரும்பாலான பாம்புக்கடிகள்,பாம்புக்கடி மரணங்கள் பதிவு செய்யப்படுவதே இல்லை என்பதனால் இலங்கையில் பாம்புக்கடியும் அதனால் ஏற்படும் மரணங்களும் இதனைவிடவும் இன்னமும் அதிகமாகவே இருக்கலாம்.

எனவே தப்பித்துக்கொள்ளக்கூடிய பாம்புக்கடி தொடர்பிலும் தவிர்க்கப்படக் கூடிய பாம்புக்கடி மரணங்கள் தொடர்பிலும் நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமா னதும் அவசரமானதுமாகும்.

இலங்கை பாம்புகள் 

இலங்கையில் அதிக வகையான பாம்புகள் நிலம், சுத்தமான நீர், கடல் நீர் என்பவற்றில் வாழ்கின்றன. ஏறத்தாழ 105 வகையான பாம் புகள் அடையாளம் காணப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளன.புதிய வகையான பாம்புகள் இன்னமும் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டி ருக்கின்றன. இவற்றில் அநேகமான பாம்புகள் தீங்குவிளைவிக்கக் கூடியவை அல்ல. ஒரு சில வகையான பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை.இவற்றில் நிலத்தில் வாழும் நாகபாம்பு, கட்டுவிரியன்,கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், புடையன், எண்ணெய் விரியன் ஆகிய 6 வகையான இனப்பாம்புகள் அதிகளவு விஷமுடைய, மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாம்புகளாக கருதப்படுகின்றன.

இலங்கையில் காணப்படும் அனைத்து இனக் கடற்பாம்புகளும் அதிகளவு விஷமுடைய பாம்புகளாக கருதப்படுகின்றன.எனினும் இவ்வாறான பாம்புகள் ஆக்ரோசமான பாம்புகளாக காணப்பட்டாலும் கோபமூட்டும் சந்தர்ப்ப ங்களில் மட்டும் தீண்டும் தன்மையுடையவை .இலங்கையில் தற்போது 15 வகையான கடற்பாம்புகள் கண்டுபி டிக்கப்பட்டுள்ளன.கடலிலும் ஆற்றிலும் வாழும் வளைந்த மூக்கு கடற் பாம்பு மிகவும் ஆக்ரோஷமானது. இலங்கையில் வடபகுதி கரையோரங்களிலும் அதிகளவு விஷமுடைய கடற்பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்பு மனிதனைக் கடிப்பது ஏன்? 

பாம்பின் மீது மனிதர்களுக்கான அச்சத்தாலும்,மனிதர்கள் மீது பாம்புகளு க்கான அச்சத்தாலும்,தான் ஒருவரை ஒருவர் எதிரிகளாகக் கருதி தாக்கிக் கொள்கின்றனர்.பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள்.ஆம் உண்மைதான் பாம்பு தீண்டினால் நொடிப்பொழுதில் உயிர் பறிபோகும் என்றால் யாருக்குத்தான் பயம் இருக்காது? ஆனால் மனிதர்கள் தம்மைக் கண்டால் அடித்துக்கொன்று விடுவார்கள் என்ற அதே பயம் பாம்பிற்கும் இருக்கும் அல்லவா?எப்படி மனிதா்களுக்கு பாம்புகளை கண்டால் பயமோ அதேபோல பாம்புகளுக்கும் மனிதா்களை கண்டால் பயம்.மனிதர்களை கடிக்க வேண்டும் என பாம்புகள் ஒருபோதும் திட்டமிட்டு கடிப்பது இல்லை. மாறாக மனிதர்களே அதை கண்டவுடன் கொல்ல வேண்டும் என நினைக் கிறார்கள்.பாம்புகள் தங்களை தற்காத்துக்கொள்ள வேறு வழியில்லாமல் மனிதா்களை கடிக்கின்றன. இதனை “விஷக்கடி”என்பார்கள். அதேவேளை மனிதர்களின் உறுப்புக்களை இரை என நினைத்து பாம்புகள் கடிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. இதனை “இரைக்கடி” என்பார்கள். 

பொதுவாக கிராமப் பகுதிகளில் வயல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வீடுகள் இருக்கும். இந்தப் பகுதிகளில் மக்களோடு மக்களாகப் பல ஊர்வன இனங்களும் வாழ்ந்து வரும்.அவற்றுள் ஓணான் முதல் பாம்புகள் வரை அனைத்தும் அடங்கும். மனிதனும் இதுபோன்ற விஷ ஜந்துகளும் மிக அருகில் வாழும்போது அடிக்கடி ஒன்றோடு ஒன்று சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாகிறது. எந்தப் பாம்பும் திரைப்படங்களில் காட்டுவதுபோல வீடு தேடிவந்து பழி தீர்ப்பதில்லை.அதன் பாதையில் நாம் குறுக்கிட்டாலோ, அதன் மீது நம் கால்பட்டாலோதான் அவை நம்மைத் தாக்கும்.இயற்கையின் படைப்பில் பாம்புகளுக்கு விஷம் தரப்பட்டிருப்பது மனிதனைக் கொல்வதற்கு அல்ல.பாம்பு தனது இரையான தவளை போன்ற உயிரினங்களை மூர்ச்சை அடையச் செய்ய அந்த விஷத்தைப் பயன்படுத்தும் அல்லது தனது எதிரிகளான கீரிப்பிள்ளை, கழுகு, மயில் போன்றவற்றிடமிருந்து காத்துக் கொள்ள அதைப் பயன்படுத்தும். 

பாம்பு கடித்தவுடன் உடலில் நடப்பது என்ன ? 

பாம்பு மனிதரைக் கடித்தவுடன் விஷம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. ஆனால் விஷம் உங்கள் இரத்த ஓட்டத்தினூடாக பயணிப்பது இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். எனவே இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுவதற்குப் பதிலாக,நிணநீர் அமைப்பு (lymphatic system) எனப்படும் வேறுபட்ட திரவ போக்குவரத்து அமைப்பில் விஷம் பயணிக்கிறது. நிணநீர் அமைப்பு வெகுதூரம் இரத்தத்தை விட வித்தியாசமாக நகரும்.உங்கள் சுற்றோட்ட அமைப்பு செய டை லிய லில் இருக்கும், இருந்தபோதிலும் நீங்கள் மயங்கியிருப்பீர்கள்.ஆனால் நிணநீர் திரவங்கள் உங்கள் கை, கால்களை அசைக் கும் போது மட்டுமே நகரும். ஆனால் விஷம் கடித்த இடம்வழியாக இரத்த ஓட்டத்தை அடையாமல், இறுதியில் அந்த தசை இயக்கத்தின் மூலம்,கழுத்தின் அடிப்பகுதியில் உள்ள நரம்புகளுடன் இணைக்கப்பட்ட பெரிய lymphatic trunk களை இணைந்த பிறகு நிணநீர் திரவங்கள் இரத்தமாக மாறும். இந்த நேரத் தில், விஷமத்தன்மையானது கணிசமாக அதிகரிக்கும். 

முதலுதவி

இது தொடர்பில் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், பொதுவாக, பாம்புக் கடிக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்பாக என்னென்ன முதலுதவி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. மாறாக,மூடநம்பிக்கைகளே பெருகிக் கிடக்கின்றன. இதனால் பல உயிர்களை இழந்து வருகிறோம். எந்த ஒரு விஷக்கடியையும் அலட்சியம் செய்யக்கூடாது. மனிதர்களைத் தீண்டும் அனைத்துப் பாம்புகளும் விஷத்தன்மையோடு இருப்பதில்லை.மருத்துவமனைக்கு வரும் 80 வீத பாம்புக்கடி நோயாளிகள் விஷமற்ற பாம் புகளால் தீண்டப்பட்டவர்களாகவே இருக்கிறார் கள். பாம்பு கடித்தால் அந்த இடத்தில் இரண்டு பல் பதிந்த தடம் இருக்க வேண்டும் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது.எந்தப் பாம்பும் திட்டமிட்டு மனிதனைக் கடிப்பதில்லை.தன் காப்பாற்றிக்கொள்ள தற்காப்புக்காக கடிக்கின்றன அந்தச் சமயத்தில் நிறுத்தி நிதானமாக இரண்டு பல்லும்படுமாறு கடிக்க நேரமிருக்காது. ஆகவே பல நேரங்களில் ஒரு பல் மட்டும் படலாம்.



ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது என்றால் விஷமற்ற ஏதோ ஒன்றுதான் கடித்திருக்கும் என்று அசட்டையாக இருக்கக்கூடாது.சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவாகாத வரை அனைத்துக் கடிகளையும் விஷப்பாம்பு கடிகளாகவே நினைத்துச் செயலாற்ற வேண்டும்.பாம்பு கடித்த இடத்தைக் கடித்து விஷத்தை உறிஞ்சித் துப்புவது போன்ற மிக மோசமான கற்பனைகளையெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து மறந்துவிட வேண்டும். பாம்பு கடிப்பது என்பது மருத்துவர் ஊசி போடுவதுபோல் பாம்பு கடித்த நொடியிலிருந்து விஷம் ரத்தத்தில் கலந்து அதன் வேலையைத் தொடங்கிவிடும்.அவ்வாறு வாய் வைத்து உறிஞ்சுபவரின் வாயில் புண் இருந்தால் அதன் வழியே விஷம் அவருக்குப் பரவி, அவரும் மரணம் அடைய வேண்டிய நிலை வரலாம். 

சிலர் பாம்பு கடித்த இடத்திலிருந்து ஓர் இஞ்ச் இடம் விட்டு கயிறு அல்லது துணியைக் கொண்டு கட்டுவார்கள்.சிலர் ஏதாவது மூலிகைகளை கடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டுவார்கள்.கடி பட்ட இடத்தின் அருகில் இறுக்கமாகக் கட்டிவிட்டால் விஷம் வேறு இடங்களுக்குப் பரவாது என்ற நம்பிக்கையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.ஆனால் உண்மை என்னவென் றால் விஷம்,தோலுக்கு அடியில் இருக்கும் ரத்தநாளங்கள் மற்றும் தசைகளினூடே ஊசிபோல ஏற்றப்படுவதால் எந்தக் கயிற்றைக் கட்டினாலும் பயனில்லை.ஒருவேளை கடித்த பாம்பு விஷமற்றதாக இருந்து உயிர்பிழைக்க வாய்ப்பு ஏற்பட்டாலும் இதுபோன்று இறுகக் கட்டுவதால் அந்தக் காலுக்கோ கைக்கோ ரத்த ஓட்டம் செல்வது பாதிக்கப்பட்டு, அந்த இடம் கறுப்பாகி, அழுகி, அதனால் கிருமித் தொற்று ஏற்பட்டு மரணமடையும் நிலை வரையும் ஏற்படலாம்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடிக்கான மருந்து உள்ளது. இந்த மருந்தை உடனே செலுத்துவது பாம்பின் விஷத்தை முறியடிக்க உதவும். கடித்த பாம்பு விஷமுள்ளதா விஷமற்றதா என்பதை அறியும் ரத்த உறைதல் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையின் முடிவில் விஷப்பாம்பு என்று தெரியவரும் பட்சத்தில் உடனே விஷமுறிவு மருந்து ஏற்றிக் காப்பாற்ற முடியும் என்கிறார்.

அவசர சிகிச்சை நிபுணர் வைரமுத்து கூறுகையில், 

முதலில் பாம்பு கடித்தவரை நடக்கவோ ஓடவோவிடக் கூடாது. அவரை அப்படியே படுக்கவைக்க வேண்டும்.ஏனென்றால், உட லில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால்,விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவிவிடும்.கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தைச் சுத்தமான தண் ணீரால் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். சிலர்,கடித்த பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்து வருவார்கள்.இதுவும் தவறு.பாம்பைப் பார்த்து எந்தவிதச் சிகிச்சையும் கொடுக்கப்படுவது கிடை யாது.பாம்பை அடிப்பதற்காக ஓடாமல்,பாதிக்கப்பட்டவரை மருத்து வமனைக்கு விரைவாக கூட்டிச் செல்வதே நல்லது.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும்.எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ,அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும்.பாம்பு கடித்த உடல் பாகத்தின் அருகே மோதிரம், வளையல்,காப்பு,கைச்சங்கிலி உள்ளிட்ட எதையேனும் அணிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும்.ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம்.

எந்தப் பாம்பு கடித்ததென்று தெரிந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்பதில்லை.ரத்தம் உறையும் நேரத்தைக் கணக்கிட்டு எந்த வகைப் பாம்பு கடித்திருக்கிறது என்பதைக் கண்டு பிடித்துவிடலாம். எந்தப் பாம்பு கடித்தது என்பது தெரிந்தால் பொருத்தமான சிகிச்சை கொடுக்க முடியும் என்பதும் உண்மையே.கடித்த பாம்புகளுக்கேற்ப விஷக் கடிக்கு சிகிச்சை அளிக்கப்படும்.விஷத்தில் இரண்டு வகை. ஒன்று, நியூரோடாக்ஸின் (Neurotoxin) என்ற விஷம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மிகவும் ஆபத்தானது. நாகம் போன்ற பாம்புகள் கடிப்பதால் இந்த வகை விஷம் உட லில் ஏறும்.அரை மணி நேரத்தில் விஷமுறிவு மருந்து கொடுத்துவிட்டால், கடிபட்டவரின் உயிரைக் காப்பாற்றிவிடலாம்.மற்றொன்று, ஹீமோடாக்ஸின் (Hemotoxin) என்ற விஷம். இது, ரத்த செல்களைப் பாதித்து ரத்த உறைதலைத் தடுக்கும் அல்லது ரத்த சிவப்பணுக்களை அழித்து விடும்.கட்டுவிரியன் கண்ணாடி விரியன் போன்ற பாம்புகள் கடித்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும் என்கிறார். 

தவிர்ப்பது...தப்பிப்பது எப்படி? 

பாம்புகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான் பாம்புக்கடி மரணங்கள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால் உடனடியாக ஜன்னல் கதவுகள் அனைத்தையும் அடைப்பது,அவற்றை தாக்க கட்டை,கம்பிகளை கொண்டு போய் அவற்றை அச்சுறுத்துவதால் தான் அவை மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன.மாறாக பாம்பு வெளியே செல்ல போதுமான இடம் கொடுத்து அருகே செல்லாமல் ஒதுங்கி நின்றால் தானாகவே அவைகள் வெளியே சென்றுவிடும் என்கின்றனர் பாம்பு ஆய்வாளா்கள்.பாம்புகளை கண்டதும் பாம்பு பிடி வீரர்,தீயணைப்புத் துறை,அல்லது வனத்துறை ஆகிய யினர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.பாம்பு அதிகளவு வீட்டிற்குள் வராமல் தடுக்க வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.அசுத்தமான வீடுகளில் எலிகள் இருக்கும் என்பதால் எலிகளை தேடி பாம்புகள் வரும் வீடுகளில் ஓட்டை போன்றவை இருந்தால் அவற்றை அடைத்து வைக்க வேண்டும்.வீட்டின் ஏற்படுத்த கழிவு நீர் குழாய்களை வலை போன்ற அமைப்பின் மூலம் மூடி வைக்கவேண்டும்.இரவு நேரங்களில் கூடிய வீடுகளைச் சுற்றி வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் பாம்புகள உள்ள கொள்ள வேண்டும். வீடுகளுக்கு வெளியே குளியலறை, கழிவறை இருந்தால் அவற்றை சுத்தமாகவும் வெளிச்சத்தோடும் வைத்திருக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

மனிதர்களின் கை,கால்களிலேயே பாம்புகள் அதிகமாக கடிப்பதால் பாம்புகள் வசிக்கும் இடங்களில் நடக்கும் போது,நீளமான சப்பாத்துக்கள்,கை நீளச்சட்டைகள், கணுக்கால் வரை மூடும்வகையிலான நீளமுள்ள ஆடைகளை அணிந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.பாம்புகள் செறிந்து வாழும் பகுதிகளில் நடக்கும் போது ஒரு தடியை ஏந்தி அதனால் வழியில் தென்படும் இருமருங்கிலும் புல் பற்றைகளை அடித்துக் கொண்டு செல்வதனால் பாம்புகள் நீங்கள் செல்லும் பாதையில் முன் நோக்கி நகர்ந்து விடும். எறும்புப் புற்றுகள்,அடர்ந்த புதர்கள், மரக்குற்றிகளின் கீழ் பக்கங்கள் மற்றும் மரப் பொந்துகள் போன்றவற்றினுள் கவனயீனமாக கையை வைக்காதீர்கள். ஏனெனில் இவற்றின் கீழ் பாம்புகள் குடியிருக்கும்.பாம்புகள் தமது வாழ்விடங்களாக நெல் பயிரிடும் பாம்புகள் மக்கள் இடங்களை வைத்திருக்க விரும்புவதால் நெல் அறுவடை செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

பாம்பு விஷத்தை முறிக்க புதிய மருந்து 

ரத்தம் உறைவதைத் தடுக்கும் விலை மலிவான ஒரு மருந்தை பாம்பு விஷத்தை முறிப்பதற்குப் பயன்படுத்த முடியும் என்று அவுஸ்திரேலியா, கனடா, கோஸ்டாரிகா, பிரிட்டன் ஆகிய நாடு களில் உள்ள விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் பேராசிரியர் கிரெக் நீலி கூறுக்கையில், எங்கள் கண்டுபிடிப்பு நாக பாம்பு கடித்தால் ஏற்படும் நெக்ரோசிஸால் ஏற்படும் பயங்கரமான காயங்களை வெகுவாகக் குறைக்கும். நஞ்சு பரவும் வேகத்தைக் குறைக்கும்.அதன் மூலம் உயிர் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.விஷங்கள் மற்றும் நஞ்சுகள் போன்றவற்றையும் அவற்றை ஏற்கும் மனிதத் தரப்பையும் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.எனவே மனித உடலில் நஞ்சு எப்படி தொடர்பு கொள்கிறது என்பதைப் கொள்கிறா பற்றியும் அது எப்படி திசு அழிவுக்கும் இறப்புக்கும் காரணமாகிறது என்பது பற்றியும் எங்கள் ஆய்வு கவனிக்கிறது. வெவ்வேறு வகைப் பாம்புகளிடம் இருந்து வெவ்வேறு நஞ்சுகளை எடுக்கும்போது, அவை மனித உயிரணுக்களுடன் தொடர்பு கொள்வதற்கான சிறிய எண்ணிக்கையிலான வழிகளே உள்ளன என்பதைக் கண்டறிந்தி ருக்கிறோம். இந்த நஞ்சுகள் ஒட்டுமொத்தமாக உயிரணுக்களுடன் தொடர்பு கொள்ளும் நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு வழிகளை அடையாளம் காண முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். பின் னர் அதிக எண்ணிக்கையிலான பாம்பு வகைகளின் நஞ்சுகளை முறிக்கும் திறன் கொண்ட பொதுவான மருந்துகளை உருவாக்க லாம் என்கிறார்.நாங்கள் கண்டறிந்த புதிய நாக பாம்பு நஞ்சு முறிவு மருந்து,உலகின் ஏழ்மையான சமூகங்களில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்பு மற்றும் காயத்தைக் குறைப்பதற்கான உலகளாவிய போராட்டத்தில் உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய முன்னேற்றம் என்று கூறுகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் தியான் டு.ஹெப்பரின் மருந்து மலிவானது, எங்கும் கிடைக்கக்கூடியது. உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மருந்து வெற்றிகரமான மனித சோதனைகளுக்குப் பிறகு, நாக பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மலிவான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்தாக இது ஒப்பீட்டளவில் விரைவாக விற்ப னைக்கு வரக்கூடும் என்றும் அவர் கூறுகின்றார்.

View Synonyms and Definitions

Post a Comment

Previous Post Next Post