.

காட்டிலே ஒரு வேடன் மாலை வேளையில் வலை விரித்துச் செல்வான். இரவு அதிலே சிக்கும் விலங்கினை தன் வேட்டைப் பொருளாக மறுநாள் காலை யிலே எடுத்துச் செல்வான். அப்படி அவன் ஒருநாள் விரித்த வலையில் ஒரு பூனை சிக்கியது.

காலையிலே அந்தப் பக்கம் வந்த எலி ஒன்று பூனை வலையிலே சிக்கியிருப்பதைப் பார்த்து ஆனந்தம் கொண்டது. அப்பாடா பூனை சிக்கிச்சி. வேடன் வந்து இந்தப் பூனையை கொண்டுசெல் வான். நாம் இனிமேல் சுதந்திரமாக இருக்கலாம் என நினைத்த எலி குதியாட்டம் போட்டது. அப்போது அந்த எலியைப் பிடித்துவிடும் நோக் கில் ஒரு கீரி பாய்ந்து வந்தது. ஒரு கோட்டானும் வானில் இருந்து எலியை குறிவைத்து பறந்து வந்தது. பூனைத் தொந்தரவு இருக்காது என்ற எலியின் ஆனந்தம் சில நேரம் தான் நிலைத்திருந்தது. ஓடி சென்று வலையில் ஒளிந்தது. 

அங்கிருந்த படி பூனையிடம் பேசியது. பூனையாரே, நான் உங்களை இந்த வலையின் பிடியிலிருந்து விடுவிக்க தயார்.ஆனால் அதற்காக நான் உங்கள் அருகில் வந்ததும் நீங்கள் என்னை லபக்கென கடிக்கக் கூடாது. எலியின் இந்த யோசனை அதன் பயத்தின் காரணமானது. அதற்கு பூனை, கீரி, கோட்டான் என மூன்று விரோதிகளை ஒரே நேரத்தில் எதிர் கொள்ள திராணியில்லை. எதிரியில் ஒருவர் இப் போது ஆபத்தில் இருக்கிறார். அவருடன் நாம் தற்காலிக நட்பு கொண்டு அவரை விடுவித்து அதன் மூலம் தானும் மற்ற இரண்டு எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வாய்ப்பு. இப்படியான சிந்தனை எலியுடையது. எலியின் யோசனையினை பூனை ஏற்றது. எலி வேகமாக வலையிலிருந்து ஓடிவந்து பூனை யின் மடியில் படுத்தவாறு வலையினை தன் கூர்மையான பல்லால் கடித்து வலையினை அறுக்கத் தொடங்கியது. எலி இப்போது பூனையுடன் நட்பு கொண்டது கண்ட கீரியும் கோட்டானும் அங் கிருந்து விலகின. பூனை எலியிடம், என்னப்பா இத்தனை மெதுவாக கடிக்கிறாய். வேடன் வருவதற்குள் நான் தப்ப வேண்டாமா என்றது.



நான் காரணமாகத்தான் மெதுவாக செய்கிறேன். அதோ தெரிகிறதே ஒரு ஒற்றையடிப்பாதை அது வழி தான் வேடன் வருவான். அவன் தொலைவில் வரும் போதே இங்கிருந்து பார்த்துவிடலாம். அவன் வருவ தற்கு முன்பே நான் இந்த வலையினை முழுவதும் கடித்து உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடமாட்டாய் என்பது என்ன நிச்சயம். வேடன் வந்தபின் அவன் வலையிலே நீ சிக்கியிருப்பதைப் பார்ப்பான். உடனே விரைந்து இந்த இடத்தை அடைய வேகம் கூட்டுவான். நான் அந்த சமயம் பார்த்து உன்னை முழுவதும் விடுவித்தால் உன் கவனம் அவனிடமிருந்து எப்ப டியாவது தப்ப வேண்டும் என்பதில் இருக்கும். என்னைக் கடித்து விழுங்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு அப்போது வராது. அதேபோல் தூரத்தில் வேடன் தலை தெரிந்தது. அவனும் வலையிலே பூனை சிக்கியிருப்பதை பார்த்துவிட்டான். நடையிலே வேகம் கூட்டினான், எலியும் தன் கடிக்கும் வேகத்தை அதிகப் படுத்தியது. டக்கென வலை முழுமையாக அறுந்தது. பூனையும் எலியும் வேடனிடம் பிடிபடாமல் ஓடின. நெடுந்தூரம் ஓடிக் களைத்தனர். ஓர் ஆற்றங்கரையில் நின்றனர். 

பூனை எலியினை நன்றிப் பெருக்குடன் பார்த்து, தக்கசமயத்தில் என்னைக் காத்தாய். நான் இனி உன் நண்பன். என் பூனை இனமே உன்னை ஒன்றும் செய் யாது. வா இருவரும் இணைந்தே இந்தக் காட்டிலே வாழலாம் என்றது. 

இதோ பாரப்பா.. கீரியிடமிருந்தும் கோட்டானிடமிருந்தும் தப்பிக்கவே உன்னிடம் வந்தேன். நாம் நட்பு கொள்வதென்பது இயற்கையாகாது. காரணம் என் இனம் உன் இனத்தின் உணவு. அதுதான் இயற்கை. அதை உன்னால் மாற்ற முடியாது. 

அதுபோல உன் பூனை இனமே என்னை நட்பாக ஏற்கும் என்பது சாத்தியமில்லாத விடயம். அப்படி உன் இனம் சார்பாக ஒரு உத்திரவாதத்தினை நீ எப்படித் தரமுடியும்? நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னிடம் வந்தேன். நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என் உதவியை ஒப்புக் கொண் டாய். இது அவ்வளவுதான் எனச் சொல்லி வேகமாக ஓடி மறைந்தது எலி.

View Synonyms and Definitions

Post a Comment

Previous Post Next Post