.

நவீன உபகரணங்களும் புதிய தொழில்நுட்பங்களும் வசதிகளை மட்டுமே கொண்டு வருவதில்லை.பக்கவிளைவாக சில வம்புகளையும் சேர்த்தே அழைத்து வருகின்றன. இன்று நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட Smartphoneகளும் அதேபோல் புதுப்புது பிரச்சினைகளை சமீபகாலமாக உருவாக்கி வருகின்றன. 

கழுத்து வலி,பார்வைக் குறைபாடு,தூக்கமின்மை போன்ற பல உடல்நலக் கோளாறுகளுக்கு Smartphoneகளின் கோணத்திலிருந்தும் மருத்துவர்கள் இப்போது ஆராய்கிறார்கள்.

அதிகப்படியான Whatsapp பயன்பாட்டால் WhatsAppitis என்ற பிரச்சினை சமீபகாலமாக அதிரித்து வருவதும் தெரிகிறது.இதனால் கழுத்துப் பகுதி மற்றும் முதுகுத் தண்டின் மூட்டுகளின் வலி,மரத்துப்போவது,பலவீனம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மணிக்கட்டுப் பகுதியில் உள்ள தசைநார்களில் அழற்சியை ஏற்படுத்தி,வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தலாம்.

கட்டைவிரலை நீண்ட நேரம் பயன்படுத்துவதால்,அந்தப் பகுதியின் தசைநார்களும் பாதிக்கப்பட்டு விரலை அசைப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.இத்துடன் உளவியல்ரீதியாகவும் Smartphoneகள் நம்மிடையே பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகின்றன.நம் பார்வை வளையத்துக்குள் செல்போன் இல்லாவிட்டால் கூட,மனம் பதற்றமடைகிறது. செல்போனின் பிரிவு காரணமாக வரும் இந்த நடுக்கத்தை ‘நோமோஃபோபியா’ (Nomophobia) என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் ஓர் அங்கமாக 'லோ பட்டரி ஆங்ஸைட்டி' (Low battery anxiety) என்ற புதிய பிரச்சினையும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 

Counterpoint Technology Market Research என்ற சர்வதேச நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. ஸ்மார்ட்போனின் சார்ஜ் நிலைவரம் எத்தகைய எண்ணங்களை உண்டாக்குகிறது என கண்டறிவதற்காக பலரிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் பல கவனிக்கத்தக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைபேசி சார்ஜின் நிலை 20 சதவிகிதத்துக்கும் கீழாகக் குறையும்போது அதீத கவலை, உலக தொடர்புகள் துண்டிக் கப்பட்டது போன்ற உணர்வு, உதவிக்கு யாரும் இல்லாதது போன்ற கையறு நிலை,எதையோ இழந்தது போன்ற பயம், பாதுகாப்பின்மை,நடுக்கம், உடனே சார்ஜ் செய்ய வேண்டும் என்ற அவசரம் போன்ற கலவையான உணர்ச்சிகள் உண்டாகின்றன.சார்ஜின் நிலை 50 சதவிகிதத்துக்கும் கீழ் குறையும்போதே இந்த மனநிலை தொடங்கிவிடுகிறது இதுபற்றி ஆய்வுக்குழுவின் தலைவரான தருண் பதக் கூறும்போது, 'Smartphone ஆல் நம் உள்ளங்கைக்குள் உலகை அடக்கி வைத்திருக்கிறோம்.அலுவலக வேலைகள்,பொழுதுபோக்குகள்,தொடர்புகள் என அனைத்தையுமே Smartphone வழியாகவே செயல்படுத்துகிறோம்.இதன் விளைவாக Smartphone பயன்படுத்த முடியாத சூழலில் மக்களுக்கு பயம் வருகிறது. அதன் எதிரொலிதான் இந்த 'Low battery anxiety'. இந்தப் பதற்றம் வேலைக்குச் செல்லும் 31 முதல் 40 வயதினரிடையே அதிகமாக உள்ளது” என்கிறார். 

'Low battery anxiety' குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள, உளவியல் ஆலோசகர்கள் இவ் வாறு குறிப்பிடுகிறார்கள். 

‘Low battery anxietyக்கு முன்பு நாம் புரிந்து கொள்ள வேண்டியது,Smartphone என்பது கெட்ட விஷயம் அல்ல.Smartphone ஆல் நிறைய பயன்பாடுகள் உள்ளன.இன்று அது நமக்குத் தேவை. Digital உலகில்  நம்முடைய பல வேலைகளை Smartphone எளிமையாக்குகிறது.அதனால் மேலோட்டமாக Smartphoe குற்றம் சொல்லித் தப்பிக்கக் கூடாது.அதனை பயன்படுத்தும் விதத்தில் நாம்தான் தவறுகளைச் செய்கிறோம். செல்போன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் நாம்தான்.” 

“நம் வீடு, அலுவலகம், பேருந்து நிலையம் என எல்லா இடங்களிலும் கைபேசியையே உற்றுப் பார்த்துக் கொண்டி ருக்கிறவர்களை நிறைய பார்க்கிறோம்.

இதற்கு அடிப்படையான காரணம், மனித மனம் சந்தோஷத்தைத் தேடுகிறது. எங்கேனும் நிம்மதியாக இருக்க முடியுமா என்று இடைவிடாமல் அலை பாய்கிறது.சில நேரங்களில் நிஜ உலகைத் தவிர்க்க விரும்புகிறது.இந்த சந்தோஷத்தையும், நிம்மதியையும்,வெளியேற்றத்தையும் செல்போன் ஒருவருக்குத் தருகிறது.இதனால்தான் Smartphoneக்கு இன்று பலரும் அளவு கடந்து அடிமையாகவே இருக்கிறார்கள். 

Whatsapp chat செய்யும்போதோ,இன்ஸ்டாகிராமில் Reels பார்க்கும்போதோ அவர்களுக்கு தன்னையறியாமலேயே ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக Smartphone ஐ நோண்டிக் கொண்டிருக்கிற  ஒருவரைக் கூட நாம் பார்க்க முடியாது. 

அதில் ஒரு நிம்மதி, ஆறுதல்.’”Smartphoneல்தான் எல்லா Tension என அடிக்கடி சிலர் கூறுகிறார்கள்.Smartphone மீதான வெறுப்பு மக்களிடையே உருவாகிறதா?

“இந்த செல்போனால்தான் எல்லா தொல்லையும்'என்று ஊருக்காக வேண்டுமானால் பேசுவார்கள்.அவர்களிடம் Smartphone ஐ யாரும் திணிக்க வில்லை.ஒரு Buttonphone மாற்றிக் கொள்ள அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படாது.ஏனெனில்,உள்ளுக்குள் அவர்களும் Smartphone ஐ நேசிக்கிறார்கள் என்பதே உண்மை'. “Smartphone அதிகம் சார்ந்தவாறு நம் தினசரிகள் இருக்கின்றன.காலையில் தூங்கி எழுவதற்காக அலாரம் வைப்பதில் தொடங்கி,இரவு தூக்கம் வருகிற வரை ஏதேனும் ஒருவகையில் Smartphone பயன்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். 

ஏறக்குறைய நம்மை மறந்து தூங்குகிற நேரம் தவிர்த்து எல்லா நேரங்களிலும் செல்போன் நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது.உணவு Order செய்கிறோம்,வங்கிக்குப் போக வேண்டிய அவசியம் இல்லாமல் பணம் அனுப்புகிறோம்,பேருந்து,வாடகை கார் என்பன முன்பதிவு செய்கிறோம், பாதைகளை அறிந் து கொள்ள Map பயன்படுத்துகிறோம்.இவ்வளவு ஏன்? அலுவலகப் பணிகளையே Smartphoneல் முடிப்பவர்களும் இருக்கிறார்கள்.இப்படி எல்லாவற்றுக்கும் Smartphone சார்ந்தே நம் தினசரிகள் நடக்கின்றன.எனவே,Smartphone இல்லாவிட்டால் ஸ்தம்பித்துப் போனது போல் மனநிலை ஆகிவிடுகிறது. இதனால்தான் செல்போனில் சார்ஜ் குறைந்தால் “லோ பட்டரி ஆங்ஸைட்டி”என்ற பதற்றம் பலருக்கும் வருகிறது. செல்போன் இல்லாவிட்டால் சமாளிக்கமுடியாது என்ற நிலைக்குச் சென்று விடுகிறார்கள்.எங்காவது சார்ஜ் செய்ய முடியுமா என்று தவிக்கிறோம். கோபம் வருகிறது.

செல்போன் இல்லாவிட்டால் மனதுக்குள் நடுக்கத்தை உண்டாக்கும் நோமோஃபோபியா என்ற உளவியல் சிக்கலின் வேறு ஒரு வடிவம்தான் இது. “ஸ்மார்ட்போனால் வரும் சிக்கலை எதிர்கொள்ள சில உளவியல் ரீதியான மாற்றங்களுடன்,நடைமுறை மாற்றங்களும் தேவை Smartphone  உணர்வு ரீதியாகச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அது ஒரு கருவி. அவ்வளவுதான் என்ற தெளிவுடன் பயன்படுத்த வேண்டும்.” 

“கண் முன்னே இருக்கும் நிஜ உலகை ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வங்கியில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது அல்லது சிறிது நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்றால் உடனே Smartphone எடுத்துப் பயன்படுத்தக்கூடாது.வங்கி எப்படிச் செயல்படுகிறது என்பதை கவனிக்கலாம்.ரயிலில் செல்லும்போது ஜன்னலுக்குவெளியிலோ, உள்ளோ கவனியுங்கள். இதுபோல் சின்னச்சின்ன விஷயங்களில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்கத் தொடங்கும்போது Smartphone பயன்பாடு தானாகவே குறையும்.”

“எதிர்காலத்தில் 'Low battery anxiety' போன்ற பிரச்னைகள் இன்னும் அதிகரிக்கலாம்,தீவிரமாகலாம்.எனவே,நாளைய தலைமுறையை இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க குழந்தைகளிடம் Smartphoneகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நாமே பழக்கப்படுத்தக் கூடாது. குழந்தை  நிகழ்நிலையில் படிக்கிறது என்று விட்டு விடக்கூடாது. புத்தகங்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் சிந்திக்கும் திறன் உண்டாகும்.அதிக செல்போன் பயன்பாடு நம்முடைய சிந்தனைத் திறனையே (Cognitive function) பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.வீடியோ விளையாட்டை விட்டுவிட்டு சக குழந்தைகளுடன் அவர்களை விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.அப்போதுதான் சமூக திறன்கள் உருவாகும். மற்ற குழந்தையிடம் இருந்து ஏதேனும் ஒன்றை நம் குழந்தை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்."

“வீட்டில் இருக்கும்போதும் அதிகம் Smartphone பயன்படுத்துவதால் குடும்ப உறவுகளும் பாதிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் செல்போன் கதிர்வீச்சு பற்றி தொடர்ந்து விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதும் நம் எல்லோருக்குமே தெரியும். 

மேலும், செல்போனில் அதிகப்படியாக வந்து விழும் செய்திகள் மனதை பாதிக்கும் தன்மை கொண்டவை.எதிர்மறைத்தன்மை நம்மை சுற்றி அதிகரித் திருக்கும் காலகட்டத்தில் கொலை,கடத்தல், ஊழல், பஞ்சாயத்துகள் என பல்வேறு செய்திகளைத் தொடர்ந்து நாம் பார்த்துக் கொண்டிருப்பது நம் மன நிலையை பாதிக்கும், தூக்கம் கெடும். தொடர்ந்து மன அழுத்தம் வரும். எனவே,செல்போனில் அவசியமற்ற விஷயங்கள் பார்ப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டியதும் அவசியம்."

Post a Comment

Previous Post Next Post