.
புத்தகத்தின் பெயர்:- அவமானம்
ஆசிரியர் :- சாதத் ஹசன் மண்ட்டோ
தமிழில் :- ராமாநுஜம்
நூல் வெளியீடு .பாரதி புத்தகாலயம்
விலை:- ' 90/-
பக்கம்:- 96


என்னுடைய கதைகள் அசிங்கமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் வாழும் சமூகம் அசிங்கமாக இருக்கிறது என்று பொருள்,அந்த உண்மையை நான் எனது கதைகள் மூலம் அம்பலப்படுத்த மட்டுமே செய்கிறேன் என்கிறார் படைப்பாளி சாதத் ஹசன் மண்ட்டோ அவர்கள்.பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த (1912-1955) மண்ட்டோ பிற்பகுதியில்,அவரது மூதாதையர்கள் விருப்பப்படி பாகிஸ்தானின் லாகூரில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து, தனது 42 வது வயதில் காலமானார்.

அவர் தனது வாழ்க்கையில், சிறுகதைகள், நாவல்கள்,கட்டுரைகள்,நாடகத் தொகுப்புகள் ஆகியவற்றை, பாமர மக்களும் வாசிக்கக்கூடிய வகையில் வடித்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.மண்ட்டோ என்றாலே பலராலும், இவர் பாலியல் சார்பாகவும், பிரிவினையின் நீட்சிகளையுமே எழுதக்கூடியவர் என்ற குற்றச்சாட்டு அக் காலகட்டத்தில் ஓங்கி ஒலித்தது என்பது ஏதோ உண்மைதான்,இருப்பினும் அவர் தனது யதார்த்த வாழ்க்கையிலும், தான் கண்டவற்றையுமே துணிந்து படைத்தார் என்பதில் சந்தேகம் இல்லை.

மண்ட்டோ தான் எழுதிய கருத்துக்களில் எந்த ஒரு மாற்றத்தையும் விரும்பாது, அது ஏகாதிபத்தியமாகட்டும் அல்லது மக்களுக்கெதிரான குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி அவர் அதிலிருந்து விலகவே இல்லை என்று கூறலாம். இதனை அங்கிள் சாமுக்குக் கடிதங்கள் என்னும் அவரது உரையில் காணலாம்.ஒருவரது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள் அப்பப்போ பல எதிர்ப்புகளைச் சந்தித்தது மட்டுமல்லாது, பல தடவைகள் நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மண்ட்டோ தரும் பதில் இப்படியாக அமைந்துள்ளது.

படைப்பாளியின் உணர்வுகள் புண்படுகிறபோது அவன் பேனாவைத் திறக்கிறார்.காவல்துறையின் பிடியிலிருந்து தப்புவதற்காக தனது உண்மைப் பெயரைப் பயன்படுத்தாமல் தமாஷா என்ற தனது முதல் கதைமூலம் அறிமுக மாகும் மண்ட்டோ,முற்போக்குச் சிந்தனை கொண்ட பல படைப்புக்களை தந்துள்ளது பாரட்டத்தக்கது.அத்துடன் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை,அவர்களது மன உளைச்சல் போன்றவற்றைப் படம் பிடித்துக் காட்டியது மிகச் சிறப்பு.



இச் சிறுகதைத்(அவமானம்) தொகுப்பை மிகச் சிறந்த முறையில் தமிழில் ராமானுஜம் அவர்கள் மொழி மாற்றம் செய்துள்ளமை மிகவும் பாராட்ட த்தக்கது.அவருக்கு எனது வாழ்த்துக்கள்.வாசிப்போருக்குச் சோர்வு தராத வகையில்,உண்மையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையே அவர் படைத்திரு ப்பதை,ராமானுஜம் அவர்கள்,வாசிப்பாளர்களாகிய எங்களையும் திக்கு முக்காட வைக்காத வகையில் தந்திருப்பது மிக அழகு.பாரதி புத்தகாலயம் புத்தகத்தினை சிறந்த முறையில் மிகச் சுருக்கமாக அழகாக வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.


இதில்
# பசித்த மானிடம்
# காலித்
# அவமானம்
# திற
# சஹாய்
# சில்லிட்டுப் போன சதைப் பிண்டம்

ஆகிய சிறு கதைகளுடன்,ஒரு சில ஒரு பக்கக் கதைகளையும் தந்திருப்பதுடன், மண்ட்டோ தனது வாழ்க்கையை மூன்றாமவர் கூறுவது போல் சொல்லப்படும் சம்பவத்தின் மூலம் அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியை உள்வாங்கலாம் நண்பர்களே.மேற்சொன்ன கதைகளின் உள்ளார்ந்த கருத்துக்களை அரிய நண்பர்களே வாசியுங்கள்.

ஒரு வாடிக்கையாளனுக்கு ஒருமுறை அவனது பசியைத் தீர்ப்பதற்காக வெறும் 10 ரூயாய்க்கு(பத்து ரூபாயில் 2 ரூபாய் 50 காசு மாமாவுக்குப் போக மிகுதி ஏழு ரூபாய் 50 காசு மட்டுமே அவளுக்கு க்குக் கையில் கிடைக்கின்றது,அன்றைய காலகட்டத்தில்) விலைபோகும் சுகந்தி அன்றாட வாழ்க்கையை,அவள் ஏமாற்றப்படுவது,மாது என்பவன் தனது வியாபாரத்தில் ஏற்படுத்தும் உத்திகள், அவர்களுக்கிடையேயான பேரம், பரஸ்பரம், மற்றம் மறக்கமுடியாத பல இடைஞ்சல்கள், இது போன்ற துயரச் சம்பவங்கள மண்ட்டோ அற்புதமாகப் படைத்துள்ளார்.

அத்துடன் அவளது மனப் போராட்டங்கள்,ஆவேசம்,பெட்டிக்குள்ளேயே அடைந்து கிடக்கும் வாழ்க்கை,தான் ஏமாற்றப்பட்டு அவமானப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தும்,எங்கோ ஒரு இடத்தில் ஒளிந்து கிடக்கும் அவளது இரக்க குணம் எப்படிதான் உதைபட்டாலும், தான் பலராலும் கைவிடப்பட்ட நிலையிலும் கூட இறுதியில், தனது சொறிநாயை அன்போடு முத்தமிடுவதையும் மண்ட்டோ படம்பிடித்துக் காட்டுகிறார்.

தண்டா கோஷ் சிறுகதை மூலம் ஏற்பட்ட சிக்கலினால்,கதை எழுதுவதை சிறிது நிறுத்தி, பின்னர் திரையுலக பக்கம் இருந்ததை நினைவு கூறுகிறார்.

மண்ட்டோவின் ஆக்கங்களைச் சொல்வதானால்,பாவப்பட்ட பெண்ணியம், மனிதனின் மன மாற்றங்கள், அன்றாட வாழ்க்கை போன்றவற்றைக் குறித்தே பேசப்படுவதைக் காணலாம்.வாசியுங்கள்.


@பொன் விஜி - சுவிஸ்.

அவமானம் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post