.

ஜான் கிரே எழுதிய ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன் என்னும் புத்தகமானது ஆண்களைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களையும் பெண்களைப் பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களையும் சுவாரஸ்யமாகச சொல்கிறது.

நாம் எல்லோரும் ஒரு குடும்ப அமைப்பினுள் வாழ்கிறோம் அதில் தாயாக மகளாக சகோதரியாக மனைவியாக ஒவ்வொரு ஆணுக்கும் பெண் திகழ்கிறாள். அதேபோல தந்தையாக சகோதரனாக கணவனாக மகனாக ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் திகழ்கிறாள் எனவே நாம் எம் கூடவே இருக்கும் உறவுகளின் உளவியல் சிக்கல்களைப் புரிந்து கொள்வது முக்கியமானது அதனைப் புரிந்து கொண்டால் வீணான பிரச்சனைகளையும் மகிழ்ச்சியின்மையையும் தவிர்த்து குடும்பத்தில் அமைதியையும் சந்தோசத்தையும் அனுபவிக்கக் கூடியதாக இருக்கும் அத்தோடு தேவையற்ற விவாகரத்துக்களையும் தவிர்த்துக் கொள்ளலாம்.அதற்கு நாம் ஆணையும் பெண்ணையும் அவர்களினது வேறுபாடுகளோடு புரிந்து கொள்வது அவசியமாகும்.அதற்கு இந்தப் புத்தகம் மிகவும் பயனுள்ள வகையில் உதவி செய்கிறது.

தற்போது விவாகரத்துக்கள் அதிகம் இடம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அதற்குரிய காரணம் சரியான புரிதலின்மைதான்.இவ்வாறு வேவையற்ற விவாகரத்துக்களைத் தவிர்ப்பதற்கு இந்தப் புத்தகம் இன்றியமையாததாகவே தென்படுகிறது.ஜான் கிரே அவர்கள் தமது அறிவிற்குட்பட்ட அனைத்து உத்திகளையும் விளக்கியுள்ளார்.நூலாசிரியர் ஏற்கனவே அமெரிக்காவில் திருமண ஆலோசகராகப் பணி புரிந்து வருவதால் அவருக்கு அதில் நிறையவே அனுபவம் இருக்கிறது.தன்னுடைய பயிலரங்குகளில் தான் ஆலோசனை வழங்கி வெற்றிகரமாக சீர்படுத்திய உறவுகளின் கதைகளையும் இந்தப் புத்தகத்தில் இணைத்துள்ளார் கிரே.ஜான் கிரே சர்வதேச அளவில் புகழ் பெற்ற மதிக்கப்படுகிற உறவியல் வல்லுனராவார்.

உறவுகளில் சிக்கல்களைக் குறைப்பதற்கும் ஆண்களும் பெண்களும் எவ்வாறு வேறுபட்டுள்ளனர் என்பதைக் கடு கொள்வதன் மூலம் அதிக அன்பை உருவாக்குவதற்குமான புதிய உத்திகளை இந்தப் புத்தகம் வெளிப்படு த்துகிறது. ]பிறகு விரக்தியையும் ஏமாற்றத்தையும் குறைத்து அன்னியோ ன்யத்தைம் படைப்பதற்கான நடைமுறைப் பரிந்துரைகளையும் இந்தப் புத்தகம் உங்களிற்கு வெளிப்படுத்துகிறது.உறவுகள் போராட்டம் நிறைந்த வையாகவே இருக்க வேண்டியதில்லை.ஒருவரை ஒருவர் நாம் புரிந்து கொள்ளாதபோதுதான் அங்கு குழப்பமும் கோபமும் முரண்பாடுகளும் தோன்றுகிறன.

பல பேர் தங்களின் உறவுகளில் விரக்தியடைந்துள்ளனர்.அவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையை நேசிக்கிறனர்.ஆனால் அவர்களுக்குள் பிரச்சனை வரும்போது நிலைமையைச் சீராக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர்.ஆண்களும் பெண்களும் எவ்வாறு முற்றிலும் வேறுபட்டவர்களாக இருக்கிறனர் என்பதை அறிந்து கொள்வதன் மூலம் எதிர்பாலினத்தவரை வெற்றிகரமாகப் புரிந்து கொள்வதற்கும் அவர்களிற்கு ஆதரவு அளிப்பதற்குமான புதிய வழிகளை நீங்கள் இந்தப் புத்தகத்தில் கற்றுக் கொள்ள முடியும்.நீங்கள் பெறத் தகுதி வாய்ந்த அன்பை உருவாக்குவது எப்படி என்பதையும் கற்றுக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.


ஆண்களும் பெண்களும் ஏன் வேறுபட்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை என்ற கேள்விக்கு நேரடியான உயிரியல் ரீதியான விடைகள் இந்தப்புத்தகத்தில் கொடுக்கப்படவில்லை ஆனாலும் வேறுபடுவதற்குரிய ஏனைய காரணிளான பெற்றோரின் தாக்கம்,கல்வி,பிறப்பு,சமூகம்,வரலாறு,கலாச்சாரம் ஆகியனவற் றிலான பதில்கள் உள்ளன.இப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோச னைகளை நடைமுறைப்படுத்துவதால் உடனடிப் பலன் கிடைத்தாலும் பிரச்ச னைகளிற்குள்ளாகியிருக்கும் தம்பதியினரின் உறவுகளைச் சீரமைக்க தேவையான சிகிச்சைகளிற்கு இந்தப் புத்தகம் ஒரு மாற்று அல்ல.சவாலான சமயங்களில் ஆரோக்கியமான மனிதர்களிற்கு கூட ஆலோசனைகள் தேவைப்படும் என்பதை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது அத்தியாயத்தில்,ஆண்களின் மதிப்பீடுகளும் பெண்களின் மதிப்பீடுகளும் இயல்பாகவே எவ்வாறு வேறுபட்டுள்ளன என்பதைப் பற்றி ஆய்வு செய்து,எதிர்பாலினரைக் கையாள்வதில் நாம் செய்யும் இரண்டு மாபெரும் தவறுகளை சொல்கிறது.அந்த இரு மாபெரும் தவறுகள் இவைதான்: ஆண்கள் தவறுதலாகப் பெண்களுக்குத் தீர்வுகளை வழங்கி அவர்களை மதிப்பிழக்கச் செய்கின்றனர்;பெண்கள் உணர்வுகளை தேவையற்ற அறிவுரையையும் வழிகாட்டுதலையும் ஆண்களுக்கு வழங்குகின்றனர்.நமது செவ்வாய் அல்லது சுக்கிரக் கிரகங்களின் பின்புலத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்வதன் மூலம், ஆண்களும் பெண்களும் ஏன் இத் தவறுகளை அறியாமல் செய்கின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இவ்வேறுபாடுகளை நினைவில் கொள்வதன் வாயிலாக, நமது தவறுகளைத் திருத்திக் கொண்டு, தேவையான பதில்நடவடிக்கைகளை அதிக ஆக்கபூர்வமான வழிகளில் உடனடியாக நம்மால் மேற்கொள்ள முடியும்.

நான்காம் அத்தியாயத்தில்,எதிர்ப்பாலினரை எவ்வாறு பற்றி நீங்கள் ஊக்குவிப்பது என்பதை ஆய்வு செய்கிறது.தாங்கள் தேவைப்படுகிறோம் என்ற உணர்வைப் பெறும்போது ஆண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.ஆனால் பெண்களோ,தாங்கள் கொண்டாடப்படுகிறோம் என்ற உணர்வைப் பெறும்போது ஊக்குவிக்கப்படுகின்றனர்.உறவுகளை மேம்படுத்துவதற்கான மூன்று அம்சங்களைப் பற்றி விவாதித்து,நமது மாபெரும் சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றி நாம் ஆய்வு செய்யவிருக்கிறோம். அந்தச் சவால்கள் இவைதான்:அன்பை வழங்குவதற்கு,ஆண்கள் இயல்பாகத் தங்களிடம் கொண்டுள்ள மனத்தடையில் இருந்து மீண்டு வர வேண்டும்; அதே சமயம்,பெண்கள் அந்த அன்பைப் பெறுவதற்கு,இயல்பாகத் தங்களிடம் கொண்டுள்ள மனத்தடையில் இருந்து மீண்டு வர வேண்டும்.

ஆறாவது அத்தியாயத்தில், ஆண்களும் அன்னியோன்யமான உறவிற்கான வித்தியாசமான தேவைகளைக் கொண்டிருப்பது பற்றி சொல்கிறது.ஓர் ஆண்மகன் நெருங்கி வருவான்,பின் தனது நெருக்கத்தைத் துண்டித்துக் கொள்வான்.அவன் அவ்வாறு விலகிச் செல்லும்போது,மீண்டும் தன்னிடம் துள்ளிக் குதித்து வரும் விதத்தில் அதை எவ்வாறு ஆதரவுடன் கையாள்வது என்பது என்பதைப் பற்றி பெண்களிற்கு சொல்கிறது.

எட்டாவது அத்தியாயத்தில்,ஆண்களும் பெண்களும் எதிர்பாலினருக்குத் தேவைப்படும் அன்பைக் கொடுக்காமல்,எவ்வாறு தங்களுக்குத் தேவையென்று உணரும் அன்பைக் கொடுக்கின்றனர் என்பதை சொல்கிறது நம்பிக்கையூட்டும்,ஏற்றுக் கொள்ளும்,பாராட்டும் ஒரு விதமான அன்பு ஆண்களுக்கு முக்கியத் தேவை.ஆனால் பெண்களுக்கு,பரிவையும் புரிதலையும்,மதிப்பையும் வெளிப்படுத்தும் ஓர் அன்பு தேவை. உங்களையும் அறியாமல் உங்கள் வாழ்க்கைத் துணைவரின் மனத்தைக் காயப்படுத்தும் பொதுவான ஆறு வழிகளை சொல்கிறது.ஒன்பதாவது அத்தியாயத்தில் மனத்தை நோகடிக்கும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை நாம் ஆய்வு செய்கிறது.

ஓர் அன்பான உறவை உருவாக்கும் பயம் சில சமயங்களில் கரடுமுரடானதாக இருக்கும்.ஆனால் இப்பிரச்சனைகள் கோபம் மற்றும் புறக்கணிப்பிற்கான காரணங்களாக அமையலாம் அல்லது அன்னியோன்யத்தை ஆழப்படுத் துவதற்கும் அன்பையும் அக்கறையையும் நம்பிக்கையையும் அதிகரிப் பதற்கான வாய்ப்புக்களாக அமையலாம்.இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள யோசனைகள் எல்லாப் பிரச்சனைகளையும் களைவதற்கான ஓர் உடனடி நிவாரணம் அல்ல.மாறாக உங்கள் வாழ்வில் பிரச்சனைகள் எழும்போது அவற்றுக்குத் தீர்வ காண்பதற்கு உங்கள் உறவுகள் உங்களுக்கு வெற்றிகரமாக ஆதரவளிக்க கூடிய வகையில்,அதற்கு உதவும் ஒரு புதிய அணுகுமுறையை அவை வழங்குகிறன.உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து தங்கு தடையின்றி நீங்கள் அன்பை பெறுவதற்கும் உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு அதை அள்ளிக் கொடுப்பதற்கும் தேவையான உத்திகளை இப் புதிய விழிப்புணர்வு உங்களிற்கு எடுத்துரைக்கும்.

புத்தகத்தின் தலைப்பை பார்த்துவிட்டு வாசகர்களிற்கு அதென்ன சுக்கிர கிரகம் மற்றும் செவ்வாய் கிரகம் என்று சந்தேகம் எழலாம் அதற்குரிய விடை முதல் அத்தியாயத்திலேயே தெளிவு படுத்தி விட்டார் கிரே.அதாவது ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாகவும் பெண்கள் சுக்கிரக் கிரகத்தில் வசிப்பதாகவும் கற்பனை செய்யச் சொல்கிறார்.வேறுபாடுகளை விளக்குவ தற்காக இந்த உத்தியைக் கையாளர்கிறார் நூலாசிரியர்.

நாம் எம் உறவுகளில் சில தவறுகளை இழைக்கிறோம்.அவையாவன ஒரு பெண் வருத்தமாக இருக்கும் போது ஓர் ஆலோசனையாளராக தன்னை வரித்துக் கொண்டு அவளது பிரச்சனைகளிற்கு தீர்வுகளை வழங்கி அவளை மாற்றுவதற்கு ஓர் ஆண் முயற்சிக்கிறான்.இது பெண்ணின் உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிறது.இரண்டாவது ஓர் ஆண் தவறுகள் செய்யும் போது தன்னை குடும்ப மேம்பாட்டுக்கான தலைவியாக வரித்துக் கொண்டு ஒரு பெண் தன் கணவனின் விருப்பம் இல்லாமல் அவனுக்கு அறிவுரைகளை வழங்குவதன் மூலமாகவும் அவனை விமர்சிப்பதன் மூலமாகவும் அவனது நடத்தையை மாற்ற முயற்சிக்கிறாள் இதனை நாம் அனைவரும் எதிர் கொண்டிருப்போம் ஏன் இப்படி ஆணும் பெண்ணும் நடந்து கொள்கிறார்கள் என்பதற்குரிய காரணங்களும் அதனை எவ்வாறு பொறுமையாக அணுகலாம் என்பதையும் விளக்கியிருக்கிறார் கிரே.

இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஏதோ ஒரு விடயத்தை உங்களால் தொடர்புபடுத்தி பார்க்க முடியவில்லை என்றால் ஒன்று அதனை நீங்கள் ஒதுக்கி விட்டு உங்களால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகிற விடயத்திற்குச் செல்லுங்கள்.அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக ஆவதற்காக பல ஆண்கள் ஆண்மைக்கே உரிய சில குணாதிசயங்களை மறுத்துள்ளனர் அதேபோல பல பெண்களும் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு பணம் ஈட்டுவதற்காக பல வேலைகளில் இயந்திரத்தனமாக ஈடுபட்டு பெண்மைக்கே உரிய குணாதிசயங்களை மறுத்துள்ளனர்.உங்கள் விடயத்தில் இது போல இருந்தால்  அதற்குரிய தீர்வுகளையும் கிரே முன்வைக்கிறார்.அதனைச் செயற்படுத்துவதன் மூலம் உங்கள் உறவுகளில் அதிக விருப்பத்தை உருவாக் குவதோடு மட்டுமல்லாமல் உங்களிடமுள்ள ஆணின் குணாதிசயங்களையும் பெண்ணின் குணாதிசயங்களையும் அதிக அளவில் சமநிலையில் வைத்திருப்பீர்கள் என்று சொல்கிறது இந்தப் புத்தகம்.

பெண்கள் அதிகளவில் பேசுகிறனர் என்ற குற்றச்சாட்டு காலங்காலமாக கூறப்பட்டு வருகிறது.பெண்கள் பல்வேறு காரணங்களிற்காகப் பேசுகிறனர். ஆண்கள் மௌனம் சாதிக்கும் அதே வேளை பெண்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறனர் அதற்குரிய பொதுவான காரணங்களாக தகவல்க ளைத் தெரிவிப்பதற்காக அல்லது சேகரிப்பதற்காக, தான் என்ன கூற வருகிறோம் என்பதை ஆய்வு செய்வதற்காகவும் கண்டறி வதற்காகவும்,அவள் வருத்தமாக இருக்கும்போது நல்ல விதமாக உணர்வதற் காகவும்,சமநிலையில் இருப்பதற்கும்,அன்னியோனியத்தை உருவாக்குவதற்காக போன்ற காரணங்களைக் கூறுகிறார் கிரே.பெண் ஏன் பேசுகிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் அவளின் உணர்வுகளிற்கு மதிப்பளிக்க கூடியதாக இருப்பதுடன் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும் என்ற ஆண்களிற்கு உருவாகும் என்று எதிர்பார்க்கலாம் அதற்கு இந்தப் புத்தகம் உதவி செய்கிறது.

நான் விரும்பிய ஒரு அத்தியாயம் என்னவென்றால்,மன அழுத்தம் எற்படும் போது, அல்லது ஒரு பிரச்சனை ஏற்படும் போது,ஆண்கள் தனது மனம் என்னும் குகைக்குள் ஒதுங்கிக் கொண்டு வீடுகிறார்கள் என்கிறார் கிரே,ஒரு பிரச்சனைக்கு பெண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு எதிரான துருவம் இதுதான்-அவர்களின் இயல்பான போக்கு, பிரச்சனையின் மூலம் பேச யாரையாவது கண்டுபிடிப்பது,அதனால் அவர்கள் தங்கள் உணர்வுகளை ஆராய முடியும்.நம் வாழ்க்கைத் துணைவர் நம்மை நேசித்தால் அவர்கள் சில வழிகளில் நடந்து கொள்வார்கள் என்று நாம் தவறாகக் கருதுவதை இந்த புள்ளி எளிதாக இணைக்கிறது.நாம் ஒருவரை நேசிக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைக் கவனிக்கவும், அடுத்த முறை ஒரு பிரச்சனை ஏற்படும் போது,​​உங்கள் துணைவர் என்ன செய்கிறார் மற்றும் உங்கள் இயல்பான போக்கு என்ன என்பதைக் கவனியுங்கள்.பின் தொடர்வதை நிறுத்துங்கள்.இதன் மூலம் உங்கள் துணைவர் உங்களைப் புரிந்து கொள்ள இடமளியுங்கள்.

ஆண்களும் பெண்களும் எவ்வாறு ஆதரவைக் கோருகிறார்கள் என்ற தலைப்பைப் பற்றி விவாதிக்கும் ஒரு அருமையான அத்தியாயமும் உள்ளது. இங்கே,கிரே நேரடி மற்றும் மறைமுக மொழியின் பயன்பாட்டை விளக்குகிறார்.ஒரு கோரிக்கையை நேரடியாக எவ்வாறு செய்வது என்பதற்கான எடுத்துக்காட்டுகளை அவர் வழங்குகிறார் மற்றும் அதே கோரிக்கை மறைமுக மொழியைப் பயன்படுத்தி செய்யப்பட்டால் சாத்தியமான எதிர்வினையைப் பகிர்ந்து கொள்கிறார்.நான் தனிப்பட்ட முறையில் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு சிறந்த உதாரணம், தொட்டியைக் கழுவ செய்ய உதவி கோருவது. "என்னால் குப்பைத் தொட்டியில் எதையும் போட முடியாதுள்ளது" என்று மறைமுகமாகச் சொல்லலாம். உதவிக்கான கோரிக்கையை விட, ஒரு மனிதன் விமர்சனத்தை கேட்கலாம் என்று கிரே கூறுகிறார்,இது ஒரு வாதத்திற்கு வழிவகுக்கும்."தயவு செய்து குப்பைத் தொட்டியிலுள்ள குப்பையை வெளியில் கொட்டுவீர்களா" என்று கேட்பதே நேரடி வழி.இந்த அத்தியாயம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்புகளை மையமாகக் கொண்டிருந்தாலும்,இந்த அத்தியாயம் தனிப்பட்ட உறவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து உறவுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நீங்கள் மீண்டும் ஒருபோதும் வாதிட மாட்டீர்கள் என்று அர்த்தமில்லை என்றாலும், இது உங்கள் கூட்டாளிகளின் நடத்தையைப் பற்றிய நுண்ணறிவை மட்டுமல்ல, உங்கள் சொந்த நடத்தை பற்றிய நுண்ணறிவுகளையும் (ஒருவேளை மிக முக்கியமாக) வழங்குகிறது. இந்த நுண்ணறிவுகள் ஒரு தனிப்பட்ட, நெருக்கமான, உறவுக்கு நிச்சயமாக உதவலாம், ஆனால் அவை எல்லா உறவுகளிலும் செல்வாக்கு செலுத்தவும் மேம்படுத்தவும் தொடங்குகின்றன.

இந்த புத்தகத்தை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.நீங்கள் ஒரு உறவில் இருந்தால்,உங்களுடன் எதிரொலிக்கும் அத்தியாயங்களைத் தேர்ந்தெடுத்து அதை நீங்களே சோதிக்கவும்.நீங்கள் தற்போது தனிமையில் இருந்தால் மற்றும் உறவில் இருக்க விரும்பினால்,புத்தகத்தை எடுத்து படிக்க இது ஒரு சிறந்த நேரம்,தடையின்றி!நீங்கள் பல்வேறு மொழிகளில் நகலை எடுக்கலாம் அல்லது ஒலிப்பதிவைக் கேட்கலாம்.

காதலை உருவாக்குவதற்கும் நீடித்து நிலைக்கும் உறவுகளை உருவாக்குவதற்கும் புதிய இரகசியங்களை இப்புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நீங்கள் கண்டடைவீர்கள்.வாசிப்போம்.

ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.





You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post