.

A.S.K எழுதிய கடவுள் கற்பனையே என்னும் நூலானது கடவுள் சமயம் என்னும் மூட நம்பிக்கைகளைக் களைந்து மனிதன் எப்படி தன்னுடைய தற்போதைய முன்னேற்றத்தையடைந்தான் என்பதைச் சொல்வதோடு நிச்சயமாகக் கடவுள் என்பது மூட நம்பிக்கையே என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது.சாதி சமயம் கடவுள் மதம் மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் இல்லாதொழித் தால்தான் விஞ்ஞான வளர்ச்சியை நாம் புரிந்து கொண்டு அதன அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும்.முற்போக்கு எண்ணங்களிற்கு இடம் கொடுப்பான்.

விஞ்ஞான வளர்ச்சியும் புதிய கண்டு பிடிப்புக்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் மனிதனை மின்னல் வேகத்தில் முன் சென்று கொண்டி ருக்கிறன.ஆனால் உலகின் பெரும்பகுதி மக்கள் சமய நம்பிக்கை கடவுள் வழிபாடு,மூடப் பழக்க வழக்கங்கள காரணமாக அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறனர்.

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று ஒவ்வொருவரும் தங்கள் மதம்தான் உயர்ந்தது எங்கள் கடவுள்தான் பெரியது என்று சண்டை போட்டு காலத்தை விரயமாக்கி உயிர்களையும் சொத்துக்களையும் பறி கொடுக்கிறனர்.உண்மையில் கடவுள் கொள்கை எப்போதோ காலாவதியான ஒன்றாகும்.

இப்போது எந்த அதிசயங்களும் நிகழ்வதில்லை,தம்மை நம்பியிருக்கும் எந்தவொரு மக்கள் கூட்டத்தையும் கடவுள் என்ற பொய்மை காப்பாற்று வதில்லை.மக்களிற்கு ஓர் கஸ்டம் மற்றும் போர் என்று வரும்போது கடவுளர் அங்கே ஓடி ஒளிந்து கொள்கிறனர்.அவ்வாறு காணாமல் போகும் கடவுளரை த்தான் மக்கள் கூட்டம் தம்மை மீட்பர் என்று நம்பி மீண்டும் மீண்டும் வழிபட்டு தங்களின் நேரத்தை விரயமாக்குகிறனர்.

கடவுள் கற்பனையே என்ற இந்தப் புத்தகமானது பெரும்பாலும் இந்து மதத்தையே கேள்விக்குட்படுத்துகிறது.இந்து சமயத்தின் மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தும் சாதியக் கட்டமைப்பை கடுமையாக விமர்சிக்கிறார் A.S.K.சாதியக் கட்டமைப்பை கடவுள்தான் ஏற்படுத்தினார் என்றால் அந்தச் சமூகமும் கடவுளும் ஒருபோதும் முன்னேறப் போவதில்லை.

விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பதுதான் உண்மை என்பதனை ஓரளவிற்கு விளக்கவே இநதப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.இயற்கையும் சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிறன.இக் கோட்பாடுகள் எவை இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எடுத்து சொல்கிறது இந்த புத்தகம்.

கடவுள் இல்லையென மறுதலிப்பதல்லாது மார்க்சிய லெனினிய கருத்துக்களையும் இந்தப் புத்தகம் சொல்கிறது.அது இந்தப் புத்தகம் எழுதப்பட்ட நோக்கத்தை சற்றே பின்னோக்கி நகர்த்துகிறது.சோசலிசக் கொள்கைகளை விளக்க இந்தப் புத்தகம் பயன்படுகிறது என்பது சற்றே நெருடலைத் தருகிறது கடவுளைப் போலவே சோசலிசமும் காலாவதி யாகிவிட்டது என்பதே உண்மை.இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஒரு கம்யூனிஸ்ட் என்பதனால் கம்யூனிசக் கருத்துக்களைச் சொல்ல இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இன்றைய நவீன உலகிலும் கூட கடவுளை சட்டம் இயற்றியே பாதுகாக்க வேண்டிய நிலையில் மூடப்பழக்க வழக்கங்கள் மலிந்து கிடக்கிற உலகம் இது.மனிதன் இயற்றும் சட்டங்களால் கடவுளைப் பாதுகாக்க வேண்டிய நிலை.அவ்வளவிற்கும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒரு சர்வ வல்லமை படைத்தவரே கடவுள் என்று நம்புகிற மக்களை என்னவென்று அழைப்பது..?ஒரு பக்கம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் மனிதர்கள் எங்கேயோ சென்று கொண்டிருக்க இன்னமும் கடவுள் மதம் என்று தூக்கிப் பிடித்தபடி திரியும் சமூகங்கள் இன்னமும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் முன்னேறப் போவதில்லை.

கடவுள் கொள்கை மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும் அநீதிகளை நியாயப் படுத்துவதற்குமே பயன்படுகிறது.மனிதர் மண்ணுலகில் படும் கஸ்டங்களிற் கெல்லாம் விடுதலை விண்ணுலகில் உண்டு என்று கூறி மக்களை ஏமாற்றும் செயலையே எல்லா மதங்களும் செய்து வருகிறன ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம்.ஆனால் பணக்காரன் சொர்க்கத்திற்குள் நுழையவே முடியாது என்பது இவ்வுலகில் ஏழை ஏழையாகவே இருக்க நியாயப்படுத்தும் கருவியாக உள்ளது.நாம் காணும் உலகம் உண்மையல்ல அது பொய்,அது ஒரு மாயை என்றுதான் மதவாதிகள் பிரச்சாரம் செய்கிறனர்.ஆகவே உண்மையை அறிய வேண்டுமென்றால் அழியாப் பொருளாகிய கடவுளை அடைய வேண்டும்.இதுதான் மதவாதிகளின் கருத்தாக உள்ளது.

நாத்திகவாதிகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட கடவுளும் இல்லை, பூதங்களுமில்லை,பேய் பிசாசும் இல்லை.இறந்த பிறகு வாழ்வும் இல்லை என ஆணித்தரமாகக் கூறுகிறனர் அதனை இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியார்.மதம் எவ்வாறு எச் சூழ்நிலையில் தோன்றுகிறது என்பதையும் ஏன்' தோன்றுகிறது என்பதைக் கூறுவதுடன் விஞ்ஞான ரீதியாக பிரபஞ்சத்தை படித்து அந் நிலையிலிருந்து மதக் கோட்பாடுகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஈவிரக்கமின்றி நாத்திகம் அம்பலப்ப டுத்துகிறது.மதம் சமுதாயத்தில் ஆற்றும் பணியை அறவே வெறுத்து மதத்தையும் அதன் தீமைகளையும் ஒழிக்கவே நாத்திகமட பாடுபடுகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார் A.S.K.

நாத்திகத்தின் உண்மையான உள்ளடக்கமும் அதன் ஒவ்வொரு வடிவத்தின் குறைபாடுகளும் யதார்த்த சமுதாய பொருளாதர நிலைகளாலும் விஞ்ஞான வளர்ச்சி மட்டத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது ஹராக்கிளிடஸ், டெமாக்கிரடஸ்,செனோபேன்ஸ் போன்றவர்களுடைய நூல்களில் அனேக கடவுள் மறுப்புக் கருத்துக்களைக் காணலாம்.உலகில் ஏற்படும் பல நிகழ்ச்சிகளும் இயற்கை காரணங்களால் ஏற்படுகிறன என்று கூறி மத நம்பிக்கைளை இவர்கள் எதிர்த்த போதிலும் கூட கடவுள் நம்பிக்கைகை பூரணமாகக் கொண்டவர்களே இவர்கள்.


கடவுள் வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் நாம் காணுவது உண்மையல்ல,வெளித்தோற்றம்தான் எல்லாமே உண்மையை அறிய ஆண்டவன் அருகில் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் இக்கருத்துக்கள் மனிதனைச் செயலற்றவனாக்கி எனையாளும் ஈசன் செயல் என்று கைகட்டி வாய்பொத்தி மௌனிக்கத்தான் உதவுமே தவிர வேறொன்றுக்கும் உதவாது என்கிறார் A.S.K

கடவுள் கற்பனையே என்ற இந்தப் புத்தகமானது மனிதனின் வரலாற்றை தர்க்க பூர்வமாகவும் விஞ்ஞான ஆராய்;ச்சியின் படியும் சொல்கிறது மனிதர்கள் ஒரேயடியாக சர்வ வல்லமை வாய்ந்த கடவுளால் படைக்கப்படவில்லை என்றும் படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்தே மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் உருவாயின என்று வாதிடுகிறது இதற்கு ஆதாரமாக டார்வீனியக் கோட்பாடுகள்(Origion of the species) காட்டப்பட்டுள்ளன.எல்லா ஜீவராசிகளும் சிருஸ்டிக்கப்பட்டவையல்ல,ஒரு சில ஜீவராசிகளின் அம்சம்தான் என்பதை ஆராய்கிறார் A.S.K.மனிதக் குரங்கு எவ்வாறு மனிதனாக பரிணாம வளர்ச்சியின் விளைவாக மனிதனாக மாறிற்று என்பதைச் விளக்குகிறார் நூலாசிரியர்.

ஆதியில் மனிதர்களிடையே ஒவ்வொரு குலத்திலும் உள்ள ஆண் பெண் அனைவருமே ஒரே குடும்பம் போல் வாழ்ந்தனர்.அதாவது அந்தக் குலத்தில் உள்ள எல்லா ஆண்களும் அந்தக் குலத்தில் உள்ள எல்லாப் பெண்களின் கணவர்களாகவும்,அக் குலத்தில் உள்ள எல்லாப் பெண்களும் ஆண்களின் மனைவிகளாகவும் இரந்தனர்.குடும்பம் என்ற அமைப்பு இருக்கவில்லை ஆனால் இதனைப் பற்றி இப்போது பேச முடியாதிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.இதன் பிறகே குடும்பம் என்கிற அமைப்புத் தோன்றியது.இவ்வாறு குடும்பம் என்ற வரையறை ஏற்பட பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆயின.ஆனால் குடும்பம் என்பதைக் கடவுள் நிறுவவில்லை என்பதை ஆணித்தரமாக் கூறுகிறது இந்தப் புத்தகம். குடும்பங்கள் தோன்றிய கதை இந்தப் புத்தகத்தில் அழகாக விவரிக்கப்படுகிறது.

புராணங்களில் கூறப்பட்டு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் கற்பினைப் பற்றி நூலாசிரியர் கூறும் போது 'கற்புக்குத் தனிச் சிறப்பு இல்லை. அதனால் ஒருவர் கடவுளை அடைய முடியும் என்பதில்லை.கற்பினால் பல நன்மைகளை இவ்வுலகில் அடையலாம் என்பதில் சந்தேகமில்லை இன்றுள்ள குடும்ப அமைப்பும் காலப்போக்கில் மாற்றமடையும் என்பதில் சந்தேகமில்லை' என்கிறார்.

மக்கள் பொருளாதார பலத்தை இழக்கும் போது கடவுள் நம்பிக்கை தழைத்தோங்கும்.இதன் காரணமாக எனையாளும் ஈசன் செயல் என்றும் பூர்வ காலத்தின் பூஜா பலன் என்றும் என்றம் அவர்களை ஏங்க வைக்கும்.மக்களின் பொருளாதார பலம் அவர்களை சுய சிந்தனை உடையவர்களாக்கும்.புரட்சிகள் தோன்றும் நேரத்திலும் போர்களின் போதும் கடவுளின் கட்டளையை மனிதன் ஏற்பதில்லை என்பது வரலாறாகும்.

இந்தப் புத்தகமானது பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறது.

1.மனிதன் தோன்றுவதற்கு முன்னரே பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக இவ்வுலகம் இருந்து வந்துள்ளது. ஜீவராசிகளின் பரிணாம வளர்ச்சியின் போக்கில்,குரங்கு - மனிதன் நவீன மனிதனாக மாறினான்.

2.மனித சமுதாயம் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் மாறிக் கொண்டே வந்துள்ளது.

3.மனிதன் இறந்தான் என்றால், மண்ணோடு மண்ணாகி விடுகிறான் என்பதுதான் பொருள். ஆத்மா என்பதில்லை - மறு பிறவி என்பதில்லை.

4. கடவுள் என்பது கற்பனையே!கடவுளையும், சமய வழிபாட்டையும்,மூட நம்பிக்கையையும் எண்ணம் முதல் வாதிகள் வலியுறுத்தி வருவது அளவந்தார்களின் கைகளைப் பலப்படுத்தவே!

5.நியாயம்;தர்மம்;வாய்மை,நல்லது;கெட்டது அனைத்தும் வர்க்க அடிப்படையில் தான் உள்ளன.இவை சாஸ்வதமல்ல.மாறும் உலகத்தில் மாற்ற மடையும் என்பதில் ஐயமில்லை.

6.புதிய சமுதாயத்தை,சுரண்டலற்ற சமுதாயத்தை,வர்க்க பேதமற்ற சமுதாய த்தைச் சமைக்கப்பாடுபடுவதே மனித குலத்தின் சீரிய லட்சியாகும்.

மொத்தத்தில் இந்தப் புத்தகமானது மூட நம்பிக்கைகளை ஒழித்து மனிதனை மனிதனாக வாழ வைக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.வாசிப்போம்.

ஏனைய நாத்திக நூல்களைப் பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.

Post a Comment

Previous Post Next Post