.

ஒருவரது பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து வாழ்வியல் அம்சங்களிலும் செல்வாக்குச் செலுத்தி வரும் மதம் மற்றும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பலரைப் பொறுத்தவரை விரும்பியோ விரும்பாமலோ நாளாந்த வாழ்வில் பிரிக்க முடியாதவையாக மாறியுள்ளன.மத நம்பிக்கை இல்லாதவர்கள் கூட குழந்தை பிறப்பு,திருமணம் உள்ளடங்கலான வைபவங்களின் போது தமக்குரிய மதத்தை தழுவி சடங்குகளை முன்னெடுப்பது வழமையாகவுள்ளது.

உலகில் எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னணியை ஆழ்ந்து  ஆராயும் போது,போகும் வழி எது எனத் தெரியாது தான்தோன்றித் தனமாக வாழ்ந்த மனிதர்கள் மத்தியில் அன்பு,கருணை,நல்லிணக்கம், சகிப்புத்தன்மை,ஒருமைப்பாடு,மனிதநேயம் என்பவற்றை கட்டியெழுப்பி நிரந்தர சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் நிலைபெறச் செய்யும் உன்னத நோக்கு இருப்பதை அவதானிக்க முடியும்.

இந்து மதத்தில் வெவ்வேறு மதங்களுக்கிடையிலான அன்பு, நேசம் என்பன தொடர்பான எண்ணக்கரு வலியுறுத்தப்படுகிறது.இந்துமதம் அஹிம்சையைப் போதித்து சக மனிதர்கள் மீது மட்டுமல்லாது ஐந்தறிவு ஜீவன்களான மிருகங்கள் மீதும் கருணை காட்ட வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் எவரையும் வந்தடையாது ஆகவே எவர் அல்லாஹ்வை நம்புகிறாரோ அவருடைய உள்ளத்தை அவர் சகிப்புத் தன்மை, பொறுமை என்ற நேரான வழியில் நடத்துகிறார் என குர்ஆன் 64:11 வசனமும் மத சுதந்திரமானது கடவுளால் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை என குர்ஆன் 30:7 வசனமும் தெரிவிக்கிறது.

இறைவன் மனிதர்களுக்கு வழங்கியுள்ள கௌரவத்துக்கு அவருடைய நம்பிக்கை, இனம், இன ரீதியான பூர்வீகம், பாலினம் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாது மதிப்பளிக்க வேண்டும். அனைத்து பிரஜைகளும் எல்லாம் வல்ல இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் அவர்கள் ஒருவரையொருவர் முழுமையான கௌரவத்துடனும் மரியாதையுடனும் அன்புடனும் நடத்த வேண்டும் எனவும் குர்ஆன் வலியுறுத்துகிறது.



இறைதூதர் தனது பிறப்பிடமான மக்காவிலேயே எதிர்ப்பை எதிர் கொண்டிருந்தார்.அங்கு அவரது விசுவாசிகள் சித்திரவதைக்குட் படுத்தப்பட்டனர்.அவர் மதினாவுக்கு இடம்பெயர நேர்ந்தது.ஆனால் இறைதூதர் இறை நம்பிக்கையற்ற வர்களிடம் எப்போதும் சகிப்புத்த ன்மையுடன் நடந்து கொண்டார். "நீங்கள் (இறை நம்பிக்கையற்றவர்கள். நான் நீங்கள் வழிபடாததை வழிபடுகிறேன்.நீங்கள் நான் வழிபடாததை வழிபடுகி ன்றீர்கள்.நான் வணங்குவதை நீங்கள் வழிபடவில்லை. அந்த வகையில் உங்களுக்கு உங்கள் மதம். எனக்கு எனது மதம் என அவர் பெருந்தன்மையுடன் கூறுகிறார்.

அதேசமயம் வேதாகமத்தின் லூக் 10:25:37 வசனமானது தேவைப்பாட்டிலுள்ள மக்கள் எம்மிடமிருந்து வேறுபட்டு இருக்கும் போது கூட அவர்களுக்கு கலாசார, மத பேதமின்றி உதவக் கோருகிறது. இயேசு கிறிஸ்து குன்று அடிவாரத் திலிருந்து ஆற்றிய பிரசங்கத்தின் போது ஒருவர் உங்களது வலது கன்னத்தில் அறைந்தால் உங்கள் இடது கன்னத்தையும் காண்பியுங்கள்" என்று கூறுகிறார்.இயேசு கிறிஸ்து மற்றவர்களின் பாவத்திற்காக சிலுவையை தான் சுமந்தார்.

புத்தர் தன்னைப் பின்பற்றுபவர்களை மத அல்லது பிரிவுகள் தொடர்பான பிரிவினைவாதமின்றி அனைத்து மனித உயிர்களையும் கருணையுடன் நடத்த ஊக்குவித்துள்ளார்.பௌத்த மதங்களிடையேயான புரிந்துணர்வு மற்றும் மதங்களுக்கிடையிலான உறவுகளை ஊக்குவிப்பதற்கு அவர் கடுமையாக பாடுபட்டிருந்தமையை வரலாறு எடுத்தியம்புகிறது.

புத்தரின் போதனையின் பிரகாரம் பௌத்தமானது மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நாடுகிறது.எப்போதாவது மோதல்கள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் போது மோத வேண்டாம் என அந்த மதம் கூறுகிறது.அது வேறுபட்ட இன மற்றும் மதக் குழுக்களிடையே வெவ்வேறு சமூகங்களிடையே அமைதியான சகோதர உறவுகள் அவசியம் எனவும் வலியுறுத்துகிறது

ஆனால் நடைமுறையில் மதங்கள் உருவாக்கப்பட்டதற்கான உன்னத நோக்கம் மறக்கடிக்கப்பட்டு அதே மதத்தின் பெயரால் முரணாக பிணக்குகளும் மோதல்களும் வன்முறைகளும் கலவரங்களும் போர்களும் இடம்பெறுவது அதிகரித்து வருவது விசனத்துக்குரியதாகும்.

அரசியல்வாதிகளாலும் மதத் தலைமைத்துவத்திலுள்ள குறுகிய நோக்கம் கொண்ட ஒரு சிலராலும் சுயநல நோக்கில் விதைக்கப்பட்ட மதத் தீவிரவாத சிந்தனைகள் மதரீதியான கண்மூடித்தனமான ஒரு வித மேலாதிக்க சிந்தனையை அப்பாவி மக்கள் மனங்களில் நஞ்சாக தூவி அவர்கள் மத்தியில் ஏனைய மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து சகிப்புத் தன்மையின்மை மற்றும் வெறுப்புணர்வை தீவிரமடைய வைத்து நிலைமையை மோசமாக்கி வருகிறது.

உலக சனத்தொகை மதிப்பீட்டு அமைப்பின் தரவுகளின் பிரகாரம் உலகில் 85 சதவீதமான மக்கள் ஏதோ ஒரு மதமொன்றைப் பின்பற்றுகின்றனர். அந்த வகையில் உலகில் கிறிஸ்தவத்தை 2.38 பில்லியன் பேரும் இஸ்லாத்தை 1.91 பில்லியன் பேரும் இந்து மதத்தை 1.16 பில்லியன் பேரும் பௌத்த மதத்தை 507 மில்லியன் பேரும் நாடோடி மதங்களை 430 மில்லியன் பேரும் ஏனைய மதங்களை 61 மில்லியன் பேரும் யூத மதத்தை 14.6 மில்லியன் பேரும் மதத்துடனும் தொடர்புபடாத கடவுள் கொள்கைகளை 1.19 மில்லியன் பேரும் பின்பற்றுகின்றனர்.

இன்று உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள காஸாவில் இடம்பெற்று வரும் போரானது மத ரீதியாக காலம் காலமாக வேரூன்றிய பிரிவினைவாதத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே நோக்கப்படுகிறது.1096 ஆம் ஆண்டுக்கும் 1291 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயேசு கிறிஸ்து பிறந்த இடம் அமைந்துள்ளதை காரணம் காட்டி பலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்ற நடத்தப்பட்ட சிலுவைப் போரிலிருந்து பல்வேறு மத ரீதியான மோதல்களை பலஸ்தீனம் எதிர்கொண்டு வருகிறது

தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஜெருசலேமானது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் ஆகிய 3 தரப்பினராலும் புனித ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் ஜெருசலேம் காலத்திற்குக் காலம் வெவ்வேறு தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்துள்ளது.உலகின் மிகப் பழைமையான மதங்களில் ஒன்றான யூத மதமானது உலகமெங்கும் கிளை பரப்பி தன்னைப் பலப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் அந்த மதத்தின ருக்கு எதிராக ஐரோப்பாவிலும் ஏனைய பிராந்தியங்களிலும் ஜேர்மனிய நாசிஸ சர்வாதிகாரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகள் காரணமாக பலஸ்தீனத்தை யூதர்கள் தஞ்சமடைய ஆரம்பித்தனர்.

இந் நிலையில் தமக்கென தஞ்சமடைவதற்கு சொந்தமாக ஒரு இடம் இல்லாது நிலை தடுமாறிய யூதர்களுக்கு தேசிய நாடொன்றை ஸ்தாபிக்க முதலாம் உலகப் போரின் முடிவில் பிரித்தானியா அளித்த வாக்குறுதியானது அவர்க ளுக்கு சொந்த நாடொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்ற எண்ண த்தை வலுப்படுத்தி வந்தது. 1918 ஆம் ஆண்டு பலஸ்தீன சனத்தொகையில் 6 சத வீதமாக இருந்த யூதர்களின் தொகை 1947 ஆம் ஆண்டு 33 சதவீதமாக அதிகரித்தது.நாட்டில் யூதர்களின் சனத்தொகை அதிகரித்து வருவது, அதனோடு தோற்றமெடுத்த பிரச்சினைகள் என்பன காரணமாக பலஸ்தீ னர்கள் எச்சரிக்கை உணர்வடைந்தமை 1936 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரையான பாரிய புரட்சிக்கு வித்திட்டது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 1947 ஆம் ஆண்டு பலஸ்தீன த்திலுள்ள சுமார் 55 சதவீதமான பகுதியை யூதர்களுக்கும் 45 சதவீதமான பகுதியை அரபுகளுக்கும் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது பிராந்தியத்தில் பாரிய கலவரம் கிளர்ந்தெழ வழிவகை செய்தது.1948 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் ஸ்தாபிப்புடன் 750,000 பலஸ்தீனர்கள் அவர்களது வீடுகளிலிருந்து யூதர்களால் வெளியேற்றப்பட்டனர்.1967 ஆம் ஆண்டு 6 நாட்கள் போரின் போது 300,000 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் தாம் சொந்தமாகக் கருதி வந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்ப ட்டனர்.

இந் நிலையில் பல ஆண்டு காலமாக தாம் எதிர்கொண்டு வரும் உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராட பலஸ்தீனர்களில் ஒரு பிரிவினர் 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் குழுவை ஸ்தாபித்தனர். இரு தரப்பு மத ரீதியான பிரிவனைவாத சிந்தனைகள் முரண்பாடுகளையும் மோதல்களையும் தீவிரப்படுத்தி இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாவதற்கும் பலர் காயமடைந்து விசேட தேவையுள்ளவர்களாக மாறுவதற்கும் பெருமளவு சொத்து நஷ்டங்கள் ஏற்படுவதற்கும் காரணமான போருக்கு வித்திட்டுள்ளன.

யூதர்களைப் பொறுத்த வரை மேற்படி பிராந்தியமானது தமது மத வரலாற்றுடன் தொடர்புபட்ட பூர்வீக இடம் என்ற வகையில் நிலையில், பலஸ்தீனர்களைப் பொறுத்த அதில் தமக்கு உரிமை உள்ளதாக கருதுகின்ற வரை நாசிகளிடமிருந்து உயிர் தப்பி வந்தவர்கள் எனப் பரிதாபப்பட்டு இடம்கொடுத்தபிக்கைத் துரோகமாக நோக்கப்படுகிறது.

மதம் காரணமாக உங்களுடன் சண்டையிகளிலிருந்து வெளியேற்றாதவர் களையும்  உங்களை உங்கள் வீடு அல்லாஹ் தடுக்கவில்லை என குர்ஆன் 60:8 வசனம் தெரிவிக்கின்ற நிலையில், அதற்கு முரண்படுபவர்கள் தொடர்பில் எடுக்கப்படக்க கூடிய நடவடிக்கை குறித்து அது கேள்வி எழுப்புவதை அங்கு கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட இனத்தவரின் பூர்வீகவிளங்கி வரும் பிராந்தியங்களில் வேற்று இன மற்றும் மத ரீதியான புதிய குடியிருப்புகள் உள்வாங்கப்படும் போது எதிர்ப்பலைகள் கிளர்ந்தெழுவது கடந்த பாடங்கள் தந்த படிப்பினைகளாக இருக்கக் கூடும் என்ற ஊகத்தைத் தோற்றுவிப்பதைதை மறுப்பதற்கில்லை. 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்தாந்து மதத்தினருக்குமிடையில் இடம் பெற்ற மோதல்கள்,17 ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, 1840களில் அமெரிக்க மிஸோரி மற்றும் இலினொயிஸ் மாநிலங்களிலிருந்து கிறிஸ்தவ துறவிகள் வெளியேற்றப்பட்டமை, கொசோவோவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொஸ்னியப்
போரின் போது 8,000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை,மியன்மாரில்
நாடற்ற ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள்,பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்க ளுக்கும் இடையிலான மோதல்கள் என மத ரீதியான முரண்பாடுகளின் வரலாறு நீண்டு கொண்டே போகிறது.

இந்தியாவில் அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி பாபர் மசூதி  தகர்க்கப்பட்டமை, அந்த ஆண்டில் உத்தரப் பிரதேசத்திலும் 2002 ஆம் ஆண்டு குஜராத்திலும் இடம்பெற்ற படுகொலைகள் என்பன இந்தியாவில் இந்து - முஸ்லிம் பிணக்குகளுக்கு சில உதாரணங்களாகும்.

ஆயிரக்கணக்கானோரை பலி கொண்ட மேற்படி கலவரங்களின் உச்சகட்டமாக பல்வேறு சட்டப் போராட்டங்களையடுத்து தற்போது அயோத்தியில் இராமர் கோவில் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.எனினும் இதன் தொடர்ச்சியாக அந்தப் பிராந்தியத்தில் மத ரீதியான பதற்றநிலை எதுவும் ஏற்படமாட்டாது என்பதற்கு எதுவித உத்தரவாதமில்லை என்பதை நிராகரிப்பதற்கில்லை.

அரேபிய நாடுகளிலும் இந்தியாவிலும் ஒரே மதத்திற்குள் வழிபாட்டு முறைகளி லான வேறுபாடு தொடர்பான பிரிவினை அடிப்படையில் மோதல்கள் இடம்பெறுவதும் வழமையாகவுள்ளது.

முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர்,ஒரு கையில் வாளுடனும் மறுகையில் குர்ஆனுடனும் முஸ்லிம்கள் காணப்படுவது போன்ற படங்களும் முஸ்லிம் களைக் கடும்போக்காளர்களாக காண்பிக்கும் கருத்துக்களும் திட்டமிட்டே பரப்பட்டன

ஆப்கானிஸ்தான் போரின் போது அந் நாட்டில் நிலைகொண்டுள்ள சோவியத் ஒன்றிய படையினருக்கு எதிராகப் போராட முஸ்லிம்களுக்கு உதவ ஆரம்பிக் கப்பட்ட அல்கொய்தா குழு ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயற் பட்டு வந்தது 1989 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ஒன்றியம் வாபஸ் பெற்ற நிலையிலும் ஆப்கானை விட்டு அமெரிக்கப் படையினர் வெளியேறாது விடாப்பிடியாக அங்கே நிலைகொண்டிருந்தமை முரண் பாட்டைத் தோற்றுவித்து இறுதியில் அல்கொய்தா அமெரிக்காவுக்கு எதிராக திசை திரும்புவதற்கு வழிவகை செய்தது.

அமெரிக்காவைப் பொறுத்த வரை உலகளாவிய ரீதியில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொள்வது முக்கிய குறிக்கோளாக அன்றும் இன்றும் உள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் இருப்பிடமாக விளங்கும் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகள் அதன் கவனத்தை என்றென்றும் ஈர்த்து வருகின்றன. மத்திய கிழக்கு பிராந்தியமானது உலக எண்ணெய் உற்பத்தியில் முன்னணியிலுள்ள 10 நாடுகளை உள்ளடக்கி சுமார் 70 சதவீதமான எண்ணெய் உற்பத்திக்குப் பங்களிப்புச் செய்து வருகிறது.

இந் நிலையில் அந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலையைத் தோற்றுவித்து அதனை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.அதன் இராஜதந்திர நகர்வுகளாக நிலைமைகளைப் பொறுத்து ஆட்சியாளர்களுக்கும் போராட்ட அமைப்புகளு க்குமென ஆயுத உதவி செய்து தனது பிரசன்னத்தை உறுதிப்படுத்திக் கொள்வதை அமெரிக்கா காலங்காலமாக ஒரு யுக்தியாக மேற்கொண்டு வருகிறது.

இலங்கையைப் பொறுத்த வரை உலகளாவிய ரீதியான நாடுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தரும் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட வோல்டோமீற்றர்ஸ் அமைப்பால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின் பிரகாரம் இலங்கையின் சனத்தொகை 21,925,327 ஆகும். அதே சமயம் வோல்ட் டேட்டா தகவல் இணையத்தளத்தால் அன்றைய தினம் வெளியிடப்பட்ட தரவுகளின் பிரகாரம் இலங்கையில் பௌத்தர்களின் தொகை 70.2 சதவீதமாகவும் இந்துக்களின் தொகை 126 சதவீதமாகவும் இஸ்லாம் மதத்தினரது தொகை 9.7 சதவீதமாகவும் ரோமன் கத்தோலிக்க மக்களது தொகை 6.1 சதவீதமாகவும் ஏனைய கிறிஸ்தவர்களின் தொகை 1.3 சத வீதமாகவும் ஏனையமதத்தவர்களின் தொகை 0.1 சதவீதமாகவும் உள்ளது.

16 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்தவரான ஆறாம் சங்கிலி மன்னரால் தமிழ் கத்தோலிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டமை,1883 ஆம் ஆண்டு இடம்பெற்ற கத்தோலிக்கர்களுக்கு எதிரான கலவரம், 1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் என ஆரம்பித்து 1990 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள், 1998 ஆம் ஆண்டு தலதா மாளிகைத் தாக்குதல், மட்டக்களப்பு குருக்கள் மட படுகொலைகள், வவுனியா வெடுக்குநாறி மலை ஆலயத்தின் மீதான தாக்குதல், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் அம்பாறை, கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்கள்,2019 ஆம் ஆண்டு நாடெங்குமுள்ள தேவால  யங்கள் மீது நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என மத ரீதியான வன்முறைகள் கறைபடிந்த அத்தியாயங்களாக வரலாற்றில் பதிவாகியுள்ளன.

அத்துடன் 1983 ஆம் ஆண்டு ஆரம்பமாகி 3 தசாப்த காலமாக தொடர்ந்த உள்நாட்டுப் போர் இன ரீதியான போர் என்பதற்கு அப்பால் இந்துகளுக்கும் பௌத்தர்களுக்குமிடையிலான மோதல்களாக பல சமயம் மாறி இரு தரப்பு ஆலயங்களும் தாக்குதலுக்கு தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்டிருந்தன.

உலக மதங்களுக்கிடையிலான பிணக்குகளைக் களைந்து அவற்றுக்கிடையே
ஊக்குவிப்பதற்கான நல்லிணக்கத்தை வாரமொன்றுக்கான பிரேரணை 2010 ஆம் ஆண்டு ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவால் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்டது.இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் வரும் முதலாவது வாரத்தை மத நம்பிக்கைகளுக்கி டையிலான நல்லிணக்க வாரமாக அனுஷ்டிப்பதற்கான 65/5 தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் மேற்படி வாரம் இந்த வருடம் எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமையிலிருந்து 7 ஆம் ஆம் திகதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.

மதங்களுக்கிடையிலான பிணக்குகளை களைந்து பரஸ்பர புரிந்துணர்வு, நல்லிணக்க அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் மூலம் மத ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது. மக்களின் மத இந்த வாரம் ரீதியான உணர்வுகளை குளிர்காய
முயற்சிக்கும் சூழ்ச்சிகளுக்கு விலைபோகாது மதங்கள் ஒவ்வொன்றும் உன்னத போதனைகளை நிறுத்தி ஒரு தாய் மக்களாக செயற்படுவது சமாதானத்தைக் கட்டியெழுப்புவதுடன் நாடு நாட்டில் எதிர்கொண்டுள்ளன பொருளாதார ரீதியான சாபக்கேடு நிலையிலிருந்து நாட்டை மீட்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை.


Post a Comment

Previous Post Next Post