.

டிஜிட்டல் மூலம் பணப் பரிவர்த்தனை அதிகரிக்க  அதிகரிக்க, தொழில்நுட்ப உதவியோடு விதவிதமான மோசடிகளும் அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. சாமானியர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை இந்த மோசடிப் பேர் வழிகள் யாரையும் விட்டுவைப்பதில்லை.

சைபர் குற்றங்கள் ஏன் அதிகரிக்கின்றன?

சைபர் குற்றங்களைச் செய்ய பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. ஸ்மார்ட் போன், முன்பே இணைப்பு செய்யப்பட்ட ஒரு சிம் கார்ட், ஓரளவுக்கு நிலையான இணைய தொடர்பு இருந்தாலே போதும் இந்தக் குற்றத் தொழிலில் நுழைவதற்கு.அதிகரித்து வரும் இணைய தொடர்பு வசதிகளும் அதன் ஊடுருவலும்,டேட்டாவுக்கு இருக்கும் மலிவான விலை, குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றால் அனைவருக்கும் போன், அனைவருக்கும் இணைய வசதி என ஆகி வரும் நிலையில் அதுவே 'தொல்லைகளாகவும்' மாறியிகுக்கிறது.

தொழில்நுட்பத்தை நம்பி மனிதர்கள் இருப்பது இந்த மாதிரியான மோசடிகளுக்கும் மேலும் வசதியாகப் போய் விட்டது.சைபர் / ஒன்லைன் குற்றங்கள் செய்பவர்கள் சமூக ஊடகங்களான Facebook,Youtube,Instagram,X தளம், Likin,WhatsApp,Telegram,E-commerce இணைய தளங்கள், Online payment செயலிகள்,E-wallets போன்ற அனைத்திலும் ஊடுருவியிருக்கிறார்கள்.

சைபர் குற்றவாளிகள் எப்படி செயல்படுகிறார்கள்?
ஒன்லைன் குற்றத்தில் ஈடுபட நினைப்பவர்கள் முதலில் போலியான சிம் கார்ட் ஒன்றை வாங்கிக்கொள்கிறார்கள்.(அதன் மூலம் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கை குறித்த தடயத்தையும் கண்டறிவது கடினம்). அதன்பின் அவர்கள் மின்னஞ்சல், குறுஞ் செய்திகள், டெலிகிராம், வட்ஸ்அப் உரையாடல் மூலம் மனிதர்களைக் குறி வைக்கிறார்கள்.

அப்படி இலக்கு வைக்கப்பட்ட நபர்களிடம் சுட்டியை /லிங்க்கை க்ளிக் செய் யச் சொல்வது, பின்நம்பரைக் கேட்பது,எங்கோ இருக்கும் அதிகம் புழக்கத்தில் இல்லாத ஏதாவது ஒரு செயலியை தரவிறக்கம் செய்யச் சொல்வது அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்யச் சொல்வது என ஏதாவது ஒரு வழியில் குற்றம் நிகழ்த்தத் தேவையான விஷயங்களைப் பெறுகிறார்கள்.அப்படிப் பெறப்பட்டத் தகவல்களைக் கொண்டு வங்கிக் கணக்குகளை ஹேக் செய்வது, டெபிட் / கிரெடிட் கார்டுகளை உபயோகிப்பது போன்ற செயல்பாடுகளின் மூலம் இலக்கு வைத்த நபரின் 'கணக்கை'க் காலி செய்துவிடுகிறார்கள்.



எந்த மாதிரியான சைபர் குற்றங்கள் நிகழ்கின்றன?
1. உங்களுக்கு வேலை தருவதாகவும்,வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்
றும் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்றும் ஆசை காட்டி
லிங்குகளோடு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள்.

2. டிஜிட்டல்/ஒரு குறிப்பிட்ட செயலி மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்
தருகிறோம் என்று சொல்லி, இணங்க வைத்து பணம் கொடுத்த பிறகு, அதைத்
திரும்பப் பெற மிரட்டுவது, புகைப்படங்களை ‘மார்ஃப்’ செய்து பிளாக்மெயில் செய்வது போன்றவை.

3.உங்கள் போன் நெட்வொர்க்கில் எந்த அறிகுறியும் இல்லாமல் செய்து
விட்டு அதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு உங்கள் போனுக்கு அழைப்பு விடுத்து குறிப்பிட்ட சில எண்களை அழுத்தச் செய்வதன் மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வது.

4. பி.பி.ஓ (BPO) நிறுவனத்தில் இருந்து அழைக்கிறோம் என போலியான அழைப்
புகள் செய்வது.

5. முகநூல் அல்லது Whatsapp  இல் Video call  மூலம் அழைத்து அதன்
பின் DeepNude போன்ற செயலிகளைக் கொண்டு படங்களை 'மார்ஃப்' செய்து
Blackmail செய்து பணம் பறிப்பது.

6. அதிகத் தொகைக்கு லொட்டரி விழுந்திருக்கிறது. அதைப் பெற வேண்டு மெனில் சில தகவல்களைக் கொடுங்கள் எனக் கேட்பது.

7. வாடிக்கையாளர் பிரிவிலிருந்து அழைக்கிறோம் எனச் சொல்லி தகவல்களைச் சேகரிப்பது.

8. Order செய்யாத பொருள் கூரியர் மூலம் வந்திருப்பதாகவும், அதை வேண்
டாம் என்று சொல்லி திருப்பி அனுப்ப வேண்டுமெளில், OTP வேண்டுமெனச் சொல்லி, அவர்கள் குழுவிலிருந்து போலியாக அனுப்பப்பட்ட OTP யைச்
சொன்ன பிறகு, கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது.

9. இலக்கு வைக்கப்பட்ட நபருக்கு நன்கு அறிமுகமான ஒருவர் மிகவும் சிரமத்
தில் இருப்பதாகவும், உடனே பணத்தை அனுப்பச் சொல்லியும் அவருடைய
Profile படத்துடனே வரக்கூடிய வாட்ஸ்அப் தகவல்கள். இப்போது சைபர்
குற்றங்கள் செய்பவர்கள் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யார்?
அவர் தனிப்பட்ட ஆளாகவோ, பெரிய குழுவைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம்.குழுவாகச் செயல்படும் நிலையில், ஒவ்வொரு நிலையிலும் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 'மோசடி செய்யப்படும் தொகையில்  10% என்கிற அடிப்படையில் செயல்படுவதும் உண்டு.

தடுக்கும் வழிகள்

இவை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.இப்போ தைய தேவை, அதிக சட்டங்கள் அல்ல.குற்றங்களையும் குற்றவாளிகளையும் கையாளக்கூடியத் திறனே ஆகும். அத்துடன் டிஜிட்டல் குறித்த கல்வியறி வையும்,இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் அதிகரிக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும்!




Post a Comment

Previous Post Next Post