.
திரைப்படங்களை அதிகம் நேசித்த இரு கலைஞர்களின் மராத்தான் நேர்காணலே இந்நூல். 1962-ம் ஆண்டு யுனிவர்சல் ஸ்டுடி யோவில் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், ஃபிராங்கோயிஸ் ட்ரூஃபா இருவரும் எட்டு நாள்களில் 50 மணி நேரம் திரைப்படங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த நேர்காணல் பின்னாள்களில் 'ஹிட்ச்காக்/ட்ரூஃபா' என்ற புத்தகமாகி பெரும் வரவேற்பு பெற்றது. அதன் தமிழாக்கமே'நானறிந்த ஹிட்ச்காக். 'ஐந்நூறுக்கும் மேற்பட்ட கேள்வி பதில்களை அடக்கிய இந்நூல் திரைப்பட ஆர்வலர்களின் கையேடு எனலாம். சினிமாவில் அரை நூற்றாண்டுகள் இயங்கிய ஹிட்ச்காக்கின் ஒவ்வொரு படத்தைப் பற்றியும் இதில் இருக்கிறது.

அவர் ஒவ்வொன்றையும் எப்படி யோசித்து முடிவெடுத்தார்.செயல்படுத்தினார்
என்பதோடு மட்டுமல்லாமல் படைப்பாற்றலிலும்,தொழில்நுட்பத்திலும், வியா பாரத்திலும் அவர் சந்தித்த சவால்களையும் விரிவாக அலசுகிறது. 'சினிமாவில் கதையைக் காட்சிகளாகச் சொல்ல வேண்டும். அவசியம் ஏற்பட்டால் தவிர பேசக் கூடாது' என்கிறார் ஹிட்ச்காக்.

த்ரில்லர் மன்னர் என்றழைக்கப்பட்ட ஹிட்ச்காக்,சஸ்பென்ஸ், சர்ப்ரைஸ் என்ற
வார்த்தைகளை வைத்தே அதனை எவ்வாறு நிகழ்த்த முடியும் என்பதை விளக்குகிறார்.

இரு நபர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அங்கே திடீரென ஒரு குண்டு வெடிக்கிறது என்றால் அது Surprise. அந்த இரு நபர்களைக் காட்டும்போதே குண்டையும் காட்டிவிட்டு,அது எப்போது வெடிக்கும் என்ற பதைபதைப்பை நீட்டிப்பது Suspense என்கிறார்.

'சினிமாவில் யதார்த்தம்' என்ற கேள்விக்கு, ‘யதார்த்தம்,Documentaryயில்தான் தேவை.சினிமாவுக்கு அவசியமில்லை.இருப்பதை இருப்பது போல காட்ட புகைப்படம் எடுக்கலாம். ஒரு ஓவியனை அப்படி வரையச் சொல்ல முடியாது.Documentaryக்குத் தேவையான அடிப்படை விஷயங்களை கடவுள் செய்கிறார். சினிமாவுக்குத் தேவையான அடிப்படை விஷயங்களை கடவுள் போல இயக்குநர் செய்கிறார்' என்றார்.

ஹிட்ச்காக்கின் பதில்கள் தரும் தெளிவு ஒருபுறம் என்றால், பிரெஞ்சு புதிய அலை சினிமாவில் முக்கிய விமர்சகரும் இயக்குநருமான ட்ரூஃபாவின் நுண்ணிய கேள்விகள் அனைத்தும் இசை, திரைக்கதை, கதாபாத்திரத் தேர்வு, கேமராக் கோணங்கள், சினிமாத் தயாரிப்பு என்று பல பரிமாணங்களைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. ஜெகநாத் நடராஜனின் எளிமையான மொழிபெயர்ப்பும், தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்திய விதமும் வாசிப்பு அனுபவத்தை இலகுவாக்குகிறது. 'நானறிந்த ஹிட்ச்காக்',சினிமாவை அறிந்து கொள்ள உதவும் கருவூலம்.






Post a Comment

Previous Post Next Post