.

இன்றைய சமூகமானது நாகரிகம் என்ற வலைக்குள் கட்டுப்பட்டு பரந்து விரிவடைந்த நிலையில், வெளிப்புறத்தில் நல்ல கௌரவமாக பார்க்கப்படு கின்றது. இது நாகரிகத்தின் போலியான போர்வை என்று தான் கூற வேண்டும். சற்று சமூகத்தின் அகத்தினுள் நுழைந்து ஆராய்ந்தோமானால், பெண்களை உயர்த்தி அவர்களை பாதுகாப்பதாக பதாதைகள் ஏந்தி பெண்ணியம் பேசுகின்ற தரப்பினருக்கு மத்தியில், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக எல்லா இடங்களிலும் அநீதிகள் நிகழ்ந்தவாறே உள்ளன.இவை வெளிச் சமூக தரப்பிற்கு வெளிப்படுத்தப்படாத கொடுமைகளாக உள்ளன.

இவ்வாறாக பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் இடம்பெற்று கொண்டு தான் இருக்கின்றன, அதாவது பெண் ஒருவருக்கு அல்லது ஆண் ஒருவருக்கு சொற்களாலோ, செயலாலோ பாலியல் தொல்லைகள் அல்லது தொந்தரவுகள் செய்தால் அது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவே கருதப்படுகின்றது. ஒரு பெண்ணின் அனுமதி யின்றி அல்லது அவரது விருப்புக்கு மாறாக உடலை தொடுவது பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடியதான தொனியில் அல்லது கருத்தில் வார்த் தைகளை பாவிப்பது மற்றும் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது என்பன பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சமமானதாகவே கருதப்படுகின்றது. ஆபாசமான வார்த்தைகளை உபயோகிப்பதும் பாலியல் தொல்லைக்குள்ளே அடங்குகின்றன.

பெண்களுக்கு எதிரான பாலியல் சார்ந்த துஷ்பிரயோகங்கள் பெரும்பாலும் அவர்கள் தொழில் புரியும் இடங்களிலும், வீடுகளிலும், அயல் பிரதேசங் களிலும்,மற்றும் பாடசாலை என வெளிச்சூழல் மற்றும் உட்புறச் சூழலிலும் வைத்தே இடம்பெறுவதாக அமைகின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த பாலியல் தொல்லை என்பது வெளி சமூகத்தினராலோ அல்லது செஈந்த உறவுக ளினராலோ ஏற்படக் கூடியதாக அமைகின்றது. பால்நிலை சார்ந்த துஷ்பிர யோகங்கள் அதிகாரம் மிக்கவர்களாலும், வயோதிபர்களாலும், திருமண மாகாத நபர்களினாலும், இளைய சமூகத்தினராலும், பெண்களின் சுதந்தி ரத்தையும் சுயாதீனத்தையும் பாதிப்பதாக அவர்கள் வெளிச் சமூகத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு பாலியல் துஷ்பியோகங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறு வயதுடைய பெண் பிள்ளைகளை திருமணம் செய்தல்,பாலியல் உணர்ச்சிகளை தூண்டுதல், அவர்களுக்கு ஆபாசமான வீடியோக்களை காண்பித்தல், தவறான உணர்வுடன் அவர்களை அணுகுதல் என இந்த பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிராக இடம் பெறுகின்றன.

இவை ஒருவரது சம்பந்தம் இன்றி அவரது விருப்புக்கு மாறாக இடம்பெறும் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு செயல்பாடாக கருதப்படுகின்றன.அது மட்டுமல்லாமல் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களும், வன்முறைகளும் இலத்திரனியல் பரப்பிலிருந்து எழுப்பப்படுகிறது என்பதும் உண்மையே ஏனெனில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான ஆபாசமான புகைப்படங்களை பகிர்வதாக இருக்கட்டும்,வார்த்தை பிரயோகங்களாக இருக்கட்டும்,அவர்களை மிரட்டுவதாக இருக்கட்டும் அனைத்துமே தற்காலத்தில் அதிகளவில் இலத்திரனியல் தளத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக இடம்பெறுகின்ற சூழ்நிலை சார்ந்த தொந்தரவுகள் யாவும் ஒரு நபருக்கு தீங்கிழைப்பதாக அமைகின்றன. அந்த வகையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தவிர்க்க முடியாத அத்துமீறலாக இந்த பாலியல் துஷ் பிரயோகங்கள் பெண்களை பாதிப்பதாக இடம் பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.அந்த வகையில் இலங்கை,இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என உலக நாடுகள் பலவற்றில் இந்த பாலியல் துஷ்பிர யோகங்கள் இடம் பெறுகின்றன.அண்மைய காலங்களில் பெண்கள் வெளிச் சமூக தளத்திற்கு செல்வதே ஒரு அதிருப்தி தருவதாக உள்ளது. ஏனெனில் தனியாக இருக்கும் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகின்ற தன்மை சமூகத்தில் அதிகளவில் காணப்படுகிறன.

அது மாத்திரமல்லாமல், பெரும்பாலும் பெண்கள் குடும்ப உறவினர்களாலே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பது தான் 100% உண்மை, அதேவேளை பெண்களுக்கு எழும் வெளிச்சொல்ல முடியாத வன்கொடுமை சொந்த உறவுகளால் துஸ்பிரயோகப்படுத்தப்படுவதுதான், அதாவது பெண் குழந்தையை பெற்ற தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்யும் அநியாய் செயற்பாடு இன்றைய சமூகத்தில் அதிகரித்து வரும் போக்கினை நாளாந்தம் வெளிவரும் செய்திகளில் காணக்கூடியதாக உள்ளன. துஷ்பிரயோகங்கள் மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவர்களுக்கு கடூழிய சிறை தண்டனையே தீர்ப்பாக வழங்கப்படுகின்றது.

ஏன் பாராளுமன்றத்தில் கூட பெண்களுக்கு இந்த சமூகத்தில் அங்கீகாரம் வழங்கப்படாமல் அவர்கள் பாலியல் ரீதியில் கொடுமைகளுக்கு ஆளாக்கப் படுகின்றனர். அண்மைய காலங்களில் பாராளுமன்றத்தில் பெண் எம்.பிக் ளுக்கு எதிராக சபையில் ஆண் உறுப் பினர் ஒருவர் ஆபாசமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது. இவ்வாறாக வாய் மூல பாலியல் துஷ்பிரயோகங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாமல் பிரசாரங்களை சம்மதிக்காத பெண்களுக்கு கூட இந்த சமூகத்தில் பாலியல் பலாத்காரங்கள் இடம்பெறுகின்றன. அதாவது பாகிஸ் தானில் சிறுபான்மையினராக வாழ்ந்த இந்துக்களுக்கு எதிராக அச்சுறுத்தல் அளிக்கப்படுகின்ற நிலையில் முஸ்லிம் மதம் மாற மறுத்த பெண்ணை இப்ராஹீம் மற்றும் புன்கோ ஆகிய இருவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து மூன்று நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்ற பாலியல் கொடுமை. போக்குவரத்துக்காக பேருத்தில் பிரயாணிக்கும். பெண்ணுக்கும் சுதந்திரம் என்பது கேள் விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் அயலில் உள்ள ஆடவர்களால் இவர்கள் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு உட்பட்டு பல சவால்க ளுக்கு மத்தியிலே இந்த போக்குவரத்து பிரயாணத்தையும் கடக்கின்றனர்.

என்ன இது? ஏன் இவ்வாறு இடம் பெறுகின்றது? எதற்காக இவர்கள் இவ்வாறு செய்கின்றார்கள்? பெண்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட்டதா? என்று பல கேள்விகளை எழுப்புவதாக பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு விழும் பாரிய சவாலாகவே காணப்படுகின்றன.பாயியல் துஷ்பிரயோகங்களை அனுபவிக்கின்ற பெண்கள், அனுபவித்த பெண்கள், அச்சுறுத்தலுக்கு உள்ளாகுகின்ற பெண்கள் என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறான பாலியல் தொல்லைகளினால் அவர்கள் சமூக தரப்பை சமாளிக்க முடியா தவர்களாக திண்டாடுகின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் இவர்களது கல்வி,தொழில், குடும்பம் என ஒவ்வொரு அந்தஸ்தையும் பாதிப்பதாக இந்த பாலியல் துஷ்பிரயோகங்களும், தொல்லைகளும் இடம்பெற்றுக் கொண்டுள்ளன.அத்தோடு இந்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் தொல்லைகளுக்கும் உட்படுகின்றவர் பாதிப்புக்கு உட்பட்டவர்களும்களும் மனரீதியாக பாதிப்புக்கு உட்டுத்தப்படுகின்றனர். அத்தோடு இவர்கள் இத்தொல்லையிளை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தற்கொலை செய்ய துணிகின்றனர். இவ்வாறான துன்புறத்தல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

இன்றளவில் அதிகமாக எழும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுத்து பெண்ன ஒரு சுதந்திரப் பாதையை அமைத்துக் கொடுப்பது இந்த சமூகத்தின் தலையாய பொறுப்பாகவும் கடமையாகவும் உள்ளது. பெண்களின் வாழ்க்கை
யில் நீண்ட காலத்திற்கு பாரதுரமான பாதிப்பை ஏற்படுத்தும் பாலியல் துஷ் பிரயோகங்களை செய்யும் அற்ப ஜென்மங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் அல்லது குறித்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் நீ திமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். இதன் பிரகாரம் குற்றம் புரிந்த நபருக்கு தண்டனையாக 5 வருடத்திற்கு மேற்பட்ட சிறை தண்டனையை தீ திமன்றம் வழங்கலாம்.இவ்வாறாக சட்டரீதியாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு அரசாங்கம் பக்க பலமாக இருந்து நீதியை பெற்றுக் கொடுத்தல் அவசியம். அதுமாத்திரமில்லாமல் குற்றம் புரிந்தவர்களுக்கு கடுழிய சிறை தண்டனையும் நஷ்ட ஈடு வழங் கலும் தண்டளையாக வழங்கப்படுகின்றது. இத்தகைய தண்டனைகள் யாவும் குற்றம் புரிந்ததிலிருந்து எப்படியேனும் தப்பித்து விடலாம் என்ற எண்ணத்தை தருவதனால் இதற்கும் மேலதிகமாக அழுத்தமான சட்டங்களை உருவாக்கி அரசாங்கம் இந்த பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

அத்தோடு ஆண்களை வளர்க்கும் பெற்றோரும் தங்களுடைய சகோதரிகள் போல ஏனைய பெண்களையும் கருதும் பண்பினை சிறுவயதிலிருந்தே பழக் கப்படுத்தி வளர்க்க வேண்டும். பெண்களை மதித்து அவர்களுக்கு உறுதுணை யாக இருக்கும் வகையில் ஆண்களை வளர்ப்பது ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பாகும். அது மாத்திரமில்லாமல் பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடை செய்யும் தோக்கில் பேருந்து ஓட்டுனர்களும் மிக கூர்ந்து கவனமாக இருத்தல் வேண்டும்.பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளான நபர்கள் வெளிச் சமூகத்திற்கு முன்வராமல் பின்னோக்கி செல்வதை தவிர்த்து.அவர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை சமூக தரப்பில் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். இவ்வாறாக பெண்களுக்கு எழும் பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தி அவர்களுக்கான சுதந்திர வழியை பெற்றுக் கொடுப்பது எமது சமூக தரப்பின் பொறுப்பாகும்.


Post a Comment

Previous Post Next Post