.

பெண்கள் என்றாலே வலிமை குறைந்தவள் என்கிற ஓர் எண்ணம் இன்றும் உள்ளது. 

ஆணுக்கு நிகராக பெண் கல்வியிலும்,தொழிலிலும், சம்பாத்தியத்திலும் சுய மரியாதையுடன் வளர்ந்து கொண்டிருக்கிறாள்.ஆனாலும் இந்தச் சமூகம் ஏதோ ஒன்றைச் சொல்லி பெண்களின் வளர்ச்சிக்கு தடையேற்படுத்திக் கொண்டேயிருக்கிறது .

கீழைத்தேய நாடுகளில் மட்டுமல்ல மேலைத்தேய நாடுகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் இருந்தது, இருக்கின்றது என்பதை சில பழமொழிகள் மூலமாக அறியலாம். அப்படியென்ன பெரிதாக கூறி விட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.சிலவற்றை வாசிக்க உங்களுக்கே புரியும்.

மாவீரன் நெப்போலியன் பொனபார்ட்,"பெண்கள் நம் சொத்து. ஆனால், நாம் அவர்கள் சொத்து அல்ல. அவர்கள் நமக்காகப் பிறந்தவர்கள் என்கிறார்.

"எப்போதெல்லாம் ஒரு பெண் இறக்கிறாளோ, அப்போதெல்லாம் உலகத்தில் ஒரு சண்டை குறையும்” என்கிறது ஜெர்மன் பழமொழி.

'ஆண் ஆணையிடுகிறான், பெண் அதற்கு அடிபணிந்து போக வேண்டும்” என்கிறார் லார்ட் டென்னிசன்.

இவற்றுக்குச் சற்றும் குறைந்ததல்ல தமிழ்ப் பழமொழிகள்.

பெண் புத்தி பின் புத்தி'

‘அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்திற்கு ஒரு ஆணும்

'அடுப்பே திருப்பதி அகமுடையானே குலதெய்வம்’

'பெண்ணை அடித்து வளர்க்கணும் முருங்கை மரத்தை ஒடித்து வளர்க்கணும்’ 


பெண் இனத்தை அடக்கி ஆள,அதிகாரம் செய்ய ஆண் இனம் எடுத்த அறிவாயுதம்தான் பிரித்தாளும் சூழ்ச்சி. உலகெங்கும் பெண் சமூகத்தை, ஆண் சமூகம் ஒரு விதக் காழ்ப்புணர்வோடுதான் பார்த்து வந்திருக்கிறது. மதத் தலைவர்கள், ஆட்சியாளர்கள், மாவீரர்கள், புகழ் பெற்ற படைப்பாளிகள் என்று இதுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல.

பெண்கள் பற்றிய சமூக கண்ணோட்டம் பெண்கள் முகம் கொடுக்கும் விடயங் களில் முக்கியமானவை. அவற்றை நாம் மூன்று விதமாக வகுக்கலாம்.

1.பெண்மையின் மகத்துவம் உணராமை

2.பெண்மையின் சீரழிவு பற்றிய சிந்தனை இன்மை

3.பெண்மை பற்றிய தவறான கண்ணோட்டம்

பெண்மையின் மகத்துவம் உணராமை

பெண்கள் வேலைக்கு சென்றாலும் வீட்டில் இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் பணக்காரியாக இருந்தாலும் அவளின் பிரதான அடித்தளம் அன்பே, குழந்தைக்காகவும் குடும்பத்திற்காகவும் தன்னை தன் ஆசைகள், சுய தேவைகள் என்பவற்றை இழந்து அர்ப்பணிப்புடன் நடக்கிறாள்.

நம்பிக்கையுடன் கொடுக்கப்படும் ஒரு செயலை அவள் வெற்றிகரமாக செய்து முடிக்க உறக்கம்,உணவு,என்பவற்றை தொலைத்து தனது இலக்கு நோக்கி ஓடுவது பெண்களின் மகத்துவமாக இருக்கிறது. (இப்போது ஒரு சிலர் கடமை தவறி நடக்கிறார்கள்.அவர்களுக்கு இது பொருத்தமல்ல).இவற்றை சுற்றியுள்ள உறவுகளும் தோழமைகளும் உணர மறுக்கின்றனர்." அவள் கடமையை அவள் செய்கிறாள். நம் பங்கு எதுவும் இல்லை' என்று அவளின் வலி,வேதனையை உணராமல் நமக்கத்தானே கடமைகளை செய்கிறாள், நமக்காகத்தானே பல விடயங்களை தொலைத்து நிற்கிறாள் என்று சிந்திப்பதேயில்லை.

பெண்களின் சீரழிவு பற்றிய சிந்தனை இன்மை

பெண்களின் சீரழிவு எனும் போது எல்லோர் மனதிலும் தோன்றுவது பாலியல் ரீதியாக பாதிப்படைதலே. ஆனால் அவர்களின் கலாச்சாரம் பண்பாடு, கல்வி என்பன சில நேரங்களில் அவர்களின் உறவுகளாலே பாதிப்படைவது பற்றி யாரும் சிந்திப்பதில்லை வேதனையே. நன்றாக படிக்கக் கூடிய பெண் குழந்தைகளின் கல்விக்கு தடை விதித்தல் தொழிலுக்கு செல்லும் பெண்ணை திருமணத்தின் பின் தொழிலை விட்டு நிறுத்துதல்.

பல்வேறு திறமைகள் இருப்பது தெரிந்தும் அவற்றை வெளிப்படுத்த விடாமல் தடை விதிப்பது.வீடு வன்முறைகளில் அடித்தல், காயப்படுத்துதல், அவர்களின் கருத்துக்களை கேட்காமல் புறக்கணித்தல்,திருமணங்களில் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்படுத்தல், உறவென்று வாழ்பவர்களின் மனம் போலவே நடந்து கொள்ளக் கட்டாயப்படுத்தல்,பெண் என்கிற காரணத்தால் சில விடயங்களுக்கு தடை சொல்லல், சரியாக நடத்துவார் என்கிற நம்பிகை இல்லாமை,அவளுக்கு ஒரு மனமிருக்கிறது என்கிற எண்ணமின்றிதான் தோன்றித் தனமாக முடிவுகளை திணித்தல் போன்ற விடயங்கள் பல பெண் களின் வாழ்வை சீரழிவுக்குத் தள்ளுகிறது.






Post a Comment

Previous Post Next Post