.

ஜார்ஜ் எஸ். கிளாசன் எழுதிய பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் என்ற புத்தகமானது நான்காயிரம் ஆண்டுகளிற்கு முன்னால் பாபிலோனியச் செல்வந்தர்கள் கடைப்பிடித்து வந்த செல்வத்தைக் குவிக்கும் அடிப்படை விதிகளைச் சொல்கிறது.இது ஒரு தனிநபர் நிதி புத்தகம் ஆகும். தங்கள் பணத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது மற்றும் நிதி வெற்றியைப் பெறுவது என்பதை அறிய விரும்பும் எவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

இது 1926 இல் முதன் முதலில் வெளியிடப்பட்டது, அடுத்த நூறாண்டுகளிற்கு இப் புத்தகம் பேசப்படும் என கிளாசன் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.ஆனாலும் இன்னும் நூறாண்டுகளிற்கு மேல் இந்தப் புத்தகம் பேசப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.இது கிளாசனின் எழுத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே சொல்லலாம்.இப் புத்தகம் 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் இது மில்லியன் கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை நான்காயிரம் ஆண்டுகளிற்கு முன் பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர்.செல்வத்தை ஈட்டி அதைப் பாதுகாத்து அதைப் பன்மடங்கு பெருக்கியிருந்த பாபிலோனியச் செல்வந்தர்களின் வெற்றி இரகசியங்களை கிளெசன் சுவாரஸ்யமான கதைகளின் வடிவில் எம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

1926களில் சிக்கனம் மற்றும் பொருளாதார வெற்றி பற்றிய பல தொடர்ச்சியான துண்டு வெளியீடுகளை கிளாசன் முதன் முதலாக வெளியிட்டு பிரபல மாக்கினார்.அவற்றில் தன்னுடைய ஒவ்வொரு கருத்தையும் பண்டைய பாபிலோனைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைகளைப் பயன்படுத்தி விளக்கினார்.அந்த துண்டு வெளியீடுகள் பெரும் எண்ணிக்கையில் வங்கிகளிற்கும் காப்பீட்டு நிறுவனங்களிற்கும் விநியோகிக்கப்பட்டன.அவை இலட்சக்கணக்கானோ ரிடையே பிரபலமானது. அவற்றில் மிகவும் பிரபலமானது பாபிலோனின் மிகப்பெரிய செல்வந்தர் என்ற வெளியீடாகும். அக்கதைதான் இந்நூலின் தலைப்பாக அமைந்துள்ளது இந்த பாபிலோனியக் கதைகள் உத்வேக மூட்டுகிற ஒரு நவீன இலக்கியமாக ஆகியுள்ளது.





தொண்ணூற்றேழு ஆண்டுகளிற்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நூல் இன்றளவும் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறது.சிக்கனம் சேமிப்பு,பாதுகாப்பான முதலீடு,கடின உழைப்பு,நேர்மை போன்ற அடிப்படை விடயங்களின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

எம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வெற்றிக்கு இந்த புத்தகம் வழிகாட்டுகிறது. எம்முடைய சொந்த திறமைகள் மற்றும் முயற்சிகளின் மூலமாக நாம் சாதிப்பவைதான் தனிமனித வெற்றியாகும்.சரியான முறையில் அதற்கு எம்மைத் தயார் செய்து கொள்வதுதான் வெற்றிக்கான திறவு கோல். எம்முடைய செயற்பாடுகள் எம்முடைய எண்ணங்களை விட அதிக சாதுரியமாக இருக்க முடியாது.எம்முடைய எண்ணங்கள் எம்முடைய புரிதல்களை விட மேம்பட்டதாக இருக்க முடியாது என்கிறார் கிளேசன்.

பாபிலோனியர்கள் மிகச் சிறந்த நிதி நிர்வாகிகளாகவும் வணிகர்களாகவும் விளங்கினர்.நாம் அறிந்தவரை பணத்தை முதன் முதலாகக் கண்டு பிடித்தது அவர்கள்தான்.அத்தோடு உறுதிப் பத்திரங்கள் சொத்துரிமை ஆவணங்கள் ஆகியவற்றை முதன் முதலாகப் பயன் படுத்தியவர்களும் அவர்கள்தான். பாபிலோனின் பணக்காரர்களை எந்த விதி கட்டுப்படுத்தியதோ அந்த விதி இன்றும் மாறாமல் அப்படியே இருக்கிறது. இவ்வுலகில் இன்றளவும் வெற்றியை அளவிடும் அளவுகோலாகப் பணம்தான் இருந்து வருகிறது.இவ்வுலகிலிருக்கும் சிறந்தவற்றை அனுபவிப்பதை பணம் சாத்தியமாக்குகிறது.பணத்ததைச் சேர்ப்பதற்கான விதிகளைப் புரிந்து கொண்டவர்களிடம் பணம் கட்டாயம் சேர்ந்து இருக்கும் என்கிறது இப்புத்தகம்.

பணத்தைப் பெருக்குவதற்கான வழிகளை ஆராயும் இந்நூல் பணம் தொடர்பான விடயங்களை புரிந்து கொள்வதற்கு ஒரு வழிகாட்டியாகும். அதுதான் இப் புத்தகத்தின் நோக்கமும் கூட.பொருளாதார ரீதியாக பெரும் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டுள்ளவர்களிற்கு இந்த நூல் ஒரு முன்னோக்கை கொடுக்கும்.அந்த முன்னோக்கு பணத்தை உழைக்கவும்,அதைக் கவனமாக வைத்திருக்கவும்,அதன் உபரியைக் கொண்டு மேலும் பணத்தைப் பெருக்கவும் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.

வங்கிக் கணக்குகளைப் பெருக்குவதற்கும்பெரும் பொருளாதார வெற்றியைக் குவிப்பதற்கும் தீவிரமான தனிப்பட்ட பொருளாதார பிரச்சனைகளிற்கான தீர்வுகளை எட்டுவதற்கும் தேவையான ஊக்கத்தை இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் உங்களிற்கு வழங்கும்.

பாபிலோன் பண்டைய உலகின் செல்வச் செழிப்பு மிக்க ஒரு நகரமாக விளங்கியதற்கு காரணம் அந்த நகரின் குடிமக்கள் மாபெரும் செல்வந்தர்களாக இருந்ததுதான்.அவர்கள் பணத்தின் மதிப்பை வெகுவாக மெச்சினர்.பணத்தைப் பெறுவதற்கும் அதனைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் தங்களடைய பணம் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருப்பதற்கும் தேவைப்பட்ட உறுதியான பொருளாதார விதிகளை அவர்கள் பின்பற்றினர்.நாம் அனைவரும் விரும்பும் வருங்காலத்திற்கான பணத்தினையும் அவர்கள் பெற்றிருந்தனர்.

பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் புத்தகத்தின் கதாநாயகன் அர்காட் என்ற பெயருடைய ஒரு கற்பனைக் கதாபாத்திரம்.பாபிலோனின் பணக்காரர் அர்காட் ஒரு ஏழை எழுத்தர், அவர் ஒரு ஞானமுள்ள முதியவரிடமிருந்து செல்வத்தின் ரகசியங்களைக் கற்றுக்கொள்கிறார். அவர் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றி, இறுதியில் பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரராக  ஆனார்.

அர்காட் கற்றுக் கொள்ளும் கொள்கைகள் பின்வருமாறு:

  • முதலில் நீங்கள் பணம் சேமியுங்கள். உங்கள் வருமானத்தில் 10% சேமிப்பாகச் வைத்திருங்கள், உங்களால் கொஞ்சம் சேமிக்க முடிந்தாலும் கூட.
  • உங்கள் வசதிக்குக் கீழே வாழுங்கள். நீங்கள் சம்பாதிப்பதை விட அதிக பணத்தை செலவிட வேண்டாம்.
  • உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். காணி வாங்குதல் அல்லது வணிகங்கள் போன்ற காலப்போக்கில் மதிப்பு அதிகரிக்கும் சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள்.
  • கடனைத் தவிர்க்கவும். கடன் என்பது அடிமைத்தனத்தின் ஒரு வடிவம். உங்களது கடனை கூடிய விரைவில் செலுத்துங்கள்.
  • உங்களுக்கு கூட்டு வட்டி வேலை செய்யுங்கள். உங்கள் பணத்தை முதலீடு செய்து, காலப்போக்கில் வளரட்டும்.
  • இழப்புக்களிலிருந்து உங்களுடைய செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  • எதிர்கால வருமானத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • வருவாய் ஈட்டும் திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அர்காட் சொல்லும் தங்கத்தின் ஐந்து விதிகள் வருமாறு
  •  தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் செல்வத்தைக் குவிப்பதற்காகத் தன் வருவாயில் குறைந்த பட்சம் பத்தில் ஒரு பங்கைத் தனியாக எடுத்து வைத்திருப்பவர்களை நோக்கித் தங்கம் மகிழ்ச்சியுடன் ஓடி வரும்.
  • ஒருவர் தான் சேர்த்து வைத்திருக்கும் தங்கத்தை இலாபகரமான வேலையில் ஈடுபடுத்தினால் அத் தங்கம் தன் எஜமானருக்குக்காக அயராது உழைத்து தன்னை விடப் பன்மடங்கு பெருக்கும்.
  • தங்கத்தை கையாள்பவர்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி எச்சரிக்கையுடன் செயற்படுபவர்களோடு தங்கம் பாதுகாப்பாக ஒட்டிக் கொள்ளும்.
  • தனக்கு அனுபவமில்லாத வியாபாரத்தில் அல்லது ஆலோசகர்கள் அங்கீகரிக்காத துறையில் தங்கத்தினை முதலீடு செய்யும்போது, தங்கம் நம்மை விட்டு நழுவிப் போய்விடும்.
  • நடைமுறைக்கு அப்பாற்பட்ட வருவாயை ஈட்டித் தரும் முதலீடுகளில் முதலீடு செய்வது ஏமாற்றுப் பேர்வழிகளினை நம்புவது போன்றவற்றில் ஈடுபடும்போது தங்கம் அம் மனிதனிடமிருந்து பறந்து சென்று விடும்.
இந்த கொள்கைகள் இன்றும் பொருத்தமானவை, மேலும் அவை செல்வத்தை உருவாக்கவும் நிதி பாதுகாப்பை அடையவும் உதவும்.

உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த உதவும் புத்தகத்தை நீங்கள் தேடுகிறீர்களானால்,  பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் வாசிப்பதற்குச் சிறந்த புத்தகம்.வாசிப்போம்.

பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post