.

புத்தகத்தின் பெயர் : 40 வயதிற்குப் பிறகு வானமே எல்லை

ஆசிரியர் : ஓஷோ

பதிப்பகம் : கண்ணதாசன்


ஓஷோ நூல்கள் எழுத்து வடிவம் அல்ல. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, முன் தயாரிப்பு ஏதும் இல்லாமல், அவர் அருவியாய் பொழிந்த பேச்சு ஒலி நாடாக்களிலும், வீடியோவிலும் பதிவாகியுள்ளது. அவற்றின் தொகுப்பு தான் இப்போது புத்தகங்களாக வெளிவருகின்றன.இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய 1000 சிற்பிகளில் ஒருவர் ஓஷோ என்று புகழாரம் சூட்டுகிறது லண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் இதழ்.

இந்தப் புத்தகம்

பகுதி-1
பகுதி-2
பகுதி-3


என்று மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. இதிலே பகுதி 1ல்
9 தலைப்புகளுடன்,ஓஷோவின் இனிய பூப்போன்ற, சிந்திக்கக் கூடிய பல கருத்துக்களை நாம் உள்வாங்கக் கூடியதாக இருக்கின்றது.

1 மாறும் தருணம்
2. மண்ணையும் பொன்னாக்கும் காதல்
3. இயற்கையோடு இணைந்து இருப்பதே அழகு
4. ஒரு வசந்தம்
5. எதற்கும் முடியவில்லை.
6. குறுக்கும் நெடுக்கும்
7. பக்குவம் நோக்கிய பருவம்.
8. இளமையின் கொடையை
9. தியானமும் பக்குவமும்

வயது முதிர்ந்தவர்களுக்கும் இன்றைய இளம் சமுதாயத்தினருக்கும் இடையிலான, சிந்தனைகள், எல்லாவிதமான வளர்ச்சி பற்றி கூறுகிறார். வயது முதிர்ந்தபின் அவர்கள் இவர்களை ஓரு பொருட்டாக நோக்குவதில்லைஎன்றும், இவர்கள் இனி சொர்க்கத்தை நோக்கியே படையெடுக்க அதிகம் விரும்புகிறார்கள். இளம் சமுதாயமே இனி வரும் காலங்களில் ஆண், பெண் உடலுறவு கொள்ளாமலே எப்படிப்பட்ட வாரிசை உருவாக்கவேண்டும் என்ற ஆராய்ச்சியில் உள்ளார்கள் என்றும் ஓரு சிறிய விளக்கத்துடன் சிந்திக்க வைக்கிறார்.

அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றம் நிகழும் தருணங்கள் வரும்.வாழ்க்கையி ல் சில நடைமுறைகளை நீங்கள் மாற்றும் போது அந்த மாற்றம் இயல்பாக இருக்க வேண்டும் என்ற மகத்தான விஷயத்தை மறந்து விடக்கூடாது. இயல்பான இயற்கையான மாற்றம் என்பது உங்கள் கையில் இல்லை.இயற்கை உங்களுக்கு வழங்கும் எல்லா மாற்றங்களையும் முழுமனதோடு ஏற்றுக் கொள்வதைத் தான் முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.சில விஷயங்களை நீங்கள் ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், முதலில் நடுத்தர வயதை எட்டியிரு க்கிறோம் என்பதை உணர வேண்டும். அதற்குரிய விளக்கத்தை ஓஷோ நல்ல முறையில் இப்புத்தகத்தில் ஆராய்ந்து எங்களு க்கு அறிவுபூர்வமாக தந்துள்ளார்.

மனிதன் இயற்கைக்கு மாறாக பல மாற்றங்களை செய்து வருகிறான். அதற்கு உதாரணமாக மனிதன் தனது வயது முதிர்ந்த காலங்களில் இளமையோடு தான் இருப்பதைக் காட்டுவதற்காக பலவிதமான செயற்கை முறைகளை செய்து வருகின்றான். உதாரணமாக பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை, மொட்டைத்தலைக்கு புதிய முடி நடுதல், இன்னும் பல பாலியல் தொல்லைகளில் அவஸ்தைப்படுதல் போன்றவற்றை,மேற்குலக நாடுகளில் எப்படி, கீழைத்தேச நாடுகளில் எப்படி என விளக்கம் தருகிறார். இது ஒரு பைத்தியக்காரத்தனம் என்று ஓஷோ விளக்கம் தந்துள்ளார்.




முதுமை என்றால் அது மரணத்தின் நுழைவாயில் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். முதுமைபயத்திற்குள்ளே மறைந்திருப்பது மரணபயம் தான். எப்படி வாழ வேண்டும் என்பதை அறியாது மரணத்தைக் கண்டு பீதி அடைகிறார்கள்.

மனிதன் ஒரு சில மனிதர்களையும் ஒரு சில மிருகங்களையும் மட்டுமே நேசிக்கிறான், அன்பு காட்டுகிறான். மிக மிக முக்கியமான ஒன்றை எப்பவுமே மறந்து விடுகிறான். அவைதான் பஞ்ச பூதங்கள். இயற்கையை நேசியுங்கள், அதனுடன் இணைந்து வாழக் கற்றுக் கொ‌ள்ளு‌ங்க‌ள் என்கிறார் ஓஷோ.
.

தலைமுறை இடைவெளியை பற்றி ஓஷோ மிக அழகாகச் சொல்லுகிறார். ஆரம்ப காலங்களில் ஒரு குடும்பஸ்தன் என்ன வேலை செய்கிறானே அதே வேலையை தொடர்ந்து பிள்ளைகளும் செய்யத் தொடங்குகிறார்கள். பெற்றோர்களின் சொற்களை பிள்ளைகள் உள் வாங்கினார்கள் அந்த காலத்தில், ஆனால் தற்கால சமயத்தில் அவை நேர் எதிராக இருக்கின்றன. விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக தற்போதைய காலத்தில் பிள்ளைகள் நிறைய படித்து இருக்கிறார். அவர்களுடைய சொற்களையும் முதியோர்கள் ஆகிய நாங்களும் உள்வாங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். இதற்கு பல உதாரணங்களை ஓஷோ குறிப்பிடுகிறார். உண்மையும் அதுதான்.அதுதான் தலைமுறை மாற்றம் என்பது

உதாரணமாக வைத்தியர் ஒரு மருந்தினை ஒரு நோயாளிக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றார், அதனால் அந்த நோயாளி ஒரு குறிக்கப்பட்ட காலத்திற்கு சுகமாகவே இருக்கின்றான். நாளடைவில் அந்த நோயாளிக்கு பக்க விளைவுகள் ஏற்படும் பொழுது அந்த மருந்தில் அதிகமான வேதிப் பொருட்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. தற்கால இளைஞர்கள் பல்கலைக்கழக படிப்பு முடிந்து வரும் போது அந்த கொடுக்கப்பட்ட மருந்து எவ்வளவோ குறைகள் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இதை தற்காலத்தில் நாம் அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

குறிப்பாக பௌதீகம், ரசாயனம், உயிர் இரசாயனம் போன்றவற்றில் தற்காலத்தில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் பல திடுக்கிடும் சம்பவங்களைக் காட்டுகின்றன. ஒரு ஆராய்ச்சியை செய்து அதற்குரிய புத்தகம் ஒன்றை எழுதுவதற்கு முன்பாகவே அந்த ஆராய்ச்சியில் பல மாற்றங்களும் பல குறைகளும் கண்டு பிடிக்கப் படுகின்றன.அதனால்தான் தற்சமயம் புத்தகங்களாக வெளிவராமல் சஞ்சிகைகளிலும் வெளியாகின்றன. மாற்றங்கள் விரைவாகவே ஒவ்வொரு விடயத்திலும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

அச்சமயம் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் மாணவ-மாணவிகள், பெரும்பாலானோர் மாற்றங்களை வரவேற்கின்றனர். அதனால் படிப்பு முடிந்து வந்ததும் வயதான பெற்றோர்களை வயோதிப வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.அதற்கு காரணம் பெற்றோர்கள் நான் தான் எல்லாம் செய்தேன் என்ற ஒரு அகங்காரம் அந்த காலகட்டத்தில் மறைந்து போகிறது. வேலை இல்லை, மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை, அல்லது கணவன் இல்லை, ஒன்றுமே இல்லை என்று ஒரு காலகட்டம் வரும்போது, இருந்து பிரயோசனமில்லை என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். இதனால் பிரயோசனமற்ற ஒரு கூட்டுக்குள் தள்ளப்படுகிறார்கள்.இதிலே பார்க்கப் போனால் இரண்டு பக்கங்களும் சரியும் இருக்கின்றது பிள்ளைகளும் இருக்கின்றது. இளம் சமுதாயம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் சில விஷயங்களில் வயது முதிர்ந்தவர்கள் தங்களுடைய கருத்துகளை சிறிது பின் வாங்க வேண்டி உள்ளது. இளைஞர்களுக்கு சில சந்தர்ப்பங்களில் முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. இதை நாம் நன்கு புரிந்து கொண்டால் 40 வயது 50 வயதுக்கு பிற்பகுதியில் எங்களுடைய வாழ்வு சுமுகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் என்று ஓஷோ சொல்கிறார்.

பிறப்பும் இறப்பும் முடிவில்லா சுழற்சி என்று சொல்கிறார் ஓஷோ.இயற்கையின் படைப்பில் மனிதன் மட்டுமே வாடி வ தங்குகிறான்.இயற்கைக்கு முதுமை பற்றி எதுவுமே தெரியாது.மரணமில்லா வாழ்க்கை, வாழ்க்கை இல்லாத மரணம் எப்பவுமே நீடிக்க முடியாது இதனை மனிதன் நன்கு உணர்ந்து வாழக் கற்றுக் கொண்டால் முதுமையில் அவன் மிகவும் சந்தோஷமாகவே வாழ்வான்.

மனிதன் நினைக்கின்றான் தான் பெரிய சிந்தனையாளர் என்று, மரங்களிலிருந்தும் மற்றும் ஜீவராசிகளில் இருந்தும் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் என்று, இதுதவறான கருத்து என்றும் இயற்கையுடன் சேர்ந்து வேறுபாடு இன்றி மனிதன் வாழ்வே யானால், அவன் மிகப்பெரிய துன்பங்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வான்.

உங்களுக்கு வயதாகிவிட்டது என்ற நிலையில் அடுத்தவர்களுக்கு தவறான கருத்துக்களை அள்ளி வழங்க கூடாது. சிறந்த அறிவுரைகளை விளங்குங்கள் அதுதான் தொன்மையான ஒரு பயனாளிக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று சொல்கிறார் ஓஷோ.குறுக்கும் நெடுக்கும் என்ற தலையங்கத்தின் கீழ் எனக்கு வயதாகிக் கொண்டே போகின்றது நடுத்தர வயது பற்றி கூறமுடியுமா? என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு ஒரு சிறந்த உரையாக விளக்கம் தந்துள்ளார்!.அதை நீங்கள் வாசித்தால் தான் அதனுடைய ஆழம் புரியும். கண்டிப்பாக வாசியுங்கள் அதிலிருந்து நிறைய ஆழமான கருத்துக்களைப் பொறுக்கிக்கொள்ளுங்கள்.

தலைமுறை இடைவெளியை பற்றி ஓஷோ மிக அழகாகச் சொல்லுகிறார். ஆரம்ப காலங்களில் ஒரு குடும்பஸ்தன் என்ன வேலை செய்கிறானோ அதே வேலையை தொடர்ந்து பிள்ளைகளும் செய்யத் துவங்குகிறார்கள். பெற்றோர்களின் சொற்களை பிள்ளைகள் உள் வாங்கினார்கள் அந்த காலத்தில், ஆனால் தற்காலத்தில் அவை நேர் எதிராக இருக்கின்றன. விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக தற்போதைய காலத்தில் பிள்ளைகள் நிறைய படித்து இருக்கிறார். அவர்களுடைய சொற்களையும் முதியோர்களாகிய நாங்களும் உள்வாங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். இதற்கு பல உதாரணங்களை ஓஷோ குறிப்பிடுகிறார். உண்மையும் அதுதான்.

எல்லோருமே தனியாக இருப்பதில் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள். அதற்காகவே அவர்கள் ஒரு கூட்டத்தை சேர்க்கிறார்கள். அதாவது திருமணமாகி கணவன், மனைவி, பின் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.அதன் அடுத்தகட்டமாக நண்பர்கள், பல தரப்பட்ட சமூகங்களை உருவாக்கிய பின், இப்படி கூட்டத்தில் கலந்திருப்பதும், அடிப்படையில் தனிமையையும் கவலையையும் மறந்துவிட முடியும் என்பதால்தான், ஆனால் அப்படி மறப்பதில் யாருமே வெற்றி பெறுவதில்லை இதுதான் இயற்கை. ஒன்றை கைவிட உங்களால் முயற்சிக்க முடியும், அது மறுபடியும் மறுபடியும் உங்களை பற்றிக்கொள்ளும். தனியாக இருப்பது என்பது ஒரு இடைவெளி, ஏதோ ஒன்று நழுவிக் கொண்டிருக்கிறது, அந்த இடைவெளியை நிரப்ப தேவைப்படுகிறது தனிமை. ஆனால் உங்களுக்கு வயதும், இடைவெளியும் பெரிதாகிக் கொண்டே போகிறது.

தனியாக இருப்பது என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். தனியாக இருப்பது ஒரு நோய். ஏகாந்தம் என்பது பூரண ஆரோக்கியம். இந்த ஏகாந்தம் பற்றி ஓஷோ மிக சிறப்பாக விளக்கியுள்ளார். வயது வந்த காலங்களில் நீங்கள் அந்த இடத்தை கண்டுபிடித்து அதனை அனுபவியுங்கள் என்கிறார் ஓஷோ. கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாசியுங்கள் பயனடையுங்கள்.

இறுதியாக ஓஷோ தியானத்தைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் கூறுகிறார். மரணம் என்று வந்தால் மிகப் பெரிய பலசாலி கூட சுருங்கி நொடிந்து போவதாக ஒரு சிறுகதை மூலம் எங்களுக்கு புரியும்படி சொல்கிறார்.

நல்ல அருமையான புத்தகம். தமிழ் மொழிபெயர்ப்பாளர் மிக நேர்த்தியாக இதனை எழுதியுள்ளார். அவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

@பொன் விஜி – சுவிஸ்






Post a Comment

Previous Post Next Post