.

உலகில் அதிகரித்து வரும் வெப்பம் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும்.அதனால் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் ஆண்டிற்கு 9 மில்லியன் பேர் கூடுதலாக இறந்து போகலாம் என்று உலக சுகா தார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், கடந்த 120,000 ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டின் ஜூலை மாதமே உலகின் மிகவும் வெப்பமான மாதமாக பதிவா கியுள்ளதுடன், கடத்த ஜூலை 6 ஆம் திகதி உலகின் சராசரி வெப்பநிலை 17.23 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு அதிகரித்து அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.

உலகின் சராசரி வெப்ப நிலையை 16 பாகை செல்கியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச் சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பதிலை 16.92 பாகை செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது.அதுதான் உலகின் மிக அதிக வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டும் இருநதது, ஆனால் அதை மிஞ்சும் வகையில் கடத்த ஜூலை 3 ஆம் திகதி 17.01 பாகை செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து ஜூலை 4 ஆம் திகதி 17.18 பாகை செல்சியஸ் ஆக பதிவானது. அடுத்து ஜூலை 6 ஆம் திகதி 17.23 பாகை செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவானது. இப்படி கடந்த ஜூலை மாதத்தில் உலகின் வெப்பநிலை புதிய உச்சங்களை எட்டியது.

இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் தீவிர வெப்ப ஆலோசகர் ஜோன் தேர்ன் கூறுகையில், வெப்ப அலைகள் தொடர்ந்து தீவிரமடையும்.மேலும் கடுமையான வெப்ப அலைகளுக்கு உலகம் தயாராக வேண்டும்.வெப்ப அலைகள் மிகவும் ஆபத்தான இயற்கை ஆபத்துகளில் ஒன்றாகும்.ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் வெப்பம் தொடர்பான காரணங்களால் இறக்கின்றனர். வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள் தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையொன்றில் ‘பருவநிலை மாற்றம் உலகிள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பருவ நிலை மாற்றம் என்பது குறிப்பிட்ட நாடுகளை மட்டும் பாதிக்காமல் உலகெங்கும் பல இடங்களை மிக மோசமாகப் பாதிக்கிறது.இதனால் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விடவும் வெப்பம் மிகுந்த ஒன்றாக மாறி வருகிறது.இதற்கிடையே இந்த ஜூலை மாதம் வெப்பம் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் 'தொட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.


கடந்த ஜூலை மாதம் உலகின் பல பகுதிகவிலும் வெப்பம் உச்சம் தொட்டுள்ளது.கிறீஸ் நாட்டின் தீவான ரோட்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீ. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட வெப்ப அலை என மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக வடமேற்கு சீனாவில் வெப்பம் 52.2 டிகிரி செல்சியஸ் (126 F) வரை சென்றது அந்தளவுக்கு வெட்டம் மிக மோசமானதாகவே இருந்தது வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதிக் குள்ளாகியுள்ளனர்.பலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இறப்புக்களும் அதிகரித்து வருகின்றன. வழக்கமாக ஜூலை மாதம் உலகின் சராசரி வெப்பம் 16 டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால், இந்தாண்டு அது 17.23 பாகை செல்சியஸாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியது முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது.கடுமையான வெப்பத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.நாசாவின் வோஷிங்டன் தலைமையகத்தில் நாசா நிர்வாகி பில் நெல்சன் மற்றும் தலைமை விஞ்ஞானியும் மூத்த காலநிலை ஆலோசகருமான கேட் கொல்வின் உள்ளிட்ட காலநிலை நிபுணர்கள் மற்றும் பிற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மூத்த காலநிலை விஞ்ஞாளி கவின் ஷ்மிட் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார், "எல் நினோ ஒரு சிறிய பங்கு வகித்தாலும்.நாம் பார்ப்பது ஒட்டு மொத்த வெப்பத்தையே, எல்லா இடங்களிலும்,குறிப்பாக கடல்களின் வெப்பம் வெகுவாக அதிகரித்துள்ளது. பல மாதங்களாக, வெப்ப மண் உலத்திற்கு வெளியேயும் கூட, கடல் மேற்பரப்பு வெப்ப நிலை முந்திய பதிவுகளை முறியடித்து வருகிறது" என கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

“நமது கிரகத்தில் இதுபோன்ற வெப்பமான சூழலைப் பார்க்க நாம் குறைந்தது பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டி இருக்கும்.பனி யுகத்தில் வெப்பம் குறைந்த நிலையில்,அதன் பிறகு இந்தளவுக்கு வெப்பம் அதிகரிப்பது இதுவே முதல்முறை.கடத்த 120,000 ஆண்டுகளில் பூமி இல்வளவு சூடாக இருந் ததில்லை.இப்போது எல் நினோ ஏற்பட்டுள்ள நிலையில்,அடுத்த சில ஆண்டுகள் வெப்பம் மேலும் அதிகரிக்கும் அதன்படி பார்த்தால் 2024ஆம் ஆண்டு இதுவரை பதிவானதில் மிகவும் வெப்பமான ஒரு ஆண்டாக இருக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பா நாடுகளில் வெப்ப அலைகள் அதிகபடியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.உலகம் முழுவதும் வெப்ப அலைகள் குறித்தான விஷயம் பேசு பொருளாகியுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் அதிகப்படியான வெப்ப அலைகள் மற்றும் காலநிலை மாற்றங்களை நினைவில் வைத்துக் கொண் டாவது,வளிமண்டலத்தில் தொடர்ந்து அதிகப்படியான கார்பன் டை ஒக்ஸைடை வெளியேற்றும் நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஜெனீவாவில் செய்தியாளர்கவிடம் பேசிய உலக வானிலை அமைப்பின் தலைவர் பெட்டெரி தலஸ், 'காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகளின் அனைத்து தணிப்பு முயற்சிகளையும் தாண்டி, உலகில் கடுமையான வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த வெப்ப அலைகளின் எதிர் மறைமையான போக்கு 2026 வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற வெப்ப அலைகள் ஏற்படுவது எதிர் காலத்தில் மிகவும் சாதாரண இந்த வெப்ப உமிழ்வுகள் அதிகரிப்பதை நாம் தடுக்கா விட்டால் 2026-ல் இதன் உச்சத்தை காண்போம். குறிப்பாக ஆசிய நாடுகளில் தான் இந்த வெப்ப உமிழ்வு அதிகமாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

“இன்டர் கவர்மென்டல் பனல் ஒன் கிளைமேட் சேஞ்ச்' (ஐபிசிசி) அமைப்பின் அறிக்கை ஒன்று வெளியானது .234 விஞ்ஞானிகள் கொண்ட குழு தயாரித் திருக்கும் அந்தப் புதிய அறிக்கை உலகம் ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டி ருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. உலகின் பல பாகங்களிலும் எதிர்பாராமலும்,அசாதாரணமாகவும் காட்டுத்தீயும், பிரளயமும் அதிகரிப்பதன் பின்னால் பூமி வெப்பம் அடைதலும், தட்பவெப்பநிலை மாற்றமும் இருப்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டிருக்கும் ஐபிசிசி ஏழு வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற தட்ப வெப்பநிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்து சமர்ப் பிக்கிறது.மனிதர்களின் செயல்பாடுகளின் மூலம் உலகத்தின் வெப்ப நிலை அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாக அதிகரித்த மழை,புயல்,காற்று, வெள்ளம் என்று மிகப்பெரிய பேராபத்துகள் நம்மை எதிர் கொள்கின்றன என்பதை சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது.

வெப்ப அதிகரிப்புக்கு காரணம் என்ன ?

வெப்பநிலை அதிகரிப்புக்கு கண்டங்களின் விலகல், எரிமலைகள், கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமி சரிவு இதற்கான சில முக்கிய காரணிகளாக உள்ளன. இது தவிர, பச்சை வீட்டு விளைவினால் பூமியிலிருந்து பிரதிபலிக்கும்
புற ஊதாக் கதிர்களும் அகச் சிவப்புக் கதிர்களும் வளி மண்டலத்தில் உள்ள பச்சை வீட்டு வாயுக்களால் விழுங்கப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பவும் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக பூமி அதிக வெப்பமடைகிறது. முன்பிருந்த தொழிற்சாலை கழிவு நீர்களில் இருந்து தற்கால தொழிற்சாலை கழிவுகளின் தன்மைகள் வேறாக மாறியுள்ளன. இதனால் ஒட்டுமொத்த ஹாலோ கார்பன் என்பவற்றின் அளவு அதிகரித்துள்ளது.இதன் விளைவாக புவி வெப்பமடைதல் ஒரு சதுர மீட்டருக்கு 2.450 சென்டிகிரேட் வெப்பம் என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. கரியமிலவாயு, மீத்தேன், குளோரா புளோரோ கார்பன், ப்ரியான்,ஹாலஜன்ஸ், ஏரோசால் பிரப்பலெட்ஸ் போன்று பலவகையான குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளிவருகின்ற வாயுக்களே இந்த பச்சை வீட்டு விளைவுக்கு காரணமாகின்றன.

தமது அநேக தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவில் புகை வெளியிடப்படுகிறது அப்படி வெளியிடப்படும் புகையில் அதிக அளவில் காபனீர் ஒக்ஸைட் மற்றும் கந்தகடை ஒக்சைட் ஆகியவை உள்ளன. இந்த வாயுக்கள் பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை அழிக்கும் சக்தி படைத்தவை. அதன் விளைவாக சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குகிறது . அதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.

பெருகி வரும் தொழில்மய நடவடிக்கைகளும் அதனால் விளையும் பெருங்க ழிவுகளும் (அனு மற்றும் அனல் மின் திட்டங்கள், துறைமுகங்கள், சுரங்க நடவடிக்கைகள், உரக்கழிவுகளை அதிகரிக்கும் விவசாயத் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள், நகர் மயமாதலால் விளையும் கழிவுகள் போன்றவை) நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருள் களைப் பயன்படுத்துவது அதிக நிலத்திற்காக மரங்களை அதிகமாக வெட்டிப் போடுவது, மக்கிப் போகாத கழிவுப் பொருள்களின் (பிளாஸ்டிக்) பெருக்கம், விவசாயத்திற்காக உரங்கள் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துதல் என்பதன் விளைவாகவும் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.

 ஏற்படப் போகும் பாதிப்புக்கள்

கடல் வெப்பமடைந்து கடல் நீர்மட்டம் உயரும்; பனிமலைகள் உருகி மேலும் கடல் மட்டம் உயரும். இதனால் 21 ஆம் நூற்றாண்டிற்குள் கடல் மட்டம் 9 செ.மீ.இலிருந்து 88 சென்டி மீட்டருக்கு உயரும் என்பது ஆய்வாளர்கள் கருத்து பருவ காலங்கள் மாறலாம். வெப்பம் அதிகரிப்பதால் நீராவி அதிகரித்து மழை அதிகரிக்கலாம். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் இயற்கை சீற்றங்கள், புயல், சூறாவளி ஆகியன பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கலாம்.உலகின் பல இடங்கள் பாலைவனங்களாக மாறலாம். பல்வேறு வகையான செடிகொடிகள் மற்றும் விலங்கினங்கள் கூட அழிந்து விடலாம்.பருவகால மாற்றத்தினால் விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.

மலேரியா, டெங்கு காய்ச்சல், மஞ்சள்.போன்ற வெப்ப மண்டல நோய்கள் குளிர் பிரதேசங்களுக்கும், கொலரா.வயிற்றுப் போக்கு போன்ற தண்ணீரால் வரும் நோய்கள் வெப்ப மண்டலங்களுக்கும் இடம் மாறும் பூமியின் வெப்பம் அதிகரித்தால் முதலாவது அண்டார்டிகா பகுதியில் உள்ள பெரும் பனிபாறைகள் உருகும். தற்பொழுதும் பெருமளவில் பனிபாறைகள் உருகி கொண்டு தான் இருக்கின்றன அதன் விளைவாக பெருமளவு தண்ணீர் கடலில்
சேர்ந்து கடலின் நீர் மட்டம் உயரும் கடலின் நீர் மட்டம் உயர்ந்தால் பெரும்பாலான தீவுகள் மாத்திரமல்ல கடலோர கிராமங்கள் கூட காணாமல் போய்விடும்.

பல வகையான காடுகள் குறிப்பாக அலையாத்திக் காடுகள் அழியக்கூடும். இயற்கையான சூழலில் இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வெகுவிரைவில் பாதிக்கப்ப டுகின்றன.வெப்பமாற்றத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்தால், பல்வேறு தாவர இனங்களும், விலங்கினங்களும் அழியக் கூடிய நிலை ஏற்படலாம்.

‘நாசா'வின் கருத்துப்படி பனிப் பிரதேசங்களில்,பனிமலைகளும், பனிப்பாறைகளும் பத்தாண்டுகளுக்கு 9 சதவிகிதம் எனும் அடிப்படையில் உருகி வருகின்றன. இதனால் 40 சத விகித பனிப்பாறைகள் குறைத்துள்ளன. மேலும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்ட கரியமில வாயுவில் 50 வீதம் கடல் நீரில் கரைந்து, கடல் நீரின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் பவளப் பாறைகள் பெருமளவில் குறைந்தபடி உள்ளன. பல கடல் உயிரிகளும் அழிந்த வண்ணம் உள்ளன.அதிகரித்து வரும் மக்கட் தொகைப் உணவுக்கான தேவையை அதிகரிக்கிறது.இதனால் இயறடகை வளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.வெப்பநிலை அதிகரிப்பு,வெப்பநிலை மற்றும் மழை ஆகியவற்றில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம், விவசாயத்தை நேரடியாக பாதிக்கிறது. மண் வளம், பூச்சிகள் மற்றும் நோய்களின் மாற்றங்கள் மூலமாக மறைமுகமாக விவசாயத்தை பாதிக்கிறது தானிய வகைகளில் விளைச்சல் வீழ்ச்சியடையும் மிகக் கடுமையான வெப்பம், மிக அதிகமான மழை, வெள்ளம்,வறட்சி முதலிய அதீதமான சீதோஷ்ண நிலை களும் விளைபொருள்களின் உற்பத்தியைப் பாதிக்கின்றன.

வெப்ப நிலை மாற்றத்தால் நுளம்பு பூச்சிகள்,காற்றில் பரவும் நோய்கள் போன்றவையும் அதிகரிக்கும். இவை மட்டுமே ஆண்டிற்கு 10,00000 பேரைக் கொல்லக்கூடும். ஆபிரிக்க ஆசிய நாடுகள், ஏழை நாடுகள், சிறு தீவுகள் போன்றவை.பெரிய அளவில் பாதிக்கப்படும்.பூமி வெப்பமயமாதல் மனிதகுல ஆரோக்கியத்தை நேரடியாகபாதித்து, வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகும். உடலில் நீரிழப்பு, தொற்று தோய் பரவல்.ஊட்டச் சத்துக் குறைபாடு, பொது மருத்துவம் சார்ந்த உள்கட்டமைப்பை பாதித்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

பாதிப்புக்களை தடுக்கும் வழிகள்

இத்தகைய மாற்றங்களையும், பேரழிவுகளையும் கண்டு நாம் அஞ்சினால், நமது இளம் மண்ணில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால் நடைமுறையில் நாம் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும்.புவி வெப்பமடைதலை முழுவதுமாகக் குறைக்க முடியாவிட்டாலும் நம்மால் இயன்றவரை அதன் வேகத்தையும் அளவையுமாவது கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு தனி மனிதர்களின் தனிப்பட்ட பல்வேறு பயன்பாடுகளை தவிர்த்தல் வேண்டும்.

அவசர அவசிய தேவைகளுக்கே தனியார் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். பிற நேரங்களில் பொது போக்குவரத்து வாகளங்களை நாடுவது அதிக அளவில் வெளியேறும் காபனீர் ஒக்சைட், நைட்ரஸ் ஒக்சைட் ஆகியவற்றை குறைக்க வழி வகை செய்கிறது.

எரிவாயுவிற்கும் மின்சாரத்திற்கும் பதிலாக சூரியனில் இருந்து கிடைக்கும் சூரியச் சக்தி, காற்றுசக்தி, நீர் சக்தி போன்று பலவற்றை நாம் பயன்படுத்தலாம். மேலும் கிராமப்புறங்களில் மிகுதியாகக் கிடைக்கும் சாண எரிவாயு மற்றும் அழுகிய பொருள்களிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை நாம் பயன்படுத்தலாம்.

பச்சை வீட்டு விளைவினை ஏற்படுத்தக் கூடிய வாயுக்களை வெளியேற்றும் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல் வேண்டும்.புதைவடிவ எரிபொருள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். படிம எரிபொருட்களின் பயன்பாட்டை குறைத்தால் உலகம் முழுவதும் வெப்பம் அதிகரிப்பதை தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து ள்ளனர்.இவை பற்றிய விழிப்புணர்வினை உலகின் பட்டி தொட்டிகளுக்கும் சென்றடைய நாம் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

உலக தட்பவெப்ப நிலைகளில் மனிதன் அசைக்க முடியாத தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறான் என்பது வெப்பநிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்து, தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மனிதனும் மனிதச் செயல்களும் காரணமாகிவிட்டன என்பதே உறுதியான உண்மை. தொழில் புரட்சிக்குப் பிறகு மனித இனம் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற எரிபொருள்களை மிக அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர்தான் பூமிப்பந்தின் வெப்பமயமாதல் ஆரம்பித்தது.

உலகில் வெப்பம் அதிகரிப்பது தொடர்பான ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் அதன் அறிக்கைகளும் வெறும் கற்பனைகள் அல்ல, உண்மை நிலை, அதனடிப்படையில் செயல்பட வேண்டிய கடமை ஒவ்வொரு நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் உண்டு. உலக நாடுகளின் இன்றைய ஆட்சியாளர்களால்தான் பூமியைக் காப்பாற்ற முடியும். ஏனென்றால். அடுத்த பத்து ஆண்டுகளில்  அவர்கள் செய்யப்போகிற அல்லது செய்யாமல் விடுகிற செயல்பாடுகளின் அடிப்படையில்தான் வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை மட்டுமன்றி இந்தப் பூமிப் பந்தின் ஆயுளும் தீர்மானிக்கப்படப் போகிறது.






Post a Comment

Previous Post Next Post