ஒருவரின் முகத்தை ஒரு வீடியோவில் வரும் மற்றொரு நபரின் முகத்தோடு பொருத்தும் தொழில்நுட்பம்தான் ‘Deep-fake'. அதில் தற்போது வளர்ந்துவரும் AI தொழில்நுட்பத்தையும் இணைத்துத்தான் தத்ரூபமாக ஒருவரின் முகத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்.வேறொரு நபராகக் கூட மாற்றிவிடலாம்.உதட்டு அசைவில் சிறு பிசகோ செயற்கைத் தன்மையோ கூட இல்லாமல் செய்யலாம்.
Al Deepfake என்றால் என்ன?
கடந்த பத்து வருடங்களில் செயற்கை நுண்ணறிவு கால் பதிக்காத துறைகளே இல்லை. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியின் அடுத்தகட்ட பரிமாணம் தான் இந்த AI Deepfake. இது செயற்கை நுண்ணறிவின் 'Deep Learning' என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டு உருவானது. ஏற்கனவே கொட்டிக் கிடக்கும் தரவுகளை கொண்டு ஒவ்வொன்றையும் எப்படி செய்ய வேண்டும் என கற்றுக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு. எந்த அளவு அதிகமான தரவுகள் இருக்கிறதோ, அந்த அளவு மேம்படும் செயற்கை நுண்ணறிவு.இந்த ‘Deep Learning' முறை பல ஆண்டுகளுக்கு முன்பே கோட்பா ட்டளவில் வந்துவிட்டாலும், இன்று கொட்டிக்கிடக்கும் தரவுகளும், பல மடங்கு மேம்பட்ட கணினித்திறனும் இன்று அது முழுவதுமாக உயிர்ப் பிக்கப்பட்டிருக்கிறது.
ஒருவர் பேசாத ஒன்றை பேசியதாக, நடக்காத ஒன்றை நடந்ததாக இந்த AI Deepfake தத்ரூபமாக உருவாக்க முடியும்.
Al Deepfake-ன் பரிமாணம்...
NVIDIA என்னும் அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிந்த ஃபிலிப் வாங் எனும் மென்பொருள் வடிவமைப்பாளர்தான் Al Deep-fake இணையதளங்களை முதலில் உருவாக்கினார். பின்னர், NVIDIA நிறுவனம் அதை GAN (A Generative Adversarial Network) என்ற அல்காரிதம் மூலம் செயல் படக் கூடிய ஒரு நிரலாக (program) மாற்றியமைத்தது. முன்பு சொன்னது போல, AI Deepfake மென்பொருள்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, தானே கற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன. சமீபத்தில் கூட ஓடிசாவில் அறிமுகப்படுத்தப்பட்ட லிசா எனும் AI செய்தி வாசிப்பாளர் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு பொழுதுபோக்கு, கல்வி, தகவல்தொடர்பு சார்ந்த வீடியோக்களை உருவாக்க இப்போதே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
Al Deepfake எவ்வாறு செயல்படுகிறது..?
இதில் உள்ள GAN அல்காரிதம் இரண்டு பாகங்களாக வேலை செய்கிறது. ஒரு பாகம் ஏராளமான தரவுகளைப் பகுப்பாய்வு செய்து போலி முகங்களை உருவாக்குகிறது.இரண்டாவது பாகம் இவ்வாறு போலியாக உருவாக்கப்பட்ட முகங்களை அவற்றின் அசல் தோற்றத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறது. அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அல்காரிதம் தானாகவே அதை நுண் திருத்தம் செய்து மீண்டும் புதிய முகங்களை உருவாக்கும். இவ்வாறு அசலும் போலியும் 100% பொருந்தும் வரை தொடர்ந்து புதிய போலி முகங்களை உருவாக்கிக் கொண்டும் அதன் பிழைகளைத் திருத்திக் கொண்டும் வரும். காலப்போக்கில் எது பார்க்க அசல் போல இருக்கிறது, எது இல்லை என நாம் தரப்போகும் தரவுகளை வைத்தே அஐ ஈஞு ஞுணீஞூச்டுஞு தாமாகவே கற்றுக்கொண்டு இன்னும் அசலான, பிசிறில்லாத போலி யான முகங்களை ஒரு சில நொடிகளில் உருவாக்கத் தயாராகிவிடும்.
Post a Comment