.

எர்னேஸ்ட் ஹெமிங்வே எழுதிய யாருக்காக இந்ந மணி ஒலிக்கிறது என்னும் புத்தகமானது ஒரு போர்க்கால நாவலாகும்.போர்க்காலங்களில் இராணு வத்தில் சிப்பாய் படும் பாடுகளை ஒரு நாவலாக தொகுத்திருக்கிறார் ஹெமிங்கே.அதாவது ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின் போது அங்கே பணிபுரிந்த அமெரிக்க போர் வீரனின் கதையே யாருக்காக இந்த மணி ஒலிக் கிறது என்ற புத்தகமாகும்.

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது 1940 களில் எர்னெஸ்ட் ஹெமிங்கே எழுதிய  மிகப் புகழ் பெற்ற புதினம் ஆகும் இது சர்வதேச படை அணியை சேர்ந்த ராபர்ட் ஜார்டன்  என்கின்ற இடம் அமெரிக்கா இளைஞனின் கதையை சொல்கிறது.இப் படை உள்நாட்டு போரின்போது குடியரசு கெரில்லாக்களுடன் இணைந்து செயல்பட்டது செகோவிய நகரம் மீது அமைந்துள்ள ஒரு பாலத்தை தாக்குதல் நடத்தி அளிக்கக்கூடிய பொறுப்பு அவனிடம் தரப்படுகிறது. ஹெமி ங்கேயின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய செப்ரே மெர்ஸ் இந்த நாவலை பற்றி குறிப்பிடுகிறார்.


எர்னேஸ்ட் ஹெமிங்வே அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவரது தனித்துவமான எழுத்து நடை மிகக் குறைந்த சொற்பிரயோக்காரர் என்பன போன்றவை 20-ம் நூற்றாண்டில் புனைக்கதை இலக்கியத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.அதேபோல் இவரது சிலிர்ப்பூட்டக் கூடிய சாகச வாழ்வும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது பெரும்பாலான இலக்கிய பங்களிப்புகள் 1920 களில் மத்தியிலிருந்து 1950 களின் மத்திவரை எழுதப்பட்டதாகும்.கதாபாத்திரங்களின் தனித்துவமான கட்டமைப்பு வாசகர்களால் பிரித்து விரும்பப்பட்டதே அவரது புனைவுகளின் வெற்றிக்கு காரணம்.அவரது பெரும்பாலான எழுத்துக்கள் அமெரிக்க இலக்கிய பரப்பில் செவ்விலக்கிய தகுதி பெற்றவையாகும். ஏழு புதினங்களும் ஆறு சிறுகதை தொகுப்புகளும் இரண்டு புனைவற்ற புத்தகங்களையும் தனது வாழ்நாளில் ஹெமிங்வே புதுப்பித்துள்ளார்.கடலும் கிழவனும் நாவலுக்காக இவருக்கு 1953 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசும் 1954 இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டன.1961 இல் தற்கொலை செய்து கொண்டார்.

இதுவரை போரைப்பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச்சிறந்தது இந்தப் புத்தகம்தான்.எந்த வகையில் பார்த்தலும் இது ஒரு சிறந்த புத்தகம்தான். போரைப்  போன்ற ஒரு அதீத சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு சிந்திப்பார்கள் நடந்து கொள்வார்கள் என்பதைக் குறித்து ஆழ்ந்த நேரடித் தகவல்களை இந்தப் புத்தகம் தருகிறது.சண்டை,காதல் வீரம்,சோகம்,புதிர் என்ற அனைத்தம் இதில் நிரம்பியுள்ளது.சுருங்கச் சொல்வதெனில் இது சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

1936-1939 ஸ்பெயினில் நடந்த உள்நாட்டு யுத்தத்தை மையமாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது.அமெரிக்க வெடி மருந்து நிபுணரான யோர்டான் சிறு கெரில்லா படையுன் வரப்போகும் தாக்குதலை சமாளிக்க எதிரிகளின் எல்லைக்கு அனுப்பப்படுகிறார்.தான் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை கெரில்லாப் படைக்கு விளக்கிய அவர் அவர்களை தக்கவாறு பயிற்சி அளித்து தனது பணியை நான்குக்கும் குறைவான நாட்களில் முடிக்கிறார்.

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது? என்பது கதாபாத்திரம் ஜோசெ ஆன்டோனியோ பின்டோவின் வார்த்தைகளில் இருந்து வருகிறது. பின்டோ ஒரு கத்தோலிக்க பாதிரியார், அவர் தேசியவாதிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கார்னிக்கு சொல்கிறார், "யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது? அது உன்னுடையது. அது என்னுடையது. அது ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமானது."

இந்த வார்த்தைகள் ஒரு தனிநபரின் போராட்டம் மற்ற அனைவருக்கும் பொருந்தும் என்று நம்புவதை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் சுதந்திரம் மற்றும் நீதிக்காக போராட வேண்டும், ஏனென்றால் இந்த இலக்குகள் அனைவருக்கும் பொருந்தும். புதினம், போர் மற்றும் சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த ஒரு கதை. இது சுதந்திரத்திற்காக போராடுவது எவ்வளவு முக்கியம் என்பதையும், எந்த இழப்பும் மதிப்பு மிக்கது என்பதையும் காட்டுகிறது.

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது? இது ஒரு காலத்திற்கும் மேலாக பிரபலமான நாவல். இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் பல முறை திரைப்படமாக தழுவி வெளியிடப்பட்டுள்ளது.இது சுதந்திரம் மற்றும் நீதிக்கான போராட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான புதினமாகும்.

இந்த புத்தகத்தின் கதையானது ஆரம்பத்தில் இருந்தே மெதுவாக நகர்கிறது சில இடங்களில் பொதுவாகவே எமக்கு அலுப்பு தட்டுகிறது அத்தோடு பொறுமையை மிகவும் சோதிக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட எழுத்துப்பாணி இருக்கும் அதுபோல ஹெமிங்வேயின் எழுத்து பாணியானது டான் பிரவுனின் எடுத்துக்களைப் போல் விறுவிறுப்பாக இல்லாவிடினும் அந்த காலகட்டத்திற்கு உரிய எழுத்து நடையில் பயணிக்கிறது.

பாலத்தை தகர்க்க வரும் ஜார்டன் அங்கிருக்கும் புரட்சி குழுவில் இணைகிறான் இந்த புரட்சி குழுவில் இருக்கும் மீடியா என்பவள் மீது காதல் கொள்கிறான்.அவன் அங்கிருக்கும் நாட்களில் மேரியாவுடனான காதல் நீடிக்கிறது ஆனாலும் அவனுக்கு தான் இறக்கப் போகிறேன் என உள்ளுணர்வு சொல்கிறது.அதையேதான் அங்கிருக்கும் பிலார் என்னும் சாத்திரக்காரியும் சொல்கிறாள்.ஆனால் இருவரும் காதலிக்கிறார்கள்.மேரியாவிற்கு அவனுடன் அமெரிக்கா சென்று வாழ வேண்டும் என்று கனவு காண்கிறாள்.அவளுடைய கனவு நனவாகியதா..?இல்லையா? பாலம் தகர்க்கப்பட்டதா..? இல்லையா?ஜார்டன் என்ன ஆனான்..?மேரியா என்ன ஆனாள்..?இராணுவப் புரட்சி வெற்றி பெற்றதா என்பதை மெதுவான கதை நகர்த்தல்களுடன் சொல்லியிருக்கிறார்  ஹெமிங்வே.

தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஜார்டன் வெளிப்படுத்தும் இடங்களிலும் கொரில்லா படையின் முக்கிய அங்கத்தவர்களினது உணர்வுகள் வெளிப்படும் இடங்களிலும் ஹெமிங்வே தனது மேதமையையும் எழுத்துப் புலமையையும் வெளிப்படுத்தி சிறப்பான புனைவைக் கொடுத்துள்ளார்.நாவலின் அனைத்து உரையாடல்களும் ஆங்கிலத்தில் எழுத ப்பட்டிருந்தாலும் ஸ்பானிசிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதைப் போல் தோன்றுவதால் ஆங்கங்கே உடைபட்டதாகத் தோன்றுவது ஒரு வகையில் நாவலுக்கு நம்பகத் தன்மையைக் கொடுக்கிறது.நாவலில் வரும் கடந்தகால காட்சிகளின் வாயிலாக ஜார்டனின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் கெரில்லாப் படையின் சிலரது வரலாற்றையும் போரின் பயங்கரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.போரின் கொடூரமான விரும்பத்தகாத சில காட்சிகள் நாவலில் இடம்பெறுகிறன என்றாலும் அவை நடக்கும் இடம் பற்றி எதுவும் விரிவாகக் குறிப்பிடவில்லை.

போர் என்பது நீண்ட காலம் நடைபெறுவது அப்படியொரு உள்நாட்டுப் போரின் மிகச் சிறியவொரு சம்பவத்தை எடுத்தே ஹெமிங்வே இந்த நாவலை எழுதியிருக்கிறார்.பாலம் தகர்ப்பு என்பது இராணுவ நடவடிக்கை முக்கிய மானதாகும்.பாலத்தை தகர்த்தால்தான் இராணுவ முன்னே ற்றங்களை நிறுத்த முடியும் என்ற கட்டம்.அதாவது தாக்குதல்களைத் தொடங்க முன் பாலத்தை ஜார்டன் தகர்த்திருக்க வேண்டும் அப்போதுதான் எதிரணியின் துருப்பு க்களிற்கு இராணுவ விநியோகம் படை நகர்த்தல் என்பன கடினமாகும் கெரில்லாக்கள் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை.ஆகவே பாலம் தகர்ப்பு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

போர்க்கால நாவல் ஒன்றை எவ்வாறு எழுத வேண்டும் என்று இந்த நாவலின் மூலமாக கற்றுத் தந்திருக்கிறார் ஹெமிங்வே.போர்க்கால நாவலின் பரிணாம ங்களையும் எமக்குச் சொல்கிறது இந்த நாவல்.நாவல் வாசிக்கும்போது அடுத்தது என்ன என்ன என்று எமக்குள் கேள்வி எழுவது இயல்புதான்.அந்த வகையில் இந்த நாவலிலும் அத்தகைய உணர்வு ஏற்படுகிறது.ஆனாலும் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்துதான் செல்கிறது இந்த நாவல்.

நாவலில் வரும் அனைத்துக் கதாப்பாத்திரங்களும் உயிர்த் துடிப்புடன் நாவலின் பக்கங்களில் வலம் வருகிறார்கள்.ஒவ்வொரு பாத்திரமும் அதனது நிறை குறைகளோடு முக்கியத்துவம் கொடுத்து சித்தரிக்கப்பட்டிருக்கி றார்கள்.ஜார்டன் என்னும் கதாப்பாத்திரம் நாவல் முழுக்க வருகிறது அதுதான் இந்தக் கதையின் பிரதான கதாப்பாத்திரம்.ஏனைய கதாப்பாத்திரங்களாக மேரியா ஜார்டனின் காதலியாக வருகிறாள்.உறுதியான பெண்ணாக பிலார் என்னும் கதாப்பாத்திரம் வருகிறது.பிலார் படையில் அனைவரையும் இணைக்கும் சங்கிலியாக இருக்கிறாள்.அவள் அழகற்றவளாக இருந்தாலும் அறிவாளியாகவும் புத்திசாலியாகவும் இருந்து நாவலின் மிக சக்தி வாய்ந்த பாத்திரமாகத் திகழ்கிறாள்.புரட்சிக் குழுவின் தலைவனாக பாப்லோ என்ற கதாப்பாத்திரம் திருப்புமுனையாக வருகிறது.அதாவது எதிர்பாராத நேரத்தில் துரோகமும் இளைக்கிறது நல்லதும் செய்கிறது.ஏனைய கதாப்பா த்திரங்களாக ஜிப்ஸி, அகஸ்டின், ஸோர்டோ, ஆன்ஸெல்மோ, அகஸ்டின் பிரிமிடியோ ஆகிய கதாப்பாத்திரங்களும் தேவையான போது வந்து போகிறது இன்னமும் சில கதாப்பாத்திரங்களும் அவ்வப்போது கதைக்குத் தேவையான போது வந்து போகிறன.

மொத்தத்தில் யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது என்ற நாவலானது ஒவ்வொரு பதின் பருவத்தினரும் அதற்கு மேற்பட்டோரும் படிக்க வேண்டிய புத்தகம். போர் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை மட்டும் சொல்லவில்லை, போரின் போது சில பெண்ணும் ஆணும் எவ்வாறு தங்களைப் போரோடு பிணைத்துக் கொள்கிறார்கள் என்பதை விபரிப்பதன் மூலம் மனித குலத்தின் இயல்பை ஆராய்கிறது.வாசிப்போம்.





Post a Comment

Previous Post Next Post