ஒரு கிராமத்தில் வாணி, வர்மா என்ற பெயர்கொண்ட தம்பதி மிகவும் ஒற்றுமையாக வசித்து வந்தனர். ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஆழ்ந்த அன்பு பூண்டிருந்த அந்த தம்பதியை மெச்சாதவர்களே அந்த கிராமத்தில் இல்லை.
ஒருநாள் இரவு கன மழை பெய்து கொண்டிருக்கையில், வர்மாவின் வீட்டு வாயிற்கதவை யாரோ தட்டினார்கள். தகவைத் திறந்ததும், மழையில் நனைந்து கொண்டிருந்த ஒரு தம்பதி தென்பட்டனர்.
''நகரத்திற்குச் சென்று கொண்டு இருந்த சமயம் திடீரென மழை பிடித்துக் கொண்டது. உங்கள் வீட்டில் இன்றிரவு தங்க இடம் அளிப்பீர்களா?” என்று அவர்கள் கேட்டனர்.
இயற்கையிலேயே மிக நல்ல குணம் படைத்த வாணி அவர்களை வரவேற்றாள். அவர்களுக்கு உணவு தந்துஉபசரித்து, அவர்கள் தூங்குவதற்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள். சாப்பிட்ட பின் மிகக் குறைவான உணவே மிஞ்சியிருந்தது.மழையில் விறகு நனைந்து விட்டதால்,மீண்டும் சமையல் செய்ய முடியாதென அறிந்த வாணி, தன் கணவனை நோக்கி சாப்பிடச் சொன்னாள். ஆனால் வர்மா,அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பதை பகிர்ந்து கொள்வோம் என்று சொல்லி விட்டு இருவரும் சேர்ந்து உண்டு விட்டு படுக்கச் சென்று விட்டனர்.
மறுநாள் காலை அழுகுரல் கேட்டு,வாணிக்கும் வர்மாவிற்கும் தூக்கி வாரிப் போட்டது. எழுந்து வந்து பார்த்தால் நேற்றிரவு வந்து தங்கிய விருந்தாளிப் பெண்மணிதான் அழுது கொண்டிருந்தாள். அவளிடம் அதற்கான காரணத்தைக் கேட்டனர்.அதற்கு அவள், ''ஐயா! நேற்று உங்கள் மனைவி வாணி உங்களிடம் மிகவும் பிரியத்துடன் நடந்து கொண்டதைப் பார்த்த என் கணவர்,மனைவியென்றால் இப்படியல்லவா அன்புடன் இருக்க வேண்டும்! நீயும் இருக்கிறாயே பிசாசே!” என்று என்னைத் திட்டினார். பிறகு “உன்னுடன் வாழவேப் பிடிக்கவில்லை” எ ன்று சொல்லி இரவே என்னை விட்டு ஓடி விட்டார்” என்றாள் விசும்பிக் கொண்டே.உடனேவாணி, “பெண்ணே! உன்பெயர் என்ன?என்று கேட்க, அவள்“சந்திரமதி’” என்று சொன்னாள். வாணி தொடர்ந்து, “சந்திரமதி! மனம் கலங்க வேண்டாம்! என் கணவர் உன் புருசனைத் தேடி அழைத்து வருவார். நீ இங்கேயே தங்கலாம்!” என்று சமாதானப் படுத்தினாள். சந்திரமதியும் அதற்கு ஒத்துக் கொண்டு அங்கே தங்கினாள். தினமும் வர்மா அவள் புருஷனைத் தேடியலைந்தும், அவன் அகப்படவில்லை. இவ்வாறு ஒரு மாதம் கழிந்தது.
சந்திரமதி வாணி தம்பதியுடனே தங்கி விட்டாள். அவர்களுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்று கருதி, சமையல் பொறுப்பை சந்திரமதி
தானே எடுத்துக் கொண்டாள். நாளடைவில் வாணி குடும்பத்தில் ஒருத்தி
யாகவே அவள் மாறி விட்டாள்.
அப்படியிருக்கையில் வர்மாவின் இளமைக்கால நண்பனான முரளி ஒருநாள் அங்கு வந்தான். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவன் இவ்வாறு வந்து வர்மாவின் வீட்டில் தங்கிப் போவதுண்டு. இந்த முறை அவர்கள் வீட்டில் சந்திரமதியைக் கண்டதும் வியப்படைந்த முரளி அவள் யாரெனக் கேட்க, வர்மா அவளைப் பற்றிய விவரங்களை எடுத்துரைத்தான்.அன்றிரவு வழக்கப்படி சந்திரமதி
சமையல் செய்து அனைவருக்கும் பரிமாற, உண்ட பின்னர் எல்லாரும் உறங்கச் சென்றனர். வர்மாவும் வாணியும் ஓர் அறையில் உறங்க,சந்திரமதி சமையல் அறை அருகிலேயே உறங்க, முரளி வீட்டிற்கு வெளியில் கட்டில் போட்டு உறங்கினான்.
அன்றிரவு ஏதோ சத்தம் கேட்க,முரளி விழித்துக் கொண்டான். வீட்டுக்குள்ளே சென்று பார்த்தால், சமையல் அறை ஜன்னல் கதவைத் திறந்து வைத்து சந்திரமதி யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். சற்று
நேரத்திற்குப் பிறகு அவள் ஒரு தட்டில் உணவு எடுத்து வைத்துக் கொண்டு கொல்லைப்புறக் கதவைத் திறப்பது தெரிந்தது. சந்திரமதியின் செய்கை
யினால் சந்தேகம் உண்டாக, முரளி ஒளிந்திருந்து பார்த்தான். கொல்லைப் புறத்தில் நின்றிருந்த அந்த ஆள் அவள் கொண்டு வந்த உணவுத் தட்டை வாங்கிக் கொண்டு பின்பு ஆவலுடன் உண்பது தெரிந்தது.
பிறகு அந்த ஆள் சந்திரமதியிடம்,'எத்தனை நாள்தான் இப்படி நடு இரவில் வந்து நான் திருட்டுத்தனமாக சாப்பிடுவது? சீ க்கிரமாக நீ பணப் பெட்டியின் சாவியைக் கைப்பற்று.இருக்கும் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடி விடலாம்!” என்றான்.
அதற்கு சந்திரமதி ' 'கொஞ்சம் பொறுமையாக இருங்கள். பணப் பெட்டி சாவியை எப்படியாவது கண்டு பிடித்து எடுக்கிறேன். பிறகு பணத்தைத்
திருடலாம்” என்றாள் சந்திரமதி.
ஒளிந்திருந்து அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த முரளிக்கு எல்லாம்
புரிந்து விட்டது. கொல்லைப்புறத்தில் நிற்பவன் சந்திரமதியின் கணவன்
என்பதும், அவர்கள் இருவரும் வாணி தம்பதியினரை நம்பவைத்து நாடகமாடி
பணத்தைத் திருடத் திட்டமிட்டுள்ளனர் என்றும் புரிந்தது. 'இந்த திருட்டு
தம்பதியின் சூழ்ச்சியை தந்திரமாக முறியடிக்க வேண்டும்!’ என்று
முரளிக்குத் தோன்றியது. உடனே சத்தம் செய்யாமல் முரளி மீண்டும் வெளியில் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.
மறுநாள் காலை முரளி, வர்மாவிடம் "வர்மா! உங்கள் வீட்டில் ஒரு மோகினிப்
பிசாசு உலவுகிறது. நேற்றிரவு அது சலங்கைகள் கட்டிக் கொண்டு உன்
வீட்டு வாசலில் நடமாடியது. என்னைக் கட்டிலோடு சேர்த்துத் தள்ளி விட்டது!”
என்றான். அதைக் கேட்டு வாணி,வர்மா மட்டுமல்ல, சந்திரமதியும்
அதிர்ச்சி அடைந்தாள். “அடடா! நீங்கள் பயப்பட வேண்டாம்! நான் அந்த
மோகினிப் பிசாசை விரட்டி விடுவேன்!”என்று கூறி சமாதானப்படுத்தினான். பிறகு கடைக்குப் போய் ரகசியமாக ஒரு சலங்கை வாங்கி வந்தான்.
அன்றிரவு முரளி ரகசியமாக வீட்டுக் கொல்லைப்புறம் சென்று கதவைத்
தட்டினான். அவன் எதிர்பார்த்தது போல் சந்திரமதி உணவுத் தட்டுடன்
வெளியே வந்தாள். அதை வாங்கிக் கொண்டு இருளில் மறைந்த முரளி
மீண்டும் வாயிற்புறமாக வீட்டிற்குள் நுழைந்து, சந்திரமதியின் கட்டிலுக்
கருகில் அதை வைத்து விட்டு,அவளுடைய கட் டிலையும் நகர்த்தி
விட்டான். பிறகு சத்தமாக சலங்கையை பல முறை குலுக்கினான்.
தன்னுடைய கணவன்தான் வந்து இருக்கிறான் என்று நினைத்த சந்திரமதி,
உணவுத்தட்டுடன் இருளில் மறைந்தவன் ஏன் இன்னும் தன்னுடன் பேசாமல்
இருக்கிறான் என்று குழப்பம் அடைந்தாள். அந்த நேரம் சலங்கை ஒலி
கேட்டதும், அன்று காலை முரளி குறிப்பிட்ட மோகினிப் பிசாசின் ஞாபகம்
வந்தது. "ஐயோ! பிசாசு!” என்று பயத்துடன் உள்ளே வந்த சந்திரமதியின்
கண்களில் அவள் கட்டி லுக்கு அருகில் உணவுத் தட்டு தென்பட்டது. அவள்
கட்டிலும் இடம் மாறி இருந்தது.
வந்திருப்பது மோகினிப் பிசாசுகள் என்று நினைத்த சந்திரமதி பயத்தில்
‘வீல்’ என்று அ லறினாள். வாணியும்,வர்மாவும் ஓடிவர, முரளியும் ஒன்றுமே
தெரியாதவன்போல் அங்கு வந்து அப்பாவியாக நின்றான்.
அன்று முதல் இரவில் அடிக்கடி சலங்கை ஒலியை முரளி உண்டாக்க,
சந்திரமதி பயந்துபோய் எழுந்திருப்பதையே நிறுத்தி விட்டாள்.
இது நடந்து மூன்று நாள்கள் கழித்து,ஓரிரவு சந்திரமதியின்
கணவன் ரகசிய
மாக கொல்லைப்புறம் செல்வதை முரளி பார்த்தான். உடனே அவனிடம்
சென்று, ''சொந்த மனைவிக்கு துரோகம் நினைக்கலாமா? ” என்று
சொல்ல, அதைக் கேட்டசந்திரமதியின் கணவன் திடுக்கிட்டான்.
"ஐயா, நீங்கள் யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள்?” என்று முரளியைக்
கேட்டான்.
"இதோ, இந்த வீட்டில் இருக்கிறானே வர்மா! அவனைப் பற்றித்தான்”
என்றான் முரளி. தொடர்ந்து,“என்னுடைய சகோதரி வாணியின் புருஷன் இந்த வர்மா. அவன் ஒரு அனாதைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறானாம்.அந்தப் பெண்ணும் சம்மதித்து விட்டாள்.அந்தப் பெண் சந்திரமதி ஒரு துரோகி!'" என்று கூச்சலிட்டான். அதைக் கேட்ட
சந்திரமதியின் கணவனுக்கு பலத்த அதிர்ச்சியும், தன் மனைவி மீது
சந்தேகமும் உண்டாயிற்று.
மறுநாளே அவன் வர்மா வீட்டிற்குள் வந்து, 'நான் செய்த தவறை உணர்ந்து
கொண்டேன். அவளைத் திருப்பி அழைத்துச் செல்கிறேன்” என்று மனைவியுடன் கிளம்பி விட்டான்.
பல நாட்களாய் தங்களுக்கு உதவியாய் இருந்த சந்திரமதி திடீரென வீட்டை விட்டுப் போய் விட்டதால்,வாணி தம்பதி வருத்தப்பட்டனர்."அடப் பைத்தியங்களா! சந்திரமதியும் அவள் கணவனும் உங்களை ஏமாற்றிப்
பணம் திருட நாடகம் போட்டார்கள்!”என்ற முரளி எல்லாவற்றையும் அவர்
களுக்கு விளக்கிக் கூறினான்.
Post a Comment