பூஷணம் கிராமத்திலுள்ள பெரிய விவசாயிகளில் ஒருவன். அவனும், அவனுடைய நான்கு சகோதரர்களும் ஓரே வீட்டில் ஒற்றுமையாக வசித்து வந்தனர். மாலை நேரத்தில் அவர்களுடைய குழந்தைகளும், அயல் வீட்டுக் குழந்தைகளும் சேர்ந்து விளையாடுவது வழக்கம்.
ஒருநாள் மாலை மங்கும் நேரத்தில் பூஷணத்தின் வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. குழந்தைகள் விளையாடுவதை நிறுத்திவிட்டு வந்திருப்பது யார் என்று ஆவலுடன் கவனித்தனர். இதற்குள் பூஷணமும் அவனுடைய கடைசி சகோதரனும் வண்டியிலிருந்து இறங்கிய ஒரு வயதான கிழவியை வரவேற்றனர்.
இப்போது அவளை அடையாளம் கண்டு கொண்ட பூஷணத்தின் வீட்டுக் குழந்தைகள், "பாட்டி வந்து விட்டாள்! பாட்டி வந்து விட்டாள்!!” என்று அவளைச் சூழ்ந்து கொண்டனர். அந்தக் கிழவி பூஷணத்தின் பெரியம்மா சாவித்திரி ஆவாள். பக்கத்து கிராமத்திலிருக்கும் அவளுக்கு தன் பேரப்பிள்ளைகள் மீது மிகவும் பாசம் உண்டு. அவள் சொல்லும் கதைகளை மிகுந்த ஆர்வத்துடன் குழந்தைகள் கேட்பது உண்டு.
இரவு உணவு உண்டவுடன்,எல்லாப் பேரக் குழந்தைகளும் தங்கள் பாட்டியை சுற்றி உட்கார்ந்து கொண்டு கதை கேட்கத் தயாராயினர். பாட்டி பூஷணத்தின் கடைசிக் குழந்தையான கோபியை கவனித்தவள், "கோபி,உன் கையில் ஏன் கட்டு போட்டு இருக்கிறது?” என்று கண்டிப்புடன் கேட்டாள்.
கோபி பதில் சொல்வதற்குள் அவனது தாய், “அம்மா இவன் பள்ளியில் விஷமம் செய்யும் பிள்ளைகளோடு நட்பு வைத்திருக்கிறான். தினமும் ஏதாவது சண்டை உண்டாக அவர்கள் வனை அடித்துக் காயப்படுத்தி விடுறார்கள்” என்றாள்.
அவனை மடியில் உட்கார வைத்துக் கொண்ட பாட்டி, அவனை நோக்கி, “கோபி, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நல்ல பிள்ளைகளை நண்பர்களாகக் கொள்வதுதான் மிகவும் சிறந்தது. அதைப்பற்றி ஒரு
கதை சொல்கிறேன்' என்று
கதை சொல்லத் தொடங்கினாள்.
ராமாபுரம் என்ற கிராமத்தில் பூபதி என்ற தர்மசிந்தனையுள்ள நல்ல மனிதன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு ஸ்ரீதரன் என்று ஒரு பிள்ளை இருந்தான். அவன் தன் அப்பாவைப் போல் மிகவும் தயாள குணம் படைத்தவனாகவும், பண்பு
டையவனாகவும் இருந்தான்.
அதே கிராமத்தில் ராஜன் என்ற ஒரு
விவசாயி இருந்தான். அவனுடைய
பிள்ளை சோமனும் ஸ்ரீதரனும் ஒரே வயதுடையவர்கள். ஆனால் சோமன்,
ஸ்ரீதரனைப் போல் இல்லாமல் விஷமம் செய்பவனாகவும் போக்கிரியாகவும் இருந்தான். படிப்பில் மட்டும் கெட்டிக்காரனாக இருந்தான்.
இரண்டு சிறுவர்களுமே ஒரே பள்ளியில் படித்து வந்தனர். ஸ்ரீதரன் சோமனுடன் மிகவும் பிரியத்துடன் நட்புரிமையோடு பழகினாலும்,சோமன் அவனிடமிருந்து சற்று விலகியே இருந்தான். சில ஆண்டுகளில் இருவருடைய இளநிலை
பள்ளிப்படிப்பும் முடிவடைந்தது.ஸ்ரீதரன் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர அதையறிந்த சோமனின்தகப்பன் ராஜன் ஸ்ரீதரன் போன்ற தங்கமான
பிள்ளையோடு தன் மகன் சேர்ந்திருப்பது நல்லது என்று கருதி தன் மகனையும் அதே பள்ளியில் சேர்த்தான். அந்தப் பள்ளியின் நிர்வாகி அந்த கிராமத்து ஜமீன்தார்.
ஒருநாள் சோமன் அதே பள்ளியில் படித்து வந்த ஜமீன்தாரின் மகன் ராஜா மீது ஒரு கல்லைத் தூக்கி எறிந்தான்.இதனால் அவன் தலையில் இருந்து ரத்தம் வரத் தொடங்கியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனே ஒரு மருத்துவரை வரவழைத்து ராஜாவின் காயத்திற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். பிறகு சுற்றிலுமுள்ள மாணவர்களைப் பார்த்து, “யார் ராஜாவைக் கல்லால் அடித்தவன்?”என்று கையிலுள்ள பிரம்பை வீசிக் கொண்டே கோபத்தில் இரைந்து கத்தியவுடன் சோமன்பயந்து நடுங்கத் தொடங்கினான். இதற்குள் சில மாணவர்கள் சோமனைப் பற்றி புகார் செய்து விட்டனர். அதைக் கேட்டு
தலைமை ஆசிரியர்,
ஆசிரியர், ''சோமன் ஸ்ரீதரனின் நண்பன். கண்டிப்பாக
அவனால் இந்தக் காரியத்தை செய்திருக்க முடியாது” என்றார்.இதைக் கேட்டதும் தன் தவறை எண்ணி சோமன் விக்கி விக்கி அழத் தொடங்கினான்.
அப்போது ராஜா, “ஐயா சோமன் ஸ்ரீதரனுக்கு மட்டுமல்ல, எனக்கும் நண்பன்தான். அவன் இப்படிப்பட்ட காரியம் செய்யமாட்டான்” என்று கூறியதும் சோமனுக்குத் தன் செய்கையைக் குறித்து தன் மீதே வெறுப்பு ஏற்பட்டது. உடனே நேராக தலைமை ஆசிரியரிடம் சென்று "ஐயா, ராஜாவைக்கல்லால் அடித்தது நான்தான். எனக்கு தண்டனை கொடுங்கள்” என்று உண்மையை ஒப்புக் கொண்டான்.
உடனே ஸ்ரீதரனும், ராஜாவும் முன் வந்து, "ஐயா, சோமன் தான் கல்லால்
அடித்தவன் என்று தெரியும்.இருந்தாலும் தன் செயலை நினைத்து அவன் வருந்துவதைக் கண்டு அவன் செய்யவில்லை என்றோம். அவனை
தயவு செய்து மன்னித்து விடுங்கள்”என்றனர். அவர்களது உயர்ந்த குணத்தைக் கண்டு மகிழ்ந்துபோன தலைமை ஆசிரியர் இருவரையும் அவர்கள்
பெருமிதத்துடன் அணைத்துக் கொண்டு சோமனை நோக்கி, "சோமா, உனக்கு இந்த
இரண்டு நல்லிதயம் கொண்டவர்களின் நட்பு கிடைத்திருப்பது நீ
செய்த பாக்கியம்” என்றார்.
இந்த இடத்தில் கதையை நிறுத்திய பாட்டி, 'குழந்தைகளா! நல்லவர்களை நண்பர்களாகக் கொள்வது எவ்வளவு சிறந்தது என்று இப்போது புரிந்து கொண்டீர்களா?” என்றாள்.
"ஆம், ஆம், புரிந்தது. இனிமேல் நாங்களும் நல்ல பிள்ளைகளையே
எங்கள் நண்பர்கள் ஆக்கிக் கொள்வோம்” என்றனர் அனைவரும்.
Post a Comment