உலக வரலாற்றில் எந்தவொரு ஓவியரோ சிற்பக் கலைஞரோ தனது ஆயுட் காலத்தில் பிக்காஸோ அடைந்தளவு புகழைப் பெற்றதே இல்லை. எதிர்கா லத்திலும் அப்படி ஒரு நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது.
பெப்லோ ரூயிஸ் பிக்காஸோ 1881ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி ஸ்பெயினில் உள்ள மலகா என்ற ஊரில் பிறந்தார். இக்குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது.
ஆரம்பத்தில் அவர் தனது தந்தையின் பெயரான ரூயிஸ் என்பதையும் தாயின் கன்னிப் பெயரான பிக்காஸோ என்பதையும் சேர்த்தே தனது ஓவியங்களுக்கு கையொப்பமிட்டார். எனினும் 1901ஆம் ஆண்டின் பின்னர் தந்தையின் பெயரை கைவிட்டு பிக்காஸோ என்பதை மாத்திரம் பயன்படுத்தி கையொ ப்பமிட்டார்.
அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவி யங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார்.
1900 முதல் 1902 வரை மூன்று தடவைகள் பாரிஸ் நகருக்கு விஜயம் செய்த பிக்காஸோ இறுதியில் 1904ஆம் ஆண்டு பாரிஸ் நகரிலேயே குடியேறினார்.
இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நில நிறச்சாயத்தை கொண்டவையாகக் காணப்பட்டன.கலைக் கூத்தாடிகள், விலைமாதுக்கள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்ககப்பட்டன.
ஒல்கா கொக்லோவா என்ற நடனமாதுவை சந்தித்து மணம் புரிந்துகொண்டார்.
இவர் வரைந்த ஓவியங்களுள் 1937இல் வரையப்பட்ட "குவர்னிகா" என்ற பிரம்மாண்டமான திகதி ஸ்பெய்னின் பாஸ்க் பிராந்தியத்திலுள்ள ஆக்கம் குறிப்பிடத்தக்கது. 1937 ஏப்ரல் 26 ஆம் குவர்னிகா என்ற நகரை ஸ்பெயின் சர்வாதிகாரி பிரான்ஸிஸ்கோ பிராங்கோவின் படைகள் குண்டு வீசித் தாக்கிய போது ஏற்பட்ட அழிவுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த நவீன பாணி ஓவியம் வரையப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கலைப்படைப்பாக குவர்னிகா காணப்படுகிறது.
ஓவியங்களை மட்டுமன்றி வெண்கலம், உருக்கு, பீங்கான் போன்ற பதார்த்தங்களால் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களையும் அவர் வடிவமைத்தார். 1962 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் இவருக்கு லெனின் சமாதானப் பரிசை வழங்கி கௌரவித்தது. 1964 இல் 18.3 மீற்றர்கள் உயரமுள்ள உருக்கினாலான சிற்பமொன்றை சிக்காகோ நகரில் நிர்மா ணித்தார். இவரது ஆக்கங்களில் 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள்,12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் என்பன அடங்கும். இவை பிரான்ஸின் பரிஸ் அரும் பெருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பிக்காஸோ தனது 91ஆவது வயதில் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் திகதி பிரான்ஸில் இறந்தார்.
Post a Comment