.

தற்பொழுது நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் பற்றி எல்லோருக்கும் தெரியும். இப்போரில் அதி நவீன ஏவுகணை தாக்குதல் பீரங்கி தாக்குதல் இதை எல்லாம் பார்த்து வருகிறோம். இத்தகைய அதி நவீன ஏவுகணைகள் பீரங்கிகள் எப்படி தோன்றி இருக்கும்? நவீன பீரங்கிகள் எப்படியான வளர்ச்சிகளை அடைந்து தற்போதைய நவீன தன்மையை எட்டியிருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஆதிகாலத்தில் சண்டை முறை!

ஒரு சண்டை என்று வந்து விட்டால்,மனிதனான நாம் முதலில் வாயால் தான் சண்டை போட ஆரம்பிப்போம். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, கடைசியில் ஒருவருக்குள் ஒருவர் கொலை செய்யும் அளவிற்கு போவதற்கான சாத்தியகூறுகள் உண்டு. அதே போல் தான் இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அந்த அந்த நாடுகள் தங்களை காத்துக்கொள்ள எடுக்கப்பட்ட ஒரு உபகரணத்தின் அதி நவீன கண்டுபிடிப்பு தான் பீரங்கிகளும் ஏவுகணைகளும். இந்த பீரங்கிகளும் ஏவுகணைகளும் வேகம்,விவேகம், திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவைகளை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் எதிரிகளை எளிதாக வீழ்த்தலாம். ஆகவே இத்தகைய அம்சங்கள் நிறைந்த பீரங்கிகள் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதை காணலாம்.

காலாட் படையில் ஆரம்பித்தது

ஆரம்ப நாட்களில் அரசர்கள் தங்களின் ராஜ்ஜியத்தை காத்துக்கொள்ள மனிதப் படைகளை (காலாட்படை) வைத்திருந்தனர். அவர்கள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நடந்து சென்று சண்டையிடுவதால் அவ்வீரர்களின் சக்தியும் திறனும் அதிகப்படியாக குறைந்தது. இக்குறை பாட்டை சரிசெய்ய கண்டுபிடித்தது தான் விலங்குகள் மீதேறி சென்று சண்டையிடுவது. இதில் அதிவேகமாகச் செல்லக்கூடிய குதிரை மற்றும் யானை மீது ஏறி சென்று சண்டையிடுவதை வழக்கமாக்கிக்கொண்டார்கள். இதில் வேகம் முக்கியமானதாக இருந்தது.

வாள் ஏந்தி.. வில் ஏந்தி சண்டை செய்த காலம்!

அடுத்ததாக மனிதன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள கம்பு, கட்டை மற்றும் கற்களால் சண்டை போடுவதை கொஞ்சம் மாற்றி, வாளைக் கொண்டும் வேலைக்கொண்டும் தாக்கிக்கொண்டான்.இதில் எதிரியை அருகில் சென்று தாக்குவதற்கு பயந்து, தூரத்தில் இருந்து தாக்க நினைத்தான். இதனால் வில் அம்புகளை உருவாக்கி தாக்கினான். இதில் விவேகம் முக்கியமானதாக இருக்கிறது.

போரில் பங்கேற்ற தேர்ப் படை!

அடுத்ததாக வேகம்... ஒரு குதிரையில் சென்று எதிரிகளை தாக்கி வந்த மனிதன்,தனது வேகத்தை அதிகப்படுத்தவும் அதிக ஆயுதங்களை எடுத்துச்செல்லவும் பல குதிரைகள் பூட்டிய தேரை பயன்படுத்தினான். அவ்வாறு அவன் பயன்படுத்திய தேரானது பாரம் தாங்காது சில சந்தர்ப்பங்களில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகி வந்தது.ஆகையால் தேர் வடிவமைப்பில் சில மாற்றங்களைச் செய்தான். இதில் திறன் முக்கியமானதாக இருக்கிறது.

பிறகு சண்டையிடும் பொழுது தன்னை காத்துக்கொள்ள கவசம் (ஹார்மர்) அணியலானான். அவ்வகை கவசத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தினான். அதாவது எதிரிகள் எறியும் அம்புகளும் வில்லும் கவசம் மேல் பட்டு சிதறும் வகையில் கவசத்தை மாற்றி அமைக்க நினைத்தான். (இதில் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்கிறது).

ஆக, மேலே சொன்ன இத்தனை அம்சங்களும் நிறைந்த ஒரு கருவியை பின் நாளில் தயாரிக்க நினைத்தான். அது தான் முதன் முதலில் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி. இந்த பீரங்கிகள் எப்படி இயங்குகிறது என்பதை பார்க்கலாம்.

பீரங்கி

இது ஆங்கிலேயர் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் ஆகும். இவ்வகை ஆயுத்தின் பின் பகுதியில் இரும்பு அல்லது கல்லால் ஆன உருண்டைகளையும் கூடவே கன்பவுடரையும் போட்டு நெருப்பை இடுவதால் கன்பவுடரானது வெடிக்கும் வேகத்தில், இரும்பு உருண்டையானது எகிரி அடித்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும்.

லாங்க் லிட்டில் வில்லி மற்றும் பீரங்கி T3

அடுத்த கண்டுபிடிப்பு, கெனாலின் அப்டேஷனான டாங்க் லிட்டில் வில்லி இத்தகைய பீரங்கியின் முற்பகுதியில் நான்கு சக்கரங்கள் இருக்கும். இதை போர்களில் உபயோகப்படுத்தும் பொழுது அதன் சக்கரமானது பள்ளங்களிலும், மணல்களிலும் புதையுண்டு விடுவதால், இதில் சில மாற்ற ங்களை ஏற்படுத்த நினைத்து,சங்கிலிகளை (டிராக்) உபயோகப்படுத்தி இரு புறங்களிலும் உள்ள சக்கரங்களை இணைத்தனர். அதன் பின் பீரங்கிகளினால், பள்ளங்களில், மணல்களில் மேடுகளில் ஏறி இறங்க முடிந்தது. இத்தகைய பீரங்கிகள் T34 வகையை சார்ந்தது. இதில் செல்(குண்டு) சார்ஜர் ஆகியவற்றை லோட் செய்து உபயோகப்படுத்தப்பட்டது. இத்தகைய பீரங்கிகளின் உபயோகமானது உலகப்போரின்போது இன்றியமையாததாக இருந்தது.

இத்தகைய T34 பீரங்கியானது முன்னால் இருக்கும் இலக்கினை மட்டுமே அழிக்கக்கூடியதாக அமைந்திருந்தது.ஆகவே, இதில் சில மாற்றங்களை கொண்டு வர நினைத்து, anti aircraft gun (இதை செங்குத்தாக நிறுத்தி மேலே செல்லும் விமானங்களை சுட்டு வீழ்த்தலாம்) பீரங்கியின் மேல் புறத்தில் இணைத்தனர்.

இதை தவிர பீரங்கியின் பின்புறம்,mechine gun ஒன்றை பொருத்தினர்.(turret) இதன் மூலம் பீரங்கிகளின் சுற்றி 10 மீட்டர் 15 மீட்டர் சுற்றளவு உள்ள இலக்கினை சுட்டு அழிக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

தற்பொழுது அதி நவீனமான பீரங்கியில்3 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது . மேலும் ஆட்டமேட்டிக் லோடிங் சிஸ்டம் உபயோகப்படுத்தப்படுகிறது.அதைத்தவிர, நவீன பீரங்கியில் ஒருத்தருக்குள் ஒருத்தர் உரையாடிக்கொள்ளும் வகையில் ரேடியோசெட் அமைக்க ப்பட்டுள்ளது. இத்தகைய ரேடியோ உதவியால்,கமெண்டருடனும், மற்றும் வேரொரு பீரங்கியில் இருப்பவருடனும் பேசிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.இதை தவிர, ஒவ்வொரு பீரங்கிகளுக்கும் gps பொருத்தப்படுகிறது. இதன் மூலம் போரில் ஈடுபட்டிருக்கும் பீரங்கிகளின் நிலமை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

Multi dual engine

ஒவ்வொரு பீரங்கிகளும் (multi dualengine) அதாவது, பெட்ரோல், டீசல்,மற்றும் மண்ணெண்னை, அல்ககோல் உதவியுடன் இயங்கக்கூடியதாக இருக்கிறது. மேலும் இதன் இயந்திரமானது செங்குத்தான மலைகளில் பயணம் செய்யும் படி higher capacity engine உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகைய இயந்திரம் தண்ணீரிலும் (10 மீட்டர் ஆழம் இருக்கும்)போகக்கூடியதாக உள்ளது.







Post a Comment

Previous Post Next Post