.

செப்புக் கம்பிச் சுருள் ஒன்றினூடாக காந்தம் ஒன்றை அசைக்கும்போது கம்பியினூடாக மின்னோட்டம் பாய்கின்றது என்பதை மைக்கல் பரடே 1831ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.25 ஆண்டுகளுக்குப் பிறகு சீமென்ஸ் எனும் விஞ்ஞானி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற கருவியையும் கண்டு பிடித்தார். மேலும், 23 ஆண்டுகளுக்குப்பிறகுதான் தோமஸ் அல்வா எடிசன் மின்விளக்குகளை கண்டுபிடித்தார்.

மின்சாரம், மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற கருவி, மின்சாரத்தால் பயன்ப டுகின்ற பொருட்கள் என்று அந்த மூன்று நிலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து சேர 50 ஆண்டுகளாயிற்று.நடைமுறைக்கு வருவதற்கு மேலும் 25 வருடங்களாயிற்று. இதுதான் இருட்டு உலகத்திற்கு வெளிச்சம் வந்த கதை.வெளிச்சத்திற்கு அடிப்படையான மின்னோட்டத்தை கண்டுபிடித்த மைக்கல் பரடே பற்றி அலசுவோம்.

மைக்கல் பரடே(Michael Faraday) 1791ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இங்கிலாந்தில் பிறந்தார். இவரின் தந்தை ஜேம்ஸ் பரடே ஒரு கொல்லர். எனவே,மைக்கல் பரடே தனது கல்வியை தானே பார்த்துக் கொள்ள வேண்டிய தாயிற்று.சிறுவயதிலேயே இவர் லண்டனில் புத்தகம் கட்டும் (Binding) ஜோர்ஜ் ரீபோ என்பவரிடம் தொழில் பயிலுநராக சேர்ந்தார். இத்தொழிலில் ஈடுபட்ட ஏழு வருடங்களில் பல புத்தகங்களை குறிப்பாக விஞ்ஞான நூல்களை படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. இதன்மூலம் அறிவியலிலும் குறிப்பாக மின்னியலிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதுவே பின்னாளில் மின்சாரத்தைக் கண்டுபிடிக்க வாய்ப்பாக அமைந்தது.

1813ஆம் ஆண்டு  தொடக்கம் 1815ஆம் வரைக்கும் இடையிலான காலப்பகுதியி ல் சேர் ஹம்ப்ரி டேவி அவர்கள் ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு நீண்ட பயணத்தி ல் ஈடுபட்டிருந்தார். தனது அறிவியல் உதவியாளரான் மைக்கல் பரடேயையும் அப் பயணத்தில் இணைத்திருந்தார்.எனினும், சேர் ஹம்ப்ரி டேவியின் மனைவி ஜேன் அப்ரீஸ், மைக்கல் பரடேயை மதிப்புடையவராக கணிக்க மறுத்து அவரை ஒரு வேலைக்காரர் போல் மதித்து வந்தார். இதனால் வருத்தமடைந்த மைக்கல் பரடே அறிவியல் துறையிலிருந்து முற்றாகவே விலகிக் கொள்ள எண்ணினார். எனினும், மிக விரைவில் இவர் சேர் ஹம்ப்ரி டேவியிலும் பார்க்க புகழ் பெற்றவரானார்.

1824ஆம் ஆண்டில் பரடே இங்கிலாந்தின் Royal Society இன் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1825இல் றோயல் நிறுவனத்தின் ஆய்வுகூட பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.1831ஆம் ஆண்டில் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து 1833இல் றோயல் நிறுவனத்தின் இரசாயனவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

மேலும் மைக்கல் பரடே காந்தவியல் தொடர்பாக மேற்கொண்ட பரிசோத னைகளின் விளைவாக முக்கியமான இரு தோற்றப்பாடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. ஆய்வுகூட சோதனைகளில்சூடாக்குவதற்கான ஒரு கருவியை அதாவது பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தார்.

இவர் மின்னியலில் கண்டுபிடித்த ஆய்வுகள், அதனைத் தொடர்ந்து பல விஞ்ஞானிகளும் கொண்டு வந்த ஆய்வுகள் இன்றைக்கும் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றால் எல்லாவற்றுக்கும் அடிப்படையான மின்சாரத்தைக் கண்டுபிடித்த மைக்கல்பரடேயை எவரும் என்றும் மறக்க முடியாது.

மைக்கல் பரடே 1867ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தனது
76 ஆவது வயதில் இங்கிலாந்திலே காலமானார்.


Post a Comment

Previous Post Next Post