.

வெகு காலத்திற்கு முன் போதிசத்வர் ஒரு நாட்டில் பழைய பாத்திர வியாபாரம் செய்து வந்தார்.பழைய பாத்திரங்களை நியாயமான விலைக்கு வாங்கிக் கொண்டு அதற்கான விலையையோ அல்லது வேறு புதுப் பாத்திரங்களையோ அவர் கொடுப்பார்.அவரைப் போலவே அவ்வூரில் பேராசை பிடித்த மற்றொரு பழைய பாத்திர வியாபாரியும் இருந்தான்.அவன் மோசடி வியாபாரம் செய்து வந்தான்.

அந்நகருக்கு ஒரு முறை தலைநகரிலிருந்து வேறொரு நகருக்கு அவர்கள் இரு வரும் போனார்கள்.முன் உள்ள ஆற்றைப் படகில் ஏறிக் கடந்து சென்று நகரை அடைந்தார்கள். இருவரும் தம் வியாபாரத்தை தொடங்கினார்கள்.

அந்த ஊரில் ஒரு பணக்காரக் குடும்பம் மிகவும் நொடித்துப் போய் ஏழையாகி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. அக் குடும்பத் தலைவி வீட்டிலுள்ள பாத்திரங்களை அவ்வப்போது விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தாள். அந்த வீட்டிலிருந்த எல்லாப் பாத்திரங்களும் இவ்வாறு போய் விட்டன. ஒரே ஒரு பாத்திரம்தான் மிஞ்சி இருந்தது.

அது பாசி பிடித்துக் கருப்பாகி இருந்தது.அதை யாருமே வாங்கிக் கொள்ள
மாட்டார்கள் என்று வீட்டுத் தலைவி எண்ணித் தனியாக வைத்திருந்தாள். உண்மையில் அது தங்கக் கிண்ணம். வெகு நாட்களாக உபயோகப்படுத்தாதலால் அழுக்கேறி நிறம்மாறி இருந்தது.

தெருவில் பழைய பாத்திரம் வாங்குகிறேன்’ என்ற குரல் கேட்டு அந்த வீட்டுத் தலைவி பாத்திரக்காரனை அழைத்தாள்.அப்படி வந்தவன் பேராசை பிடித்த
பாத்திரக்காரன்.அவனிடம் அக் குடும்பத் தலைவி அந்தப் பழைய பாத்திரத்தைக் காட்டவே அவன் அதை வாங்கிப் பார்த்தான். அது தங்கத்தால் ஆனது என்று அவனுக்குத் தெரிந்து விட்டது.ஆனால் வீட்டுத் தலைவிக்கு அது
தெரியவில்லை எனக் கண்டு அவன் அவளை ஏமாற்றி ஏதோ கொஞ்சம் சில்லரை கொடுத்து அதனைத் தட்டிக் கொண்டு போகத் திட்டம் போட்டான்.

எனவே அவன் அப் பாத்திரத்தை தூர விட்டெறிந்து இதை யார் வாங்குவார்கள்?
இதற்கு பத்துக் காசுதான் தருவேன்” என்று ஒரேயடியாக அடாவடி செய்தான்.
வீட்டுத் தலைவியோ  “ என்னப்பா  ஒரு வெள்ளிக் காசாவது கொடு” என்று
கெஞ்சினாள். அவனோ பிகு செய்து கொண்டு 'முடியாது' எனக் கூறி விட்டு எழுந்து போய் விட்டான்.அப்போது விட்டு விட்டு இன்னும் ஒரு நான்கு மணி நேரம் கழித்து வந்தால் அந்த வீட்டுத் தலைவி தான் கேட்ட விலைக்கே அந்தத்
தங்கக் கிண்ணத்தைக் கொடுத்து விடுவாள் என்பது அவன் எண்ணம்.

அந்தப் பேராசைக்காரன் அவ் வீதியில் தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு போன பின் போதிசத்வர் குரல் கொடுத்தவாறே வந்தார். அப்போது அந்த இல்லத் தலைவி “சரி இவனிடமாவது இந்தப் பாத்திரத்தைக்
கொடுத்து ஒரு வெள்ளிக் காசு வாங்கி இன்றையப் பொழுதை ஓட்டலாம்” என எண்ணி அவனை வீட்டினுள் கூப்பிட்டு அந்தக் கிண்ணத்தைக் காட்டினாள்.

போதிசத்வர் அதைப் பார்த்து விட்டு அது தங்கக் கிண்ணம் எனக் கண்டு ‘“அம்மா, இது விலை உயர்ந்த தங்கக்கிண்ணம். இதனை நான் எடுத்துக் கொண்டு விலை கொடுக்கிறேன்.இது ஆயிரம் வெள்ளிக் காசுகள் பெறும். என்னிடம் ஐநூறு வெள்ளிக்காசுகளும் சில வெள்ளிப் பாத்திரங்களும்
உள்ளன. அவற்றைக் கொடுக்கிறேன். எனக்கு ஊர் திரும்ப
ஐந்து வெள்ளிக் காசுகளை வைத்துக் கொண்டு மீதம் கொடுக்கிறேன்'' என்றார்.

வீட்டுத்தலைவியும் அப்படியா! இது இவ்வளவு விலை பெறுமா? சற்று முன் வந்த ஒருவன் இது ஐந்து காசு கூடப் பெறாது எனத் தூக்கி எறிந்தானே.
அவன் என்னை ஏமாற்றப் பார்த்தான் போலிருக்கிறது" எனக் கூறினாள். போதிசத்வரும் பணத்தையும் வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து விட்டு அந்தத் தங்கக் கிண்ணத்தை வாங்கிச் கொண்டு ஆற்றின் கரைக்குப் போய் படகில் ஏறினார்.

படகும் அங்கிருந்து செல்லலாயிற்று.போதிசத்வர் போன சற்று 'நேரத்திற்கெல்லாம் அந்தப் பேராசை பிடித்த வியாபாரி அந்த வீட்டிற்கு வந்து "கொடு அம்மா அந்தப் பாத்திரத்தை. போனால் போகிறது என்று நீ கேட்டபடியே ஒரு வெள்ளிக் காசைக் கொடுக்கிறேன்'' என்றான்.

வீட்டுத் தலைவியோ ‘‘ஏய் மோசக்காரா! என்னை ஏமாற்றி ஆயிரம் வெள்ளிக் காசுகள் விலை பெறும் தங்கக் கிண்ணியை ஒரு வெள்ளிக் வாங்கிக் காசுக்கா
கொண்டு போகப் பார்க்கிறாய்:போபோ. வேறொரு வியாபாரி எனக்கு அதற்கு உரிய நியாயமான விலையைக் கொடுத்து விட்டு பாத்திரத்தை வாங்கிக் கொண்டு போய் விட்டார்" எனக் கூறி படாரென்று தவைச் சாத்திக் கொண்டு போய் வட்டாள்.

அடடா! ஒரு வெள்ளிக் காசு கொடுத்து ஆயிரம் வெள்ளிக்காசுகள் பெறுமான பாத்திரத்தைத் தட்டிக் கொண்டு போக நினைத்ததை இந்த போதிசத்வர் வந்து
கெடுத்து விட்டரே என்று அந்தப் பேராசைக்கார வியாபாரி ஆத்திரம் கொண்டான். அவன் வேக வேகமாக ஆற்றின் படகுத்துறைக்கு ஓடினான்.

ஆனால் அப்போது போதிசத்வார் ஏறிச் சென்ற படகு ஆற்றில் பாதி
தூரத்திற்கு மேல் சென்று விட்டது.அதைக் கண்ட பேராசைக்காரனின் ரத்தம்
கொதித்தது.கொழுத்த லாபம் வர இருந்தது போதிசத்வரால்
கையைவிட்டுப் போய் விட்டதே . என எண்ண எண்ண அவன் நெஞ்சம் விம்மியது. ரத்த ஓட்டம் அதிகரிக்க அவன் இதயம் வெடித்துக் கீழே
விழுந்து இறந்தான்.

போதிசத்வரின் நேர்மையால் ஏமாற இருந்த ஒரு குடும்பம் நிறையப் பணம் பெற்று நன்கு வாழ வழி ஏற்பட்டது.









Post a Comment

Previous Post Next Post