ஒரு துறவி மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் காட்டின் வழியாக இறங்கி கிராமத்திற்கு சென்று வரலாம் என்று யோசித்தார் . போகும் வழியில் சிறிது நேரம் மரத்தடியில் படுத்துக்கொண்டு அரைக்கண் மூடியபடியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் .
அவ் வேளையில் ஒரு கிராமத்து இளைஞன் மலையில் தேன் எடுப்பதற்காக தனியே வந்துகொண்டிருந்தான் வழியெல்லாம் அவனுக்கு அவனின் வறுமை மற்றும் ஏமாற்றம், சண்டை என இவை நினைத்தபடி புலம்பிக்கொண்டே சென்றான்.சிறிது நேரம் மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது அவன் எதிரில் உள்ள மரத்தடியில் படுத்துக்கொண்டிருந்த துறவியை பார்த்து உன்னை போல் நான் இருந்தால் நானும் இப்படி நிம்மதியாக தூங்கி இருந்திருப்பேன் ஹீம் என்ன செய்வது ?எல்லாம் என் தலைவிதி!!அந்த ஆண்டவன் ஏன் இப்படி சோதிக்கிறாரோ ? என்று புலம்பினான் அந்த புலம்பல் துறவியின் காதுகளில் கேட்டது.
அவர்,உனக்கு என்னப்பா பிரச்சனை ? என்று கேட்டவுடன் அவன் ஓடி வந்து தனக்குள் இருக்கும் வேதனைகள் மற்றும் குடும்பப்பிரச்சனை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டான்.இதை பொறுமையாக கேட்ட துறவி ,உனக்கு ஒரு கதை சொல்கிறேன்.அந்த கதை போலவே நீ நடந்துகொண்டால் உனக்கு எந்த பிரச்சனையும் பெரிசா தெரியாது என்று கூறத்தொடங்கிறனார்.
ஒரு வயதான ஏழை விவசாயி , அவரது கடின உழைப்பிற்கு வரும் சிறிய வருமானத்தில் இருப்பதை வைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்.ஒருநாள் திடீரென்று அவர் வளர்த்து வந்த 2 பசுக்கள் காணாமல் போய்விட்டது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதை கண்ட அக்கம் பக்கத்தினர் ” என்ன ஒரு துரதிர்ஷ்ட நிலை உனக்கு” ? ஐயோ பாவம் ! என்று கூறினர்.அதற்கு அந்த விவசாயி கஷ்டப்படாமல் அமைதியாக, இருக்கட்டும்…நன்றி ! எல்லாம் இறைவன் செயல் !என்று நிதானமாக கூறினார் …
மறுநாள் அதே 2 பசுக்கள் மேலும் 2 பசுக்களுடன் கூட்டிக்கொண்டு அவரை தேடி வந்துவிட்டன, இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர்”பரவாயில்லையே இப்பொழுது உனக்கு 4 பசுக்களா !! உனக்கு நல்ல அதிர்ஷ்ட யோகம் தான் போ” ! என்றனர், அதற்கும் அவர் ஆஹா அதிர்ஷ்டம் கிடைத்ததே என்று சந்தோசப்படாமல் எல்லாம் இறைவன் செயல் என்று கூறினார். இது மாதுரி அவர் வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி எல்லாம் இறைவன் செயல் என்றே கூறினார்.
இதிலிருந்து நீ என்ன கற்றுக்கொண்டாய் ? என்று துறவி கேட்டார் ..அதற்கு அவன் அப்படியென்றால் சாமி , நமக்கு வரும் கஷ்டத்துக்கு பின்னாடி எதாவது ஒரு நல்லது இருக்குமா ? என்று கேட்டான் அதற்க்கு அவர் ஆம் ! நீ இப்பொழுதே வறுமையில் கஷ்டப்பட்டதால் இதற்கு பிறகும் வறுமை வந்தாலும் உன்னால் தாங்கமுடியும் உலகத்தில் உள்ள அனைவருக்கும் துன்பம் ஒரு நல்ல பாடத்தையும் அறிவும் திறமையும் தருகிறது … ஒரு வேளை நீ சுகமாக வயிறு நிறைய உணவுடன் வாழ்ந்தால் உன்னால் பிற்காலத்தில் வரும் வறுமையை தாங்கமுடியுமா ??…
இறைவன் இப்படித்தான் எல்லாருக்கும் பிற்காலத்தில் வருகின்ற துன்பத்தை தாங்குவதற்காக நம்மை இப்பொழுதே பலப்படுத்துகிறார்.அந்த பலத்தால் எதையும் தாங்கும் சக்தி உனக்கு கிடைக்கும் அதுவரை நீ இந்த துன்ப பயிற்சியில் இருந்தே ஆகவேண்டும் …
யாரும் இந்த உலகத்தில் துன்படாமல் இல்லை. நீ என்ன நினைக்கிறாய் நான் அனைத்தும் துறந்துவிட்டதால் நான் நிம்மதியாக இருக்கிறேனா,இல்லை,தனிமை மற்றும் பாதுகாப்பின்மை , பசி மற்றும் எந்த நேரத்தில் எனக்கு ஆபத்து வரும் என்று எனக்கு தெரியாது … இருந்தாலும் நான் என் இறைவனை சரணடைந்து விட்டதால் அதுபற்றி கவலை இல்லாமல் துன்பத்தை ஏற்று வாழ்கிறேன்.
நீயும் உனது துன்பத்தை இறைவனிடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக வருகின்ற இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்று வாழு அதுவே உனக்கு சிறந்தது என்று கூறி முடித்து சென்றார் !.
அந்த விவசாயி ஏன் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்தார் தெரியுமா நாம் கற்றுக்கொள்ளவேண்டும் ! ஏனென்றால், அந்த விவசாயி வாழ்க்கையை புரிந்துகொண்டவர் .வருகின்ற நாள் அனைத்தும் கெட்ட நாள் நல்ல நாள் இல்லை …ஒவ்வொருநாளும் நமக்கு மறைமுகமாக இறைவன் பல பாடங்களை உணர்த்திக்கொண்டிருக்கிறார் ..நன்மையையும் தீமையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்று தான் இரண்டும் ஒரே வாழ்வில் சமமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டே இருக்கிறது ஆகவே நீங்கள் கஷ்டப்படும் போது இது நிரந்திர இல்லை நாளை ஒன்று இருப்பதை புரிந்துகொள்ளுங்கள் .வாழ்க்கை விளையாட்டை சுவாரசியமாக துணிந்து விளையாடுங்கள்.
அதேபோல சந்தோச நிலையில் தலைகால் புரியாமல் ஆடக்கூடாது ..யாருக்கு எது வேணுமானாலும் நடக்கலாம் ! எதையும் பெரியதாக ஏற்றுக்கொள்ளாமல் எதையும் விமர்சிக்காமல் இருப்பதுநல்லது சுகம் துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று உணர்ந்தாலே போதும். நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்ளுங்கள் நம் வாழ்வு பிரகாசிக்கும் !
அருமையான எடுத்துக்காட்டு.. 👌 😎 🇨🇭
ReplyDeleteநன்றி
DeletePost a Comment