காட்டில் ஒரு யானை இருந்தது.அந்த யானைக்கு நண்பர்கள் யாருமே இல்லை! அது ஒரு நண்பரைக் கண்டு பிடிக்க நினைத்தது. வழியில் ஒரு முயலைப் பார்த்தது. முயலிடம், நீங்க என் நண்பனாக இருக்க முடியுமா? என்று கேட்டது. அதற்கு முயல், நான் உங்கள் நண்பனாக இருக்க விரும்புகிறேன்.... ஆனால்,... உங்களாலே, என்னைப் போலக் குதிக்கவோ, ஓடவோ முடியாது!.... அதனாலே என்னால் உங்க நண்பனாக இருக்க முடியாது! என்றது.
யானை மற்றொரு நண்பரைத் தேடிச் சென்றது. அப்போது வழியில் பார்த்த ஒரு குரங்கிடம், நீங்க என் நண்பராக இருக்க முடியுமா? என்று கேட்டது.நான் உங்கள் நண்பனாக இருக்க விரும்புகிறேன்!.... ஆனால் நீங்கள் என்னைப் போல மரம் ஏற முடியாது....அதனால் என்னால் உங்கள் நண்பனாக இருக்க முடியாது!என்றது குரங்கு.
யானை மிகவும் வருத்தத்துடன் சென்றது. நீண்ட தூரம் நடந்ததால் அதற்கு தாகமாக இருந்தது. அதனால் தண்ணீர் குடிப்பதற்காக கிராமத்திற்கு அருகிலிருந்த ஏரிக்குச் சென்றது.அங்கு யானை தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது கிராம மக்கள் உற்சாகத்துடன் யானையைப் பார்ப்பதற்கு ஏரிக்கு வந்தனர். யானை கிராம மக்கள் அனைவரையும் பார்த்து, நீங்கள் என் நண்பர்களாக இருக்க முடியுமா? என்று கேட்டது. கிராம மக்கள் அனைவரும் உற்சாகத்துடன்,ஆமாம்!.... நாங்கள் அனைவரும் உன் நண்பர்களாக இருக்க ஆசைப்படுகிறோம் என்றனர்.
Post a Comment