மதன் எழுதிய,விகடன் பிரசுரத்தில் வெளிவந்திருக்கும் மனிதனுக்குள்ளே மிருகம் என்னும் நூலானது மனிதர்களிற்குள்ளே காணப்படும் எதிர்மறை சக்தியைப் பற்றிப் பேசுகிறது.மதனின் மற்றொரு நூலான கி.மு-கி.பி யை விடச் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது.எம் ஒவ்வொரு வருக்குள்ளும் ஒரு கொடிய மிருகம் ஒளிந்திருக்கிறது அது எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம் என எச்சரிக்கிறது இந் நூல்.இப் புத்த கமானது எற்கனவே மதன் ஜீனியர் விகடனில் எழுதிய மனிதனுக்குள்ளே மிருகம் என்ற தொடரின் தொகுப்பாகும்.அதனை எழுதிய போதே மதன் பெரும் வாசகர்களைச் சேர்த்து விட்டார் புத்தகமாக வெளியாகி அனேகரின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது இந் நூல்.மனிதனின் மூளைக்குள்ளே மனவியல் ரீதியாக புகுந்து பார்த்து எழுதிய புத்தகம் தான் இந்தப் புத்தக மாகும்.மிகவும் நுட்பமாகத் திரட்டிய தகவல்களை தனக்கே உரிய பாணியில் சிலிர்ப்பூட்டும் எழுத்து நடையில் தொகுத்து வாசகர்களின் வரவேற்பை அள்ளி யிருக்கிறார் மதன் என்றே சொல்ல வேண்டும்.ஒரு கைதேர்ந்த எழுத்தா ளருக்குரிய பக்குவத்தினை இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் மதன்.இந்தப் புத்தகத்தினை வாசிக்கத் தொடங்கினாலே இதன் சுவாரஸ் யத்தையும் அருமையையும் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.
மனித வன்முறையைப் பற்றி மதன் இங்கே குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் எமக்குப் புதியதல்ல எமது பக்கத்து வீட்டில் அல்லது பக்கத்து தெருவில் அவ்வளவு ஏன் பாடசாலை ஆசிரியர் கூட கொலைகாரனாக முடியும் என்கிறார் ஆனால் நாம் எப்போதும் அவர்களை கடைசியில்தான் இனங்காண்போம் அதுவரை பசுத்தோல் போர்த்திய புலியாகவே வலம் வருவார்கள் என்கிறது இந்தப் புத்தகம்.தனிமனித வன்முறைகளையும் அதற்கான மனோவியல் காரணிகள் பற்றியும் யுத்தங்களைப் பற்றியும் சர்வாதிகாரிகளைப் பற்றியும்; எழுதப்பட்டிருக்கும் புத்தகங்கள் கொஞ்சநஞ்சமல்ல.அதில் எதனை வாசிப்பது என நூலாசிரியர் ஒரு கட்டத்தில் குழம்பிப்போய் தெரிந்தெடுத்த சிலவற்றை வாசித்து தன்னுடைய பாணியில் இந்த நூலைத் தொகுத்திருக்கிறார்.மனித இனத்தோடு வன்முறையும் கூடவே வளர்ந்து அரக்கரூபம் எடுத்த வரலாற்றை எமக்கு படித்து முடிக்க இந்த ஆயுள் காணாது என்கிறது இந்த நூல்.
எம்மைச் சுற்றி நிகழும் வன்முறைகளைப் பற்றி பல கோணங்களில் வாசகர்கள் படித்திருக்கவும் கேள்விப்பட்டிருக்கவும் கூடும்.மனிதர்கள் மேற்கொள்ளும் அக்கிரமங்களையும் கொடூரங்களையும் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட பிறகு உங்களுடைய மனதில் தோன்றும் கேள்வி ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்? என்பதாகவே அமையும்.இலகுவான அதேவேளை சிக்கலான இந்தக் கேள்விக்காள பதிலைத்தான் இந்தப் புத்தகத்தில் மதன் விளக்கியுள்ளார்.
எந்தவொரு விடயத்தையும் சற்று ஆழமாகப் போய்ப் பார்த்தால்தான் அதன் அனுபவங்களும் உணர்வுகளும் வேறுமாதிரியானவை என்பதை உணர முடியும்.சில கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மனித மூளையில் அமர்ந்திருக்கும் ஒரு கொடூரமான மிருகம்தான் மனிதனை வன்றையில் ஈடுபடத் தூண்டுகிறது.பெரும்பாலானோரிடத்தில் அந்த மிருகம் வெறுமனே அமர்ந்துவிட்டு இறந்து போய்விடுகிறது.சிலரிடம் அவ்வப்போது பற்களைக் காட்டி லேசாக உறுமுகிறது.சிலரிடம் அரக்கதடதனமாக ஆக்கிர மிப்புச் செய்கிறது.அப்போது மனிதன் அந்த மிருகத்தின் கைப்பாவை ஆகிவி டுகிறான் என்கிறார் மதன்.என் அவ்வாறு சிலரிடம் நிகழ்கிறது என்பதற்கான காரணங்களை அலசி ஆராய்கிறது இந்த நுல்.
சில புள்ளி விபரங்கள் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன அதாவது கடந்த இருபதாண்டுகளில் 4 கோடி அமெரிக்க மக்கள் வன்முறைக்கு இரையாகி இருக்கிறனர்.இருபத்திரண்டு விநாடிகளிற்கு ஒருமறை ஒரு அமெரிக்கராவது கத்தியால் குத்தப்பட்டோ துப்பாக்கியால் சுடப்பட்டோ செத்துப் போகிறார். உலகெங்கும் உலவும் தொடர் கொலையாளிகளில் எழுபத்தைந்து சதவீதக் கொலையாளிகள் வசிப்பது அமெரிக்காவில்தான்.பொதுவான அமெரிக்கர்கள வன்முறைக்கு நடுவிலேயே வாழ்ந்து வருகிறனர்.அமெரிக்கப்படங்களில் எட்டுப் படத்தில் ஒருபடமாவது மிருகத்தனமான பாலியல் வல்லுறவுக் காட்சியைக் கொண்டிருக்கிறது என்கிறது இந்தப் புத்தகம்(FBI தகவல்படி).
உலகெங்கும் நடைபெற்ற அனேகமான காவல்துறையினருக்குத் தண்ணி காட்டிய தொடர் கொலைகளையும் கூட்டுக் கொலைகள் பற்றியும் விபரிக்கிறது இந்தப் புத்தகம்.கூட்டுக் கொலைகள் என்பவை ஒரு தலைவனுக்கு கீழ் அவனின் ஆணைப்படி கொலைகளைச் செய்வது பெரும்பாலும் இராணுவம்.பெரும்பாலான கொலைகாரர்கள் ஆண்களாகவே காணப்படுகிறனர்.பெண் கொலையாளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவே தொடர் கொலையாளிகளில் ஐந்து சதவீதம் மட்டுமே பெண்கள்.மிகுதி 95 சதவீதம் ஆண்களே.பெண்களுக்கு கொலை செய்வதில் ஆர்வம்,பரவசம் என்பன இல்லாமை இதற்கு காரணம் எனலாம்.ஆண்கள் கொலைகாரர்களாக இருக்க பிரத்தியேக காரணம் டெஸ்ட்டோஸ்டரோன் என்னும் ஆண் ஓமோ ன்தான்.இது ஆண்களுக்க முரட்டுத்தனத்தையும் வெறியையும் ஏற்படுத் துகிறது என்கிறார் மதன்.ஆண்கள் சக ஆண்களைக் கொல்வதுதான தொண் ணூறு சதவீதம் என்கிறார் மதன்.அதேபோல பெண்கள் மற்றப் பெண்களைக் கொல்வது மிகவும் குறைவே என்பதை சுட்டிக் காட்டுகிறது இந்நூல்.
கொலைகாரர்கள் உருவெடுப்பது பெரும்பாலும் ஐந்து வயதிற்கு முன்னால்தான் என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.பெரும்பாலான கொலைகாரர்களின் குழந்தைப்பருவம் மிகவும் மொசமானதாக இருந்தி ருக்கிறது.பெற்றோர் பிரிந்து வாழ்வது குழந்தைகளின் மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கிறது.நல்ல அப்பா-அம்மா குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறனர்.தந்தை என்பது இல்லாமல் போய் விடுவதை விட மோசமான தந்தை இருப்பது கடமையான விளைவுகளை பிள்ளைகளுக்கு ஏற்படுத்துகிறது.இரக்கமில்லாத அன்பு காட்டாத சிறந்த உதாரணமாக நடந்து கொள்ளாத நல்ல பழக்கங்கள் எதுவுமில்லாத வன்முறைத் தந்தை இருப்பது தந்தையே இல்லாமல் இருப்பதை விட மோசமானது என்பதை பெரும்பாலான கொலைகாரர்கள் நிரூபித்திருக்கிறனர்.
மனித வன்முறையை உக்கிரப்படுத்துபவை என்று மனோதத்துவ நிபுண ர்களினால் வறுமை,குழந்தைப் பருவத்தில் பாலியல் பலாத்காரம், ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாசப் புத்தகங்கள்,பிறப்பு,இரத்தத்தில் சீனியின் அளவு என்பனவற்றைக் குறிப்பிடுகிறனர்.மேற்குறிப்பிட்ட காரணங்கள் எவ்வாறு கொலைகாரர்களை உருவாக்குகிறன என்பதை புத்தகத்தில் தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல மனித வன்முறையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு புரிந்து கொள்ளல், கட்டுப்படுத்தல், திசை திருப்பதல் போன்ற காரணிகளைக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.இதனையும் விளக்க மாக புத்தகத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
உயிரைப் போக்காமல் மனதளவில் நிகழ்த்தப்படும் கொலை பற்றிக் கூறுகிறது இந்த புத்தகம்.இந்த வன்முறைக்குப் பலியாகிறவர்கள் 99 சதவீதம் பெண்கள்தான்.அதவாது ஒரு பெண் எங்கு சென்றாலும் அவளின் பின்னால் சென்று பயமுறுத்துவது.இது பெண்களின் மனநிலையில் மிகுந்த அச்சத் தையும் மனவேதனையையும் ஏற்படுத்துகிறது.பெண்களின் தன்னம் பிக்கையையும் மன அமைதியையும் அடியோடு குலைக்கிற செயல் இது.இது எம் சமூகத்திலேயே தாராளமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதனைப் அந்தப் பெண்ணின் கண்ணோட்டத்திலிருந்து சற்று யோசித்துப் பார்த்தால் காலையில் வீட்டை விட்டு இறங்கியவுடன் அவன் நிற்கிறானா என்று பார்த்தால் அதோ அவன்.அவள் செல்லும் இடமெங்கும் பின் தொடர்வான்.இரவிலும் தொலைபேசி அழைப்பெடுத்து வெறுப்பேற்றுவான். இந்த வகை துன்புறுத்தல் பெண்களின் மன நிம்மதியை அடியோடு குலைத்து விடுகிறது. அலுவலக மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறனர் இறுதியில் உச்சக் கட்ட மன அழுத்தத்திற்கு உள்ளாகிறனர்.சில சமயம் வீட்டிற்குள்ளேயே கணவன் உருவத்தில் இந்த வகை மிருகங்கள் அலையும் என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
மனித வரலாற்றினை ஆராயும் போது சிம்பன்ஸின்கும் எமக்கும் 98.4 சதவீதம் ஒரே மரபணுக்கள்தான்.அந்த 1.6 சதவீதம்தான் எமக்கு மிகப்பெரிய மாற்றங் களைத் தந்து விட்டது.சிம்பன்ஸிகளிற்கு கொரில்லாவை விட மனிதர்கள் முக்கியமான உறவு.குரங்குகளின் பரிணாம வளர்ச்சியில் ஐந்து லட்சம் ஆண்டுகளிற்கு மன் இன்றைய மனிதன் தோன்றினான்.அதேபோல மனிதர்களில் பல வகை மனித இனங்கள் காணப்பட்டன.வன்மறையாளரான மனிதர்கள் மற்ற மனித இனங்களை ஒரேயடியாக அழித்து விட்டார்கள். நாற்பதாயிரம் ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த நியாண்டர்தாஸ் மனித வகையினர் அடியோடு அழியக் காரணம் மனிதனின் கொலை வெறிதான். எஞ்சிய ஒரே குரங்கினம் நாம் தான் அதாவது ஹோமோ சேப்பியன்ஸ். இப்படியாக மனித வரலாறுகள் சிம்பன்ஸிகள் கொரிலாக்களின் பழக்க வழக்கங்கள் தலைமைத்துவம்,புணர்ச்சி பாலியல் பழக்க வழக்கங்கள் என்பவனவற்றை மனிதர்களோடு ஒப்பிட்டு விளக்கமாகக் கூறியிருக்கிறார் மதன்.
தங்கள் இனத்தவரையே இரசனையோடும் வெறியோடும் கொல்வதற்குப் புறப்பட்ட ஒரே இனம் மனித இனமே என்பதை நிரூபிப்பதற்கு மனிதக் கொடூரங்களின் கதைகளைச் சொல்கிறார் மதன்.தஸ்மேனியப் பழங் குடிகளினை வெள்ளையர்கள் அழித்த கதை மிகவும் வலி நிறைந்தது. பிரிட்டனின் கறுப்புப்பக்கங்களில் ஒன்று அதனை நீங்கள் புத்தகத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.அதனைப் போலவே இங்கா சாம்ராஜ்ஜியத்தின் தலைமையை,பெருநாட்டின் முக்கிய நகரமான காஜமார்க்காவில் ஸ்பானிஸ் தளபதி பிஸாரோவும் இங்கா மன்னர் அட்வால்பாவும் சந்தித்துக் கொண்ட சில நிமிடங்களில் ஸ்பானிஸ் படை அட்வால்பாவை தோற்கடித்து கைப்பற்றிய வரலாற்றின் முக்கியத்துவம் பெற்ற வேதனையான வஞ்சக நிகழ்ச்சி யொன்றையும் குறிப்பிடுகிறது இப்புத்தகம்.
வேறு கதைகளாக செங்கிஸ்கானின் கதை,கலிக்யூலாவின் கதை,ஹிட்டலரின் கதை,இடி அமீனின் கதை,ஸ்டாலினின் கதை,முசோலினியின் கதை என்பவ னவற்றை மனிதனுக்குள்ளே இருக்கிற மிருகங்களாக விபரிக்கிறது இந்த நூல். அதாவது இலட்சியங்கள் வேறாக இருந்தாலும் கொலை கொலைதான் என்பது இராணுவத்திற்கு அப்படியே பொருந்திப் போகிறது.கொலை செய்வதை ஆண்மையின் அடையாளமாக கருதப்படுகிறது.இதனால் இராணுவங்கள் படுகொலைகளைத் தயக்கமின்றி நடத்துகிறன.வேறு எந்த விலங்கினங்களும் இவ்வளவு கலை நயத்துடன் கொலைகளை நிகழ்துவதில்லை என இமானுவேல் கான்ட் குறிப்பிட்டதை கூறுகிறது இந்த நூல்.
கோபம் மற்றும் மன அழுத்தத்தின் விளைவாக நாம் கொலைகளைச் செய்வதாக கனவு காணலாம்.அதைச் செயற்படுத்தாமல் இருக்கும் கட்டுப்பாட்டை நாம் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.நானா இப்படிச் செய்தேன் என பின்னர் அவமான உணர்வோடு ஆச்சரியப்படுவதில் அர்த்தமில்லை. இனி நீங்களே சிந்தியுங்கள் என்று வாசகர்களைத் தூண்டி விட்டிருக்கிறார் மதன்.நீங்களும் உங்களுக்கு வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தால் மதனின் இந்தப் புத்தகத்தை தவறாமல் வாசியுங்கள்.வாசிப்போம்.
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Post a Comment