2100-ம் ஆண்டு இன்றைய விவசாய நிலங்களில் 8 சதவிகிதம் விவசாயத்துக்கு ஏற்றதாக இருக்காது. சனத்தொகை பெருகும். ஆனால், விவசாய பரப்பு குறையும்.
வெப்ப உயர்வு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது ஐ.நா. காலநிலை மாற்ற த்துக்கான குழு (ஐபிசிசி).இது தொடர்பாகப் 2022 பிப்ரவரி 28-ம் திகதி 67 நாடு களைச் சேர்ந்த 270-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்குகொண்டு வெளியி டப்பட்ட அறிக்கையில்,'நவீன நுகர்வு வாழ்க்கை முறைகளால் இயற்கையை விட அதிகமான வெப்பம் ஏற்படுகிறது. அப்படி உருவாகும் அளவுக்கு அதிகமான வெப்பம் பூமியிலிருந்து வெளியேறாமல் தடுக்கப்படுகிறது.இதை வெளியேற்றுவதற்கான வழியை விரைவில் ஏற்பாடு செய்யாவிட்டால் பூமியில் வாழும் உயிர்களின் வாழ்க்கை தரமும், நிலையான எதிர்காலமும் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம்
பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் தாக்கத்தைக் குறைந்தபட்சமாகக் கணக்கிட்டாலும்,2100-ம் ஆண்டு உலக வெப்பநிலை 1.5 டிகிரிக்குக் குறைவாகவே உயரும் என்றே எடுத்துக் கொண்டாலும், 2100-ம் ஆண்டு இன்றைய விவசாய நிலங்களில் 8 சதவிகிதம் விவசாயத்துக்கு ஏற்றதாக இருக்காது.சனத்தொகை பெருகும். ஆனால், விவசாய பரப்பு குறையும். வெள்ளம் மற்றும் கடல் மட்டம் உயரும் அபாயம் அதிகம்.
அதே நேரம், உலக வெப்பம் 1.5 டிகிரி அதிகரித்தால், 2010-ம் 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் வாழ்க்கையில் முந்திய தலைமுறையைவிட சுமார் 4 மடங்கு மோசமான விளைவுகளுடைய தீவிர இயற்கை நிகழ்வுகள் ஏற்படும்.
புவி வெப்பம் இருக்க வேண்டியதைவிட 2 டிகிரி அதிகமானால், நிலத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் 18 சதவிகிதம் வரை அழிந்துபோகும் அபாயம் அதிகம்.80-லிருந்து 300 கோடி மக்கள் வறட்சியின் காரணமாகத் தொடர் நீர் பற்றாக்குறையை அனுபவிப்பார்கள். 2 டிகிரி அல்லது அதற்கும் குறைவாக வெப்பநிலை அதிகமானாலும் கூட. துருவ விலங்கினங்கள் (மீன்கள்,பெங்குவின்கள், சீல் விலங்குகள் மற்றும் துருவக் கரடிகள் உட்பட), வெப்ப மண்டல பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.
இதுவே, வெப்பநிலை 3 டிகிரி உயர்ந்தால் வானிலையின் தீவிரம் ஐந்து மடங்கு அதிகரிக்கும்.உலக அளவில், கொடிய வெப்ப அழுத்தத்துக்கு ஆளாகும் மக்கள் தொகை சதவிகிதம் தற்போதுள்ள 30 சத விகிதத்திலிருந்து நூற்றாண்டின் இறுதியில் 48 முதல் 76 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டு ள்ளது. 50 சதவிகித தாவர,விலங்கு இனங்கள் அழித்து விட வாய்ப்பிருக்கிறது என அச்சமூட்டுகிறது அந்த அறிக்கை.
உலக வெப்பம் 4 டிகிரி அதிகரிக்கும் பட்சம், தெற்கு ஆசியாவின் சில பகுதிகளில் வெளியில் பணி செய்பவர்களுக்கு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாகும்.வேலைத்திறன் கணிசமாகக் குறையும். இதன் விளைவாக உணவு உற்பத்தி குறையும். மற்றும் உணவு விலைகளும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவில் சுமார் 70 சதவிகிதம் இந்தியாவின் சனத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் உள்ள நகரங்கள்
2050 ம் ஆண்டு. உலக மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள். வெப்ப அவைகள் (Heatwave) போன்ற தீவிர வானிலையை நகரங்கள் அதிகம் சந்திக்கும். காற்று மாசுபாடு அதிகரிக்கும். போக்குவரத்து, நீர், சுகாதாரம் மற்றும் மின் ஆற்றல் அமைப்புகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பின் செயல்பாட்டை இது பாதிக்கும். மேற்கு. மத்திய மற்றும் தெற்கு ஆசியாவின் வறண்ட மற்றும் வறட்சிக்கு உட்பட அதிகம் வாய்ப்புள்ள பகுதிகளில் வறட்சி ஏற்படும். தெற்கு தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் பருவமழை பகுதிகளில் வெள்ளம், இந்துகுஷ் இமயமலைப் பகுதியில் பனிப்பாறை உருருதல் ஆகியவற்றுடன் ஆசியா முழுவதும் வெப்ப அலைகளின் சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும். மேலும், இந்த நூற்றாண்டி இறுதியில் ஆசிய நாடுகளில் வறட்சி நிலை 5 முதல் 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்கிறது ஆய்வு முடிவு.
இந்தத் தொடர் வெப்ப உயர்வுகளால் சமயம், சில இடங்களில் தீவிர நிலைகளால் மீள முடியாத மாற்றங்கள் ஏற்படலாம் உதாரணமாக, இனங்கள் அழிந்து போவது போன்றவை. உலக வெப்பநிலையில் ஒவ்வொரு படி உயர்வுக்கும் அதைவிட பன்மடங்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
Post a Comment