கடலில் வாழும் மெல்லுடலிகளில் ஒன்று ஒக்டோபஸ்!(Octopus) மிருதுவான பை போன்ற எட்டு கைகள் உடலிலிருந்து பரந்திருக்கும். பெரிய பளபளப்பான கண்களும், உறுதியான தாடைகளும் கொண்டது.இதற்கு ஓடு கிடையாது. கொடுக்கு போன்ற நீண்ட கைகளால், நண்டு, போன்றவற்றை பிடித்து சாப்பிட்டு விட்டு, சக்கையை துப்பிவிடும். எட்டு கைகளில் ஒன்றை இழந்தாலும் மீண்டும் வளர்ந்துவிடும்.
தொந்தரவு கொடுத்தால், ஒருவகை கறுப்பு திரவத்தை பீச்சிக் கொண்டு விரைந்து ஓடிவிடும். எதிரி பின் தொடராமல் இருக்கவே இப்படி செய்கிறது. மெல்லுடலி உயிரினங்களில், இதுவே அதிக மூளை வளர்ச்சி கொண்டது. உணர்ச்சி வசப்படும் போது, இதன் நிறம் பழுப்பு, சிவப்பு, நீலம், வெள்ளை என்று பலவிதமாக மாறும். சூழ்நிலைக்கேற்பதன் நிறத்தை மாற்றும்!
ஒக்டோபஸுக்கு 8 உணர்ச்சிகொடுக்குகள் உள்ளன. அவை 2 'கால்கள்', 6 'கைகளாக' பிரிக்கப்பட்டுள்ளன. உணர்ச்சிக் கொடுக்குகளின் எண்ணிக்கை திகதி, உலக ஒக்டோபஸ் தினமாக அறிவிக்கப்பட்டது
இவற்றில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. பெரும்பாலும் அவை கடல்களையும், கடற்பரப்புகளையும் உறை விடமாகக் கொண்டிருக்கும். நண்டுகள்,இறால்களை உணவாகக் கொள்ளும்.
பொதுவாக ஒக்டோபஸ் 16 அடி வரை வளரும். 50 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும். பசிபிக் பெருங்கடலில் வாழும் ராட்சத ஒக்டோபஸ்தான் உலகிலேயே மிகப் பெரிய ஒக்டோபஸ்.
தாமோக்டோபஸ் மிமிக்கஸ் எனப்படும் ஒக்டோபஸ் வகை வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், ஆபத்தை உணர்ந்தால் வெள்ளைக் கோடுடன் பழுப்பு நிறத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்பு கொண்டது. 'நீல வளையம் கொண்ட அக்டோபஸ்தான் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஒக்டோபஸ் இனம்.
நினைவாற்றல் கொண்டவை" என்று கூறுகின்றனர். அவற்றால் மனிதர்களையும் அடையாளம் காண முடியுமாம். அவை மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்த உயிரினம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பெரும்பாலும் அக்டோபஸ்கள் கடுஞ் சிவப்பு நிறத்தில் காணப்படும். அவை ஓய்வெடுக்கும் நேரத்தில் பிங்க் நிறத்தில் தோற்றமளிக்கும்.
அக்டோபஸ்களின் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இவற்றுக்கு மூன்று இதயம் உண்டு. இதன் மூளை டோனட் வடிவத்தில் இருக்கும்.
ஒக்டோபஸ்ஸின் விஷம் மனித உடலில் பரவினால் பார்வை இழப்பு, மூச்சுப் பிரச்சினைகள், இருதய பாதிப்புகளை ஏற்படுத்தும். இறப்பு நிகழவும் வாய்ப்பு உள்ளது.
ஒரு முறை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால், அதற்குப் பின் ஆண் ஒக்டோபஸுகள் அதிகபட்சம் சில மாதங்களே உயிர்வாழும். ஒரு பெண் ஒக்டோபஸ் 4,00,000 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகள் பொரிக்க ஐந்து மாதங்கள் ஆகும். அத்தனை நாள்களும் அந்தப் ஒக்டோபஸ் இரவு பகல் பாராமல் பெண் முட்டைகளைப் பாதுகாக்கும். இதனால் பெரும்பாலும் அந்த காலகட்டத்தில் உணவுகளைக்கூட தவறவிடுகிறது.
அதிகபட்சம் பெண் ஒக்டோபஸுகள் தன் முட்டைகள் பொரிந்த பின் ஒரு சில நாட்களே உயிர் வாழ்கின்றன.
Post a Comment