.

டான் பிரவுன் எழுதிய டாவின்சி கோட் நூலானது தந்திரங்களின் குவியல் என்றே சொல்லலாம்.இவரால் மட்டும் எப்படி முடிகிறது என்று வாசிக்கும்போது மிகவும் யோசித்த விடயமாகும்.பக்கத்திற்கு பக்கம் மர்மங்களும் முடிச்சுக்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்த அற்புதமான மிகவும் விரும்பி வாசிக்கக்கூடிய நாவல் டாவின்சி கோட்  ஆகும்.Library Journal குறிப்பிட்டது போல இந்தப் புத்தகமானது ஒரு மாஸ்டர் feess படைப்பு என்பதே பொருத்தமானதாகும்.தான் ஒரு மிகவும் திறமை வாய்ந்த எழுத்தாளர் என்பதை இந்தப் புத்தகத்தில் பிரவுன் நிரூபிக்கிறார்.பக்கத்திற்கு பக்கம் சுவாரஸ்யம் நிறைந்த வரலாற்றுப் பின்னணி கொண்ட படைப்பு டாவின்சி கோட் ஆகும்.இந்த நாவல் நிச்சயம் உங்கள் இதயத் துடிப்பை பதம் பார்க்கும் என்றே கூறலாம்.

பிரவுனின் ஏனைய நாவல்களான நரகம்,தி லாஸ் சிம்பல் மற்றும் ஆரிஜின் ஆகியவற்றைப் போல இந் நாவலும் குறியீட்டை மையமாகக் கொண்டே பின்னிப் பிணைகிறது.ராபர்ட் லேங்டன் என்னும் கதாப்பாத்திரம் பிரதான கதாப்பாத்திரமாக நாவல் முழுவதும் வருகிறது அத்தோடு அவருக்கு உதவி செய்பவராக சோபியா என்னும் கதாப்பாத்திரமும் கூடவே பயணிக்கிறது. இதனை விட முக்கியமாக சோபியாவின் தாத்தா கதாப்பாத்திரம் நிலைபெறுகிறது ஜக்குவர் சோனியர் என்னும் கதாப்பாத்திரம்.நாவலின் தொடக்கத்திலேயே சோனியர் கொலை செய்யப்படுகிறார் ஆனாலும் நாவலைத் தீர்மானிக்கும் கதாப்பாத்திரமாக நிலை பெறுகிறார் சோனியர். இதனை விட இன்னும் சில கதாப்பாத்திரங்கள் இடைக்கிடையே தலை காட்டுகிறன.கேப்டன் பெஸீ,டீபிங் மற்றும் பெசுபெசுக்கே ஆகியவையே அவையாகும்.ஓபஸ்டேயின் கொலை செய்யும் ஏவலாளாக சிலாஸ் என்னும் கதாப்பாத்திரமும் மதகுருவாக பிஸப் அரிங்கரோசவும் இந்நாவலில் வலம் வருகிறனர்.

இந்த நூலில் வரும் கதை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை சிறிதே அசைத்துப் பார்த்திருக்கலாம் என்றே கருதுகிறேன்.ஏனெனில் கிறிஸ்தவ வரலாற்றில் புதிய மாற்றமாக இயேசு திருமணமானவர் என்றும் விவிலியத்தில் விபச்சாரியாகக் காட்டப்படும் மேரி மெக்தலின் அவரது மனைவி என்றும் அவர்களிற்கு சேரா என்ற பெண் குழந்தை இருந்ததாகவும் கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின் மெக்தலினும் சேராவும் எகிப்திற்கு தப்பிச் சென்று பின் எங்கிருந்து கடல் வழியே பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார்கள்.சேராவின் பரம்பரை பின்னாளில் மெரோவிங்யன் என்ற அரச குடும்பத்தில் மணந்து பிரான்ஸ் நாட்டின் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆனார்கள்.Priory of Sion என்ற இரகசிய சங்கம் இந்தப் பரம்பரை இரகசியத்தை Bloodline மிகவும் இரகசியமாக காப்பாற்றி வந்துள்ளது.இன்னும் பல புனைவுகள் சேர்த்து இந்த நூல் இச் சங்கத்தின் கதைகளை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டுள்ளது.

1982 ம் ஆண்டு வெளிவந்த பெய்ஜென்ட் லெய் என்ற இரு ஆசிரியர்கள் இணைந்து எழுதிய என்ற ஆய்வ நூலைச் சார்ந்தும் இந் நாவலை பிரவுன் எழுதியுள்ளார்.இதனால் அவர்கள் இருவரும் பிரவுன் மீது ஒரு வழக்குத் தொடர்ந்தனர்.அவர்கள் வழக்கு தோல்வியில் முடிந்தது.ஆயினும் பிரவுனின் நூல் பெய்ஜென்ட் லெய் இருவரின் நுலை அடிப்படையாக வைத்தே எழுதப் பட்டது என்று தீர்ப்பில் கூறப்பட்டது.ஆயினும் அது நேரடியான நகலாக எழுதப் படவில்லை என்பதே தீர்ப்பாக அமைந்தது.இதை எழுத்து திருட்டு என்பதா உந்துதல் என்று மட்டும் கொள்வதா என்பது வாசகர்கள் முன்நிற்கும் ஒரு பெரும் கேள்வி.

உங்கள் நூலில் எழுதியவை எத்தனை அளவு உண்மை என்று நேர்காணலின் போது கேட்டபோது பிரவுன் தாம் எழுதியது அனைத்தும் உண்மை என்றார்.ஆயினும் நூலில் உண்மையும் கற்பனையும் கலந்தே இருக்கிறன வாசிப்போர் ஒவ்வொருவரின் நம்பிக்கையைப் பொறுத்தே அவை வெவ்வேறு நிறம் காட்டுகிறன.

கதையின் தொடக்கத்தில் சோனியர் கொலை செய்யப்படுகிறார்.அந்தக் கொலையை யார் செய்திருப்பார் என்பதை கண்டுபிடிக்க லேங்டனை அழைத்துச் செல்கிறது காவல்துறை.அங்கே லேங்டன் சோனியரின் மறைக் குறியீடுகளை ஒவ்வொன்றாக முடிச்சவிழ்க்கிறார்.லேங்டனை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க பிரெஞ்சுக் காவல்துறை கூட இருந்து ஒற்றிதல் முறையைப் பின்பற்றியது அதாவது குற்றவாளியை குற்றம் நடந்த இடத்திற்கு வரவழைத்து அவரை விசாரிக்கும் போது தவறுதலாக அவரே தன் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பது என்ற முறையில் லேங்டனையும் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தது.சோபியா உள்ளே வந்ததும் கதையின் போக்கு மாறிப்போகிறது.லேங்டன் காவல்துறைக்கு உதவி செய்ய வரவில்லை லேங்டனையே குற்றவாளி என காவல்துறை முடிவு செய்து விட்டது என்பதை சோபியா மூலம் லேங்டன் உணர்கிறார்.சோனியரும் லேங்டனும் சந்திப்பதற்கு நாள் குறிக்கப்பட்டிருந்ததையும் சோனியர் தான் இறப்பதற்கு முன் லேங்டனின் பெயரை குறிப்பிட்டிருப்பதை வைத்தும் அவர்தான் குற்றவாளி என்று சந்தேகிக்கத் தொடங்கி விட்டது பிரெஞ்சுக் காவல்துறை. சோபியாவின் உதவியுடன் அங்கிருந்து தப்பிக்கும் லேங்டன்,சோபியாவுடன் சேர்ந்து சோனியரின் குறியீடுகளைப் பின் தொடர்ந்து சொல்கிறார்.சோனியர் குறிப்பட்ட ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டு வருகையில் கதையின் ஓட்டத்தில் ஒரு கட்டத்தில் இயேசுவிற்கு ஒரு காதலி கிட்டத்தட்ட மனைவி இருப்பது தெரிய வருகிறது.மேரி மேக்தலின் எனக் குறிப்பிடப்படும் அவர் இயேசுவின் வாரிசைச் சுமந்த புனிதக் கோப்பையாவார் என்றும் தெரிய வருகிறது.இயேசு தனக்குப் பின் மேக்தலின் தன்னுடைய கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த அவருடைய சீடர்கள் மேக்தலினை ஏற்றுக் கொள்ளவில்லை. மேக்தலின் தேவாலயத்திற்கு ஆராதனை செய்வதையும் விரும்பவில்லை. அதனால் விவிலியத்தில் அவளைப் பற்றி தரக்குறைவாகவும் விபச்சா ரியாகவும் குறிப்பிட்டு வைத்துள்ளனர் என்பதை நாவல் உணர்த்துகிறது. இயேசுவைக் கடவளின் அவதாரமாகக் காட்ட மேக்தலினைப் பெரிதும் கேவலப்படுத்தி விட்டனர் என்பதும் தெரியவருகிறது.இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின் பிரான்சிற்குத் தப்பிச் செல்லும் மேக்தலின் அங்கே இயேசுவின் வாரிசைப் பெற்றெடுக்கிறார்.அவர்களது வழித்தோன்றல்கள் நிகழ்காலம் வரையிலும் உயிர் வாழ்கிறார்கள் என்கிறது இந்நாவல்.அந்த வழித் தோன்றல்களை லேங்டன் கண்டுபிடிக்கிறாரா இல்லையா..?அதை விடப் புனிதக் போப்பையான மேக்தலினின் கல்லறையையும் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை விறு விறு சுவாரஸ்யத்துடன் சொல்கிறது டாவின்சி கோட்.


யார் அந்த இயேசுவின் வாரிசுவின் வழித்தோன்றல் என்று தெரியுமிடத்தில் நாவலை வாசிக்கும் அனைவரும் அதிர்ச்சியடைவர் என்பது நிச்சயம். லேங்டனுக்கும் சோபியாவும் உதவி கேட்டுச் செல்லும் பேராசிரியர் டீபிங் ஒரு கட்டத்தில் திருப்புமுனையடைந்து இருவரையும் கொலை செய்ய முயற்சிக்கும்போதும் வாசகர்கள் அதிரச்சியடைவார்கள் என்பது உறுதி.

கிறிஸ்தவ மதம் பற்றிய அறியாத அறியக் கிடைக்காத பல அரிய தகவல்கள் இந்த நாவலில் புதைந்து கிடக்கிறன.யாரும் பேசத் துணியாத விடயங்களை எல்லாம் துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார் பிரவுன்.கிறிஸதவ மதத்தின் தோற்றம் வளர்ச்சி தற்போதைய நிலையை அடைவதற்கு மதகுருமார்கள் செய்த வேலைகள் இடைச் செருகல்கள் மாற்றல்கள் என எல்லாவற்றையும் குறிப்பிடுகிறது இந்நாவல்.குறிப்பாக கிறிஸ்தவத்தில் பெண் தெய்வ வழிபாட்டை எப்படி மறுதலித்து வரலாற்றிலிருந்து மறைத்தார்கள் என்பதை டாவின்சி கோட் நாவல் மூலம் அறிந்து கொள்ள முடியும்.என்ன என்ன இடைச் செருகல்கள் மாற்றங்கள் என்னவென்பதை புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். அனைத் தையும் நான் குறிப்பிட முடியாதல்லவா...

பைபிள் என்பது மனிதர்களின் தயாரிப்புத்தான்.அது கடவுளுடையது அல்ல. பைபிள் மாயமந்திரம் செய்து மேகத்திலிருந்து விழுந்து விடவில்லை. முறையற்ற காலங்களின் வரலாற்றுப் பதிவாக மனிதன் அதனை உருவாக் கினான்.அது எண்ணிலடங்கா பிற்சேர்க்கைகள்,மற்றும் திருத்தங்கள் ஆகியவற்றால் உருவானது.இந்தப்புத்தகத்தின் நிச்சயிக்கப்பட்ட பதிப்பு குறித்து வரலாற்றில் நிச்சயிக்கப்பட்ட பதிவு எதுவுமே இடம்பெறவில்லை என்று பைபிள் என்பதன் வரைவிலக்கணத்தை குறிப்பிடுகிறது டாவின்சி கோட்.

மொத்தத்தில் டாவின்சி கோட்  நாவலானது ஒரு Master Fees படைப்பாகும். வாசிப்போம்.

டாவின்சி கோட் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

You have to wait 45 seconds.

Generating Download Link...


டான் பிரவுனின் ஏனைய நாவல்களை வாசிப்பதற்கு


Post a Comment

Previous Post Next Post