.

அணில் நம்முடைய வீடுகளில் அருகில் அதிகம் காணப்படக்கூடிய விலங்கு. ஏதாவது மரங்கள் உங்கள் வீட்டின் அருகில் இருந்தால் கண்டிப்பாக உங்களால் தினமும் அணிலை பார்க்க முடியும்.

கொஞ்சம் பழகினால் சர்வசாதாரணமாக நம்முடைய பக்கத்தில் வரக்கூடிய விலங்கு இந்த அணில்.பல வீடுகளில் இந்த அணிலை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்கள்.

சாப்பிடக்கூடிய எந்த காயாக, கொட்டையாக இருந்தாலும் இதை அணில்கள் விடாது. பழுக்கும் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மரத்தில் இருக்கக்கூடிய காய், கொட்டை வகைகளை அழித்து நாசம் செய்யும்.

உணவுகளை சேமித்து வைப்பதில் அணில்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே ஆர்வமிருக்கும். சுறுசுறுப்பாக காய்கறிகளை சேமித்து வைக்கும். இதனால் ஒரு சில நன்மைகளும் உண்டு

அணில் ஏன் எப்பொழுதும் கொறித்துக் கொண்டே இருக்கிறது தெரியுமா? அணிலுக்கு 4 முன்பற்கள் இருக்கும். இந்த முன்பற்கள் மிக நீளமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கூர்மையாகவும் தொடர்ந்து வளரக்கூடிய தன்மையும் கொண்டவை.இது ஆண்டுக்கு ஆறு அங்குல அளவில் வளரும். இதனால்தான் அணில்கள் மரப்பட்டை,கொட்டைகளை மற்றும் கையில் கிடைத்தவற்றை தொடர்ந்து கொறித்துக் கொண்டே இருக்கும். இப்படி அணில்கள் கொறிக்காவிட்டால் பற்கள் தொடர்ந்து நீளமாக வளர்ந்துவிடும்.

அப்படி நீளமாக வளர்ந்து விட்டால் அதன் வாயை அசைக்க முடியாது. இதனால் அவையில் பட்டினி கிடந்து இறக்கவும் நேரிடும். ஆகையால் தான் எப்பொழுது பார்த்தாலும் அணில்கள் கொறித்து கொண்டே இருக்கின்றன.

அணில்களிடம் முக்கியமான ஒரு சிறப்பு குணம் உள்ளது. அணில் குட்டிகளின் தாய் உணவு தேடச் செல்லும் பொழுது மற்ற விலங்குகளால் கொல்லப்பட்டால் அதன் குட்டிகளை மற்ற அணில்கள் தத்தெடுத்து வளர்க்கும் இயல்பு கொண்டவை. ஒரு கூட்டுக் குடும்பம் போல இவைகளின் வாழ்க்கை இருக்கும்.

அணில் மரத்தில் இருந்து எடுக்கும் பழ கொட்டைகளை எல்லாம் பிறகு சாப்பிடுவதற்காக ஒளித்து வைத்திருக்கும்.ஆனால் இதில் 30 சதவிகிதத்தை மட்டுமே திரும்ப எடுக்கும். மீதி 70 சதவிகிதத்தை மறந்து விடுமாம்.

அது மட்டுமல்லாமல் ஒரு அணில் மறைத்து வைத்திருக்கும் கொட்டைகள் வேறு விலங்குகளும், பிற அணில்களும் சாப்பிடும்.அது போக மீதி இருக்கும் 70 சதவிகிதம் கொட்டைகளை அணில் மறந்து போவதால் அந்த கொட்டைகளி லிருந்து அதிக மரங்கள் முளைக்கின்றன.

இதனால் மறைமுகமாக அளவில் மரங்களை காடுகளில் வளர உதவி புரிகிறது. இப்படி காட்டை பாதுகாத்து வளர்ப்பதில் அணிலுக்கு முக்கிய பங்கு உண்டு அணிலால் உடல் நீளத்தைப் போல10 மடங்கு தூரத்திற்கு குதிக்க முடியும்.

அணிலின் பார்வை திறன் மிகவும் கூர்மை இருக்கும். இதனால் மிக விரைவாகவே மற்ற எதிரி விலங்குகள் எங்கு செல்கிறது,எங்கு இருக்கிறது என தெரிந்து கொண்டு அதற்கேற்ப எதிரி விலங்குகளிடம் சிக்காமல் விரைவாக தப்பி செல்லும்.காட்டில் வாழும் பாலூட்டி விலங்குகளில் அணில் மட்டுமே
அதிகமாக பகலில் வெளியே சுற்றித் திரியும்.ஒரு ஆண் அணில் பெண் அணிலை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் அதன் மணத்தை வைத்து கண்டுபிடித்து விடுமாம்.

அணில்கள் இனப்பெருக்க காலம் பெப்ரவரி முதல் மே மாதம் வரை. கர்ப்பகாலம் மொத்தம் 44 நாட்கள். பொதுவாக ஒரு கர்ப்பத்தில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்.

அணில்கள் ஒவ்வொரு வாரமும் தங்களுடைய உடல் எடை அளவிற்கு சாப்பிடும்.சராசரியாக வாரத்திற்கு 680 கிராம் உணவை சாப்பிடும்.

அணில் 30 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் அதற்கு எந்த காயமும் ஏற்படாது. கீழே குதிக்கும் பொழுதும் விழும் பொழுதும் அணில் தன்னுடைய வாலை சமநிலையில் பரசூட்டை போல வைத்துக் கொள்ளும். இதனால் எந்த காயமும் அணிலுக்கு ஏற்படாது.

அணில்கள் பொதுவாக மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.
இருந்தாலும் ஒருசில அணில்கள் மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அணில்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள பல்வேறு வகையான சப்தங்களையும், ஒலிகளையும் ஒரு சில வாசனை மூலமாகவும் தொடர்பு கொள்கின்றன. ஆபத்து ஏற்படும் போது மற்றவர்களை எச்சரிக்க அணில்
தன்னுடைய வாலை பயன்படுத்துகிறது.

அணில்களில் 44 வகையான பறக்கும் அணில் வகைகள் இருக்கின்றன இது
பறப்பதைப் போல இருந்தாலும் உடலில் இரு பக்கமும் ஒரு விரியும் சவ்வை பயன்படுத்தி காற்றில் சறுக்கி செல்கிறது.

அது அதனுடைய மணிக்கட்டிலிருந்து கணுக்கால் வரை நீண்டிருக்கும் சவ்வை
விரித்து ஒரு பரசூட்டில் மனிதர்கள் இறங்கு போல இறங்கும். இது இயற்கை அணிலுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.









Post a Comment

Previous Post Next Post