உளவியல் நிபுணர் வைத்தியர் சாலினி எழுதிய பெண்ணின் மறுபக்கம் என்ற நூலானது பெண்களின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரைச் சொல்கிறது. மனிதர்கள் உருவாகிய காலத்திலிருந்து இருபத்தியோராம் நூற்றாண்டு வரை மனிதப் பெண்களின் வரலாற்றைத் தனியாகச் சொல்கிறது இந் நூல்.ஆண்-பெண் பாலியல் போராட்டங்களை ஆதி முதல் அந்தம் வரை ஒன்றும் விடாமல் சொல்கிறார் சாலினி.ஆண் பெண் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
உலகில் முதலில் தோன்றியது ஆண்தான்.அவனுக்குப் பின் அவனுடைய துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள்.ஆகவே ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள் உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண்.எனவே ஆண்தான் தலைவன் பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டுமே என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் இந்த நூலைப் படித்த பின் தங்களுடைய கருத்தை நிச்சயமாக மாற்றிக் கொள்வார்கள்.ஆணாதிக்க சிந்தனையில் இப் புத்தகத்தை வாசிப்பவர்களிற்கு இந்த நூலில் உள்ள கருத்துக்கள் நிச்சயம் எரிச்சலையே ஏற்படுத்தும்.ஆணாதிக்க முகமூடியைக் கிழித்தெறிய உதவுகிறது இந்நூல்.
ஆண்தான் மேலானவன் பெண் தாழ்ந்தவள் என்றும் பல கதைகள் ஆதிகால த்திலிருந்தே சொல்லப்பட்டு வருகிறன.ஏன் இப்படிக் கதைகளைக் கட்டியிரு க்கிறார்கள்..?பெண்ணைக் குறைத்து மதிப்பிடும் இத்தகைய கதைகள் நிச்சயம் பெண்களால் உருவாக்கியிருக்க முடியாது.இந்தக் கதைகள் அனைத்தும் ஆண்களின் வசதிக்காக ஆணாதிக்க சமுதாயம் கட்டி விட்ட வெறும் கதைகளே என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கிற போது உணர முடியும்.
பெண்ணின் தலைமைப் பதவி ஆணிடம் எப்படி வந்தது..?மீண்டும் அந்தப் பதவியை பெண்ணுக்குத் தராமல் எதற்காக ஆணே வைத்திருக்கிறான்...?பெண்ணின் அறிவை அகற்ற எத்தனை உத்திகளை ஆண் பயன்படுத்துகிறான் என்று பல கேள்விகள்.அத்தனை கேள்விகளிற்கும் பளிச்செனப் பதில ளிக்கிறார் சாலினி.
ஜீவராசிகளிலேயே மனிதகுலம் மட்டும்தான் தன் மேலான பாதிகளை இவ்வளவு மோசமாக நடத்துகிறது என்கிறார் சாலினி.மற்ற மிருகங்களிலிருந்து உதாரணத்தையும் எமக்கு காட்டுகிறார்.ஏனைய மிருகங்களில் ஆண் புலியை விட பெண் புலி சிறந்த வேட்டைக்காரி.ஆண் சிலந்தியை விட பெண் சிலந்தி பெரியது.ஆண் பாம்பை விட பெண் பாம்பு அதிக விஸமானது.அவ்வளவு ஏன் மழைக்காலத்தில் வரும் நுளம்புகளில் ஆண் நுளம்பை விட பெண் நுளம்புதான் எல்லோரையும் கடித்து மனிதர்களிற்க நோயைப் பரப்புகிறது.இப்படி எல்லா உயிரினங்களிலும் பெண் இவ்வளவு உஸாராக இருந்தாலும் மனித வர்க்கத்தில் மட்டும் ஏன் பெண் ஆணை விட வீரியம் குறைந்தே காணப்படுகிறாள்..?உண்மையிலேயே வீரியம் குறை ந்தவளா அல்லது காரணத்தோடுதான் அப்படிக் காணப்படுகிறாளா என்பதற்கான விடைகள் இந்தப் புத்தகத்தில் காணப்படுகிறன அவற்றை நீங்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அனைத்து மத நூல்களிலும் ஆண்தான் பெரியவன் என்ற கண்னோட்டத்தினையே வழங்குகிறன.மத நூல்களின் முதல் பக்கத்தைப் புரட்டினாலே இதனைத் தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை இருந்து வரும்போது டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு ஆணை விடப் பெண்தான் உயர்வானவள் என்று சொல்வதை சுட்டிக் காட்டியிருக்கிறார் சாலினி.
பெண்தான் ஆணைத் தேர்தெடுக்கிறது.அந்தத் தேர்வில் வெற்றி பெறவே ஆண் விலங்குகள் பெண்ணைக் கவர தங்கள் உடலில் கவர்ச்சியைப் பரப்பிக் காட்டுகிறன.எப்படி விவசாயி சிறந்த விதைகளைத் தேர்வு செய்து அதிக விளைச்சலைப் பெறுகிறானோ எப்படி குதிரை வியாபாரி வீரியம் மிக்க இரண்டு குதிரைகளைக் கலக்க விட்டு அடுத்த தலைமுறையை உருவாக்க முயல்கிறானோ அதுபோலத்தான் பெண்களும் ஆண்களிலேயே சிறந்ததைத் தேர்ந்தெடுப்பதாகக் குறிப்பிடுகிறது இந் நூல்.
ஆதியில் எல்லா உயிரினங்களுமே பெண்களாகத்தான் இருந்தன.பெண்பாலை உருவாக்குவது ஈஸ்டிரோஜன் என்னும் ஓமோனட.ஆனால் கரு உருவான பெண்களால் வாழ்வியல் போராட்டங்களில் முழு மூச்சாக ஈடுபட முடியவில்லை.அதனால் இந்தப் பெண்களெல்லாம் தங்கள் பாதுகாப் பிற்காக இருந்ததிலேயே துடிப்பான பெண்களின் துணையை நாடின. சில பெண்கள் அவ்வாறு வலிமையாக இருக்கக் காரணம் ஈஸ்ரோஜனை உற்பத்தி செய்த ஜீன் உருமாறி டெஸ்டெஸ்ரோன் என்ற புது ஓமோனை உருவாக்கியதுதான். இதனால் அப்பெண்கள் எல்லோரும் பழைய கர்ப்பிணிப் பெண்களை பாதுகாக்கத் தொடங்கினர்.இதனால் புதிய பெண்கள் எல்லாம் சிறிய முட்டை களை உருவாக்கும் திறனும் உருவாக்கிய முட்டைகளை பழைய வடிவ பெண்ணின் கருப்பையினுள் செலுத்த ஒரு குழாய் என புதிய வடிவத்தைப் பெற்று ஆணின் தோற்றத்தைப் பெற்றாள் என்று கூறுகிறார் சாலினி.ஆக ஆரம்பத்தில் ஆண் என்ற பாலினமே இல்லை பிழைப்புத்திறனை அதிகரிக்க பெண்ணிலிருந்து ஆண் என்கிற புது திரிபை மரபணுக்கள் உண்டாக்கின.இது தற்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது அதாவது ஆரம்பத்தில் எல்லாக் கருக்களுமே பெண்ணாகத்தான் உருவாகிறன.ஆறு வாரம் பெண்ணாக இருந்த பின்தான் Y நிறமூர்த்தம் உள்ள கருக்கள் டெஸ்டோஸ்டிரோனைச் சுரந்து ஆணாக உருமாறுகிறன.எனவே பெண்தான் மூலம்,ஆண் என்பவன் அவளுடைய இன்னொரு அவதாரம் என்ற உண்மையை உரைக்கிறது இந்நூல்.இதன் மேலதிக வரலாற்றை இந்தப் புத்தகத்தினை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மனிதர்கள் ஆரம்பத்திலிருந்து அதாவது கடந்த ஆறாயிரம் ஆண்டுகளிற்கு முன்பு வரை தாய் வழிச் சமூகமாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.அதன் பிறகே தந்தை வழிச் சமூகங்களாக மாறியிருக்கிறார்கள்.இதனை பழங்கால தெய்வ வழிபாட்டை வைத்தே விபரிக்கிறது இந்நூல்.அப்போது பெண்கள் உடமைகளைக் கொண்டு ஆள ஆண்கள் அவர்களது துணைவர்களாகவோ தளபதிகளாகவோதான் வாழ்ந்திருக்கிறார்கள்.அப்படி ஆட்சி புரிந்த பெண்க ளின் சரிவிற்கு காரணம் வெறும் இரண்டு உணர்ச்சிகள்தான் என்று கூறுகிறார் சாலினி அவையாவன ஒன்று பயம் இன்னொன்று பொறமை.அவ் உணர்ச் சிகள் எவ்வாறு பெண்ணைக் கீழிறக்கின.அதுவும் அடிமை நிலைக்கு எவ்வாறு கொண்டு சென்றன என்பதை மேலதிகமாக விபரிக்கிறது இந்நூல்.
ஆண்கள் என்னதான் வலிமையாக இருந்தாலும் பெண்களைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை விபரிக்கிறது இந்நூல் அந்தக் காரணங்களாவன அவளது பேச்சு,அவளது உழைப்பு,அவளது காமம்,கலவி என்கிற காரணங்களை அடுக்குகிறார்.
ஆண்களின் கை வரலாற்றில் ஒங்கியபோது ஆண்கள் தொடர்ந்து பெண்களின் ராஜ்ஜியத்தை அனுமதித்திருப்பார்கள் பெண் மட்டும் பிறப்பின் ஆதாரம் என்று அவர்கள் நம்பியிருந்தால் ஆனால் இங்கே கதை மாறிப் போனது. பழங்குடியின மக்களில் பெண்தான் இன்னும் ஆளும் ராணி ஆனால் நாகரீகமடைந்த இனத்தில் மட்டும் இது நடப்பதில்லை ஏன் என்ற கேள்விக்கான விடையை சாலினி விளக்கியுள்ளார்.ஆண்தான் பெண்ணுக்கள் திரவத்தைச் செலுத்துகிறது பெண் ஆணுக்குள் திரவம் எதனையும் செலுத்து வதில்லை அப்படியானால் ஆணிடமிருந்துதான் எல்லா உயிர்களும் உருவாகிறது பெண் வெறும் விளை நிலம் மட்டுமே என்று கருத்து வரலாற்றில் உருவாக ஆரம்பித்ததும் பெண் தன் சிம்மாசனத்திலிருந்து தடாலென இறக்கப்பட்டாள்.அவளது கதையும் மாறியது.இவ்வாறு பெண் வீழ்த்தப்படக் காரணம் அதிக அறிவள்ள ஆண்களைத் தேர்ந்தெடுக்கும் அவளது கலவியல் தேர்வுதான் என்பதை வலியுறுத்துகிறது இந் நூல்.
ஆதாம் ஏவாள் கதையை கடுமையான விமர்சிக்கிறது இப் புத்தகம்.அடிப்படை அறிவியல் அற்ற கட்டுக் கதையாகும்.இன்று வரை பெண்களை ஒடுக்கி வைத்திருக்கப் பயன்படும் பிரதான உத்தி என்கிறது இந்நூல்.
என்னதான் ஆண் பெண்ணுக்கு உரிமைகளை மறுத்தாலும் பெண்களிற்கும் பதவி அந்தஸ்த்து போன்றவற்றில் ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.அதனைக் கைவசப் படுத்த அவர்கள் கையாண்ட உத்திகளாக ஆண்முகமூடி,தேகத் தூண்டில்,பேதமை,மநைமுக தாய்வழி ஆதிக்கம்,ஜொகஸ்டா இஸம்,ஜார்ஜியா இஸம்,சுய ஆண்மயமாக்கல் போன்றவற்றின் மூலம் தங்களுடைய அதிகார ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளப் போராடுகிறனர் என்கிறார் சாலினி.
பிற்காலத்தில் தோன்றிய அல்பா ஆண்கள் யோசிக்க ஆரம்பித்ததும்தான் உலக வரலாறே மாறியது.பெண் என்ற ஒரே காரணத்திற்காக பெண்களை அடிமைகளை விட கேவலமாக நடத்தும் போக்கு அல்பா ஆண்களுக்குப் பிடிக்கவில்லை.தான் பெரிய பலசாலி என்று அல்பா ஆண்கள் யோசித்ததனால் பலவீனமான பெண்கள் கஸ்ரப்படுவதை அவர்களால் சகிக்க முடியவில்லை.அதனால் அவர்கள் கஸ்ரத்தை நிவர்த்தி செய்ய முயன்றார்கள். அதன் பின்னர் தான் பெண்களின் வரலாறு மாற ஆரம்பித்தது.பின்னர் பெண்களும் தமக்கு அறிவும் சுதந்திரமும் இருப்பதை உணர ஆரம்பித்தனர். அவர்களும் வெளியில் தமக்கு உரிமைகளை கேட்டு போராட ஆரம்பித்தனர் பின்னர் நிலைமை மாறியது என்கிறது இந்நூல்.
மனிதப் பெண் லேசுப்பட்டவளே இல்லை.யாரும் யூகிக்க முடியாத பரம ரகசியமான மறுபக்கம் ஒன்று அவளுக்கு உண்டு.பெண்ணின் இயல்பு மட்டும் மாறுவதே இல்லை.மொத்தத்தில் இந்த நூலானது அனைவரும் வாசிக்க வேண்டிய நூலாகும்.வாசிப்போம்.
பெண்ணின் மறுபக்கம் புத்தகத்தினை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Post a Comment