.

மூலதனம் அல்லது உழைப்பாளிகளே ஒன்று சேருங்கள் என்றதும் நமக்கு கால்ஸ்மார்க் மற்றும் எங்கெல்ஸ் நினைவுக்கு வருகின்றது. அதேபோல், 80 மரணதண்டனைக் கைதிகளுடன் கப்பலில் **இந்தியாவைக் கண்டடையப் புறப்பட்டு, இறுதியில் வட அமெரிக்க (USA) க் கனிவளங்களை ஸ்பானிய இளவரசிக்குக் கொண்டுவந்து சேர்த்த கொலம்பஸ்சையும், மற்றுமொரு கப்பல் பயணத்தின் மூலம், இந்தியாவிலுள்ள வாசனைத்திரவியங்களைத் தனது நாட்டுக்கு எடுத்துவந்த வாஸ்கொடகாமாவையும் அறியாதவர்கள் இருக்க முடியாது என நினைக்கிறேன்.மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கப் பயணம் என்றதும் **சே* வின் நினைவுகளை யாராலும் மறக்கமுடியாது.

புதிய புதிய நாடுகளை கண்டறிவதற்காகவும், அங்கிருக்கும் திரவியங்களை கொண்டு வருவதற்காகவும், அங்கே ஏற்கனவே வாழ்ந்து வரும் மக்களை அழித்து, தங்களுடைய மக்களைக் கொண்டுபோய் சேர்ப்பதற்காகவும், இப்படியாக பல கப்பல் பயணங்களை மேற்கொண்ட தேடுதல்வாதிகள், பின்னாளில் அவர்கள் அரசியலிலும் நாட்டை சூறையாடுவதிலும் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் டார்வின் அவர்கள் அறிவியல் மூலமாக எல்லாவற்றையும் அறிந்துகொள்வதற்காக மேற்கொண்ட பயணம் தான், இந்த எச். எம். எஸ். பீகில் பயணம் ஆகும்.
மகா அலெக்சாண்டருக்கு எப்படி ஒரு ஆசிரியராக அரிஸ்டாட்டல் அமைந்தாரோ, பிளேட்டோவிற்கு ஒரு சிறந்த ஆசிரியராக சாக்ரட்டீஸ் அமைந்ததோ, அதேபோல் தான் டார்வினுக்கு ஸ்டீபன்ஸ் ஹென்ஸ்லோ என்னும் பேராசிரியர் அவரது வளர்ச் சிக்குத் தூண்டுகோலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, கார்ஸ்மார்க், எங்கெல்ஸ் இருவரும் இணைபிரியாத நண்பர்கள். அதேபோல், ஆரம்பத்தில் சில முரண்பாடுகள் இருந்தாலும், பின் நாட்களில் பீகிள் கப்பல் பயணத்திற்கும் டார்வினின் அறிவியல் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் காப்டன் பீட்ஸ்ரோய் என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடலாம். டார்வின் அப்பப்போ தான் செய்த ஆராய்ச்சியின் குறிப்புக்களை உடனுக்குடன் தனது பேராசிரியருக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதனைவிட வேறு பல அறிவியலாளர்கள், அறிவியல் தேடல்கள் மூலமாகப் பலதரப்பட்ட, பல நாடுகளிலும் தோன்றி மறைந்தமை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது.
ஆனால், இந்த உலகிற்கு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி அறிவியல் மூலமாக நிரூபித்துக்காட்டியவர் தான் டார்வின் என்னும் மேன்மையான அறிவியலாளர்.
சிறுவயதிலும், பட்டப்படிப்புகளில் போதும் டார்வின் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர். அவரது அறிவியல் தேடலுக்கும், அவரது வாழ்க்கையை ஒரு திருப்பு முனையாக திருப்பிய 2 நூல்களை ஆசிரியர் இங்கே தருகிறார்.

1# ஜான்ஹெர்ஷெல் எழுதிய **இயற்கைத் தத்துவம் குறித்த ஆய்வுபற்றிய ஆரம்பப் போதனை **
2# ** அலெக்சாண்டர் வொன்யியூம் போல்டுட் எழுதிய **சுயவிளக்கம் **

டார்வின் தமது கடைசி நூல்களில் ஒன்றான மனிதனின் தோற்றமும் பால்வகைப்பட்ட தேர்வு என்னும் நூலில் தான் குரங்கின் உறுப்புகளுக்கும் மனித உறுப்புகளுக்கும் இடையேயான நெருக்கமான ஒற்றுமைகளை நிரூபித்தார் மேலும் மாற்றமடைந்த குரங்கின் தொடர்ச்சிதான் மனிதன் என்பதனை டார்வின் விளக்கினார் என்று கூறுகிறார் ஆசிரியர் *ஆர். பெரியசாமி அவர்கள். ஆனால் நண்பர்களே, பேராசிரியர் S.தினகரன்* அவர்கள் ஒரு காணொளியில் குரங்கிலிருந்து படிப்படியாகத் தான் மனிதன் தோன்றினான் என்ற பரிணாமக் கோட்பாட்டை எந்த இடத்திலும் சொல்லவே இல்லை, என்ற ஒரு புதிரைப் போடுகிறார். ஆனால் மனித வளர்ச்சி, இனப் பெருக்கம் காலம் காலமாக பரிணமித்து வந்ததற்கு அவரது 5 வருட பீகிள் கப்பல் பயணத்தின் மூலமாக அவர் சேகரித்த நூற்றுக்கணக்கான தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதனது உறுப்புக்கள், மண்புழுக்களின் பகுதிகள் போன்றனவற்றைக் கொண்டு, தனது அறிவியல் ஆய்வுகள் மூலம், அவரது நூல்களில் இருந்து அறியலாம்.



அறிவியல் புரட்சியாளர் டார்வின் என்ற இந்நூல் மிகச் சிறிய நூலாக இருந்தாலும், டார்வினைப் பற்றிய அதிமுக்கிய பகுதிகளை உள்ளடக்கியது என்றே கூறலாம். இதனைச் சிறந்த முறையில் ஆசிரியர் **ஆர். பெரியசாமி அவர்கள் நமக்குத் தந்த பெரும் கொடையாகவே பார்க்கலாம்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு விளக்கும் நூலாகவே இது அமைந்துள்ளது.
  • டார்வினின் வாழ்க்கை வரலாறு*
  • உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி
  • எச். எம். எஸ். பீகிள் என்ற கப்பல் மூலம், உயிரியல், மண்ணியல், விலங்கியல், தாவரவியல் இது போன்ற பல ஆராய்ச்சிகளுக்கான பயணம்
  • தனது கண்டுபிடிப்புக்களை நிரூபிப்பதற்கு, மதவாத படைப்புவாதிகளுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள்
  • டார்வின் எழுதிய மிகப் பிரபல்யமான நூல்கள்
  • மார்க்ஸ் க்கு ஒரு எங்கெல்ஸ் கிடைத்தது போல், டார்வினுக்கு ஒரு கப்டன் பீற்ஸ்ரோய்
அமைந்துவிட்டார். இவர் டார்வினின் வளர்ச்சிக்கு மிகவும் பக்கபலமாக இருந்ததைக் காணலாம்.

மேலும், பேராசிரியர் ஹென்ஸ்லோ என்பவரது அரவணைப்பில் பல முன்னெடுப்புக்களை மேற்கொள்ள டார்வினுக்குப் பெரும் துணையாக இருந்தது.
உயிரியலையும் விட மண்ணியல் தொடர்பான ஆய்வுகளையே அவர் விரும்பி மேற்கொண்டார் என்பதற்கு, தனது 42 ஆண்டுகால ஆராய்ச்சியின் பின் அவரது 72 வயதில் மண்புழுக்களின் செயல்பாட்டால் தாவரங்களுக்கான உதிர்மண் உருவாக்கம் ** என்ற நூலை வெளியிட்டார்.
முக்கியமாக டார்வினின் தந்தை ஒரு பிரபல மருத்துவர். ஆனால் டார்வினை ஒரு சிறந்த பாதிரியாராக ஆக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டார். இதே வேளை டார்வினின் தாத்தா ஒரு அறிவியலாளர். டார்வின் தனது பல்கலைக்கழகப் படிப்பிலேயே தனது அறிவியல் தேடலில் நுளைந்து விட்டார் என்பதைக் காணலாம். தந்தையின் விருப்பப்படி அவர் நடந்திருந்தால், இப்போ அவர் படைப்புவாதக் கோட்பாட்டை அங்கீகரித்திருப்பார் என்பதில் சந்தேகம் இருக்காது.
டார்வினின் வாழ்க்கையைப் பார்த்தால், அவருக்கு சிறந்த மனைவியாக எம்மா அமைந்தது அவரது வளர்ச்சிக்கும், குடும்பப் பொறுப்புக்களைக் கவனிப்பதற்கும், குறிப்பாக டார்வினின் தீராத நோய்க்குப் பக்கபலமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உயிரினங்கள் காலங்காலமாக மாற்றம் அடைந்தமை காரணமாக பரிணாம வளர்ச்சியில், வழித்தோன்றல்கள் என்பது மிக முக்கியமானது. இதனை டார்வின் தனது முடிவாக இப்படிக் கூறுகின்றார். **எண்ணற்ற உயிரினங்கள் குழுவினங்கள், குடும்பங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த உயிர்களால் இவ்வுலகில், இவையெல்லாம் அதனதன் வகுப்பிற்கும், குழுவிற்கும் பொதுவான பெற்றோர் களிடமிருந்து வழித்தோன்றல்களாக, பாரம்பரியமாக வந்தவையாகும். இவ்வாறு வழித்தோன்றல் மூலமாக மாற்றமடைந்தன. *இதுவே எனது முடிவான கருத்து.

அவரது ஆராய்வின் படி, உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சி, என்பன பல மில்லியன் ஆண்டுகளாக பரணமித்த வண்ணமே இருக்கின்னறன. அவற்றில் இயற்கையான மாற்றங்கள் எப்போதும் இடம்பெறுவதாகச் சொல்கிறார். ஆனால் இன்றைய காலகட்டத்தில், மனிதனது மிதமிஞ்சிய தேவைகளினால் அவற்றை மரபணு மூலம் உற்பத்தி செய்கிறார்கள்.
இவரது காலகட்டத்திலும், அதற்கு முற்பட்ட காலத்திலும் அறிவியல் சம்பந்தமான பல நூல்கள், பல ஆராய்ச்சியாளர்களால் வெளிவந்துள்ளமையும், அவற்றில் குறிப்பாகப் படைப்புவாதிகளால் எழுதப்பட்டவற்றை விமர்சிக்கவும் தவறவில்லை. படைப்புவாதிகளின் கருத்துப்படி, இந்த உலக, உயிரினப் படைப்புகள் அவனால் (கடவுளால்) மட்டுமே உருவாக்கப்பட்டது. அதாவது ஒரு மாஜிக் மாதிரி, ஒரு 6 நாட்களில் எல்லாம் நடந்து முடிந்தது என்பதனை டார்வின் ஏற்க மறுத்து அதற்கான விளக்கத்தையும் முன்வைக்கிறார்.
இயற்கையின் விளையாட்டு என்று கூறும் டார்வின் மரபணு என்றால் அன்றைய காலகட்டத்தில் அது பற்றி அவர் அறிந்திருக்கவே இல்லை. ஆனால் பரிணாம வளர்ச்சியானது, சுருங்கி இருக்கும் பாயை விரித்துப் பார்ப்பது போன்றது என்று விளக்கம் தருகிறார் பேராசிரியர் எஸ். பாஸ்கர் அவர்கள்.

இயற்கைத் தெரிவே உயிரின வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் என்று கூறும் டார்வின் அதுபற்றித் துல்லியமாக எழுதியுள்ளார். இதனையே மதவாதிகள், அந்த இயற்கை தான் கடவுள் என்று அறிவற்ற தன்மையை முன்வைக்கிறார்கள் என்று முடிக்கிறார்.
இன்னும் கூட அவரது கட்டுரைகள், கடிதங்கள் பல வெளிவராமல் இருப்பதாக அறியப்படுகிறது. இந்த நூற்றாண்டிலும் அமெரிக்காப் பிற்போக்கு சக்திகளையும் எதிர்த்து நீதிமன்றங்களில் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, அவரது நண்பர்களால் வெற்றியடையச் செய்துள்ளமை, அவரது உழைப்புக்குக் கிடைத்த மாபெரும் உச்சி என்றே பார்க்கலாம். படைப்பு வாதிகளின் அட்டகாசம் எந்தளவுக்கு உடும்புப் பிடியாக உள்ளது என்பதற்கு, அதிபர் ஜோர்ஜ் புஸ் நிர்வாகத்தில் ஏற்பட்ட செயற்பாட்டை ஆசிரியர் ஆர். பெரியசாமி அவர்கள் இங்கே தரத் தவறவில்லை. இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் படைப்புவாதம் தலைவிரித்தாடுவதுபோல், அமெரிக்காவிலும் அதன் வேர் மிக ஆழமாக இருப்பதை, இந் நூலின் முலம் அறியலாம். டார்வின் கூட தனது ஆய்வுகளை நூல்களாக வெளியிட, ஆரம்ப காலத்தில் தயக்கம் காட்டியதாகவும், அதற்கு அவரது மனைவி எம்மா மதநம்பிக்கை கொண்டவராக இருந்த காரணத்தினால் அவரைக் வலைப்பட வைக்கக்கூடாது என்ற நோக்கத்திலேயே அவர் அப்படிச் சிந்தித்தார் என்றும், பின் நாட்களில் அதனை உணர்ந்தபின், டார்வினுக்குப் பச்சைக்கொடி காட்டியதாகவும் தரவுகள் காட்டுவதைக் காணலாம்.
டார்வினின் பரிநாமக் கோட்பாட்டினைத் தொடர்ந்து உயிரின் தோற்றம் **(The Origin of life) என்ற கண்டுபிடிப்பை 20 ஆம் நூற்றாண்டில் ஒரு சாதனையாக நிகழ்த்திக் காட்டியவர் சோவியத் யூனியனின் உயிரியல் அறிவாளர் அலெக்சாண்டர் ஓபாரின் ஆவார்.
இறுதியாக கரிமம் என்னும் உலோக தன்மையற்ற தனிமம் என்பது உயிர் உருவாவதற்கான பரிணாம வளர்ச்சியில் தொடக்கமாக உருவானது.இத்துடன் நொடிய காலப்போக்கில் நீரக வாயுக்களான ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து புதிய தனிமம் உருவாகியது.இப்படியே உயிர் உருவாவதற்கு வளர்ச்சிப் போக்கில் புரோட்டின் உருவாக்கம் உள்ளிட்ட பல கட்டங்கள் நீண்ட நெடிய கால வளர்ச்சிப் போக்கில் உருவாகின.இவற்றை விரிவாகவும் ஆழமாகவும் பரிசோத னைகள் மூலம் ஒபாரின் தமது உயிரின் தோற்றம் நூலில் விளக்கியுள்ளார். உயிரற்ற பொருளிலிருந்து உயிர் உருவாவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியில் ஒரு மிக முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகும். இந்த புரோட்டோபிளாசத்தை ஆராய்ந்த ஒபாரி, அது முந்தைய காலகட்டங்களில் உருவான புரோட்டின், கொழுப்பு போன்ற சேர்மானங்கள் உள்ளிட்ட உயிராக சார பொருட்களை கொண்டதும் ஆகும் என்று நிரூபித்துள்ளார்.
உயிரற்ற பொருளிலிருந்து உயிர் தோன்றியது எனவும், பொருட்களில் இருந்து தோன்றிய உயிரும் ஒரு பொருளே என்று ஒபார் தனது நூலில் அழுத்தமாக அதனை நிரூபித்துள்ளார்.
டார்வின் தொடங்கிய அறிவியல் புரட்சி நாளையும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை நண்பர்களே...
அருமைய இந் நூல் உங்கள் சிந்தனைகளைத் தூண்டும் என்பது நிட்சயம்.. வாசியுங்கள்.. வாசியுங்கள்..

நன்றிகள்
@ இந்ந நூல் விமர்சனமானது பொன் விஜி அவர்களால் எழுதப்பட்டது

Post a Comment

Previous Post Next Post