.

ரெய்ச்சல் கார்சன் எழுதிய மௌன வசந்தம் என்னும் நூலானது இயற்கை ஆர்வலர்களிற்கு ஏற்றது.சூழல் மாசடைதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.மௌனவசந்தம் ஒரு படைப்பாளரின் கடைசி நூல்.சுற்றுச்சூழலியலின் கருத்தை மௌனவசந்தம் படம் பிடித்துக் காட்டுகிறது.செயற்கை பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டினால் நாம் எதிர்பார்க்கும் விளைவிற்கு மாறானது நடக்கும்.1962 இல் இந்நூல் ரெய்ச்சலால் வெளியிடப்பட்டிருந்தாலும் தற்போதைய காலகட்டத்திற்கு நன்கு பொருந்துகிறது.சூழல் மாசடைதல் தற்போது மோசமான கட்டத்திலேயே உள்ளது.அதனைக் குறைக்க வேண்டும் என்ற சிந்தனையை 1960 களிலேயே முன்வைத்தவர் கார்சன்.

மனித தொழில் நுட்ப முன்னேற்றத்தின் மிக முக்கியமான ஆனால் சந்தேகத்திற்குரிய தன்மையை மிக ஆணித்தரமாக உயிரியல் பயிற்சி மற்றும் எழுத்தாற்றலைப் பயன்படுத்தி விளக்கியிருக்கிறார் கார்சன்.அவர் அமெரிக்காவை மையப்படுத்தி தனது புத்தகத்தை எழுதியிருந்தாலும் அது முழு உலகுக்குமெ பொருந்தக் கூடியதுதான்.சூழல் மாசடைதல் என்பது அமெரி க்காவிற்க மட்டுமான பிரச்சனையல்ல அது உலகளாவிய பிரச்சனையாகும். அமெரிக்காவின் கிராமப் புறங்களில் நச்சத்தன்மையுள்ள பூச்சிக் கொல்லிகள்,களைகொல்லிகள் ஆகியவற்றால் உயிரினங்கள் அழிக்க ப்படும் கதையே மௌன வசந்தம் புத்தகமாகும்.மௌன வசந்தமானது நச்சுப் பொருட்களை பற்றியது மட்டுமல்ல தாவரங்களும் விலங்குகளும் சுற்றுச் சூழலுடன் உள்ள உறவினைப் பற்றிய கதைதான் இப் புத்தகமாகும்.

உண்மையில் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோகார்பன்கள்,டியல்ரின்,அல்டரின்,ஹெப்டாகுளோர்,DDT போன்ற இரசாயப் பொருட்கள் பல்வேறு நாடுகளால் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன.அவை இப்போது பயனபாட்டில் இல்லாத இரசாயனங் களாகும்.அதுவே இப் புத்தகத்தின் வெற்றியாகும்.

மனிதர் தொடர்பான செய்திதான் இப் புத்தகத்தில் தரப்பட்டிருக்கிற மிகவும் அச்சுறுத்தும் செய்தியாகும்.இந்தக் கதையை விரிவாக கார்சன் சொல்வதற்கு விட்டுவிடலாம்.ஆனாலும் நாம் உண்ணும் உணவில் இரசாயனங்கள் கலந்துள்ளன என்பது உண்மை.இதனால் ஆபத்தில்லை என்று சொல்லப்பட்டாலும் அது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.இந்த இரசாயனப் பொருட்களை சிறியளவிலோ அல்லது பெரியளவிலோ உணவோடு சேர்த்து உண்கிறோம்.அவை அனைத்தும் கல்லீரலிலும் கொழு ப்பிலும் சேமித்து வைக்கப்படும்.இந்தப் பத்தகத்திலுள்ள ஆதாரங்களைஏற்கா விட்டாலும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கும் வரைத் தவிர்ப்பது நல்லது.கதிர் வீச்சைக் கொண்ட வயல்களில் தெளிக்க வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள்.ஆனால் வகை மாற்றி இரசாயனங்களைப் பயன்படத்துவது தொடர்பாக எண்ணிப் பார்ப்பதில்லை.இயற்கையில் சேருகிற மாசுக்கள் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.

மண் உயிரில்லாத ஒன்று இல்லை.அதில் நுண்ணங்கிகளும் தாவரங்களும் நிறைந்திருக்கிறன.ஆனால் நாம் ஒட்டுமொத்தமாக நஞ்சைத் தெளிக்கிறோம். இரை தேடுபவை எல்லாம் இறந்து போவது இரை தேடுவதில் பெரியதான மனித இனத்திற்கு பெரும் ஆபத்து என்கிறார் கார்சன்.நாம் நகரங்களை மாசுபடுத்துகிறோம்,ஆறுகளையும் கடல்களையும் நச்சாக்குகிறோம். அவற்றில் சில தவிர்க்க முடியாததாக இருக்கலாம்.நாம் பூமி மீது விழும் தாக்குதல்களை நிறுத்த உண்மையாக முயற்சிக்காவிட்டால் பிளாஸ்டி க்குகளும் கொன்கீரீட்டும் மனித ரோபோக்களும் நிறைந்த பாலை வனத் திலேயே உயிர் வாழ்வோம் என்கிறார் கார்சன்.அந்த உலகில் இயற்கை இருக்காது.மனிதனும் சில வீட்டு விலங்குகள் மட்டுமே உயிரினங்களாகக் காணப்படும் என்கிறது மௌன வசந்தம். 

இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை மொத்தமாகப் பயன்படுத்தியதன் விளைவாக பிரிட்டனில் பலவகை வண்ணத்துப் பூச்சிகள் மறைந்து விட்டன.குக்கூ என்ற பறவை இனம் அரிதாகி விட்டது.வேலிகளும் சாலை ஓரங்களும் அழகிய மலர்களை இழந்து வருகிறன.ஆங்கிலக் கவிதைக்கான கருப்பொருளையே இழந்து வருகிறோம் என்பதே உண்மையாகும்.


நாம் பூச்சிகளை கட்டுப்படுத்தாமல் அழிப்பதில் ஆர்வம் காட்டுகிறோம். இதற்கு கார்சன் பல எடுத்துக் காட்டுக்களைக் தருகிறார். அழித்து விடும் எண்ணமே சுற்றுச்சூழலுக்கு எதிரானதுதான்.அதிகமாக இருக்கும் பயிர்களை அழிக்கும் பூச்சியை அழிப்பது இயலாத காரியம்.அப்படி அழிக்கும்போது சிறது எண்ணிக்கையிலுள்ள பூச்சிகளை அழிப்பது எளிதாக நடந்து விடும். பூச்சிகளைக் கட்டுப்படத்த உயிரியல் சார்ந்த முறைகளைப் பரிந்து ரைக்கிறார் கார்சன்.கதிர் வீச்சிற்கு உட்படத்தப்பட்ட ஆண் பூச்சிகளை விடுவதாகும்.இவை மலட்டுத்தன்மை உடையதால் இனப்பெருக்கம் நடைபெறாது என்கிறார் கார்சன்.

வரலாற்றில் முதன் முறையாகக் கருவறையிலிருந்து கல்லறை வரையில் ஆபத்தான இரசாயனப் பொருட்களின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொருவரும் உட்படுகிறனர் என்று கார்சன் குற்றம் சாட்டினார்.அவருடைய தெளிந்த வாதம் அப்போதைய அமெரிக்க அதிபரைக் கவர்ந்தது.பின்னர் அவர் பூச்சிக் கொல்லிகளைத் தவறாகப் பயனபடுத்துவது குறித்து ஆராயுமாறு உத்தரவிட்டார்.

சுற்றுப் புறத்தின் நடைமுறைச் செயற்பாடுகளையும் மாற்றத்தை உண்டாக்கும் தனிநபரின் சக்தியையும் மௌன வசந்தம் எம்முடைய நினைவிற்கு கொண்டு வருகிறது.கார்சன் தன் நேசித்த உலகைக் காப்பற்ற எடுத்த முயற்சிகள் நமக்கு மாறாத உண்மையையும் வாரிசுச் சுமையாக விட்டுச் சென்றிருக்கிறன.

இன்றைய உலகை ஒரு கொந்தளிப்பான இடமாக அவர் புரிந்து கொண்டார்.வனங்களை வேகமாக அழித்து வருகிறது மனித இனம். இயற்கையை ஒருங்கிணைக்கபபட்ட உயிருள்ள முழுமையான அமைப்பாகப் பார்க்காமல் வியாபாரப் பொருளாக எண்ணுகிறார்கள் இதனை மௌன வசந்தம்  தடை செய்கிறது.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள சில வாசகங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.அவை வருமாறு கோரைப் புல் ஏரியில் வாடி விட்டது,பறவைகள் பண்ணிசைப்பதில்லை,மனிதன் வரவிருப்பதை அறிந்து தடுக்கும் திறமையை இழந்து விட்டான்.அவன் இறுதியில் உலகை அழித்து விடுவான்.

மௌன வசந்தம் நூலானது ஒரு புதிய வாழ்வியலை நம்பிக்கை ஒளியைக் கொடுக்கிறது.இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அதனைச் செவிமடுக்க எமக்குத் துணிவு வேண்டும்.வாசிப்போம்.

2 Comments

  1. அருமை,, சிறப்பான விமர்சனப் பார்வை,, வாழ்த்துக்கள் 🙏 🇨🇭 🙏

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post