.

ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலை உச்சியில் உள்ள சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..

அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும்..
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்..

அதில் முதலாமவன் கொண்டு வருகிறேன் என கிளம்புகிறான்.. தேவதை வழிகாட்ட ஓர் நிபந்தனை விதிக்கிறது..

”நான் உன் பின்னால் வருவேன்.. நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம்
திரும்ப வேண்டும் என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ நடப்பதை நிறுத்தக்கூடாது.. நடந்து கொண்டே இருக்கவேண்டும்.. எது நடந்தாலும்
பின்னால் திரும்பி பார்க்ககூடாது.” அப்படி பார்த்தால் கற்சிலையாகி விடுவாய் என்கிறது..

முதலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது.. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை ..

என்னாயிற்று.. என தன்னையறியாமல் முதலாமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறியதால் கற்சிலையாகி விடுகிறான்.




அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்..

கிட்டத்தட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.. திடீரென சிரிப்பு ஒலி கேட்கிறது.

ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்.. அவனும் கற்சிலையாகி விடுகிறான்..

மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின்வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்..பின்னால் அலறல் சத்தம்.. சிரிப்பொலி.. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான்

வெற்றியும் பெற்று மூலிகையும் கைப்பற்றுகிறான்..

பின்னால் வரும் தேவதை தான் நமது மனது. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்சியையும் செய்யும்.அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post