.

பாவ்லோ கொய்லோவால் எழுதப்பட்ட பதினொரு நிமிடங்கள் என்னும் நூலானது ஒரு பாலியல் தொழிலாளியின் கதையாகும்.உலகிலேயே மிக அதிகம் வாசிக்கப்படும் நேசிக்கப்படும் எழுத்தாளரான பாவ்லோ கொய்லோ எழுதிய பதினொரு நிமிடங்கள் நாவலானது பாலியல் தொழிலை பாலியல் தொழில் பற்றிய புரிதலை வேறொரு பரிணாமத்திலிருந்து சொல்கிறது.இந் நாவலுக்காக பல சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளார் கொய்லோ அவற்றுள் கிரிஸ்டல் விருதும் அடக்கம்.

பிரேசிலில் தொடங்கும் கதையானது சுவிஸிற்குப் பயணித்து இறுதியில் பிரேசிலுக்குத் திரும்புவதுடன் முடிவடைகிறது.பாலியல் தொழில் என்பது கேவலமானதல்ல தீண்டத்தகாததல்ல.பாலியல் தொழிலாளிகளும் சதையும் இரத்தமும் உணர்ச்சிகளும்  நிரம்பிய மனிதர்கள்தான் என்பதை வலியுறுத்துகிறார் கொய்லோ.

மரியா என்னும் பாலியல் தொழிலாளியின் உண்மைக் கதைதான் பதினொரு நிமிடங்கள் நாவல்.மரியாவின் அனுபவங்களையே நாவலாகத் தந்துள்ளார் கொய்லோ.அறியாத வயதில் ஏற்படும் மரியாவின் முதல் காதல் அவளது இதயம் நொருங்கக் காரணமாகிறது.இளம் வயதில் உண்மையான காதலைத் தான் சந்திக்கப் போவதில்லை என்ற முடிவிற்கு வரும் அவள் காதல் நம்மை வேதனைக்கு ஆளாக்கும் பயங்கரமான விடயம் என்று நம்பத் தொடங்குகிறாள்.ரியொவில் ஒரு சந்திப்பு மூலம் ஏற்படும் வாய்ப்பு அவளை ஜெனிவாவிற்கு இட்டுச் செல்கிறது.புகழையும் செல்வத்தையும் கனவு கண்ட மரியா இறுதியில் விலைமகளாகத் தன் வாழ்க்கையைத் தொடர்கிறாள். அதிலிருந்து வெளியில் எவ்வாறு வருகிறாள்.தன்னுடைய வருங்காலக் கணவனை எவ்வாறு தேர்ந்தெடுத்தாள் என்பதையும் விபரிக்கிறது இந்நூல்.

பிரேசிலின் எங்கோ ஒரு மூலைக் கிராமத்தில் பிறந்து வளரும் மரியா தனது 11 வது வயதில் முதல் முறையாகக் காதல் வயப்படுகிறாள்.ஆனால் அந்தக் காதல் அவளுக்கு கைகூடி வரவில்லை.அந்த சிறுவன் அவளை விட்டுப் பிரிகிறான்.மிகவும் சுவாவஸ்யத்திற்குரிய நபர்கள் எப்போதும் விட்டுச் சென்று விடுவார்கள் என்று எண்ணிக் கொள்கிறாள் அவள்.பின்னர் அவள் தன்னடைய 16 வது வயதில் இரண்டாம் முறை காதல் வயப்படுகிறாள்.முத்தமிடலின் போது மரியா வாயைத் திறக்காததினால் அவனும் மரியாவை விலகிச் செல்கிறான்.பின்னர் அவள் சுய இன்பம் செய்யப் பழகி கொள்கிறாள்.சுய இன்பத்தின் அத்தியாயங்களை இந்த நூலில் விவரிக்கிறார் கொய்லோ.பின்னர் மரியா மூன்றாவது நான்காவது முறை எனக் காதல் வயப்பட்டுக் கொண்டே இருந்தாள் ஆனால் யாரும் அவளுக்கு நிரந்தமாகி விடவில்லை.அவள் தனது மிச்ச வாழ்க்கையை இவனுடன்தான் செலவிடப் போகிறோம் என்று உறுதிக்கு வரும் வேளையில் அவளுடைய காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.அவளுக்கு ஒரு கனவு இருந்தது.தன்னுடைய கணவனுடன் கடற்கரை நோக்கிய வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற எண்ணம்.கனவு அவளுடையது.அதற்குஅவளுடைய காதல்கள் இடம் கொடுக்க வில்லை.

மரியா தன் பத்தொன்பதாவது வயதில் புடைவைக் கடையொன்றிற்கு வேலைக்கச் செல்கிறாள்.அங்கே அந்த முதலாளி அவள் மீது காதல் கொள்ள மரியா ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை.பயன்படுத்திக் கொள்வதென்று முடிவு செய்கிறாள்.பின்னர் அங்கு சேர்த்த காசைக் கொண்டு ரியோவிற்கு செல்ல ஒரு சந்திப்பு அவளை சுவிஸிக்கு நடிகையாக்க அழைத்துச் செல்கிறது.அங்கே மரியா வேலை ஏதுமற்று வெறுமனே பொழுதைப் போக்குகிறாள்.அப்போது ஒரு சந்திப்பு அவளை பாலியல் தொழிலுக்குக் கூட்டிச் செல்கிறது.அதாவது ஆயிரம் பிராங்குகளிற்காக அவள் தன்னுடைய கால்களை விரிக்க ஒப்புக் கொள்கிறாள்.அவள் தெரிந்தேதான் இந்த முடிவை எடுக்கிறாள்.அவளை யாரும் வற்புறுத்தவில்லை.கட்டாயப் படுத்தவில்லை.


ஒரு இரவில் அரைமணிநேரம் அவள் கால்களிற்கிடையில் செலவிடுவதற்காக அவளிற்கு ஆயிரம் பிராங்குகள் தர ஆட்கள் இருக்கும்போது அவள் மீண்டும் பிரேசிலிற்குச் செல்வ விரும்பவில்லை.அவள் நினைத்திருந்தால் அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.ஆனால் அவள் பாலியல் தொழிலை தொடர்ந்தாள். கொஞ்சக் காலத்திற்கு விலைமகளாக இருந்து பார்ப்போம் என்று தீர்மா னிக்கிறாள்.

கொஞ்ச நாட்களில் மரியா ஒரு தேர்ந்த பாலியல் தொழிலாளியாக மாறி விடுகிறாள்.அவளுக்கு அனேக வாடிக்கையாளர்கள் கிடைக்கிறனர்.ஒரு நாளைக்கு அனேக பிராங்குகளை அவள் சம்பாதிக்கிறாள்.தொழில் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்கிறாள் மரியா.விபச்சாரம் மற்ற தொழில்களைப் போன்றதில்லை.அதில் புதியவர்கள் அதிகம் சம்பாதிக்க அனுபவம் மிக்கவர்கள் குறைவாகச் சம்பாதிக்கிறனர் என்பதை உணர்கிறாள்.அவளுடைய வாடிக்கையாளர்கள் உச்சக்கட்டத்தை அடையும் போது அவளும் உச்சக் கட்டத்தை அடைவது போல் முனக வேண்டும் என்பதையும் அறிகிறாள்.

வாடிக்கையாளர்களின் ஆணுறுப்பு விறைப்படைவதால் மட்டுமே அவன் ஆண் அல்ல.அவன் ஒரு பெண்ணைச் சந்தோசப் படுத்தினால் மட்டும்தான் உண்மையான ஆண் மகன்.அதுவும் அவன் ஒரு விலைமகளைச் சந்தோசப் படுத்தினால் அவன் சிறந்த ஆண் மகன் என்பதை அவள் அனுபவரீதியாகப் பார்க்கிறாள்.தொழில் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்கிறாள் மரியா. விபச்சாரம் மற்ற தொழில்களைப் போன்றதில்லை.அதில் புதியவர்கள் அதிகம் சம்பாதிக்க அனுபவம் மிக்கவர்கள் குறைவாகச் சம்பாதிக்கிறனர் என்பதை உணர்கிறாள்.அவளுடைய வாடிக்கையாளர்கள் உச்சக்கட்டத்தை அடையும் போது அவளும் உச்சக் கட்டத்தை அடைவது போல் முனக வேண்டும் என்பதையும் அறிகிறாள்.

இந்நூலின் பதினொரு நிமிடங்கள் என்ற தலைப்பிற்கு விளக்கம் கொடுக்கிறார் கொய்லோ.அதாவது பதினொரு நிமிடங்கள் என்பது பாலுறவுக்கான நேரம் ஆகும்.இந்த உலகம் பதினொரு நிமிடங்கள் ஆகும் விடயத்தைச் சுற்றியே நகர்கிறது.இந்தப் பதினொரு நிமிடங்களுக்காகவே எவரொருவரும் திருமணம் செய்து கொள்கிறனர்.குடும்பம் நடத்துகிறனர் என்கிறார் கொய்லோ.

மரியாவிற்கு தான் காதலென கற்பனை செய்திருந்ததற்கும் உண்மைக் காதலுக்கும் தொடர்பில்லை என கடைசியில் கண்டு கொண்டாள்.காதல் சக்தியால் தூண்டப்பட்ட தொடர் நிகழ்வகளான காதலித்தல் நிச்சயதார்த்தம் திருமணம் குழந்தைகள் காத்திருத்தல் சமையல் பூங்காவிற்குச் செல்லுதல் மேலும் காத்திருத்தல் வயதாதல் நோய்வாய்ப்படுதல் என்பவனவற்றையே அவள் கற்பனை செய்திருந்தாள்.இறுதியில் அவள் அவற்றை அனுபவிக்கவில்லை.

பாலியல் தொழிலின் வரலாற்றை ரால்ப் மூலமாக வெளிப்படுத்துகிறார் கொய்லோ.பாலியல் தொழிலானது எகிப்திய கிரேக்க சுமேரிய நாகரிகளில் காணப்பட்டாலும் கி.பி ஆறாம் நூற்றாண்டில் கிரேக்க சட்டசபை அங்கத்தவர்களான சோலான் தேசத்தால் கட்டுப்படுத்தப்படும் விலை மகளிர் இல்லங்களை நிறுவி சதை வியாபாரத்தின் மீது வரி விதிக்கத் தொடங்கிய போதுதான் முறைப்படுத்தப்பட்ட தொழிலாக மாறியது.விலைமலிவான விபச்சாரத் தொழிலை நடத்துபவர்கள் பேர்னாய் எனப்பட்டனர்,அடுத்ததாக பெரிபெடிசியா பிரிவினர்.இவர்கள் தெருவில் நின்று வாடிக்கையாளர்களைப் பிடிப்பவர்கள்.அடுத்ததாக உயர்தர விலைமகளிர்.இவர்கள் அரசியலில் தலையீடு செய்பவர்கள்.ஹெரடோரஸின் குறிப்புக்களில் சுமேரியாவில் பிறந்த எந்தவொரு பெண்ணும் இஸ்தார் தேவதையின் கோவிலுக்குச் சென்று தன் உடலை புதியவர்களிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறுகிறார். இப்படியாக விபச்சாரத்தின் வரலாறு நீண்டு செல்கிறது அதனை நீங்கள் நாவலில் தெரிந்து கொள்ளுங்கள்.

மரியா இறுதியாக ஒரு ஓவியனைச் சந்திக்கிறாள்.அவனைக் காதலித்து விடுவோமோ என்ற பயத்தில் ஊரை விட்டுச் செல்ல முயற்சிக்கிறாள்.ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை.அவனும் அவள் இருக்கும் ஊருக்கே வருகிறான்.இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறனர். மரியா தன் பாலியல் தொழிலுக்கு விடை கொடுக்கிறாள்.

போகின்ற போக்கில் கொய்லோ பெண்களின் பாலியல் விருப்பங்கள் எவ்வாறு ஆண்களால் புறக்கணிக்கப்படுகிறது என்பதை விரிவாகக் கூறியுள்ளார். பெண் தனக்குத் தேவையான இன்பத்தை தானே தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார்.துணையுடன் கலந்தாலோசிப்பதுதான் நன்மை பயக்கும் என்கிறது அந்நூல்.

அனைவருக்கும் ஏற்ற நூல் பதினொரு நிமிடங்கள்.வாசிப்போம்.




2 Comments

  1. அருமையான பார்வை. தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் உண்டு.. பதிவை வாசிக்கும் போது, தனுஜா என்ற இலங்கைப் பெண்ணின் (ஆணாகப் பிறந்து பெண்ணாகத் தன்விருப்பப்படி மாறியவர்) சுயசரிதை ஞாபகத்திற்கு வருகிறது (சில இடங்களில்). சிறப்பான விமர்சனம்,, வாழ்த்துக்கள் 🙏 🇨🇭 🙏

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post