.

டான் பிரவுன் எழுதிய நரகம் என்னும் நாவல் வாசித்து முடித்தவுடன் அதிசயிந்து போனேன்.உண்மையில் விறுவிறுப்பும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லாத ஒரு நாவல்.இவரால் மட்டும் எப்படி முடிகிறது என்று வியக்க வைக்கிறது இந்நாவல்.

எந்த விதத்திலும் வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம் குறையாமல் கதை சொல்கிறது நரகம் என்னும் இந்நூல்.சில நாவல்கள் போல் படங்கள் இருந்தால்தான் புத்தகம் வாசிக்கலாம் என்ற கருத்து இந் நாவலில் எடுபடாது.படங்கள் இல்லாவிட்டாலும் கதை விறுவிறுப்பாக நகர்வதில் எந்தக் குறையையும் வைக்கவில்லை பிரவுன்.

குறியீட்டின் மூலம் மர்மங்களை அவிழ்க்கும் குறியீட்டியலாளர் லேங்டன் என்பவர் நரகம் நூலின் பிரதான கதாப்பாத்திரம்.ராபர்ட் லேங்டன் ஏஞ்சல்ஸ் மற்றும் டெமோன்ஸ் நூலில் டான் பிரவுனால் அறிமுகப்ப டுத்தப்பட்டவர்.அப்போதிலிருந்து லேங்டனின் சாகசம் ஒவ்வொரு நூலிலும் தொடர்கிறது.

லேங்டன் என்னும் கதாப்பாத்திரம் இந்நூல் முழுக்க வருகிறது.ஞாபக மறதியால் பாதிக்கப்படும் என்னும் ஒரு நோயாளியாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டு பின்னர் கதை நகர நகர வேறு மாதிச் செல்கிறது இந் நூல்.சியன்னா புரூக்ஸ் என்னும் கதாப்பாத்திரம் இந் நாவலில் திருப்பு முனையை ஏற்படுத்துகின்ற கதாப்பாத்திரமாக திகழ்கிறது.இடையில் கொஞ்ச நேரம் காணாமல் போனாலும் சியன்னா இந்தக் கதையின் அச்சாணியாகும்.கதையின் ஓட்டத்திற்கும் நகர்விற்கும் சியன்னா கதாப்பாத்திரம் துணை புரிகிறது. லேங்டன் சியன்னாவை துரோகியாக சிறிது நேரம் நினைத்தாலும் இறுதியில் எதிர்பார்க்காத முடிவையே சியன்னா கதாப்பாத்திரம் கொடுக்கிறது.



இந்த நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலைப்படைப்புக்கள் இலக்கியங்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புக்கள் அனைத்தும் உண்மையான வையாகும்.பிரவுன் திரித்துக் கூறவில்லை.நரகம் எனப்படுவது தாந்தே அலிரியின் காவியக் கதையான தெய்வீக இன்பியலில் விவரிக்கப்படுகின்ற கீழுலகம்.அதில் நிழல்கள் அதாவது வாழ்விற்கும் மரணத்திற்குமிடையில் மாட்டிக் கொண்ட உடலற்ற ஆன்மாக்கள்  என்ற தனியுருக்கள் குடியேறியுள்ள விரிவாகக் கட்டமைக்கப்பட்ட உலகமாக நரகம் சித்தரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் பல்கலைக் கழகமொன்றில் பணியாற்றும் லேங்டன் கதையின் தொடக்கத்தில் இத்தாலியில் கண் விழிக்கிறார்.அவருக்கு எதுவுமே ஞாபகம் இல்லை.தான் யார் எப்படி இத்தாலிக்கு வந்தோம் என்பதையும் மறந்தே போகிறார்.அவர் கனவில் அடிக்கடி ஒரு பெண் தோன்றி தேடு அது உனக்கு கிடைக்கும் என்று சொல்கிறார்.லேங்டன் சியன்னா புரூக்ஸின் உதவியோடு தேடத் தொடங்குகிறார்.இடையில் லேங்டனைக் கொலை செய்ய முயற்சி நடக்கிறது.யார் லேங்டனைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்..?ஏன் எதற்கு...? என்ற கேள்வி உடனே வாசகர்களிற்கு எழுந்தாலும் இறுதியில்தான் முடிச்சுக்கள் அவிழ்கப்படுகிறன.

ஒரு கட்டத்தில் அமெரிக்கத் தூதரகத்திற்கும் அறிவிக்கிறார்.ஆனால் அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவித்த சில நிமிடங்களிலேயே லேங்டனை கொலை செய்ய முயற்சி நடக்கிறது.யார் லேங்டனை கொலை செய்ய முயற்சித்தார்கள்...?அமெரிக்கத் தூதரகமா...?நாம் ஊகிக்க முடியாத திருப்பங்கள் கதையில் இருக்கிறன.அதுதான் பிரவுன் Style என்று கூடச் சொல்லலாம்.

உலக சனத்தொகை அதிகரிப்பு மிகவும் பாதகமான விடயம்.மனித குலத்தின் அழிவிற்குத்தான் அது இட்டுச் செல்லும் என்று பயப்படும் உயிரியல் விஞ்ஞானி ஐhப்ரிட்ஸ் காற்றில் பரவும் வைரஸ் ஒன்றை உருவாக்கி உலகை அழிக்க முயற்சி செய்கிறார்.இதனை அறிந்த உலக சுகாதார நிறுவனம் அவரைத் தடை செய்கிறது.இதனால் கன்சார்ட்டியம் என்னும் அமைப்பிடம் தஞ்சம் புகுகிறார் ஜாப்ரிஸ்ட்.கன்சார்ட்டியம் அவருக்குப் எந்தக் கேள்வியும் கேட்காமல் பாதுகாப்பு வழங்குகிறது.அதனால் அவர் தடையின்றி தனது உலகை அழிக்கும் வைரஸை உருவாக்கும் முயற்சியைத் தொடர்கிறார்.

கொரோனா என்ற ஒன்று 2020 இல் தான் அறியப்பட்டது.ஆனால் அதற்கு முன்னரே காற்றில் பரவும் வைரஸ் பற்றிக் கற்பனை செய்திருக்கிறார் பிரவுன்.அந்தக் கற்பனைவளம்தான் பிரவுனின் சொத்து.பிரவுனின் இந்த எழுத்தாற்றல் அபரிமிதமானது.குறியீடுகளாகட்டும்.குறியீடுகளை உடைக்கும் முறையாகட்டும் எல்லாமே அவருக்கே தனித்துவமானது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு கட்டத்தில் உலக சுகாதார நிறுவனம் லேங்டனின் உதவியை நாடுகிறது.அதன் பிறகு லேங்டனும் சுகாதார நிறுவனமும் இணைந்து ஐhபடரிஸ்ட்டின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்களா இல்லை ஜாப்ரிஸ்ட் வெற்றி பெற்றாரா என்பதை சுவாரஸ்யமாக விவரிக்கிறது நரகம் என்னும் இந்நாவல்.

இடையில் சியன்னா புரூக்ஸ் யாரென்ற உண்மை தெரிய வருகிறது.அவர் ஜாப்ரிஸ்ட்டின் காதலி.இவ்வாறாக பல்வேறு திருப்பங்களுடன் நகர்கிறது நரகம்.

நரகம் நூலில் இடம் பெற்றுள்ள வசனங்கள் ஆழமாக மனதில் பதிகிறன.அவையாவனதேடு அது உனக்குக் கிடைக்கும்,அறம்சார் நெருக்கடிகள் நிலவும்போது கூட தங்களுடைய நடுநிலையில் இருந்து விலகா தவர்களிற்காக நரகத்தின் இருளார்ந்த பகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன எல்லோர் மனங்களும் சமமாகப் படைக்கப்பட வில்லை மரணத்தின் கண்களு க்குத்தான் உண்மை புலப்படும்,நீ அதிகம் நேசிக்கும் எல்லாவற்றையும் கை விட்டுச் செல்ல வேண்டும்.நாடு கடத்தல் எனும் வில் எய்கிற முதல் அம்பு இதுதான்.இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை.ஒரு நோக்கத்தை அடைய நினைக்கும் மிகத் திறமையான மூளையை விட எதுவும் சிறந்த படைப்பாக இருக்க முடியாது...எதுவுமே சிறந்த அழிவாகவும் இருக்க முடியாது. பேராசை என்பது ஒரு சர்வதேச பாவம்.இந்த இடத்தில் இந்த தேதியில் உலகம் நிரந்தரமாக மாறப் போகிறது. நம்பிக்கை யின்மையை எதிர்கொள்ளும்போது மனிதர்கள் விலங்குகள் ஆவார்கள்.

மொத்தத்தில் இந்நூலானது தந்திரங்களின் குவியல் என்றுதான் சொல்ல வேண்டும்.பிரவுனின் ஆகச் சிறந்த படைப்பொன்றை வாசியுங்கள். உங்களுக்கு நேரம் போவதே தெரியாது.

நரகம் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

You have to wait 45 seconds.

Generating Download Link...

டான் பிரவுனின் ஏனைய நாவல்களை வாசிப்பதற்கு


Post a Comment

Previous Post Next Post