.

முன்னொரு காலத்தில் வியாபாரம் செய்வதற்கு பொருட்கள் வாங்கவென விஜயன் என்ற வணிகர் வெளியூருக்குப் போனார். அந்த ஊருக்கு போவதற்கு முன்னர், ஒரு அடர்ந்த காட்டைக் கடந்துதான் போக வேண்டும். அந்தக் காட்டில் திருடர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டு பயந்தவாறே போனார் விஜயன்.

காட்டுக்குள் போகும் போது முகிலன் என்ற மற்றொரு வணிகரும் அந்தக் காட்டு வழியே வந்தார்.நீங்கள் கூட வருவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.பேசுவதற்கு ஒரு துணை கிடைத்த மாதிரியும் இருக்கிறது. அதேநேரம் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்று விஜயன் சொன்னார்.

ஆமாம், ஆமாம், எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. அது சரி,நீங்கள் எவ்வளவு காசுகொண்டு வந்திருக்கிறீர்கள்?

500 வெள்ளிக் காசுகளும் 25 தங்கக் காசுகளும் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னான் விஜயன்.

நான் வெறும் 100 வெள்ளிக் காசுகள் மட்டுமே கொண்டுவந்துள்ளேன் என்றான் முகிலன்.

விஜயன் கொண்டுவந்த அளவு காசு முகிலன் கொண்டுவரவில்லை.அதனால் விஜயனைப் பார்த்து முகிலனுக்கு பொறாமை. 'இவ்வளவு காசும் நமக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?' என்று முகிலன் நினைத்தான்.

அப்போது தூரத்தில் இருந்து 'டொக்,டொக்' என்று குதிரைகள்
வரும் சத்தம் கேட்டதாம்.

உடனே முகிலன். விஜயனைப் பார்த்து. உன்னிடம் இருக்கின்ற எல்லாக் காசுகளையும் என்னிடம் கொடு. இரண்டு வெள்ளிக் காசை மட்டும் வைத்துக்கொள். நீ கொடுப்பதையும் எடுத்துக்கொண்டு நான் ஒரு மரத்தில் ஏறி ஒளிந்து கொள்கிறேன்.திருடர்கள் வந்தால் அந்த இரண்டு வெள்ளிக் காசை மட்டும் எடுத்துக்கொண்டு போய் விடு வார்கள்.நான் இங்கு ஒளிந்திருப்பதை
யாருக்கும் சொல்லாதே. அவர்கள் போன பிறகு நாம் எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டு தைரியமாக போகலாம் என்று சொன்னான்.

விஜயனும் சரி என்று சொல்லி முகிலன் சொன்னபடியே செய்தான்.

திருடர்கள் வந்து கேட்ட போது,ஐயா, நான் ஒரு ஏழை. பக்கத்து ஊரில் உள்ள எனது உறவினரைப் பார்த்து கொஞ்சம் பணம் கடன் வாங்கி வரலாம் என்று நினைத்து சென்றுகொண்டிருக்கிறேன். என்னிடம் இரண்டு வெள்ளிக் காசுகள்
மட்டுமே உள்ளன என்றான் விஜயன்.

திருடர்களும் பாவம், இவன் ஏழ்மையானவன் என்று நினைத்து விஜயனிடம் எதையும் வாங்காமல் விட்டுச் சென்றனர்.

குதிரைகளின் சத்தம் முழுவதுமாக மறைந்த பிறகு முகிலன் மரத்திலி
ருந்து இறங்கி வந்தான்.

ரொம்ப நன்றி முகிலா! சரி, நான் உன்னிடம் கொடுத்த காசுகளை தருகிறாயா? என்று விஜயன் கேட்டான்.

பேராசை பிடித்த முகிலனோ, என்ன விளையாடுகிறியா? நீ என்னிடம் எப்போது காசு கொடுத்தாய் என்று கேட்டதும் விஜயனுக்கு ஒரே அதிர்ச்சி.



என்னப்பா, இப்படி சொல்கிறாய்? திருடர்கள் வருகிறார்கள் என்று நீ
தானே என்னிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு மரத்
தில் ஏறி ஒளிந்து கொண்டிருந்தாய்.ஆனால், இப்போது இப்படி மாத்தி
சொல்கிறாயே என்று பயத்துடன் கேட்டான் விஜயன்.

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, ஒளிந்து கொண்டிருந்த
இரண்டு திருடர்களும் திடீரென்று இவர்கள் எதிரில் வந்தனர்.ஓ! இதுதானா விடயம், டேய், நீ மரத்திலயா ஒளிந்து கொண்டிருந்தாய்? மரியாதையாக உன்னிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு ஓடிப் போய்விடு.இல்லையென்றால் இந்தக் கத்தியால் உன்னை குத்திடுவிடுவேன் என்றனர்.

பயந்துபோன முகிலன், ஒளித்து வைத்திருந்த அனைத்தையும் திருடர்
களிடம் கொடுத்துவிட்டான்.அதை வாங்கிய திருடர் தலைவன்
விஜயனைப் பார்த்து, நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறோம். உன்கூட வந்தவன் உன்னை ஏமாற்றியபோதும் நீ மிக
வும் பொறுமையாய் இருந்தாய்.உன் பொறுமைக்கு வெகுமதியாய்
இது எல்லாவற்றையும் நீயே எடுத்துக்கொள் என்று கூறி விஜயனிடம்
அனைத்தையும் கொடுத்தனர்.

பேராசைப்பட்டதால் உன்னுடைய காசையும் நீ இழந்துவிட்டாய் என்று
முகிலனிடம் கூறிவிட்டுச் சென்றனர்.

நீதி: பேராசைப்படுபவன் தனது பொருளையும் இழந்து பெரிய நஷ்டத்தையும்
அடைவான்.





Post a Comment

Previous Post Next Post