.

எம் சிறுவயதிலிருந்தே நாம் அடிக்கடி அறிந்து கொண்டுள்ள பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது எனும் விடயத்தை. தேர்வுக்காக படித்து, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் நீங்கள் வடிகால் மற்றும் ஆறுகளின் கரையோரங்களில் தென்படும் பிளாஸ்டிக் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்.

நீங்கள் வழமையாக சுற்றுச்சூழலில் பார்க்கும் மற்றும் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்குகள் சுமார் 15% மட்டுமே என்று உங்களுக்குத் தெரியுமா, அப்படியானால், மீதமுள்ள 85% இற்கு என்ன பங்களிப்பு செய்கிறது?இவற்றைத்தான் மைக்ரோ பிளாஸ்டிக் என்கிறோம்.

மைக்ரோ பிளாஸ்டிக் என்றால் என்ன?

மைக்ரோ பிளாஸ்டிக் என்பது 5மிமீ ஐ விட குறைவான விட்டம் கொண்ட மிகச் சிறிய பிளாஸ்டிக் துண்டுகள். அவை வெற்றுக் கண்ணுக்குப் புலப்படக் கூடியதில் இருந்து புலப்பட முடியாத நுண் மூலக்கூறுகள் வரை வியாபித்து உள்ளன.

இங்குள்ள தனித்தன்மை என்னவென்றால், பிளாஸ்டிக் துண்டுகள் கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய பாகங்களாக உடைக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் துகள்களின் அளவு மைக்ரோமீட்டர்கள் (106) மற்றும் நானோ மீட்டர்களில் (10-9)அளவிடப்படுகிறது. இந்த கண்ணுக்குத் தென்படாத நுண்ணிய பிளாஸ்டிக் துண்டுகள் எவ்வாறு நம் உடலுக்குள் நுழைந்து பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது என்பதனையும் அவற்றின் விளைவுகளையும் இன்று உங்களுக்குக் கற்றுத் தருவதாக உள்ளோம்.

இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் சுற்றுச் சூழலில் எவ்வாறு சேர்க்கப்படுகிறது?

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் சுற்றுச்சூழலை அடைய பல வழிகள் உள்ளன. படிப்பதற்கு வசதியாக, மைக்ரோ பிளாஸ்டிக்கை இரு பிரிவுகளாகப் பிரிப்போம்.அவையாவன,முதன்மை மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் இரண்டாம் நிலை மைக்ரோபிளாஸ்டிக்ஸ்.

முதன்மை மைக்ரோபிளாஸ்டிக்ஸ் 

முதன்மை மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 5 மி.மீ.க்கும் குறைவான அளவில் தயாரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் பிளாஸ்டிக் ஆகும்.

உதாரணமாக, சிறிய பிளாஸ்டிக் மணிகள் ஆடை அமைப்புகளை உருவாக்கப் பயன்படுகின்றன. சிறிய பிளாஸ்டிக் மணிகள் அல்லது பற்பசைகளில் காணப்படும் மணிகள். உங்கள் முகத்தை கழுவ நீங்கள் பயன்படுத்தும் இரசாயனங்களிலும் இந்த மைக்ரோபிளாஸ்டிக் உள்ளது. அவை வடிகால் அமைப்பில் சேர்ந்து படிப்படியாக வலைப்பின்னல்கள் மூலம் நமக்குத் தெரியாமல் கடலைச் சென்றடைகின்றன.

ஒரே ஒரு சலவையில், 94000 முதல்100000 மைக்ரோ பிளாஸ்டிக்குகள் சுற்றுச் சூழலிற்கு வெளியிடப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது சிந்தித்துப்பாருங்கள் சுற்றுச்சூழலை எவ்வளவு மாசுபடுத்தி இருக்கிறீர்கள் என்று?

இரண்டாம் நிலை மைக்ரோபிளாஸ் டிக்ஸ்

இந்தப் பிரிவில் ஒரு முறை (பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள்) அல்லது பல முறை (பிளாஸ்டிக் கொள்ளளவிகள்) பயன்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் பிளாஸ்டிக்குகள் அடங்கும். இந்த பிளாஸ்டிக்குகள் வாகன டயர்களில் சிக்கி, ஆற்றைக் கடக்கும்போது பாறைகளில் மோதி மழை அல்லது வெயிலில் சிக்கி மிகச் சிறிய துண்டுகளாக மாறுகின்றன. இங்குதான் இந்த இரண்டாம் நிலை மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நீங்கள் அணியும் நைலான் ஆடைகளில் இருந்து இந்த இரண்டாம் நிலை மைக்ரோ பிளாஸ்டிக் இழைகள் சுற்றுச்சூழலிற்கு வெளியிடப்படுகின்றன என்பதனை மேலும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உலக ஆராய்ச்சிகளில் அக்ரிலிக் மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகள் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய உமிழ்வைக் காட்டுகின்றன. அதாவது, அக்ரிலிக் மூலப்பொருட்களால் செய்யப்பட்ட 6 கிலோ துணிகளை ஒரே நேரத்தில் துவைக்கும்போது, சுமார் 700000 முதல் 800000 வரையிலான மைக்ரோ பிளாஸ்டிக் இழைகள் சுற்றுச்சூழலில் சேர்க்கப்படுகின்றன.

எவ்வாறு நுண்பிளாஸ்ரிக்கள் எமது உடலினுள் வந்தடைகின்றன ?

சூழலில் விடுவிக்கப்படும் நுண்பிளாஸ்ரிக்கள் எமது கண்ணுக்கு புலப்படாத மிகச்சிறிய உயிரங்கிகளால் உண்ணப்படுகின்றன. பின் இச்சிறிய உயிர ங்கிகளை பெரிய விலங்குகள் உட்கொள்ளும் போது இச்சிறிய உயிரிகள் உணவுச்சங்கிலியின் மேல்நிலைகளுக்கு படிப்படியாக நகர்கின்றன.பின்பு மனிதன் உணவுச்சங்கிலியின் பல்வேறு படிநிலைகளிலுள்ள உணவுகளை உட்கொள்ளும் போது, அவை மனித உடலை பெருமளவில் வந்தடைகின்றன.

பெரிய மீன் ஒன்றினால் உட்கொள்ளப்பட்ட பிளாஸ்ரிக் பகுதிகள்

சைவ உணவுகளையே மட்டும் உட்கொள்ளும் ஒருவர் தாம் நுண் பிளாஸ்ரிக்களால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு உள்ளாக முடியாதவர் எனக் கூறலாம்.

ஆனால் அது முற்றிலும் பொய்யானதாகும் காரணம் இந்த நுண்பிளாஸ்ரிக்கள் மேசை உப்பு,குழாய் நீர், நாளாந்த வீட்டுப்பாவனைக்கு பயன்படுத்தப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் போன்றவற்றிலும் காணப்பட முடியும் என ஆய்வுகள் காட்டி நிற்கின்றன.

14 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 154 லீற்றர் நீர் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி பெற்ற முடிவுகளின் அடிப்படையில் 83% சதவீதமான மாதிரிகள் கண்ணுக்கு புலப்படாத நுண் பிளாஸ்ரிக்களை கொண்டிருந்தமை கண்டறியப்பட்டது .

அத்துடன் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட 94% சதவீதமான மாதிரிகள் நுண்பிளாஸ்ரிக்களை கொண்டிருந்தன.ஆகவே இந்த நுண் பிளாஸ்ரிக்களால் ஏற்படும் ஆபத்துக்கள் ஒவ்வொரு இளைஞர் மற்றும் முதியவர்களை பாதிக்கும்.

பிளாஸ்ரிக் கழிவுகள்


இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் உங்கள் உடலில் இருக்கிறதா என்று எப்படி சொல்வது?

அமெரிக்கா,ஜப்பான் மற்றும் கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட ஏழு நாடுகளின் மனித மல மாதிரிகளில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்களின் சான்றுகள் கண்டறி யப்பட்டுள்ளன. அந்த மாதிரிகள் ஒவ்வொன்றிலும் இந்த மைக்ரோபிளாடிக்ஸ்கள் இருந்தன.

இந்த மைக்ரோபிளாஸ்டிக்களில் 74,000 முதல் 121,000 வரை ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் பல்வேறு வழிகளில் (உணவு.குடிநீர், பல்வேறு வகையான காற்று மற்றும் சுவாசிக்கக்கூடிய காற்று உட்கொள்ளப்படுவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் ஒரு வாரத்திற்கு சுமார் 5 கிராம் பிளாஸ்டிக்கை உடலுக்குள் உள்ளெடுக்கிறீர்கள். அதாவது, ஒரு வாரத்திற்குள் பணம் எடுக்க நாம் பயன்படுத்தும் வங்கி ஏடிஎம் கார்டின் அளவு பிளாஸ்டிக்கை உள்ளெடுக்கிறோம்.

இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உங்களை எவ்வாறு பாதிக்கிறது?

இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஒரு காந்தம் போன்றது. மில்லியன் கணக்கான நச்சு இரசாயனங்களை உறிஞ்சும் திறன் கொண்டது.எனவே, இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து மில்லியன் கணக்கான புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள். புற்றுநோயாக்கிகள் மற்றும் கன உலோகங்கள் ஆகியவற்றை உறிஞ்சுகின்றன. கீழே காட்டப்பட்டுள்ளபடி அவை உணவுச் சங்கிலி மூலம் அதிக செறிவுகளில் நம் உடலுக்குள் நுழைகின்றன.

மைக்ரோபிளாஸ்டிக்குடன் தொடர்புடைய ஏராளமான இரசாயனங்கள் இருந்தாலும்,இங்கு குறிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய சில இரசாயனங்கள் உள்ளன. இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸில் உறிஞ்சப்படும் சில இரசாயனங்கள், கன உலோகங்களால் ஏற்படும் சில புற்றுநோய்களின் சுருக்கம் கீழே உள்ள அட்டவணையில் உள்ளது.

பிஸ்பனோல்-மார்பகப் புற்றுநோய்

ஈயம்-நுரையீரல் இரைப்பை மூளைப் புற்றுநோய்

அரோமெற்றிக் ஹைட்ரோக்கார்பன்கள் பொலிஸ்ரிக்-சிறுநீர்ப்பை,குடல்,தோல் புற்றுநோய்

ஆபத்து என்னவென்றால், இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ், நானோமீட்டர் விட்டத்தை விட சிறியதாக இருப்பினும் மனித சூல்வித்தகம் வழியாக பயணிக்க முடியும். சூல்வித்தகத்தை ஆய்வக சோதனைக்குப் பயன்படுத்திய பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் தாயின் தாய்ப்பாலில் இருந்து புதிதாகப் பிறந்த குழந்தைக்கும், பின்னர் குழந்தையின் சிறுநீருக்கும் கடத்தப்படுவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

DDT போன்ற பதார்த்தங்களை உட்சவாசித்தல், உட்கொள்ளுதல் மற்றும் தொடுகை மூலமாக குழத்தைகளுக்கு ஆட்டிஸம் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் காணப்படுவதற்கான சான்றுகள் ஏதும் உள்ளதா?

ஆம். இலங்கையின் தென் மாகாணம் மற்றும் ஐக்கிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கடற்கரை மற்றும் அந்த பிராந்தியங்களில் வாழும் மீன்களில் நுண் பிளாஸ்டிக் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Institute of Marine Research (IMR) மற்றும் Norway and the National Aquatic Resources Research and Development Agency (NARA) இலங்கையை சூழ நடத்திய ஆய்வுகளில் ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் போது மன்னார் பகுதியில் அதிக அளவில் நுண் பிளாஸ்டிக் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுண் பிளாஸ்டிக்குகள் சூழலில் தேக்கம் அடைவதை எவ்வாறு தடுக்கலாம்?

பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல், பிளாஸ்டிக் கூறுகளை உள்ளடக்கிய முகம் கழுவும் சவர்க்கார பாவனையை தவிர்த்தல். கொள்வனவு செய்யும் முதல் உள்ளடக்க கூறுகளை கவனமாக பார்க்கவும்.அது பற்றிய தெளிவான அறிவு இல்லை எனில் நேரம் எடுத்து இணையம் மூலம் அறிந்த பின் கொள்வனவு செய்யவும்.நைலோன் மற்றும் அக்ரிலிக் உடைகளின் பாவனையை குறைக்கவும்.ஒரு வருடத்திற்கு 10 உடைகள் தேவைப்படின் அதை 8 ஆக குறைக்கவும்.பருத்தி உடைகளின் பாவனையை அதிகரிக்கவும்.தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் சிறந்த வடிகட்டி ஊடாக வடிகட்டி பருகவும்.உடைகளை கழுவும் போது cora ball பயன்படுத்தவும்.இது உங்கள் அடுத்த சந்ததிக்கு பயன்படுத்தவும்.

நுண் பிளாஸ்டிக்குகளைகைப்பற்றக் கூடிய coraball உபகரணம்

அகற்றப்பட்ட பிளாஸ்டிக்குகள் இயற்கையால் இரகசியமாக எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டன, அது பற்றிய புரிதல் இல்லாமல் நாம் இயற்கையை தொடர்ச்சியாக சிதைத்து வருகின்றோம். மிக அருகிய காலத்திலேயே நுண் பிளாஸ்டிக்குகள் பற்றி சோதிக்க ஆரம்பித்து இருக்கின்றோம். நமது தவறுகளுக்காக இயற்கை நம்மை தண்டிக்க ஆரம்பித்து விட்டது. அதாவது மனிதனை பூமியில் இருந்து அகற்றுவதற்கான அமைதி யுத்தம் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது.


Post a Comment

Previous Post Next Post