.

ரகுராமன் என்ற கோடீஸ்வரர் தன் மகனுடன் காரில் கோயிலுக்குச் சென்றார். உள்ளே சென்று கடவுளை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவர், அங்கிருக்கும் பிச்சைக்காரர்களைப் பார்த்தார். அதில் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10,000 கொடுத்தார்.

அப்பா எதற்குப் பணம் கொடுக்கிறீர்கள்? என்று மகன் கேட்டான்.காரில் சென்று கொண்டிருக்கும்போது ரகுராமன், 'நாம் இவர்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறோம். இவர்கள் இந்த வாய்ப்பை எப்படிப் பயன்படுத்து கிறார்கள் என்பதை மூன்று மாதம் கழித்து வந்து பார்க்கலாம்' என்றார்.

அப்பா சொன்னது புரியாவிட்டாலும் 'சரி' என்றான் மகன். மூன்று மாதங்கள் கழித்து மறுபடியும் ரகுராமன் அதே கோயிலுக்கு வந்தார். அங்கு அவர் பணம் கொடுத்த மூன்று பேரில் ஒருவர் மட்டும் அங்கே உட்கார்ந்திருந்தார். அந்தப் பிச்சைக்காரன் அருகில் சென்ற ரகுராமன் 'ஏனப்பா நான்தான் உனக்குப் பணம் கொடுத்தேனே... நீ அதை என்ன செய்தாய்?' என்று கேட்டார்.

நீங்கள் கொடுத்த பணத்தை அப்படியே வைத்திருந்து தினமும் அதில் செலவு செய்து சாப்பிட்டேன். எல்லாம் தீர்ந்துவிட்டது. மறுபடியும் நான் இதே பிச்சை எடுக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன் என்றான்.மற்றவர்கள் எங்கே?என்றார் ரகு ராமன்.

எதிரே உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடையைக் காண்பித்து 'நீங்கள் கொடுத்த பணத்தில் ஐஸ்கிரீம் கடை வைத்து இன்று நல்ல வியாபாரம் செய்து.நல்ல நிலைக்கு வந்து விட்டான்' என்று பதில் சொன்னான்.

ரகுராமன் தன் மகனுடன் அந்தக் கடைக்குள் நுழைந்தார்.

என்னை தெரிகிறதா? என்றார்.ஐயா பணம் கொடுத்த உங்களை எப்படி மறக்க முடியும்?என்று சொன்னான் அவன்.


ஐஸ்கிரீம் கடை எப்படி வைத்தாய்? என்று கேட்டார்.

நீங்கள் கொடுத்த பணத்தில்தான் வைத்தேன். நான் தேர்மையாக உழை த்ததால் இன்று அதிகமான லாபம் கிடைத்து. நல்ல நிலையில் இருக்கிறேன். இதற்கு நீங்கள்தான் காரணம்என்று அவரை வாழ்த்தி, பணிவுடன் பேசினான்.

சரி உங்களில் இருக்கும் மற்ற ஒருவனுக்கும் பணம் கொடுத்தேனே. அவன் என்ன ஆனான்? என்று கேட்டார்.

நீங்கள் கொடுத்த பணத்தில் அவன் ரேஸ் குதிரை, தேவையில்லாததை யெல்லாம் வாங்கி செலவழித்து அனைத்து பணமும் அவனிடமிருந்து சென்று விட்டது. அதனால் அவன் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அதேபோல் மறுபடியும் பிச்சை எடுத்து, தன் கையில் கிடைக்கும் பணத்தை அதே கெட்ட வழியில் செலவழிக்கிறான் என்று சொன்னார்.

அப்போது தன் மகனிடம் பார்ந்தாயா... நாம் மூன்று பேருக்கு வாய்ப்பு கொடுத்தும் அதில் ஒருவர்தான் அந்தப் பணத்தை நல்ல வழியில் செலவு செய்து. இன்று நல்ல நிலையில் இருக்கிறார்.நமக்கு வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால், நன்கு முன்னேறலாம் என்றார்.அப்பா சொன்ன அறிவுரை இப்போது மகனுக்குப் புரிந்தது.

Post a Comment

Previous Post Next Post