.

வெட்டுக்கிளி, கணுக்காலி உயிரினத் தொகுதியைச் சேர்ந்த பூச்சியினம். வெளித் தோற்றத்தில் தத்துக்கிளி போலிருக்கும். இவை பல நிறங்களில் உள்ளன. பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதால், இது உழவர்களின் எதிரி என அழைக்கப்படுகிறது.

வெட்டுக்கிளி, இரண்டு மாதங்களில், ஆறு முறை தோலுரிக்கும்,இவற்றின் காதுகள் வயிற்றுப்பகுதியிலோ அல்லது முன் கால்களின் நுனியிலோ காணப்படும். மணிக்கு, ஆறு கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன் உடையவை....

வெட்டுக்கிளிகளுக்கு விவசாயிகளின் விரோதி என்று ஒரு செல்லப் பெயர் இருப்பதற்கு காரணம் வெட்டுக்கிளிப் பட்டாளம் விளை நிலத்திற்குள் நுழைந்து விட்டால், ஒட்டுமொத்த பயிர்களையும் நாசம் செய்து விடும்.

வெட்டுகிளிகளின் அட்டகாசத்தால் 1880 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தெற்கு பிரதேசத்தின் மக்கள் கதவை சாத்திக்கொண்டு மாதக்கணக்கில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார்களாம்.

1955ஆம் ஆண்டில் மொராக்கோ நாட்டிற்குப் பறந்து வந்த வெட்டுக் கிளிக் கூட்டத்தின் அகலம் இருபது கிலோ மீட்டர் வரை இருந்ததாம். வெட்டுக்கிளிகளுக்கு பின் இணைக்கால்கள் நன்கு வலுவுடையதாக இருப்பதால் இவைகளால் தரையிலிருந்து நீண்ட தூரம் தாவி பறக்க முடியும்.

வெட்டுகிளிகளில் புரத சத்து நிறைந்திருப்பதால் சில நாடுகளில் குறிப்பாக மெக்சிகோவில் இதனை உணவாக உட்கொள்கின்றனர்.

வெட்டுக்கிளிகள் வகைகளில் ஒன்றுதா பாலைவன வெட்டுக்கிளி. தனி மையில்தான் வழக்கமாக வாழும், முட்டையில் இருந்து இளம் பூச்சியாக உருவாகி, பின்னர் தத்தத்தாவி ஒரு வழியாக பறக்கத் தொடங்கிவிடும்.ஆனால் இதற்கு இரண்டு முகங்கள் உண்டு.

சுற்றுச்சூழல் சிக்கல்களால் பசுமை வெளிகள் குறையும் சமயத்தில் உணவின்றி தவிக்கும் பல வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்துவிடும்.




கூட்டமாகச் சேர்ந்துவிட்டால் தனிமை நிலையில் வாழும் பூச்சிகள் திடீரென கூடி வாழும் சிறிய வேட்டை விலங்குகள் போல மாறிவிடும்.அதன் பின்னர் உலகிலேயே மோசமான விளைவுகளை இவை ஏற்படுத்தும்.

புலம் பெயர் பூச்சியாக உருவெடுக்கும். புதிதாக ஒன்றுசேரும் வெட்டுக் கிளிகள் தனது குணத்தை மாற்றிக்கொண்டு, பெரும் பசி கொண்ட கூட்டமாக பறந்து செல்லும் ஒருபடை போல மாறிவிடும்.

ஒரு பெரும் வெட்டுக்கிளி படையில் 10 பில்லியன் அதாவது ஆயிரம் கோடி வெட்டுக்கிளிகள் வரை கூட இருக்கலாம். ஒருநாளைக்கு 150 முதல் 200 கிமீ வரை பறந்து செல்லும் திறன் இவற்றுக்கு உண்டு.

பசி வெறியில் இருக்கும் அந்த வெட்டுக் கிளிகள், கிராமப்புற உணவு ஆதாரங்களை, நாசமாக்கிவிட்டு, இனப்பெருக்கம் செய்து கொண்டே செல்லும். இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பொதுவாக மூன்று மாதம் முதல் ஐந்து மாதம் வரை மட்டுமே வாழக்கூடியவை.

ஆனால் காலநிலை, சுற்றுசூழல் நிலை ஆகியவற்றை பொறுத்து இது மாறுபடும். பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் குறுகிய காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்து பெரும் படையை உருவாக்கும் திறன் பெற்றது.

அதாவது மூன்று மாதங்களில் 20 மடங்காகவும், ஆறே மாதங்களில் 400 மடங்காகவும், ஒன்பது மாதங்களில் 8000 மடங்காக உருவெடுக்கும் திறன் இந்த படைக்கு உண்டு. ஒரு வளர்ந்த பாலைவன வெட்டுக்கிளி ஒரு நாளைக்கு தனது எடைக்கு நிகரான எடையை உட்கொள்ளும். அதாவது 2 கிராம் உணவு உட்கொள்ளும்.

ஒரு வெட்டுக்கிளி தரையில் இருந்து மிக உயரமாகக் குதிக்க முடியும்.அளவு சிறியதாக இருந்தாலும் வெட்டுக்கிளிகள் தரையில் இருந்து 1 முதல் 1.5 மீ உயரம் வரைக் குதிக்கும் திறன் கொண்டவை.


Post a Comment

Previous Post Next Post