.

பாண் விலையேற்றம் என்பது உலக அளவில் எத்தனை போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது என தெரியுமா ?

பாண் தன்னுடைய நீண்ட நெடிய பயணத்தில் பல வரலாறுகளை திருத்தி எழுதியிருக்கிறது.பல வர்க்கரீதியிலான ஒடுக்குமுறைகளுக்கு தீர்க்கமான சாட்சியாக இருந்திருக்கின்றது.பாண் எப்போதுமே உழைக்கும் மக்களின் உணவாகவும் அவர்களின் அடையாளமாகவும் உலக வரலாற்றில் இருந்திருக்கின்றது வடிவங்களில் வேறுபட்டிருந்தாலும் உலகம் முழுவதிலும் இந்த பாண் அல்லது Bread எனும் பொதுப்பெயரால் எத்தனை புரட்சிகளுக்கு வித்திட்டிருக்கின்றது என்பது தெரியுமா ?

1789 இல் பிரான்சின் பிரெஞ் நகரத்தில் இதே பாணுக்காக பெண்கள் ஒரு போராட்டத்தினை முன்னெடுத்தனர் .பிரெஞ்சுப் புரட்சியின் ஒரு முக்கியமான அடையாளமாக அந்த போராட்டம் ஈருதப்படுகின்றது.பாணின் விலையை எக்கச்சக்கமாக ஏற்றியதனைக் கண்டித்து பிரான்ஸ் அரசரை எதிர்த்து பெண்கள் ஊர்வலம் ஒன்றினை ஆரம்பித்தனர்.வரலாற்றில் இந்த சம்பவமானது"womens marel oz Versailles" என வர்ணிக்கப்படுகின்றது ஒரு சந்தையில் வைத்து மிகச்சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம் கொஞ்சம் கொஞ்சமாக ஆண்கள் மற்றும் ஊர்வலத்தை அடக்க வந்த பிரென்ச் அரசருடைய படைகள் என பாரபட்சமின்றி இணைய ஆரம்பித்ததும் அது ஒரு மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது. கைகளில் சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்தியை வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்த பெண்களால்,போகிற வழியில் அரசருடைய ஆயுத கிடங்குகள் கொள்ளையடிக்கப்பட்டு அந்த ஆயுதங்களை வைத்தே பிரான்ஸ் மன்னரது அரண்மனை முற்றுகையிடப்பட்டது.மிக தீவிரமாக மாறிய அந்த போராட்டத்தின் இறுதியில் 11ம் லூயி மன்னருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு.அரச குடும்பத்தினரது கையிலிருந்த அதிகாரம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது .

இதுபோன்றே. 1863 இல் அமெரிக்க சிவில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதனால் பாணின் விலையும் தாறுமாறாக உயர்ந்ததைக் கண்டித்து 1863 ஏப்ஏல் 02 ஆம் திகதி நூற்றுக்கணக்கான பெண்கள் வீதியில் இறங்கி போராடினார்கள் .அந்த போராட்டம் வன்முறையாக மாறி கடைசியில் ராணுவத்தால் நிலைமை சரி செய்யப்பட்டது.

இவ்வளவு ஏன் 1977 இல் இதே பாணுக்காக மிகப்பெரிய போராட்டத்தினை சந்தித்தது எகிப்து.உலக வங்கியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமல் திணறிக்கொண்டிருந்த எகிப்து அரசிடம் “நீங்கள், பாணுக்காக கொடுக்கும் மானியத்தினை நிறுத்திவிட்டு எங்களுக்கு கடனை திருப்பித் தாருங்கள்'' என உலக வங்கி கூற, அதனை எகிப்து அரசும் அமுல்படுத்தியது.இதனை எதிர்த்து, எகிப்து முழுவதிலும் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. இறுதியில் எழுபது பேர் மரணித்து சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த பின்னர் உலக வங்கியும் அரசும் மீண்டும் மானியத்தை வழங்க ஒப்புக் கொண்டனர்.




முப்பது வருடங்களாக சூடாளை சர்வாதிகாரமாக ஆட்சி செய்துவந்த Omar al bashir என்பவர் இதே பாணின் விலையேற்றத்தினாலேயே மிகப்பெரிய போராட்டத்தின் பின்னர்  2019 இல் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார் சூடான் மக்களால் .

உலகப்போரில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாக பாண் இருந்திருக்கின்றது.யுத்த வீரர்களுக்கே பாண் சென்று சேர வேண்டும் என்பதாலும் யுத்த செலவீனங்களை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவும் தம்முடைய நாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசுகள் குறைவாக பிரெட்டினை உண்ணுங்கள் அப்போதுதான் நம்மால் வெல்ல முடியும் என பிரசாரம் செய்தனராம்.

இவ்வளவு ஏன்? நம் நாட்டில் 1994 ஆம் ஆண்டு தன் தாயார் ஸ்ரீமா பண்டாரநாயக்கவினால் ஏற்பட்ட பாண் போராட்டத்திற்கு பிரதியுபகாரமாக, தான் ஆட்சிக்கு வந்தால் வெறும் இரண்டு ரூபாய்க்கு பாணை மக்களுக்கு தருவதாக கூறியே ஆட்சி யை பிடித்தார் சந்திரிக்கா பண்டார நாயக்கா.

இந்த பாணின் பயணம் ஆரம்பித்தது இன்று நேற்றல்ல, சுமார் முப்பதாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக்கொண்டது என்றால் நம்பமுடிகிறதா . ஆதி மனிதர்கள் காட்டில் கிடைக்கும் தானியங்களை மாவாக்கி அதனை வெயிலில் சூடாகியிருந்த பாறைகளுக்கு நடுவில் வைத்து பாண் போன்ற ஒரு பொருளை உண்டதாக ஐரோப்பிய கண்டங்களில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். பதினான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறைகளுக்கிடையே இருக்கும் குழி போன்ற அமைப்புகளை பயன்படுத்தி பாண் சுடப்பட்டுள்ளதற்கான அடையாளங்கள் ஜோர்டான் நாட்டில் கிடைத்துள்ளதாம் . விவசாயம் என்கிறவொன்று கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இந்த பாண் என்கிறவொன்று ஏதோ வொரு வகையில் மனிதர்களோடு ஒட்டிக்கொண்டே வந்துள்ளது. எகிப்தியர்கள்தான் முதன்முதலில் பாணை மதுவத்தை கலந்து உருவாக்கியுள்ளனர்.கிரேக்கர்கள் பார்லி மாவை பயன்படுத்தி பாணை செய்துள்ளனர்.பண்டைய பணக்கார ரோமர்கள் கோதுமையினால் பாணை செய்து உண்டுள்ளனர்.பாண் செய்வதில் கைதேர்ந்தவர்களாக அன்று முதல் இன்றுவரை இருப்பவர்கள் சைப்ரஸ் மக்கள்தானாம்.மத்திய தரைக்கடல் வழியாக செல்லும் எந்தவொரு கப்பலும் மாலுமிகளால் சைப்ரஸில் நிறுத்தப்பட்டு அங்குள்ள பாணின் சுவையை ருசிக்காமல் விடப்படுவதில்லையாம்.

பாண் தொழிற்துறை நவீனமாவதற்கு பலபேரின் பங்களிப்பிருந்தாலும் அதில் முக்கியமானவர் ஓட்டோ பிரெட்ரிக் என்பவரே! பாணை வெட்டி அதுவாகவே பொதி செய்துகொள்ளும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் இவரே.பின்னர் Clorleywood bakbng 2Process அடிப்படையில் பாண் செய்முறையில் ஏகப்பட்ட புரட்சிகளும் முன்னேற்றமும் ஏற்பட்டது .

இன்றும் உலகத்தில் கிட்டத்தட்ட 60% மக்களின் பிரதான உணவாக இருப்பது இந்த பாண் உலகத்தின் வரலாற்றுப் பக்கங்களை எடுத்துப் பார்த்தோமானால் பல போராட்டங்களுக்கு இந்த பாண்தான் முக்கிய காரணமாகவும் இருந்திருக்கின்றது.



Post a Comment

Previous Post Next Post