.

மதன் எழுதிய கி.மு கி.பி என்ற புத்தகமானது நாம் வாழும் உலகத்தின் வியப்பூட்டும் திகைப்பூட்டும் அதிர்ச்சியூட்டும் ஆச்சரியமூட்டும் ஒரு மீள் பார்வையாகும்.அரிய புகைப்படங்களுடன் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

உலக வரலாறு முழுவதையும் இந்த கி.மு கி.பி என்ற பதத்திற்குள் அடக்கி விடலாம்.அப்படி மனிதன் தோன்றிய காலம் முதல் மிலேனியம் யுகம் வரை நடந்த நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.

ஒரு காலப்பயணமாக அமைந்துள்ளது இப் புத்தகம்.

இந்த நூலுக்கு இரண்டு சிறப்புக்கள் உண்டு.உலகம் தோன்றியது,மனிதன் பிறந்தது,நாகரிகங்கள் உண்டானது,மதங்கள் வளர்ந்தது,போர்கள் உண்டானது என வரலாற்றைத் தெரிந்து  கொள்ளலாம்.இவற்றையெல்லாம் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருக்கிறார் மதன்.

உலகின் முதல் மனிதன் ஆண் அல்ல பெண் என்பத விஞ்ஞானபூர்வமான உண்மையாகும்.அது ஏவாள்தான் ஆதாம் அல்ல.அவள் ஐரோப்பிய ஏவாள் அல்ல ஆபிரிக்க கறுப்பின ஏவாள் என்கிறது இந்நூல்.

கி.மு 8000 உலக வரலாற்றில் மைல்கல்லாக அமைந்துள்ளது.அது பாலஸ்தீனத்தில் உள்ள ஜெரிகோவில் முதல் மனிதனின் நிரந்தரக் குடியிருப்பு உருவானதுதான் மனித வரலாற்றின் புரட்சியாகும்.

உலகின் முதல் விவசாயி பெண் என்கிறது இந்நூல். பின்னர் இயந்திரங்களின் பயன்பாடு வந்ததும் ஆண்கள் அந்தப் பணியை மேற்கொண்டனர் என்கிறார் மதன்.

நாகரிகம் என்றால் என்ன சொல்லுக்கு வரைவிலக்கணம் சொல்கிறார் மதன்.ஆனால் அது நாகரிகங்களின் மோதல் நூலில் கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்களுடன் வேறுபடுகிறது.மதனின் வரைவிலக்கணத்தில் குறுகிய காலமாக இருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் மனித சமுதாயம் எல்லாத் துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தி புதிய கலாச்சாரத்திற்கும் மனித மேம்பாட்டீற்கும் வழிவகுப்பதே நாகரிகம் என்கிறார்.

உலகின் மையத்தில் ஏதோ ஆதார சக்தியைப் போல நாகரிகம் நிகழ்வதில்லை.அங்குமிங்கும் ஏதோ மூலை முட்டுக்களில் நாகரிகங்கள் கிளர்ந்தெழுகிறன.அதனால்த்தான் மனித சமுதாயம் பல மடங்கு வேகமாக நடை போடத் தொடங்குகிறது என்கிறார் மதன்.

உலகின் முதல் சட்டங்களைச் சொல்கிறது இந்நூல்.ஹமுராயின் சட்டங்களே அவை.மரணதண்டனை மற்றும் கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்ற முறையிலேயே தண்டனைகள் அமைந்திருந்தன.

எல்லா நாகரிகங்கள் பற்றியும் அலசுகிறது இந்நூல்.பழைமையான நாகரிங்களான மெசப்பத்தேமியா.சிந்து சமவெளி நாகரிகம் பபிலோன் நாகரிகம் போன்றவை  விரிவாக ஆராயப்படுகிறன.


பண்டைய எகிப்திய தகாரிகத்தைப் பற்றிச் சொல்லும் போது அங்கு எந்தப் பொருளுக்கு வேண்டுமானாலும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காலாம் ஆனால் கடவுள்களுக்கு மட்டும் அங்கு பஞ்சமே ஏற்பட்டதில்லை என்கிறது இந்நூல்.இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கடவுளரை வணங்கியிருக்கிறனர் எகிப்தியர்கள்.எல்லாக் கடவுளுக்கும் தலைமைக் கடவுள் ஒருவர் இருந்தார்.அவர் பெயர் ஆமன்.மன்னரின் வேலை அக் கடவுளைத் திருப்திப் படுத்துதல் ஆகும்.ஆனால் திருப்தி ஏற்படவில்லை என்று அதற்கான கதையையும் சொல்கிறார் மதன்.

மம்மி தயாரித்தல் தொடர்பாக விளக்குகிறது இந்நூல்.அதாவது இறந்தவர் உடலில்  வயிற்றில் முதலில் துறைபோட்டு நுரையீரல் குடல் பகுதிகளை வெளியே எடுத்து ஜாடிகளில் வைத்துவிட்டு பச்சிலைகளை வயிற்றுக்கள் நிரப்பி உடலைத் தைப்பார்கள்.இதயம் மட்டுமே உடலுக்குள் விட்டு வைக்க ப்படும்.அடுத்ததாக மூக்கு வழியாக மூளை உறிஞ்சி எடுக்கப்படும்.சில சமயம் கண்களை அகற்றி விட்டு செயற்கை கண்களைப் பொருத்துவார்கள். அடுத்ததாக ஒருவகை உப்புத் தொட்டிக்குள் உடலை அமிழ்த்தி வைப்பார்கள்.அதனால் உடலில் உள்ள திரவங்கள் முழுவதும் வெளியேறி விடும்.பின்னர் உடலுக்கு மெழுகு போன்ற பசையைப் பூசுவார்கள்.கடைசியாக வைர.வைடூரிய அலங்காரம் என்கிறது இந்நூல்.

ப்ளேட்டோவைப் பற்றிப் கூறும்போது ரிபப்ளிக் என்ற புத்தகத்தில் ப்ளேட்டோ ஆட்சி முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் கூறியிருக்கிறார் என்கிறார் மதன்.மனிதர்கள் அறியாமையில் மூழ்கியிருப்பவர்கள் என்பதை விளக்க ப்ளேட்டோ முன்வைத்த குகை மனிதர்கள் என்ற சித்தாந்தம் பிரபலமானது அதாவது ஒரு குகைக்குள் மனிதர்கள் விலங்கிடப்பட்டு உட்கார வைக்கப்படடிருக்கிறார்கள்.அவர்களால் நகர முடியாமல்;,கழுத்தைக் கூட அசைக்க முடியாமல் விலங்குகள் அவர்களைப் பிணைத்திருக்கிறன. பிறந்ததிலிருந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் வாழும் அவர்களிற்கு எதிரே ஒரு சுவர்.அவர்களிற்குப் பின்னால் மூட்டப்பட்ட நெருப்புத்த்தான் ஒரே வெளிச்சம்.ஆக அவர்களிற்குத் தெரிந்தது எல்லாம் ஒரு நிழல் உலகம் மட்டும்தான்.அவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டு குகை வாயிலுக்கு கொண்டு செல்லப்பட்டால் அவர் நிஜத்தைப் பார்த்து திகைத்துப் போவர்.அவரின் கண்கள் சரிய வெளிச்சத்தில் கூசும்.உள்ளே ஓடிச் சென்று மற்றவர்களிற்கு உண்மை என்பது நிழல் அல்ல என்று சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை.அதே வேளை வெளி உலகத்தைப் பார்த்த மனிதனாலும் நிம்மதியாக இருக்க முடியாது.சுவரில் தெரியும் நிழல்கள் பொய்யானவை என்பதை புரிந்து கொண்டு விட்ட அவனால் எவ்வாறு மற்றக் குகை மனிதர்களோடு அமர முடியும்.நாமெல்லாம் குகை மனிதர்கள்தான் மனிதன் உணர்ந்து கொள்வதெல்லாம் உண்மையாக இருக்கத் தேவையில்லை என்கிறார் ப்ளேட்டோ என்பதை சுட்டிக் காட்டுகிறார் மதன்.

ஜனநாயக ஆட்சியைத் தொடக்கி தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்திய எதென்ஸ் நாட்டில் மக்கள் என்பது ஆண்களை மட்டுமே குறிக்கப்பயன்பட்டது என்கிறார் மதன்.அங்கு பெண்களின் நிலை மோசமானதாக இருந்தது. வெளியில் செல்ல முடியாது.நாலைந்து பேராக முகத்தை மறைத்துக் கொண்டுதான் செல்லாம்.பெண்கள் வீடுகளின் பின் பக்கத்தில்த்தான் தங்க வைக்கப் பட்டார்கள்.தனிமனித சுதந்திரத்தை பெருமையுடன் முழங்கிய எதென்ஸ் அந்த நாட்டுப் பெண்களுக்கு அந்தச் சுதந்திரத்தை ஏனோ தரவில்லை எனக் கூறி எம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது இந்நூல்.

மொத்தத்தில் வரலாறு தொடர்பாக ஆர்வமுள்ளவர்களிற்கும் அனைவருக்கும் ஏற்றது இப்புத்தகம்.வாசிப்போம்.

கி.மு கி.பி புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

You have to wait 30 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post