.

இயற்கை அளித்துள்ள கொடைகள் அனைத்தும் கிடைக்கப்பெற்ற வனப்புகளும். வளங்களும் நிறைந்த நாடு எமது நடாகும்.சிறியதொரு தீவான இலங்கையின் பிரதான வளமாக இருப்பது காடுகள், நதிகள், மலைகள், கடல், வயல் நிலங்கள், வளசீவராசிகள் போன்ற அத்தனை வளங்களும் நிறைந்திருப்பது உண்மையிலேயே பெரும்பேறாகும் பல நாடுகளில் இதுபோன்ற வளங்கள் கிடையாது.இவ்வாறான வளங்கள் கொண்ட நாட்டில் வாழ்வதற்காக இலங்கையர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்.

எமது நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் வளப்புகளின் பெறுமதி குறித்து வெளி நாட்டினர் புரிந்து கொண்ட அளவிற்கு இலங்கையர்களில் பலர் தெரிந்து கொள்ளவில்லை. இலங்கையின் இயற்கை வளப்பை இரசிப்பதற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவதற்கு ஆவல் கொள்கின்றனர்,ஆனால் இலங்கையர்களில் பலரோ எமது நாட்டின் இயற்கை வளங்களின் பெறுமதியை உணராமல் வளங்களை அழித்துக் கொண்டிருக்
கின்றனர். இது வேதனைக்குரிய விடயமாகும்.

21 ஆம் நூற்றாண்டில் மனிதன் தொட முடியாத உயரங்களை தொட்டுவிட்ட போதும்,பூமியையும் அங்குள்ள இயற்கையையும் பாதுகாக்கவோ மீள உருவாக்கவோ மனிதனால் முடியவில்லை. இலங்கையில் சுமார் 50 வரு உங்களுக்கு முன்னர் காணப்பட்ட காடுகளில் தற்போது அரைவாசிக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இன்று இலங்கையின் மொத்த பரப்பளவை எடுத்துக் கொண்டால் சுமார் 25 சதவீதத்துக்கும் குறைவான பரப்பளவிலேயே காடுகள் உள்ளது. காலப்போக்கில் அக்காடுகளும் அழிக்கப்பட்டு விடலா மென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உயிர்க்கோளமான பூமிக்குத் தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்வதில் மிக முக்கிய பங்கினை காடுகள் வகிப்பதுடன், மனிதன் சுவாசிக்க தேவையான பிராணவாயுவை வெளிவிடுகின்ற தாவரங்கள் அடங்கிய இயற் கையான சூழல் தொகுதியே காடுகளாகும்.தரைக்கீழ் நீர்வளத்தை பாதுகாப்பதுடன் அருவிகள் நீர் ஊற்றுக்கள் என்பவற்றையும் உருவாக்கி, காடுகளின் மூலம் வெளியிடப்படும் நீராவி வளிமண்டலத்தில் ஒடுங்கி மழையாகவும் பெய்கிறது.

அபிவிருத்தி நகர மயமாக்கல், கைத்தொழில் மயமாக்கல் மற்றும் மனிதனின் பிழையான நடவடிக்கைள் என்ற போர்வையில் மனிதன் காடுகளை மிக வேகமாக அழித்துவருகின்றான். இச்செயலானது யானை தன் தலையில் மண்ணை அள்ளி போடுவதற்கு ஒப்பானதாகும் காடுகளை அழிப்பதனால் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகரித்து வளிமண்டல வெப்பநிலை உயர்வடையும்.இதனால் புவியின் வெப்பநிலை உயர்வடைத்து பூமியில் காலநிலை மாற்றம், பாலைவனமாதல்.கடல்மட்டம் உயர்வடைதல் போன்ற பாரிய பிரச்சனைகள் தோன்றி மனித வாழ்க்கைக்கு ஒரு சவாலாக மாறி வருவதை கண்ணூடாக காண முடிகின்றது. குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் பின்னர் காடழிப்பு மிக வேகமடைந்ததே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.

நாட்டில் காடழிப்பு வேகமாகத் தொடர்ந்து கொண்டிருப்பதனால் அதனை எவ்வாறாவது தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த காடுகளும் அழிக்கப்பட்டு நாடு முற்று முழுதாக கட்டாந்தரையாகி விடு மென்பது சூழல் ஆர்வலர்களின் கவலையாக இருக்கின்றது.

நாட்டின் இயற்கை அழகு அழிந்துபோவது ஒருபுறமிருக்க, மனிதன் வாழ்வதற்கும், பிராணிகள் நிலைத்திருப்பதற்கும் காடுகள் துணை புரிவதனால், காடுகளைப் பாதுகாப்பதில் அதீத அக்கறை செலுத்துவது மிக அவசியமாகும்.

மனிதன் தனது தேவைகளுக்காக சுயநலம் கருதி காடுகளை அழித்துக் கொண்டிருக்கின்றான். மரக்கடத்தல் வியாபாரம், விறகுத் தேவை, பயிர்ச் செய்கை நிலங்களை அமைத்தல், குடியேற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு தேயைகளுக்காகவும், பிராணிகளை வேட்டையாடுவதற்காகவும், விஷம நோக்கத்திற்காக காடுகளுக்கு தீ வைக்கின்ற செயற்பாடுகளினாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன.இச்செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்ப டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மலையகப் பிரதேசத்திலும் காடழிப்பு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. மலைக்காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்படுமானால் எதிர்காலத்தில் அங்குள்ள இயற்கை நீரூற்றுகள் வரண்டு விடக் கூடிய ஆபத்து ஏற்படும். நீர்வீழ்ச்சிகளும், அழகிய நதிகளும் வற்றி வரண்டு போகக் கூடும். இதனால் நாட்டின் பெரும் பகுதி பாலைவனமாகிப் போவதற்கும் இடமுண்டு. வனங்களைப் பாதுகாப்பதற்கான திணைக்களமொன்று உள்ள போதிலும், காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பது இயலாத காரியமாக இருக்கின்றது.


மலையில் இருந்து வரும் மழைநீரைத் தடுப்பதற்கு காடுகள் இல்லாத காரணத்தினால் மலைகளில் இருந்து அரித்துக்கொண்டு வரும் மண் நீர்த்தேக்கங்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் குவிக்கப்படுகின்றது. மேலும், மண்ணரிப்பு ஏற்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிப்படைவதோடு, வருடந்தோறும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மண்ணரிமானத்தின் காரணமாக எதுவும் விளையாத வறட்டு நிலமாக மாறிவருகின்றது. அதுமாத்திரமின்றி நிலத்தில் எந்த உயிரினமும், நுண்ணுயிர்களும் வாழ முடியாமல் போவதுடன் மண்ணின் உயிரியல் வளமும் அழிந்து எதற்கும் பயன்படாமலும், எதுவும் விளையாமலும் பாலைவனமாக மாறுகின்றது. அதுமட்டுமில்லாமல் மின் உற்பத்தியும் குறைகிறது.

எமது நாட்டின் இயற்கைச் செல்வங்களை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்காது அதைப் பாதுகாப்பது எம் ஒவ்வொருவரினதும் மிகப்பெரும் பொறுப்பாகும். காடுகள் அழியும் போது மரங்கள் மட்டும் அழிவதில்லை. அங்கிகுக்கும் தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் அனைத்துமே ஒட்டுமொத்த மாக அழிந்து விடுகின்றன.

காடுகளைப் பாதுகாப்பதன் மூலம் வெப்பத்தைக் குறைத்து, வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உயிர்களையும், பயிர்களையும் பாதுகாக்க முடியும்.

காடுகள் அழிப்பினால் காடுகளை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது. அதனால் அவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்.உலகில் மனிதன் மட்டுமல்ல எந்தவொரு உயிரினங்களும் வாழ வேண்டுமானால் காடுகள் வாழவேண்டும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்

காடுகள் மிகவும் முக்கியமானவை அவை பாதுகாக்கப்பட வேண்டியவை இவற்றிலேயே மனித வாழ்க்கை தங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அடுத்த தலைமுறையினர் வாழவேண்டுமாக இருந்தால் நாடுகளை வாழ வைப்போம்.

Post a Comment

Previous Post Next Post