.

ஒரு காட்டில் ஒரு ஆண், ஒரு பெண் ஓநாய்கள் ஜோடியாக வசித்து வந்தன. அவை ஒன்றை ஒன்று மிகவும் நேசித்து வந்தன. பெண் ஓநாயின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்க ஆண் ஓநாய் மிகவும் விரும்பியது.

ஒரு நாள் பெண் ஓநாய் சொன்னது.

பெண் ஓநாய்; அன்பே இன்று மீன் உண்ண வேண்டும் என ஆசையாய் இருக்கின்றது.

ஆண் ஓநாய்: கவலைப்படாதே ஆருயிரே. நீ விரும்பிய மீனைக் கொண்டு வருகிறேன்.

இதைச் சொன்ன உடன் மீனைத் தேடி வெளியே புறப்பட்டது ஆண் ஓநாய் போகும் வழியில் தானே இவ்வாறாக எண்ணிக்கொண்டது. 

ஆண் ஓநாய்: என் மனைவியிடம் மீனைக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். மீன் பிடிப்பது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே. எப்படித்தான் என் மனைவியின் தேவையை பூர்த்தி செய்வேனோ? இப்படி எண்ண அலைகளில் மூழ்கி யபடியே நதிக் கரையை அடைந்த ஓநாய் அங்கு கரையோரம் அமர்ந்து நீர் அலைகளில் துள்ளி விளையாடும் மீன்களை பேராசையோடு உற்று நோக்கியது.எங்கும் பொங்கியோடும் ஆற்று வெள்ள சுழல்களைக் கண்டு பயந்து ஒதுங்கியது ஓநாய். எப்படி செய்யலாம், என்ன செய்யலாம் என்று உயிர் மேல் ஆசையோடு சிந்தனையில் மூழ்கியது.

நீர்க்கீரி1: நாள் தான் முதலில் பிடித்தேன். அதிகப் பங்கு எனக்குத்தான்.

நீர்க்கீரி2: இல்லை எனக்குத்தான். நான் தான் அதை இழுத்துப் போட உதவினேன், அதனால் எனக்குத் தான்.

நீர்க்கீரி1: நான் தான் முதலில் பிடித்தேன்,

நீர்க்கீரி2: இல்லை நான் தான் முதலில்...

நீர்க்கீரி1: எனக்குத்தான் பெரும் பகுதி தரவேண்டும்.

நீர்க்கீரி2: நாள் தான் இழுத்தேன். எனக்கே பெரும் பகுதி வேண்டும்.இவ்வாறு இரண்டு நீர்க்கீரிகளும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்தன. தந்திரம் நிறைந்த ஓநாய் எண்ணியது. இந்த முட்டாள்தனமான.நீர்க்கீரிகள் இந்த மீன்பிடிப்பை முன்னிட்டு சண்டை செய்கின்றன.இவர்களுக்கு நீதி வழங்குவது போல நடித்து நாள் பெரும் பகுதி மீனை பெற்றிட வேண்டும். உடனே ஓநாய் அவைகள் இருந்த இடத்திற்கு விரைந்து நடந்து சென்றது.

ஆண் ஓநாய்: நண்பர்களே உங்களுக்கு என்ன பிரச்சினை?

நீர்க்கீரி 1: பெரிய பிரச்சினை இல்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெரிய மீனைக் கொன்றோம். இப்போது அதை எப்படி பங்கிடலாம் என்பதுதான் பிரச்சினை.


ஆண் ஓநாய்: பாருங்கள் நீங்கள் விரும்பினால் நான் உதவுகிறேன்..மற்றவர் பிரச்சினைகளில் தீர்வு காண்பவன் நான். நீங்கள் விரும்பினால் இணக்கமான ஒரு தீர்வைத் தருகிறேன்.

நீர்க்கீரி 1: மிகவும் சரி, எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை.ஆனால் அவனுக்கும் ஆட்சேபனை இல்லாத பட்சத்தில்....

நீர்க்கீரி 2: எனக்குக் கூட ஆட்சேபனை ஒன்றும் இல்லை.

ஆண் ஓநாய்: இதைத்தான் எதிர்பார்த்தேன். நான் சென்று பங்கிட வசதியாக ஒரு கத்தியை கொண்டு வருகிறேன்.

நீர்க்கீரி 1: ஆமாம் உடனே சென்று வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். ஓநாய் உடனே கத்தியை எடுத்துவர காட்டிற்குள் சென்றது. கத்தி ஒன்றை கவ்வியபடி திரும்பி வந்தது. இரண்டு நீர்க்கீரிகளும் ஓநாய் ஒரு பெரிய கத்தியுடன் மகிழ்ச்சியோடு திரும்புவதைப் பார்த்தன.

ஆண் ஓநாய்: வாருங்கள் நண்பர்களே.. இப்போது உங்கள் பிரச்சினையை தீர்த்து வைக்கின்றேன்,இவ்வாறு ஓநாய் சொல்லிக்கொண்டே மீனை மூன்று துண்டுகளாக நறுக்கியது. முதலில் தலையையும் பின்பு வாலையும் வெட்டியது ஓநாய்.

ஆண் ஓநாய்: முதலில் நீ தலையை பிடித்ததால் உளக்கு தலைப்பாகம். முதலில் நீ வாலைப் பிடித்ததால் உனக்கு வால் பாகம். இரண்டு நீர்க்கீரிகளும் தங்களது பாகங்களை எடுத்துக்கொண்ட பின் மீனின் நடுப்பகுதி மீதே இரண்டின் பார்வையும் படிந்திருந்தது.இரண்டுமே ஓநாய் நடுப்பகுதி மீளை இரண்டாக ஆக்கி தங்களது பங்கை பங்கிட்டுத் தரும் என்று நினைத்தன. ஆனால் ஓநாய் அதை தனக்குரியது என்று எடுத்துக்கொண்டது.

நீர்க்கீரி 1: நண்பரே மீதித் துண்டை பங்கிட மாட்டீர்களா?

ஆண் ஓநாய்: இந்தத் துண்டு உங்களைச் சேர்ந்தது அல்ல. என் வேலைக்குக் கிடைத்த கூலி கத்தியை எடுத்து வந்து அதை அறுத்து பங்கீடு செய்து உங்களுக்காக பாடுபட்ட எனக்குரியது இது. என்னும்டைய கடின உழைப்பிற்காக உங்களது உற்ற நண்பனாகிய எனக்கும் ஒரு பங்கு உண்டல்லவா?

இவ்வாறு சொல்லியபடியே ஓநாய் மீனின் நடுப் பகுதியான பெரியதுண்டை கவ்வியபடியே சென்றுவிட்டது. ஓநாய் பெரிய பகுதியுடன் ஓடியதை பார்த்தபடியே மலைத்து நின்ற நீர்க்கீரிகள் என்ன நடந்தது| என்று நினைப்பதற்குள் காலம் கடந்துவிட்டது விட்டது.

நீர்க்கீரி 1: நண்பனே நமது பங்கைப் பெற நமக்குள் பேசி தீர்த்துக் கொண்டிருந்திருக்கலாம். நமக்கு தலையையும் வாலையும் நமது பங்கென்று சொல்லி அந்த ஓநாய் பெரும் பகுதியோடு ஓடிவிட்டது.இரண்டு நண்பர்கள் இடையேயான பிரச்சனை மூன்றாம் நபருக்கு நன்மை விளைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்க வேண்டும் ஒரு சின்ன பேதம் கூட நம்மை பாதிக்கும்.எக்காரணம் கொண்டும் மற்றவரைநமது எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது.

நீங்கள் ஒரு போதும் எப்போதும் நண்பர்களுடன் சண்டையிடக்கூடாது.இரண்டாம் நீர்க்கீரி சொன்னது போல இரண்டு பேருக்கிடையே நடைபெறும் சண்டை மூன்றாமவருக்கு நன்மையைச் தந்துவிடும்.எனவே நண்பர்களுடன் சண்டையிடக் கூடாது என்பதே இதன் நீதியாகும்.

Post a Comment

Previous Post Next Post