கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு நூலானது இலங்கைத் தமிழரைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஒரு வரலாற்று ஆவணமாகும்.வரலாற்று ஆர்வலர்களிற்கும் வாசிப்பு பிரியர்களிற்கும் ஏற்ற வகையில் இந்நூல் அமைந்துள்ளது.இலங்கைத் தமிழரைப் பற்றி கி.மு.300-கி-.பி-2000 வரையிலான காலகட்டம் வரை ஆதாரங்களுடன் இலங்கைத் தமிழர் வரலாற்றைச் சொல்கிறது இந் நூல்.
வரலாற்றுப் பொக்கிஷம் என்றே இந்நூலைச் சொல்லலாம். இலங்கைத் தமிழர்கள் தங்களது வரலாற்றைச் சரியாக ஆவணப்படுத்த தவறியிருந்ததால் அவர்களைப் பற்றிய வரலாற்றினை அறிய சொற்பவளவிலான தகவல்களே கிடைக்கிறன. கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் தமது வரலாற்றினை சரியாக ஆவணப்ப டுத்தியிருந்தால் தற்போதைய நெருக்கடி நிலை இலங்கைத் தமிழர்களிற்கு ஏற்பட்டிருக்காது.தமக்கே இலங்கை சொந்தம் எனச் சிங்களவர்கள் சொந்தம் கொண்டாடும் நிலை இருந்திருக்காது. வரலாறு ஒரு இனத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலையை வைத்தே அறிந்து கொள்ளலாம்.
இந்தப் புத்தகமானது பத்துப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழர் தோற்றமும் ஆரம்ப வரலாறும்,இருண்ட வரலாற்றுக் காலம், சோழர் ஆக்கிரமிப்பும் அதன் விளைவுகளும்,யாழ்ப்பாண இராச்சி யமும் வன்னிச் சிற்றரசுகளும்,போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பும் தமிழ் பிரதேசங்களின் அழிவும்,டச்சுக்காரரின் ஆக்கிரமிப்பும் தமிழ் பிரதேசங்களைச் சுரண்டியமையும் பிரித்தானியரின் ஆரம்ப ஆட்சியும் தமிழரும்,தமிழர்களின் விழிப்புணர்வு எழுச்சியும் சமயம், கலாச்சாரம்,மொழி பொருளாதாரம் பிரித்தானியரின் அதிகாரமும் தமிழரின் ஆட்சியுரிமை நிராகரிப்பும் சுதந்திரத்தின் பின் இலங்கை அரசின் நடவடிக்கைகளும் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் என பத்து அத்தியாயங்களில் இலங்கைத் தமிழர் வரலாற்றை ஆராய்கிறது இந்நூல்.இது ஒரு முழுமையான வரலாறாகும்.இதனை எழுதுவதற்காக இந்நூலாசிரியர் பல்வேறு வகையான ஆதாரங்களை காலனிய ஆட்சியாளர்களின் அருங்காட்சியகங்களிலிருந்து திரட்டி யுள்ளார். அதனால் அவை ஒரு மூல ஆதாரமாகும்.
உண்மையில் இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி சரியான முறையில் ஆய்வு செய்து பூரணமான வரலாறு ஒன்றை எழுதுவதற்கு இலங்கையில் போதுமான மூலாதாரச் சான்றுகள் இல்லாததன் காரணமாக இலங்கையோடு வரலாற்று ரீதியாக தொடர்புடைய இந்தியா,போர்த்துக்கல்,நெதர்லாந்து,ஐரோப்பா,அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள பல ஆவணக் காப்பகங்கள் நூல் நிலையங்கள்,அரச தாபனங்கள்,பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்கள்,தமிழ்ப் பிரதேசங்கள் பற்றி அங்குள்ள ஆவணங்களைத் தேடிப் பெற்று அவை உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு இந்நூல் வெளிவந்துள்ளது.
இந் நூல் சகலமட்டங்களிலுள்ளவர்களைக் கருத்தில் கொண்டு விடயங்களை இலகு படுத்தியும் அதே வேளை புலமைநிலை தவறாது உள்ளதை உள்ளவாறே சான்றுகளின் அடிப்படையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு |
இலங்கையானது வரலாற்று ரீதியாக இரண்டு வேறுபட்ட தேசங்களாகவே இருந்து.ஆயினும் இன்று தீவின் வரலாறு ஒரே தேசம் என்றே குறிப்பிடப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.இங்கு சிங்களவர், தமிழர் என்ற இரு தேசிய இனங்கள் வரலாற்றுக் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக வாழ்கிறன.இவ் இரு இனங்களிற்கும் தெளிவான வேறுபட்ட சுய மத,மொழி,கலாச்சார,சமூக,பொருளாதார,அரசியல் விழுமியங்கள் காணப்படுகிறது.தத்தம் தாய் நிலங்களில் வேறுபட்ட இராச்சியங்களை நிறுவியுள்ளனர்.இருப்பினும் தமிழருக்கு சுய நிர்ணய உரிமைக்கான நியாயபூர்வமான உரிமைகள் எதுவும் இல்லையென்ற வாதம் சிங்கள மக்களால் முன் வைக்கப்படுகிறது. இதனை பிழை என நிரூபிக்கிறார் குணசிங்கம்.
இலங்கைத் தமிழருக்கு அவர்களுக்கே சொந்தமான மொழி, மதம், கலாச்சாரம்,பாரம்பரியம்,தாய்நிலம் என்பவற்றுடன் உன்னதமிக்க ஒரு கட்ந்த காலமும் உண்டு.வலிமை வாய்ந்ததொரு தேசிய அடையா ளத்தை நிலைநாட்டுவதற்கு இந்த உண்மைகள் உறுதி செய்யப்படல் வேண்டும்.ஆனாலும் அவர்கள் தமது இரசியல் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு ஏதுவான வரலாற்று ரீதியிலான சான்றுகள் அவர்களிடம் இல்லை.அவ்வாறாயின் தமிழ்மக்கள் எதற்காக தமது வரலாற்றைப் பேணிப் பாதுகாக்கவும்,மேம்படுத்தவும் தவறிவிட்ட னர்..? இவ்விடயத்தில் சிங்கள மக்கள் வெற்றிகரமாக தமது வரலாற்றைப் பேணிப் பாதுகாத்துள்ளனரே..? என்ற வினாக்கள் எம்முள் எழுலாம்.இவ்வினாக்களுக்கான விடையை இந்நூல் சான்றுகளுடன் சொல்கிறது.
இலங்கைத் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் இலங்கையின் வரை படத்திலிருந்து அடியோடு அழிக்கப்பட்டதன் விளைவே,இன்று தமிழர்கள் அனுபவிக்கும் சகலவிதமான துன்பங்களிற்கும் அழிவு களிற்கும் அடிப்படையாக அமைந்தது.தமிழரின வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் ஒரு தனியான தமிழர் தேசம் என்பதை1796 ஆம் ஆண்டு கிளைக்கோன் என்பவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். இருப்பினும் பிரித்தனியர் காலத்தில் தமது நிர்வாக வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும்,பொருளாதார நலன்களிற்காகவும் மேற்படி பிரதேசங்களின் தமிழ் அடைளானத்தை சீர் குலைத்து சிங்களப் பிரதேங்களோடு இரண்டறக் கலக்க வைத்தனர்.அவ்வாறில்லாமல் பிரித்தானியர் உண்மையில் தமிழரின் எதிர்காலம் பற்றிய அக்கறை கொண்டிருந்தால் அவர்கள் தொடர்ந்தும் மேற்படி பிரதேசங்களை தனி அலகுகளாகவே செயற்பட வைத்திருப்பர்.அவ்வாறு நிகழ்ந் திருப்பின் தற்போதைய பிரச்சனைகள் நிச்சயம் காணப்ப ட்டிருக்காது.பல்லாயிரணக்கணக்கான தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தமது உயிர்களை இழக்க வேண்டி ஏற்பட்டிருக்காது என்பது நிச்சயம்.பிரித்தானியரின் ஏகாதிபத்திய வெறியும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களுமே தமிழரின் பாரம்பரிய தமிழ்த் தேசத்தை யும் சுதந்திரத்தையும் அவர்களை இழக்கச் செய்ததுடன் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சீர்குலைத்தன என்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.
தமிழ்த் தலைவர்களது தவறுகளையும் இந்நூல் சுட்டிக் காட்டத் தவறவில்லை.குறிப்பாக பொன்னம்பலம் அவர்களின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையானது 60:40 என்று வந்தபோதும் விடாப்பிடினான கொள்கைகளாலும் சட்டம் பயின்ற மமதையாலும் பயனற்றுப் போனதோடு தமிழர் பிரதிநிதித்துவமும் அரசியல் அந்தஸ்த்தும் மிகவும் இழிவான நிலைக்குள் தள்ளப்பட்டது.மேற் தட்டு வர்க்கத் தமிழர் பிரதிநிதிகள் தமது சொந்தப் பதவிகளிலும் அந்தஸ்த்திலுமே கவனம் செலுத்தினர்.மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. எப்படியிருந்தபோதும் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டங்களையும் பெற்று மகாராணியின் நியாயவாதிகள் சபையில் அங்கம் வகிக்கிற உயர் நிலையினை நியாயவாதத் துறையில் ஈட்டி தலைசிறந்த வழக்கறிஞராக பரிணமித்த ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள்,எட்டாம் வகுப்பு வரையுமே கல்வி கற்றிருந்த சாதாரண டி.எஸ் சேனநாயக்காவிடம் தமிழரின் அரசியலைப் பொறுத்தவரை முற்றுமுழுதாகத் தோற்றுப் போனார் என்பதை இந்நூல் விலாவாரியாக சுட்டிக் காட்டுகிறது.
உண்மையில் இந்நூலானது இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய மிகவும் ஆணித்தரமான சான்றாதாரங்களுடன் வெளிவந்துள்ளது. இலங்கைத் தமிழரைப் பற்றி அறிய விரும்புபவர்கள் இந்நூலை வாசிப்பது அவசியமானதாகும்.
இலங்கையில் தமிழர் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Post a Comment