ஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார். அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார். கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்கமாட்டார்.சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார். ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்து அனுப்புவார்.
இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயைப் பார்க்கப் போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் அழகேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை.இருந்தாலும் போய் வா, இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்புக் காசுகள் கொடுத்தார்.
அவரும் மனம் கோணாமல் தாயாரைப் பார்க்க போகிற மகிழ்ச்சியில் சந்தோசமாக வாங்கி, முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதேநேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டு வந்தான். அழகேசன் இருந்தவரை அவனால் திருட முடியவில்லை. அழகேசன் ஊருக்கு கிளம்புவதையும் அவர் சம்பளம் வாங்கிச் சென்றதையும் பார்த்தான்.கண்டிப்பாக நிறைய தங்கம் கொண்டு செல்வார் என்று நினைத்தான். அதற்கு முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்கக் காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளையடித்து, பெரிய மூட்டை கட்டினான்.
பேராசை யாரை விட்டது. இது போதாது என்று நினைத்து, அழகேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான். எப்படியும் அழகேசன் காட்டு வழியாகத்தான் நடந்து ஊருக்குச் செல்வார். எனவே அவரை அங்கேயே மடக்கி, இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்குப் பாதையில் ஓடி காட்டில் ஒளிந்து கொண்டான்.
அழகேசன் காட்டு வழியாகச் செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார். அவரை ஓடிப்போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார்.சிறிது நேரத்தில் அந்தக் குள்ள மனிதர் கண்விழித்துப் பார்த்தார். அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி.அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கிக் கிடக்கிறீங்க.
தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி,நான் பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக.
அய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது. இதில் 2 செப்புக்காசுகள், நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.
தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுது, கைமாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். எனக்கு சில மந்திர சக்திகள் இருக்குது, அதனை மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்.
அழகேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம்.அதுவும் மந்திர சக்தியால், புரியவில்லையே என்று திகைத்தார்.
தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள்.அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க,அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும்.
உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது. அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்றுவிட்டார். அழகேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார். திடீரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான், மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். அழகேசனுக்கு பயம், ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு, உயிரை இழக்க வேண்டும் என்று நினைத்து, பையில் இருந்த 3 செப்புக் காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்புக் காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார்.தங்கம் கிடையாதா, கஞ்சப்பயல், அதான் அவன் வீட்டில் நான் இத்தனை தங்கம் இருந்ததா, ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன்.
என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன். நான், நம்ப மாட்டேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?
எங்கள் இணையத்தளத்தை விட்டுச் செல்வதற்கு முன் இவற்றையும் பார்வையிடுங்கள்.உங்களுக்கு வாழ்க்கைக்கு தேவைப்படும் குட்டிக் கதைகளாக அமையும்.
- பறவை ஒரு குட்டிக் கதை
- குல்லா வியாபாரியும் குரங்குக் கூட்டமும்-குட்டிக் கதை
- அமைதி - ஒரு குட்டிக்கதை
- வாழ்க்கை ஒரு குட்டிக்கதை
- கடவுள் இருக்கும் இடம் ஒரு குட்டிக்கதை
- இரண்டு மரம்-குட்டிக்கதை
- கடவுள் ஒரு குட்டிக்கதை
- கர்மா பற்றிய ஒரு குட்டிக்கதை
- ஆசைக்கு அழிவில்லை என்பதற்கான ஒரு குட்டிக் கதை
- ஞானம் ஒரு குட்டிக் கதை
- எண்ணமே வாழ்க்கை-குட்டிக்கதை
- முரட்டுக்குதிரை-குட்டிக்கதை
- யார் அழகு..?
- ஒற்றுமையே பலம்
- கொக்கிற்கு எத்தனை கால்..?
- அதிசய மோதிரம்-குட்டிக் கதை
- பரிசும் ஊக்கமும்-குட்டிக் கதை
- தர்மம் தலை காக்கும்
- உழைப்பும் சோம்பலும்-குட்டிக் கதை
- புத்தியில்லாதவர்களின் வேலை-குட்டிக் கதை
- பூதம் சொன்ன கதை-குட்டிக் கதை
Post a Comment