.

மனித வாழ்வில் தொழிற்சாலை முக்கிய இடத்தை வகிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. நாம் காலில் அணியும் செருப்பு முதல் தலையிலுள்ள முடியை வெட்டப் பயன்ப டுத்தப்படும் கத்தரிக்கோல் வரை அனைத்தையும் தயாரிக்க பல தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
 
தொழிற்சாலை என்பது நாம் அனைவரும் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் இடமாகும்.இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஒவ்வொரு நாளும் கண்டுப்பிடிக்கப்படும் பொருட்களை அதிகளவில் தயாரிக்க தொழிற்சாலைகள் பெரிதும் பங்காற்றுகின்ற அதேவேளை, எமக்கு பல விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.

 இவ்விளைவுகளால் எமது அன்றாட வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது.தொழிற்சாலைக் கழிவுகள் என்பது தொழில்துறை நடவடிக்கைகளால் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளாகும், இதில் தொழிற்சாலைகள்,தொழில்கள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் போன்ற உற்பத்தி செயல்முறையின்போது பயனற்றதாக இருக்கும் அனைத்து செயற்பாடுகளும் இதில் அடங்குகின்றன. இந்த நடவடிக்கைகளின் தோற்றம் (தடுப்பு, எதிர்பார்ப்பு) ஒரு பொருளை வீணாக்குவதற்கு முன், அபாயகரமான பொருட்களின் அளவு மற்றும் வகையைக் குறைத்து, மனித நல்வாழ்வு மற்றும் பூமியின் மீதான விரோத விளைவுகளிலிருந்து விலகி இருப்பது போன்ற முறையுடன் இது நிகழ்கின்றது.

தொழிற்சாலைக் கழிவுகளை மறுபயன்பாடு செய்வதில் பாரிய கவனம் செலுத்தப்படுகின்றது. இதை அகற்றுவதைத் தொடர்வதற்கு முன், கழிவுகளை மதிப்பிடும் திட்டங்களில்,தடுப்பு மற்றும் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிக முக்கிய விடயமாக இருக்கின்றது. கழிவுகளை மீண்டும் பயன்படுத்தவும், சேமிக்கவும் சில வகையான மீட்சியை (உயிர்,பொருள்) உருவாக்கும் நோக்கத்துடன் மேலாண்மை மற்றும் தயாரிப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மதிப்பும், அர்ப்பணிப்பும் தேவையாக உள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் மட்டுமின்றி நீர், காற்று என அனைத்துமே பாதிக்கப்படுகின்றது. கழிவுகளை உரிய முறையில் சுத்திகரித்து வெளியேற்றா விட்டால், சுற்றுச்சூழல் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

சீனித் தொழிற்சாலை, சீமேந்து,தொழிற்சாலை, இரசாயன  தொழிற்சாலை, காகித உற்பத்தி தொழிற்சாலை, உரத் தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்சாலை, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு தொழிற்சாலை,அனல் மின் உற்பத்தி நிலையம், மென்பான தொழிற்சாலை, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை, சாயக் கலவை தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை, தாமிரஉருக்கு தொழிற்சாலை, இரும்பு தொழிற்சாலை, துத்தநாகம் உருக்கு தொழிற்சாலை அலுமினிய தொழிற்சாலை, அணுக்கரு உற்பத்தி தொழிற்சாலை, கார் உற்பத்தித் தொழிற்சாலை, பிளாஸ்டிக் தொழிற்சாலை போன்றவை சுற்றுப்புறச் சூழலை பாரியளவில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளாக காணப்படுப்படுகின்றது.

இந்த தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்படுகின்ற கழிவுகளினால் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்து செல்வதாக இல்லை என்பதுதான் இதன் உண்மையாகும்.

தொழிற்சாலையின் கழிவுநீரை நிலத்துக்கடியில் விடுகின்றனர். இதனால், நிலத்தடி நீரும்,சுற்றுவட்டார விவசாய நிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து வெளியேறும் கரும்புகையால், சுற்றுவட்டார மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதே போன்று உயிரி மின் உற்பத்தி நிலையம்,கரித்தொட்டி கம்பெனிகள் போன்றவற்றினால் வெளியேற்றப்படுகின்ற கழிவுகளாலும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுகிறன.

தொழிற்சாலைகளினால் சரியான முறையில் வெளியே ற்றப்படாத இரசாயனக் கழிவுகள் சுத்திகரிக்காமல் நிலத்துக்கடியிலும், கிணறுகளிலும் விடப்படுகின்றன. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாதளவுக்கு மாசடைந்து விடுகிறது.மேலும், பல தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுகளை குழிதோண்டி புதைத்துவிடுவதால், நிலத்தடி நீருடன், விவசாய நிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாக அப்பிரதேசத்திலுள்ள குழாய்க் கிணறு மற்றும் கிணற்று நீர் போன்றன கழிவுநீராக மாறுகின்றன. இதனால், குடிப்பதற்கும், ஏனைய பாவனைகளுக்கும் தண்ணீரின்றி மக்கள் அவதியுறுகின்றனர். அதுமாத்திரமன்றி தொழிற்சாலைகளில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படுகின்ற கரும்புகையினால் வளி மாசு அதிகரிக்கிற அதே நேரம், அப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கு சுவாச நோய் பிரச்சினைகள், தோல் நோய்கள், புற்று நோய் போன்ற பாதிப்புக்களுடன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.அதுமட்டுமன்றி கரும்பு கையுடன் சேர்ந்து கரித் துகள்களும் வெளியேற்றப்பட்டு அப் பிரதேசங்களிலுள்ள பயிரிணங்களை பாதிப்படையச் செய்து குடியிருப்பு நிலங்கள் மற்றும் வீடுகள்,உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதன் கரித்துகள்கள் படர்கின்றன. இரசாயனப் பொருட்கள், சவர்க்காரம், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மிகுந்த அபாயம் கொண்டதாக இருக்கின்றது. இவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல், கிணறுகளிலும், நிலத்துக்கு அடியிலும் சேமிக்கின்றனர்.இவை பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வையாக உள்ளது. அதேபோன்று தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற் றப்படுகின்ற சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை குழாய்கள் மூலம் அருகிலுள்ள ஓடைகள், வாய்க்கால், ஆறுகளில் கலக்க விடுகின்றனர். இதனால், அந்த நீர் நிலைகள் மாசடைவதுடன், அந்த நீரைப் பயன்படுத்தும் மக்களும், நீரில் வாழும் உயிரினங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றது.

குறிப்பாக, மறைந்த மற்றும் செயலற்ற கழிவுகள், அதன் தனித்தன்மைகள் மற்றும் கட்டமைப்பின் காரணமாக, இயற்கைக்கும் அல்லது விலங்குகளின் நலனுக்கும் அசாதாரணமான ஆபத்துக்களை ஏற்படுத்தாது. மனித நலனையும் பாதிக்காது.

இந்தக் கழிவுகளை முன் சுத்திகரிப்பு இல்லாமல் சேமிக்கலாம் அல்லது தூக்கி எறியலாம்அல்லது மீள்சுழற்சி செய்யலாம். மேலும்,சுற்றுச்சூழலின் இயற்பியல் இடத்தை மாற்றாத வகையில் நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். (பழைய உலோகம்,இடிபாடுகள், சாம்பல், கண்ணாடி வகை.

முக்கியமாக, தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவு வகைகள், அட்டைகள், காகித வகைகள், பிளாஸ்டிக் பொருட்கள்,அபாயகரமான கழிவுகள் அதிக அசுத்தமான திறனைக் கொண்டுள்ளதுடன் மனித நல்வாழ்விற்கும் பூமிக்கும் மிகவும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

வீட்டுக் கழிவுகள், வணிக கழிவுகள்,தொழிற்சாலை கழிவுகள், செயலற்ற கழிவுகள், அபாயமற்ற கழிவுகள், ஆபத்தான எச்சங்கள், மக்கும் குப்பைகள் என்ற அடிப்படையில் தரப்படுத்தப்படுகிறது. மேலும், சிறப்பு வகை கழிவுகளாக கதிரியக்கக் கழிவுகள், சுகாதாரக் கழிவுகள், கட்டட இடிப்புக்கள் மற்றும் கட்டுமான கழிவுகள் போன்றவை காணப்படுகின்றது.இது சிறப்புச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படும் கழிவு வகைகளைச் சேர்ந்தவையாகும்.

வீட்டுக் கழிவுகள்: வீட்டு வேலைகளின் விளைவாக சேமிக்கப்படும் குப்பைகள், சமையலறைக் கழிவுகள், பாவனையற்ற உபகரனங்கள், கடதாசிகள் போன்ற வகையான கழிவுகள் உற்பத்தியாகின்றது.

வணிக கழிவுகள்: பரிமாற்றம், தள்ளுபடி மற்றும் சில்லறை வணிகத்தின் இயக்கம், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களின் சேவைகள், அலுவலகங்கள் மற்றும் சந்தைகள் போன்ற பணியிடங்கள் மற்றும் முழுப் பகுதியிலிருந்தும் வணிகப் பணிகளில் இருந்து எஞ்சியிருக்கும் கழிவுகளால் உருவாக்கப்படுகிறது.

தொழிற்சாலை கழிவுகள்: காற்றில் வெளியேற்றங்களைத் தவிர, நவீன தொழில்துறையின் செயற்பாட்டின் மூலம் உற்பத்தி, மாற்றம்,பயன்பாடு, சுத்தம் செய்தல் அல்லது பராமரிப்பு ஆகியவற்றின் செயல்முறைகளில் இருந்து உருவாகின்றன.

செயலற்ற கழிவுகள்: எண்ணெய், பிளாஸ்டிக், மரம் போன்ற கழிவுகள்.அபாயமற்ற கழிவுகள்: வெறும் அட்டைகள் மற்றும் கேன்கள் போன்றவையாகும்.இவைகள் மூலம் எந்த அபாயத்தையும் ஏற்படுத்தாது.

ஆபத்தான எச்சங்கள்: ஒரு நாட்டிலிருந்து மற்றுமோர் நாட்டிற்கு கொள்கலன்கள் மற்றும் பெட்டிகளில் அடைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்ற கழிவு வகைகளாகும்.

மக்கும் குப்பைகள்: இவை பாலர் பாடசாலைகள் மற்றும் பூங்காக்கள், உணவுக் கழிவுகள், மின்சார சிற்றுண்டிச்சாலைகள் மற்றும்  சில்லறை வியாபார நிலையங்களில் இருந்து வரும் கழிவுகளாகும்.

கதிரியக்கக் கழிவுகள்: அதிக அபாயகரமான கதிர்வீச்சின் அறிகுறிகளைக் காட்டும் மற்றும் எந்தப் பயனும் கணிக்கப்படாத பொருட்கள்,அசுத்தமான திரவங்கள் மற்றும் எஞ்சிய வாயுக்கள் மூலம் உருவாக்கப்படுகின்றது.

சுகாதாரக் கழிவுகள்: சுகாதாரம் மற்றும் சைட்டோடாக்ஸிக் கழிவு வகைகளாகும்.இந்தக் கழிவுகள் கொள்கலன்கள் போன்ற மருத்துவ சாதனங்களில் உற்பத்தி செய்யப்படுபவையாகும். (குறிப்பிட்ட அளவு மருந்துகள்,கூர்மையான பொருள்கள், ஊசிகள், இரத்தத்தால் மாசுபடுத்தப்பட்ட பொருட்கள்)

இடிப்பு மற்றும் கட்டுமான கழிவுகள்:கட்டுமானப் பணிகள், அகழ்வாராய்ச்சிகள்,மறுவடிவமைப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுது பார்ப்பு ஆகியவற்றால் ஏற்படும் ஒரு செயலற்ற இயற்கையின் கழிவுகளாகும்.

பொருளாதார விருத்திக்கும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தொழிற்சாலைகளின் பங்கு மிக அவசியமாக இருக்கின்றது. இதனால் பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக்களும் கிடைக்கின்றது.தொழிற்சாலைகளினால் வெளியேற்றப்படும் கழிவுகளை முறையாக சுத்திகரித்து நிலம், நீர்,வளி போன்றவற்றுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் வெளியேற்றப்பட வேண்டும்.

அரசும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான திணைக்களங்களும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் எமது நாட்டையும்,மக்களையும் பாதுகாக்கின்ற அதேவேளை எமது நாட்டின் முதுகெலும்பாகக் காணப்படும் விவசாயம் மற்றும் ஏனைய வளங்களையும்பாதுகாக்க முடியும். குறிப்பாக, எமது எதிர்காலசந்ததியினருக்கு பாதுகாப்பான பூமியை விட்டுச்செல்லவும் இது வழிவகுக்கும் என்பதில்எவ்வித ஐயமும் இல்லை.

இதனை செயற்படுத்துவதற்கு, அரசும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அமைச்சு மற்றும் திணைக்களங்களும் இணைந்துசெயற்பட்டால் மட்டும் போதாது. அதற்கு எம் ஒவ்வொருவரின் பங்களிப்புக்கள் மிக இன்றியமையாதவையாக இருக்கின்றது. இவைகளை பாதுகாப்பது நாம் அனைவருக்கும் உள்ள கடமையும், பொறுப்பும் ஆகும்.


@இக் கட்டுரையானது M.I.M பைசல் அவர்களால் எழுதப்பட்டது




ஏனைய கட்டுரைகள்.இவற்றையும் பார்வையிடுங்கள்.
  1. அமில மழையின் தாக்கம்-சூழல் மாசடைதல்
  2. QR Code எப்படி இயங்குகிறது..?
  3. காதல் தோல்விக்குப் பின்-முன்னாள் காதலன் அல்லது காதலிக்கு 
  4. காதல் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி..?
  5. ஒரு காதல் என்ன செய்யும்..?
  6. காலநிலை மாற்றத்தின் பிடியில் உலகம்....
  7. இலங்கைத் தமிழிற்கும்  இந்திய தமிழிற்கும் இடையிலான வேறுபாடு 
  8. திருமணங்களும் மணமுறிவுகளும்
  9. பருவநிலை மாற்றமும் மனித செயற்பாடும்-காலநிலை மாற்றம்
  10. வளி மாசடைதல்
  11. குவேனியின் சாபம்
  12. 2000 தூர வெறித்த பார்வை-Tom lea
  13. மாதவிடாய்க் கோப்பை( Menstrual cup)
  14. மனிதர்களிற்கும் ஆடுகளிற்குமிடையிலான யுத்தம்
  15. பெண்களிற்கு எதிரான வன்முறைகள்
  16. கர்ணனின் இறப்பிற்கு காரணம் யார் ஒரு பார்வை
  17. யூதப் படுகொலை-ஹோலோகோஸ்ட்
  18. தற்கொலை ஓர் தீர்வல்ல
  19. எறும்புகளின் வாழ்க்கை



Post a Comment

Previous Post Next Post