.

மனித சமுதாயத்தைப் போலவே எறும்புகளுக்கும் மன்னர், அமைச்சர், இராணுவ வீரர்கள்,பணியாட்கள், அடிமைகள் இருப்பதாக அந்த ஆய்வுகள் கூறுகின்றன. அவைகள் தங்களுக்குள் உணவு பண்டங்களை பண்டமாற்றம் செய்து கொள்வதற்காக அவைகளுக்கு சந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் பறவைகளும் தனித்தனி சமுதாயங்களாகவே வாழ்வதாக கூறுகி றார்கள்.அவைகள் தங்களுக்குள் பேசி மகிழ்கின்றன, விளை யாடுகின்றன, அன்பு செலுத்தி காதல் செய்கின்றன, உழைத்து, வேட்டையாடி தங்கள் குடும்பத்தை, குஞ்சுகளை காப்பாற்றுகின்றன. மேலும் பறவைகள் மிகவும் ஆச்சரியமான குணாதிசயங்களைப் பெற்றுள்ளன.

சில கடல் பறவைகள் பல்லாயிரக்கணக்கான மைல் தூரம் பறந்து சென்று இரை தேடிவிட்டு,பிறகு தங்களின் இனப்பெருக்கத்திற்காக தாம் பிறந்து வளர்ந்த இடத்திற்கு அவைகள் சென்ற அதே பாதையிலேயே ஒவ்வொரு ஆண்டும் திரும்பி வருவதாக பறவைகளின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எறும்புகள் பற்றியஅதிசயித்தக்க தகவல்கள்

1. அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும், வேலையாட்களும் காவலாளி களும் 3 வருடம் வரையும், ஆண் எறும்பு சில மாதமும் உயிர்வாழ்கின்றன . (பூச்சி இனங்களில் மிகவும் அதிக காலம் உயிர்வாழக்கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது )

2. ஒரு எறும்பு கூட்டத்தில் ( கூட்டில் அல்லதுபுற்றில் ) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன.

3.ஒரு கூட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ராணிகளும் இருக்கும் . அதே வேளையில் ராணிஇல்லாது எறும்பு இருப்பது இல்லை .

4.எறும்பு இனமானது மிகசிறியது முதல் 5 சென்டிமீட்டர் ( 2 அங்குலம் ) வரை உள்ளன.எறும்புகளின் உணவானது தானியம், பங்கஸ்,தேன் என பல வகைகளில் அடங்கும் .

5.மிகவும் சிறந்த மோப்ப சக்தி ( வாசனைநுகரும் சக்தி ), கண் பார்வை உடைய எறும்புகளுக்கு சுவாசப்பைகள் இல்லை.

6.எறும்புகள் தமது உடல் எடையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்க வல்லன.

7.எறும்பின் மூளையில் 250000 கலங்கள் இருட்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

8.எறும்புகளின் மிகவும் ஒழுங்கான கட்டமைட்புகள் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு தம்மைதாமே பாதுகாத்துக்கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கு காரணங்களாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

9.கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு.






நிலநடுக்கத்தை முன்கூட்டியே எறும்புகள் அறியும்

அந்தக் கண்டுபிடிப்பு இதுதான் நியூயோர்க்:
பூகம்பம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? எறும்புகளுக்குக் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு,அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள ஆண்டெனா போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியி லிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும்.இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகிறன.

  
எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல  ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்து விட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித் திருக்கலாம்.

உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்து வைக்கும் உணவு, மழைக் காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப் பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில்,அது பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு எறும்பின் இருப்பிட முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு,
அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை மற்றொரு எறும்பின் தலையில் வைத்து தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

உணவுப் பாதை போடுவதைப் போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புகளின் இருப்பிடத்துக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியி டுகின்றன.இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன.

இப்படியாக வழிகாட்ட, ஆண் எறும்பை ஈர்க்க, எச்சரிக்கை செய்ய என பல்வேறு செயல்பாடுகளுக்காக எறும்பு வெளியிடும்.எல்லா வேதிப்பொருளும் ஃபெரமோன்தான்.ஆனால், ஒவ்வொரு செயல்பா ட்டுக்கான ஃபெரமோனின் வகையும் வேறுபட்டிருக்கும்.

கட்டெறும்பு பெரும்பாலும் மாமரங்களில் அதிகம் இருக்கும்.


ஏனைய கட்டுரைகள்.இவற்றையும் பார்வையிடுங்கள்.
  1. அமில மழையின் தாக்கம்-சூழல் மாசடைதல்
  2. QR Code எப்படி இயங்குகிறது..?
  3. காதல் தோல்விக்குப் பின்-முன்னாள் காதலன் அல்லது காதலிக்கு 
  4. காதல் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி..?
  5. ஒரு காதல் என்ன செய்யும்..?
  6. காலநிலை மாற்றத்தின் பிடியில் உலகம்....
  7. இலங்கைத் தமிழிற்கும்  இந்திய தமிழிற்கும் இடையிலான வேறுபாடு 
  8. திருமணங்களும் மணமுறிவுகளும்
  9. பருவநிலை மாற்றமும் மனித செயற்பாடும்-காலநிலை மாற்றம்
  10. வளி மாசடைதல்
  11. குவேனியின் சாபம்
  12. 2000 தூர வெறித்த பார்வை-Tom lea
  13. மாதவிடாய்க் கோப்பை( Menstrual cup)
  14. மனிதர்களிற்கும் ஆடுகளிற்குமிடையிலான யுத்தம்
  15. பெண்களிற்கு எதிரான வன்முறைகள்
  16. கர்ணனின் இறப்பிற்கு காரணம் யார் ஒரு பார்வை
  17. யூதப் படுகொலை-ஹோலோகோஸ்ட்
  18. தற்கொலை ஓர் தீர்வல்ல







Post a Comment

Previous Post Next Post